================
யாத்திராகமம் (கேள்வி பதில்)
================
1) இஸ்ரவேலர் கட்டிய பண்ட சாலை பட்டணங்கள் யாவை?
2) "அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்" என்று சொல்லி பெயரிடப்பட்டவன் யார்?
3) நதியில் மொண்ட தண்ணீர் எங்கு இரத்தமாகும்?
4) "நான் விருத்தசேதனம் இல்லாத உதடுகள் உள்ளவன்" என்று கூறியது யார்?
5) "இது தேவனுடைய விரல்" என்று பார்வோனிடம்" கூறியது யார்?
6) "கர்த்தர் நீதியுள்ளவர்" என்று அறிக்கை பண்ணியது யார்?
7) தரை காணாதபடி பூமியின் முகத்தை மூடுவது எது?
8) பஸ்கா ஆசரிக்கபடும் மாதம் எது?
9) யாருடைய கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தது?
10) அடிமைத்தன வீடு எது?
11) கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்கு எப்படி இருந்தது?
12) விசித்திரமான வேலை செய்யும்படி தேவ ஆவியினால் நிரப்பபட்டவன் யார்?
13) கர்த்தருடைய பட்சத்தில் இருந்த கோத்திரம் எது?
14) ஆசாரியருடைய ஏபோத்திலும், மார்பகத்திலும் பதிக்கப்பட வேண்டிய இரத்தினம் என்ன?
15) எதை முதல் மாதம், முதல் தேதியில் ஸ்தாபனம் பண்ண வேண்டும்?
விடைகள்:
===============
1) இஸ்ரவேலர் கட்டிய பண்ட சாலை பட்டணங்கள் யாவை?
Answer: பித்தோம், ராமசேஸ்
யாத்திராகமம் 1:11
2) "அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்" என்று சொல்லி பெயரிடப்பட்டவன் யார்?
Answer: கெர்சோம்
யாத்திராகமம் 2:22
யாத்திராகமம் 2:22
3) நதியில் மொண்ட தண்ணீர் எங்கு இரத்தமாகும்?
Answer: வெட்டாந்தரையில்
யாத்திராகமம் 4:9
யாத்திராகமம் 4:9
4) "நான் விருத்தசேதனம் இல்லாத உதடுகள் உள்ளவன்" என்று கூறியது யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 6:12
யாத்திராகமம் 6:12
5) "இது தேவனுடைய விரல்" என்று பார்வோனிடம்" கூறியது யார்?
Answer: மந்திரவாதிகள்
யாத்திராகமம் 8:19
யாத்திராகமம் 8:19
6) "கர்த்தர் நீதியுள்ளவர்" என்று அறிக்கை பண்ணியது யார்?
Answer: பார்வோன்
யாத்திராகமம் 9:27
7) தரை காணாதபடி பூமியின் முகத்தை மூடுவது எது?
Answer: வெட்டுக்கிளி
யாத்திராகமம் 10:4,5
8) பஸ்கா ஆசரிக்கபடும் மாதம் எது?
Answer: முதல் மாதம் (ஆபிப்)
யாத்திராகமம் 12:2
யாத்திராகமம்13:4
9) யாருடைய கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தது?
Answer: அமலேக்கியர்
யாத்திராகமம் 17:16
10) அடிமைத்தன வீடு எது?
Answer: எகிப்து
யாத்திராகமம் 20:2
11) கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்கு எப்படி இருந்தது?
Answer: பட்சிக்கிற அக்கினி.
யாத்திராகமம் 24:17
12) விசித்திரமான வேலை செய்யும்படி தேவ ஆவியினால் நிரப்பபட்டவன் யார்?
Answer: ஊரியின் குமாரன் பெசலெயேல்.
யாத்திராகமம் 31:2-5
13) கர்த்தருடைய பட்சத்தில் இருந்த கோத்திரம் எது?
Answer: லேவி
யாத்திராகமம் 32:26
14) ஆசாரியருடைய ஏபோத்திலும், மார்பகத்திலும் பதிக்கப்பட வேண்டிய இரத்தினம் என்ன?
Answer: கோமேதகம்.
யாத்திராகமம்35:9
யாத்திராகமம்35:9
15) எதை முதல் மாதம், முதல் தேதியில் ஸ்தாபனம் பண்ண வேண்டும்?
