=========
ஏழைகளுக்கு செய்ய வேண்டியது
==========
1) ஆகாரம் கொடுக்க வேண்டும்
யாக்கோபு 2:15,16
2) வஸ்திரம் கொடுக்க வேண்டும்
யாக்கோபு 2:15,16
3) சரீரத்திற்கு வேண்டியவைகளை கொடுக்க வேண்டும்
யாக்கோபு 2:15,16
4) விருந்து செய்ய வேண்டும்
லூக்கா 14:13
5) கரங்களை நீட்ட வேண்டும்
நீதிமொழிகள் 31:20
6) கூலியை ஒழுங்காக கொடுக்க வேண்டும்
உபாகமம் 24:15
7) இரங்க வேண்டும்
நீதிமொழிகள் 19:17
============
இயேசுவை காண்பித்தவர்கள்
===========
உலக மக்கள் தங்கள் அழகு, அந்தஸ்து, செல்வம், வஸ்திரம், வீடு, கார் போன்றவற்றை மற்றவர்களுக்கு காண்பிக்க பிரயாசபடுகின்றனர். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இயேசுவை மற்றவர்களுக்கு காண்பிப்பதே நமது வாழ்க்கையில் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்துவை காண்பித்த(வர்கள்)வைகள்
1) நட்சத்திரம் (மத்தேயு 2:9):
நட்சத்திரம் இயேசு கிறிஸ்துவை சாஸ்திரிகளுக்கு காண்பித்து. இயேசு நமது உள்ளத்தில் பிறந்திருப்பதை நாம் உலகமக்களுக்கு காண்பிக்க வேண்டும்.
மத்தேயு 2:9 "முன் சென்றது" முன் மாதிரியான ஜீவியம். நமது செயல்கள், நடத்தை, வார்த்தைகளில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். மற்றவர்கள் நம்மை பின்பற்றும் போது அவர்களை கிறிஸ்துவிடம் நாம் கொண்டு போய்விட முடியும். மத்தேயு 2:10 ல் நட்சத்திரத்தை கண்ட போது சந்தோஷம் அடைந்தார்கள். அது போல நமது ஜீவியத்தை பார்த்து மற்றவர்கள் சந்தோஷம் அடைய வேண்டும்.
2) ஒரு பாவியாகிய ஸ்திரி (யோவான் 4:29)
அவரை வந்து பாருங்கள் என்கிறாள். நமது தனிப்பட்ட ஜீவியத்தில் இயேசு நமக்கு செய்த நன்மைகளை, அற்புதங்களை நாம் அநேகருக்கு சொல்லி இயேசுவை வந்து பாருங்கள் என்று சொல்ல வேண்டும். இந்த ஸ்திரி தன்னுடைய சாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் சாட்சியில் உண்மை இல்லாததினால் அநேகரின் இரட்சிப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். தேவ ஐனமே உனது சாட்சி எவ்வாறு உள்ளது ?
3) யோவான்ஸ்தானகன் (யோவான் 1:29)
"இதோ தேவ ஆட்டுக்குட்டி" என்கிறார். யோவான்ஸ்தானகனும் இயேசுவை காண்பித்தார்.
4) தூதன் (மாற்கு 16:6)
தூதன் "இதோ அவரை வைத்த இடம்" என்று இயேசுவின் உயிர்த்தெழுதலை அறிவித்தான். நாமும் இயேசு உயிரோடு இருப்பதை நமது ஜீவியத்தின் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
தேவ ஜனமே உனது ஜீவியத்தின் மூலம் இயேசு வெளிப்படுகிறாரா?
எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
(2 கொரிந்தியர் 2:14)
==========
தாவீதின் ஜெபம்
(சங்கீத புத்தகம்)
===========
1) என் தேவனை நோக்கி அபயமிட்டேன்
சங்கீதம் 18:6
2) கர்த்தரை நோக்கி கெஞ்சினேன்
சங்கீதம் 30:10
சங்கீதம் 116:4
3) கர்த்தரை நோக்கி சத்தமிட்டு கூப்பிட்டேன்
சங்கீதம் 3:4
4) கர்த்தர் என் அழுகையின் சத்தத்தை கேட்டார்
சங்கீதம் 6:8
5) என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப் பண்ணீனிர்
சங்கீதம் 30:11
6) அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்
சங்கீதம் 142:2
7) அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்
சங்கீதம் 142:2
8) நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்
சங்கீதம் 51:17
==============
தேவ பிள்ளைகளை விழ வைக்கும் சில காரியங்கள்
===============
1) அலப்புகிற வாய் விழ வைக்கும்
நீதிமொழிகள் 10:8
2) புரட்டு நாவு விழ வைக்கும்
நீதிமொழிகள் 17:20
3) இடும்பு உள்ளவன் விழுவான்
எரேமியா 50:32
4) அக்கிரமம் செய்கிறவன் விழுவான்
ஒசியா 5:5
5) இரு வழியில் நடக்கிறவன் விழுவான்
நீதிமொழிகள் 28:18
6) இருதயத்தை கடினபடுத்துகிறவன் விழுவான்
நீதிமொழிகள் 28:14
7) பொல்லாத வழியில் நடக்கிறவன் விழுவான்
நீதிமொழிகள் 28:10
8) மனமேட்டிமை விழு வைக்கும்
நீதிமொழிகள் 16:18
9) தன் ஐஸ்வர்யத்தை நம்புகிறவன் விழுவான்
நீதிமொழிகள் 11:28
===============
கர்த்தரை தேடுகிறவர்களுக்கு
================
1) கர்த்தர் நல்லவர்
புலம்பல் 3:25
2) தூரமானவர் அல்ல
அப்போஸ்தலர் 17:27
3) பலன் அளிக்கிறார்
எபிரெயர் 11:6
4) ஒரு நன்மையும் குறைவு படாது
சங்கீதம் 34:10
5) நித்திய ஜீவனை அளிப்பார்
ரோமர் 2:7
===========
வேண்டாம்
===========
1) தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்
மத்தேயு 5:39
2) கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்
எபேசியர் 4:29
3) அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்
1 சாமுவேல் 2:3
4) சினேகிதனை விசுவாசிக்க வேண்டாம்
மீகா 7:5
5) பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம்
மத்தேயு 6:19
6) முறுமுறுக்க வேண்டாம்
யோவான் 6:43
7) எரிச்சல் வேண்டாம்
சங்கீதம் 37:8
8) வாக்குவாதம் வேண்டாம்
ஆதியாகமம் 13:8
9) சஞ்சலப்பட வேண்டாம்
ஆதியாகமம் 45:5
10) பயப்படவும், கலங்கவும் வேண்டாம்
உபாகமம் 31:8
11) ஐஸ்வர்யவான் தன் ஐஸ்வர்யத்தை குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்
எரேமியா 9:23
12) மரித்தவனுக்காக அழ வேண்டாம்
எரேமியா 22:10
========
வாழ் நாள்
========
1) மனுஷனுடைய வாழ்நாள் குறுகினது
யோபு 14:1
2) கற்பனைகளை கை கொண்டால் வாழ்நாள் நீடித்திருக்கும்
உபாகமம் 6:1
3) வாழ்வு காலத்தில் நன்மையை அனுபவித்திரு
பிரசங்கி 7:14
4) துன்மார்க்கினுடைய வாழ்நாள் நீடித்திருப்பதில்லை
பிரசங்கி 8:13
5) வாழ்நாள் நீடித்திருக்க பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 6:1,2
==============
திடமனதாய் இருக்க வேண்டும் ஏன்?
