=============
2 நாளாகமம் 1-5 கேள்விகள்
==============
01) கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் செய்தது யார்?
02) சாலொமோனின் குதிரை வீரர்கள் எத்தனை பேர்?
03) பெரிய தேவனுக்கு பெரிய ஆலயம் கட்டியது யார்?
04) எதை அறிந்தவனை சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்?
05) தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
06) லீபனோன் மரங்கள் எவ்விடம் வரை கொண்டு வரப்படும்?
07) சாலொமோன் ஆலயம் கட்டிய மலை எது?
08) கால்களால் ஊன்றி நின்றவை எவை?
09) கழுவுவதற்காக உண்டாக்கப்பட்டது என்ன?
10) தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன?
11) நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ----------மாயிருக்கும்?
12) இந்தப் பகுதியில் (01 - 05) இடம் பெற்றிருக்கும் ராஜாக்களின் பெயர்களை எழுதவும்
பொருத்துக:
13) யாகீன், போவாஸ்
14) ஈராம், அபி
15) தேவாலயம்
16) தாவீதின் தலைநகரம்
(நிபுணன், கர்த்தருடைய வீடு, சீயோன், தூண்)
===============
2 நாளாகமம் 01 - 05 விடைகள்
===============
01) கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் செய்தது யார்?
Answer: பெசலெயேல்
2 நாளாகமம் 01:05
02) சாலொமோனின் குதிரை வீரர்கள் எத்தனை பேர்
Answer: பன்னீராயிரம் பேர்
2 நாளாகமம் 01:14
03) பெரிய தேவனுக்கு பெரிய ஆலயம் கட்டியது யார்
Answer: சாலொமோன்
2 நாளாகமம் 02:05
04) எதை அறிந்தவனை சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்
Answer: கொத்து வேலை செய்ய அறிந்தவனை
2 நாளாகமம் 02:07
05) தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்
Answer: ஈராம், அபி
2 நாளாகமம் 02:13
06) லீபனோன் மரங்கள் எவ்விடம் வரை கொண்டு வரப்படும்
Answer: யோப்பா
2 நாளாகமம் 02:16
07) சாலொமோன் ஆலயம் கட்டிய மலை எது
Answer: மோரியா
2 நாளாகமம் 03:01
08) கால்களால் ஊன்றி நின்றவை எவை
Answer: கேருபீன்கள்
2 நாளாகமம் 03:13
09) கழுவுவதற்காக உண்டாக்கப்பட்டது என்ன
Answer: பத்து கொப்பரைகள்
2 நாளாகமம் 04:06
10) தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன
Answer: இரண்டு கற்பலகைகள்
2 நாளாகமம் 05:10
11) நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ------- மாயிருக்கும்
Answer: ஆச்சரியப்படத்தக்கது
2 நாளாகமம் 02:09
12) இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கும் ராஜாக்களின் பெயர்களை எழுதவும்
Answer: ஈராம்
2 நாளாகமம் 02:03
Answer: தாவீது
2 நாளாகமம் 02:12
Answer: சாலொமோன்
2 நாளாகமம் 04:11
பொருத்துக
13) யாகீன் போவாஸ் - தூண்
2 நாளாகமம் 03:17
14) ஈராம், அபி - நிபுணன்
2 நாளாகமம் 02:13
15) தேவாலயம் - கர்த்தருடைய வீடு
2 நாளாகமம் 05:13
16) தாவீதின் தலைநகரம் - சீயோன்
2 நாளாகமம் 05:12
=============
11 நாளாகமம் 6 - 10 கேள்விகள்
=============
1. கர்த்தர் ஆலயத்தைக் கட்ட யாரையும் எந்த ஸ்தானத்தையும் தெரிந்து கொண்டார்?
2. யாருடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருளாக எண்ணப்படவில்லை?
3. எவை அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை?
4. சாலொமோனின் தந்த சிங்காசனத்தில் எத்தனை சிங்கங்கள் நின்றன?
5. யார் எதற்காக சாலொமோனின் முகதரிசனத்தை தேடினார்கள்?
6. கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?
7. ரெகொபெயாம் யாருக்கு ராஜாவாயிருந்தான்?
8. வருஷத்தில் மூன்று தரம் ஆசரிக்கிற பண்டிகைகள் எவை?
9. அப்படிப்பட்ட எவை ஒருக்காலும் வரவில்லை?
10. ஆலயப் பிரதிஷ்டையின் போது சாலொமோன் செலுத்திய
பலிகள் என்ன?
பொருத்துக:
11. பரலோகம் -
12. வனாந்தரம் -
13. யானைத் தந்தங்கள் -
14. நாற்பது வருஷம் -
15. நிலையானஸ்தலம் -
(சாலொமோன், தர்ஷீஸ், தத்மோர், ஆலயம், வாசஸ்தலம்)
============
கேள்வியும் பதிலும்
11 நாளாகமம் 6 - 10
=============
1. கர்த்தர் ஆலயத்தைக் கட்ட யாரையும் எந்த ஸ்தானத்தையும் தெரிந்து கொண்டார்?
Answer: தாவீதையும் எருசலேமையும்
2 நாளாகமம் 6:6
2. யாருடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருளாக எண்ணப்படவில்லை?
Answer: சாலொமோனின்
2 நாளாகமம் 9:20
3. எவை அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை?
Answer: வாசனை மரங்கள்
2 நாளாகமம் 9:10,11
4. சாலொமோனின் தந்த சிங்காசனத்தில் மொத்தம் எத்தனை சிங்கங்கள்
நின்றன?