Answer: ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலம்.
யாத்திராகமம் 40:2
யாத்திராகமம் 40:2
=====================
கேள்வி: யாத்திராகமம் 1-20 அதிகாரம்
======================
1) பார்வோனுக்காக கட்டின பட்டணங்கள் எவை?2) எகிப்து தேசத்தில் என் ______________,___________,______________, நடப்பிப்பேன்
3) ஏலீம் எங்கே பாளயமிறங்கினார்கள் ? அங்கே என்ன இருந்தது?
4) எகிப்தியனை எதில் புதைக்கப்பட்டது ?
5) எது விலகி போகவில்லை?
6)அவன் ______________,___________ பேசுவான்;____________,____________ இருப்பான்;__________,____________ இருப்பாய்
7) நான் விருத்தசேதனமில்லாத உதடுள்ளவன் என்று யார் எங்கே கூறினார்?
8) யார் யாரிடத்தில் யுத்தம் பண்ணினார்கள்?
9) எதை எல்லாம் திண்றுப்போடும்?
10) தேவன் இருந்த ________,_________ சேர்ந்தான்
யாத்திராகமம் 1-20 (பதில்கள்)
=============
1) பார்வோனுக்காக கட்டின பட்டணங்கள் எவை?
Answer: பித்தோம்,ராமசேஸ் யாத்திராகமம் 1:11
2) எகிப்து தேசத்தில் என் ______________,___________,______________, நடப்பிப்பேன்
Answer: அடையாளங்களையும், அற்புதங்களையும்,மிகுதியாய்
2) எகிப்து தேசத்தில் என் ______________,___________,______________, நடப்பிப்பேன்
Answer: அடையாளங்களையும், அற்புதங்களையும்,மிகுதியாய்
யாத்திராகமம் 7:3
3) ஏலீம் எங்கே பாளயமிறங்கினார்கள் ? அங்கே என்ன இருந்தது?
Answer: பன்னிரண்டு நீருற்றிகளும், எழுபது பேரீச்சமரங்களும் , தண்ணீர்
யாத்திராகமம் 15:27
4) எகிப்தியனை எதில் புதைக்கப்பட்டது ?
Answer: மணலிலே
யாத்திராகமம் 2:12
5) எது விலகி போகவில்லை?
Answer: பகலிலே மேகஸ்தம்பம் , இரவிலே அக்கினி ஸ்தம்பம் ஜனங்களிடத்திலிருந்து
யாத்திராகமம் 13:22
6)அவன் ______________,___________ பேசுவான்;____________,____________ இருப்பான்;__________,____________ இருப்பாய்
Answer: உனக்கு பதிலாக ஜனங்களோடே ,இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக நீ அவனுக்கு தேவனாக
யாத்திராகமம் 4:16
7) நான் விருத்தசேதனமில்லாத உதடுள்ளவன் என்று யார் எங்கே கூறினார்?
Answer: மோசே கர்த்தருடைய சந்நிதிதானத்தில்
யாத்திராகமம் 6:30
8) யார் யாரிடத்தில் யுத்தம் பண்ணினார்கள்?
Answer: அமெலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலோடே
யாத்திராகமம் 17:8
9) எதை எல்லாம் திண்றுப்போடும்?
Answer: வெளியிலே துளிர்க்கிற செடிகளை, எல்லாம்
யாத்திராகமம் 10:5
10) தேவன் இருந்த ________,_________ சேர்ந்தான்
Answer: கார்மேகத்துக்குச் சமீபமாய்
யாத்திராகமம் 20:21
============================
யாத்திரகாமம் பத்தகத்தின் கேள்விகள்
(1-10 அதிகாரம்)
==========================
1. கர்த்தர் வீசப்பண்ணின காற்றுகள் எவை?2. மரணத்திற்கு தப்பினவை எவை? அழிவிற்கு தப்பினவை எவை?
3. முதன் முதலில் எந்த வாதைக்கு பிறகு பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
4. மோசே முன்பு வித்தை காட்டினவர்கள் அவர் முன்பு நிற்க முடியாமல் போனார்கள். அவர்கள் யார்?
5.நாவான்மை உடையவன் யார்?