==============
1) கர்த்தர் நம்மோடு வருகிறார்
உபாகமம் 31:6
2) கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
உபாகமம் 31:6
3) கர்த்தர் உன்னை விட்டு விலக மாட்டார்
உபாகமம் 31:6
4) கர்த்தர் உன்னோடு இருக்கிறார்
யோசுவா 1:9
===============
கர்த்தரை நம்புகிறவனிடம் காணப்படும் காரியங்கள்
==============
1) எந்நாளும் கெம்பரிப்பான்
சங்கீதம் 5:11
2) பயப்படமாட்டான்
சங்கீதம் 56:11
3) சந்தோஷமாக இருப்பான்
சங்கீதம் 5:11
4) இருதயம் திடனாயிருக்கும்
சங்கீதம் 112:7
5) பூரண சமாதானம் காணப்படும்
ஏசாயா 26:3
6) தைரியமாக இருப்பான்
எபிரெயர் 3:6
7) அவனது ஆத்துமா நங்கூரம் போல் இருக்கும்
எபிரெயர் 6:19
8) சியோன் பர்வதத்தை போல் இருப்பார்கள்
சங்கீதம் 125:1
9) தள்ளாட மாட்டான்
சங்கீதம் 26:1
===============
இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை
===============
1) இருவரும் மற்றவர்களுக்காக ஜீவனை கொடுத்தார்கள்
இயேசு
எல்லாருக்காவும் தம் ஜீவனை கொடுத்தார்
யோவான் 11:50
யோனா
யோனாவை கடலில் போட்டதால் கப்பலில் உள்ள மக்கள் காப்பற்றபட்டார்கள்
யோனா 1:15
2) இயேசு கிறிஸ்து
படகில் நித்திரை செய்தார்
மாற்கு 4:38
யோனா
கப்பலில் நித்திரை செய்தார்
யோனா 1:6
3) இயேசு
பாதாளத்தில் இறங்கினார்
1 பேதுரு 3:19,20
யோனா
பாதாளத்தில் இறங்கினான்
யோனா 2:2
4) இயேசு
மரணத்தை ஜெயித்தார்
மத்தேயு 28:6,7
யோனா
மரணத்தை ஜெயித்தார்
யோனா 2:10
5) இயேசு
40 நாள் பிரசங்கித்தார்
அப்போஸ்தலர் 1:3
1 கொரிந்தியர் 15:3-7
யோனா
40 நாள் பிரசங்கித்தார்
யோனா 3:4
6) இயேசு
வஸ்திரம் சீட்டு போடப்பட்டது
யோவான் 19:24
யோனா
பெயரில் சீட்டு விழுந்தது
யோனா 1:7
===============
மோசே - இயேசுவுக்குள்ள ஒற்றுமை
===============
1) மோசே பிறந்த போது பல ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்
இயேசு பிறந்த போதும் பல ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
2) மோசே தண்ணிரை இரத்தமாக மாற்றினார்
இயேசு தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினார்.
3) மோசே எகிப்தை விட்டு வந்தார்
இயேசு பரலோக ராஜ்யத்தை விட்டு வந்தார்
4) மோசே மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்
இயேசு மக்களை பாவமாகிய அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்
5) மோசே தேவனோடு பேசினார்
இயேசு பிதாவோடு பேசினார்.
6) மோசே தனது மரணத்தை முன் அறிவித்தார்
இயேசுவும் தனது மரணத்தை முன் அறிவித்தார்
7) மோசே மலையின் மேல் மரணம் அடைந்தார்
இயேசுவும் மலையின் மேல் (சிலுவையில்) மரணம் அடைந்தார்.
8) மோசே மூலம் பழைய ஏற்பாடு, நியாய பிரமாணம் கொடுக்கபட்டது
இயேசு மூலம் புதிய ஏற்பாடு பிரமாணம் கொடுக்கபட்டது.
