==============
V.B.S பிறந்த கதை
விடுமுறை வேதாகமப் பள்ளி உருவான வரலாறு
===============
ஈடித் பெரில் மோர்கன் இந்தியாவின் விடுமுறை வேதாகமப் பள்ளி நிறுவனர் ஆவார். அவர் அமெரிக்காவின் மினியாபோலிஸில் ராய் மோர்கன் மற்றும் ஐடாவிற்கு மகனாக பிறந்தார். பொற்றோரிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் அன்பை ஈடித் கற்றுக் கொண்டார். அவருக்கு கோடைக்கால முகாம்களில் கலந்து கொள்ளவும், சில மிஷனெரிகளோடு தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. மிஷனெரி வேலை செய்ய விருப்பம் கொண்ட ஈடித் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் பிராத்தனை குழுக்களை ஏற்பாடு செய்து வந்தார். அவர் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது, யோவான் 20:21 மூலம் தேவன் அவரிடம் தெளிவாக பேசினார். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி, உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்றார். அப்போது, அவர் கர்த்தரிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார். 1944-ல் உலகச் சுவிசேஷ அமைப்பு மூலம் அவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இந்தியாவிற்கு வந்தார். அவர் பாங்காரப்பேட்டையில் தங்கி தென்னிந்திய பைபிள் பள்ளியில் (SIBN) சிறிது காலம் பணிபுரிந்தார். சிறுவர் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு நடத்தப்படும் வி.பி.எஸ்-யை பற்றி கூறினார். வேதாகம பாடங்கள், மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு, வேதாகம வசனங்கள் மற்றும் பாடல்களை கற்றுக்கொடுக்கும் பாடத்திட்டத்தை பற்றி அவர் அவர்களிடம் சொன்னார். அம்மையாரின் முயற்சியால் 1952-ம் ஆண்டு மே மாதம் கோவில்பட்டியில், அருள்திரு. துரைசாமி அவர்களால் முதல் விடுமுறை வேதாகமப் பள்ளி தொடங்கப்பட்டது. 1953-இல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தப்பட்டது. சுமார் 500 குழந்தைகள் ஆவலுடன் பங்கேற்றனர். மே 1954-ல் ஈடித், பி. சாமுவேல் (Mr. P. Samuel) மற்றும் திருமதி. ஹாமில்டன் (Mrs. Mary Hamiltion) விடுமுறை வேதாகமப் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கினார்கள். 1957-ல் விடுமுறை வேதாகமப் பள்ளி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்டத்தில் 30 இடங்களில் நடத்தப்பட்டன. தற்போது அனைத்து கிராமங்களிலும், கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டியதாயிற்று. அங்கே அவர் செவிடர்களுக்கு கற்பிப்பதற்கான மொழியைக் கற்றுக் கொண்டார். அவர்களுக்கு சிறப்பு சேவை மற்றும் முகாம் நடத்தினார். அவர் வேதம் வாசிப்பதிலும், தியானிப்பதிலும், மற்றவர்களுக்காக உருக்கமாக ஜெபிப்பதிலும், குறிப்பாக குழந்தைகளின் ஆவிக்குரிய நலனிலும் ஈடுபாடு உள்ளவராயிருந்தார்.
தற்போது விடுமுறை வேதாகமப் பள்ளியானது இந்தியா முழுவதிலும் 13 மாநிலங்களில் 17 மொழிகளில் நடைபெற்று வருகிறது.
இந்தியச் சிறுர்கள் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்பது விடுமுறை வேதாகமப்பள்ளியின் நோக்கம் ஆகும்.