6.எகிப்தில் பார்வோனிடம் பேச மோசேக்கு எத்தனை அடையாளங்கள் கர்த்தர் கோடுத்தார்?
7.அந்நியரிடத்தில் சூரையாடி தங்கள் பிள்ளைகளுக்கு உடுத்துவிப்பவர்கள் யார்?
8. வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேகரித்தனர்?
9. முற்பிதாக்கள் அறியாத பெயர் எது?
10.இஸரவேலரைக் கொல்ல எதிரிகள் கையில் பட்டயம் கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் யார்?
11.ஒரே வயதில் மரித்த இருவர் யார்?
12.மோசேயும் ஆரோனும் செய்த செயலை செய்தவர்கள் யார்?
13. மோசேயின் பேச்சுக்கு யார் வாக்கு கொடுப்பார்கள் ஏன்று கர்த்தர் கூறுகிறார்?
14. பார்வோனுக்காக கட்டப்பட்ட களஞ்சிய நகரங்கள் எவை?
15. பலுகி, பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தவர்கள் யார்?
யாத்திரகாமம் புத்தகத்தின் கேள்விக்கான பதில்
=========================
1. கர்த்தர் வீசப்பண்ணின காற்றுகள் எவை?Answer: கீழ்காற்று, மேல்காற்று
யாத்திராகமம் 10:13,19
2. மரணத்திற்கு (சாவு) தப்பினவை எவை? அழிவுக்கு்த் தப்பினவை எவை?
Answer: இஸ்ரவேலரின் மிருக ஜீவன்கள், கோதுமை, கம்பு
யாத்திராகமம் 9:7,32
3. முதன் முதலில் எந்த வாதைக்கு பிறகு பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?
Answer: தவளை
யாத்திராகமம் 8:7,8
4. மோசே முன்பு வித்தை காட்டினவர்கள் அவர் முன்பு நிற்க முடியாமல் போனார்கள். அவர்கள் யார்?
Answer: மந்திரவாதிகள்
யாத்திராகமம் 8:7,9,11
5. நாவான்மை உடையவன் யார்?
Answer: ஆரோன்
யாத்திராகமம் 4:14
6. எகிப்தில் பார்வோனிடம் பேச மோசேக்கு எத்தனை அடையாளங்கள் கர்த்தர் கோடுத்தார்?
Answer: மூன்று
1. கோல் பாம்பாக மாறுல்
2. கை குஷ்டரோகமாக மாறுதல்
3. நதியின் நீர் இரத்தமாக மாறுல்
யாத்திராகமம் 4:3,6,9
7. அந்நியரிடத்தில் சூரையாடி தங்கள் பிள்ளைகளுக்கு உடுத்துவிப்பவர்கள் யார்?
Answer: இஸவேல் ஸ்திரீகள்
யாத்திராகமம் 3:22
8. வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேகரித்தனர்?
Answer: தாளடிகளை
யாத்திராகமம் 5:12
9. முற்பிதாக்கள் அறியாத பெயர் எது?
Answer: யேகோவா
யாத்திராகமம் 6:3
10. இஸரவேலரைக் கொல்ல எதிரிகள் கையில் பட்டயம் கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் யார்?
Answer: மோசேயும் ஆரோனும்
யாத்திராகமம் 5:20-21
11. ஒரே வயதில் மரித்த இருவர் யார்?
Answer: லேவி, அம்ராம் (நூற்று முப்பத்தேழு வருஷம்)
யாத்திராகமம் 6:16,20
12. மோசேயும் ஆரோனும் செய்த செயலை செய்தவர்கள் யார்?
Answer: மந்திரவாதிகள்
யாத்திராகமம் 7:10-12
13. மோசேயின் பேச்சுக்கு யார் வாக்கு கொடுப்பார்கள் ஏன்று கர்த்தர் கூறுகிறார்?
Answer: இஸ்ரவேலின் மூப்பர்கள்
யாத்திராகமம் 3:16-18
14. பார்வோனுக்காக கட்டப்பட்ட களஞ்சிய நகரங்கள் எவை?
Answer: பித்தோம், ராமசேஸ்
யாத்திராகமம் 1:11
15. பலுகி, பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தவர்கள் யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
யாத்திராகமம் 1:7