9) மோசே எங்கும் உண்மையுள்ளவர்
இயேசு மரணபரியந்தம் உண்மை உள்ளவர்
எண்ணாகமம் 12:7
எபிரெயர் 3:5
10) இருவரும் அழகு உள்ளவர்கள்
அப்போஸ்தலர் 7:20-26
உன்னதப்பாட்டு 5:10,16
11) இருவரும் பொல்லாத பிசாசோடு போராடினார்கள்
யாத்திராகமம் 7:10
மத்தேயு 4:1-11
12) இருவரும் 40 நாள் உபவாசித்தார்கள்
யாத்திராகமம் 34:28
மத்தேயு 4:2
13) இருவருடைய முகங்களும் பிரகாசித்தன
யாத்திராகமம் 34:35
மத்தேயு 17:2
14) இருவரும் சகோதரர்களால் புறக்கணிக்கபட்டனர்
எண்ணாகமம் 12:1
யோவான் 7:5
15) இருவரும் சாந்த குணமுள்ளவர்கள்
எண்ணாகமம் 12:1
மத்தேயு 11:29
16) இருவரும் தமது ஜனங்களுக்காக பரிந்து பேசும் ஜெபம் செய்தார்கள்
யாத்திராகமம் 32:32
யோவான் 17:9,10
17) இருவரும் பாவ சந்தோஷங்களை முற்றிலும் வெறுத்து ஜீவித்தார்கள்
எபிரெயர் 11:24-26
எபிரெயர் 7:26
18) இருவரும் மரணத்திற்கு பின்பு காணப்பட்டனர்
மத்தேயு 17:3
அப்போஸ்தலர் 1:3
===============
கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு
===============
1) இயேசு கிறிஸ்து
1 தீமோத்தேயு 1:15
அந்திக் கிறிஸ்து
1 யோவான் 2:18
2) தேவ குமாரன்
லூக்கா 1:35
கேட்டின் மகன்
2 தெசலோனிக்கேயர் 2:3
3) நல்ல மேய்ப்பன்
யோவான் 10:11
மதியற்ற மேய்ப்பன்
சகரியா 11:15
4) ஸ்திரியின் வித்து
ஆதியாகமம் 3:15
சர்ப்பத்தின் வித்து
ஆதியாகமம் 3:15
5) பரிசுத்தர்
லூக்கா 1:35
பாவ மனிதன்
2 தெசலோனிக்கேயர் 2:3
6) சத்தியம்
யோவான் 14:6
அநீதி, வஞ்சனை
2 தெசலோனிக்கேயர் 2:10
7) நீதியுள்ள இராஜா
ஏசாயா 32:1
சூதான பேச்சாளன்
தானியேல் 8:23
8) சமாதான பிரபு
ஏசாயா 9:6
மூர்க்க முகமுள்ளவன்
தானியேல் 8:23
9) வானத்தில் இருந்து வந்தவர்
யோவான் 6:51
பாதாளத்தில் இருந்தது வந்தவன்
வெளிப்படுத்தல் 11:7
10) பிதாவின் நாமத்தில் வந்தவர்
யோவான் 5:43
சுய நாமத்தில் வருபவன்
யோவான் 5:43
11) தேவ சித்தம் செய்பவர்
யோவான் 6:38
சுயசித்தம் செய்பவன்
தானியேல் 7:25
12) பரிசுத்த ஆவியின் வல்லமையுடையவர்
லூக்கா 4:18
சாத்தானின் வல்லமையுடையவன்
வெளிப்படுத்தல் 13:4
13) தன்னை தாழ்த்துகிறவர்
பிலிப்பியர் 2:8
தன்னை உயர்த்துகிறவன்
2 தெசலோனிக்கேயர் 2:4
14) தேவனை மகிமை படுத்தினவர்
யோவான் 17:4
தேவனை தூஷிப்பவன்
வெளிப்படுத்தல் 13:6
15) ஜனத்திற்காக கொல்லப்பட்டார்
யோவான் 10:11
ஜனத்தை அழிப்பான்
தானியேல் 8:24,25
16) ஆடுகளுக்காக ஜிவனை கொடுத்தார்
யோவான் 10:11
ஆடுகளின் மாம்சத்தை தின்பான்
சகரியா 11:16