=========
உபதேசம்
=========
நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்: நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
1. உணர்த்தும் உபதேசம்
ஏசாயா 28:9
அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால் மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
2. அறிவில் விருத்தியடையும் உபதேசம்
நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்: நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
3. ஒப்புரவாக்கும் உபதேசம்
2 கொரிந்தியர் 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார்.
4. ஆரோக்கியமான உபதேசம்
தீத்து 1:9
தீத்து 2:1
ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களை கண்டனம்பண்ணவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=========
உதடுகள்
=========
யோபு 33:3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும். நான் அறிந்ததை உன் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
1. கபடமில்லாத உதடுகள்
சங்கீதம் 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 34:13
2 கொரிந்தியர் 1:12
2. அறிந்ததை சுத்தமாய் பேசும் உதடுகள்
யோபு 33:3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும். நான் அறிந்ததை உன் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
சங் 89:34
யாக்கோபு 3:2
3. ஆனந்தக்களிப்புள்ள உதடுகள் (புலம்புகின்ற உதடு அல்ல)
சங்கீதம் 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
4. பொய் உதடுகள்
சங்கீதம் 31:18
நீதிமொழிகள் 12:22
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
5. சத்திய உதடுகள்
நீதிமொழிகள் 12:19
சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்
6. அக்கிரம உதடுகள்
நீதிமொழிகள் 17:4
7.முடனுடை உதடுகள்
நீதிமொழிகள் 18:6
8. நீதியுள்ள உதடுகள்
நீதிமொழிகள் 16:13
9. பரஸ்திரியின் உதடுகள்
நீதிமொழிகள் 5:3
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
அவரில் களிகூருவார்கள்
==============
ஏசாயா 29:19
சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
சங்கீதம் 66:6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
1. ஒன்றுமில்லா நேரத்திலும் அவரில் களிகூருவேன்
ஆபகூக் 3:17-19
17. அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
18. நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
19. ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
2. எதிர்ப்பின் நேரத்தில் அவரில் களிகூருவேன்
2 நாளாகமம் 20:2,21,22
2. சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள், இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்
21. பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.
22. அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
3. கட்டப்பட்ட நேரத்தில் அவரில் களிகூருவேன்
அப்போஸ்தலர் 16:24-26
24. அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
25. நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26. சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==========
என் பாத்திரம்
==========
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
1. தத்தளிப்பின் பாத்திரம்
ஏசாயா 51:22
கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.
2. வெறுமையான பாத்திரம்
எரேமியா 51:34
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னைவெறும் பாத்திரமாக வைத்துப்போனான், வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
3. உடைந்த பாத்திரம்
சங்கீதம் 31:12
செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன், உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
4. கெட்டுப்போன பாத்திரம்
எரேமியா 18:4
குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
=============
தள்ளி விட்டார்கள்
============
1 தீமோத்தேயு 1:19
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
1. தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்
லூக்கா 7:30
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
மாற்கு 7:8
நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள், மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார்.
2. நல்மனச்சாட்சியைச் தள்ளிவிட்டார்கள்
1 தீமோத்தேயு 1:18,19
18. குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன். நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
19. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
3. உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்
1 இராஜாக்கள் 19:10,14
10. அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
14. அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
4. அற்புதத்தை பெற்றவனை, சத்தியதை அறிந்தவனை தள்ளிவிட்டார்கள்
யோவான் 9:34
அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.
5. ஊழிக்காரரை தள்ளிவிட்டார்கள்
அப்போஸ்தலர் 7:39-41
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
=============
மகா மேன்மையான
==============
2 பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
1. மகா மேன்மையான மகத்துவம்
எபேசியர் 1:19
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
2. மகா மேன்மையான இரகசியம்
1 தீமோத்தேயு 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
3. மகா மேன்மையான அருமையுமான வாக்குத்தத்தங்கள்
2 பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
4. மகா மேன்மையான ஜசுவரியம்
எபேசியர் 2:6,7
6. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
சூழ்ந்துகொள்ளும்
==============
சங்கீதம் 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
1. காருணியம் என்னுங் கேடகத்தினால் சூழ்ந்துகொள்ளும்
சங்கீதம் 5:12
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
2. இரட்சணியப் பாடல்கள் சூழ்ந்துகொள்ளும்
சங்கீதம் 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
3. கிருபை சூழ்ந்துகொள்ளும்
சங்கீதம் 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
4. நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்
சங்கீதம் 142:7
உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்: எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
=====================
Message by
Dr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
வழிகளை ஆராய்ந்து
=============
புலம்பல் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
1. கீழ்ப்படியாமையின் வழி
யாத்திராகமம் 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
2. மாறுபாடான வழி
எண்ணாகமம் 22:32
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
3. முரட்டாட்டமான வழி
ஏசாயா 65:2
நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
4. அவிசுவாசத்தின் வழி
எரேமியா 2:36
36. நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
37.நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய், ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார், அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604