Answer: 14 சிங்கங்கள்
2 நாளாகமம் 9:17-19
5. யார் எதற்காக சாலொமோனின் முகதரிசனத்தை தேடினார்கள்?
Answer: தேவன் அருளின ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும்
2 நாளாகமம் 9:23
6. கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?
Answer: அதோராம்
2 நாளாகமம் 10:18
7. ரெகொபெயாம் யாருக்கு ராஜாவாயிருந்தான்?
Answer: யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரருக்கு
2 நாளாகமம் 10:17
8. வருஷத்தில் மூன்று தரம் ஆசரிக்கிற பண்டிகைகள் எவை?
Answer: புளிப்பில்லா அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை கூடாரப் பண்டிகை
2 நாளாகமம் 8:13
9. அப்படிப்பட்ட எவை ஒருக்காலும் வரவில்லை?
Answer: சேபாவின் ராஜஸ்திரீ கொடுத்த கந்தவர்க்கங்கள்
2 நாளாகமம் 9:9
10. ஆலயப் பிரதிஷ்டையின் போது சாலொமோன் செலுத்திய பலிகள் என்ன?
Answer: இருபத்தீராயிரம் மாடுகள், லட்சத்திருபதினாயிரம் ஆடுகள்
2 நாளாகமம் 7:15
பொருத்துக:
11 பரலோகம் - வாசஸ்தலம்
2 நாளாகமம் 7:30
12. வனாந்தரம் - தத்மோர்
2 நாளாகமம் 8:4
13. யானைத் தந்தங்கள்- தர்ஷீஸ்
2 நாளாகமம் 9:21
14. நாற்பது வருஷம் - சாலொமோன்
2 நாளாகமம் 9:30
15. நிலையானஸ்தலம் - ஆலயம்
2 நாளாகமம் 6:2
==========
கேள்விகள் - வேத பகுதி
2 நாளாகமம் 11-15
==========
1. லேவியரை ஊழியம் செய்யாமல் ஒதுக்கிய ராஜா யார்?
2. 88 பிள்ளைகளை உடையவன் யார்?
3. சகோதரர் யுத்தம் செய்யாமலிருக்க, தேவன் பயன்படுத்திய மனுஷன் யார்?
4. ஆலயப் பொருட்களை எடுத்து சென்றது யார்?
5. பொன்னுக்கு பதில் வெண்கலத்தில் மாற்றுப்பொருள் செய்தது யார்?
6. தேவன் தங்கள் சேனாபதி என்றது யார்?
7. அடி வாங்கி மரித்தது யார்?
8. அபியா ஏறின மலை எது?
9. ஆர்ப்பரித்து, வெற்றி பெற்றவர்கள் யார்?
10. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
11. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
12. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
13. தேவ ஆவி இறங்கி, தீர்க்கத்தரிசனம் சொன்னது யார்?
14. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
15. தன் தாயை ராஜபதவியிலிருந்து விலக்கியது யார்?
==========
2 நாளாகமம் 11-15 (பதில்கள்)
===========
1. லேவியரை ஊழியம் செய்யாமல் ஒதுக்கிய ராஜா யார்?
Answer: யெரொபெயாம்
2 நாளாகமம் 11:14
2. 88 பிள்ளைகளை உடையவன் யார்?
Answer: ரெகொபெயாம்
2 நாளாகமம் 11:21
3. சகோதரர் யுத்தம் செய்யாமலிருக்க, தேவன் பயன்படுத்திய மனுஷன் யார்?
Answer: செமாயா
2 நாளாகமம் 11:2-4
4. ஆலயப் பொருட்களை எடுத்து சென்றது யார்?
Answer: சீஷாக்
2 நாளாகமம் 12:9
5. பொன்னுக்கு பதில் வெண்கலத்தில் மாற்றுப்பொருள் செய்தது யார்?
Answer: ரெகொபெயாம்
2 நாளாகமம் 12:10
6. தேவன் தங்கள் சேனாபதி என்றது யார்?
Answer: அபியா
2 நாளாகமம் 13:12
7. அடி வாங்கி மரித்தது யார்?
Answer: யெரொபெயாம்
2 நாளாகமம் 13:20
8. அபியா ஏறின மலை எது?
Answer: செமராயீம்
2 நாளாகமம் 13:4
9. ஆர்ப்பரித்து, வெற்றி பெற்றவர்கள் யார்?
Answer: யூதா மனுஷர்
2 நாளாகமம் 13:15
10. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
Answer: இளைப்பாறுதல்
2 நாளாகமம் 14:7
2 நாளாகமம் 15:15
11. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
Answer: சேரா
2 நாளாகமம் 14:9
12. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
Answer: ஆசா
2 நாளாகமம் 14:11
13. தேவ ஆவி இறங்கி, தீர்க்கத்தரிசனம் சொன்னது யார்?
Answer: அசரியா
2 நாளாகமம் 15:1,2
14. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
Answer: இளைப்பாறுதல்
2 நாளாகமம் 14:7
15:15
15. தன் தாயை ராஜபதவியிலிருந்து விலக்கியது யார்?
Answer: ஆசா
2 நாளாகமம் 15:16
=========
வேதப்பகுதி
2 நாளாகமம் 16-20
=========
1) யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்த ஞான திருஷ்டிக்காரன் யார்? 2) இது முதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் யார் யாரிடம் கூறியது?
3) பூமியெங்கும் உலாவிக் கொண்டிருப்பது எது?
4) கர்த்தர் யாருடையக் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்?
5) யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் தலைமையானவன் யார்?
6) கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக் கொடுத்தவன் யார்?
7) கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா. யார் யாரிடம்?
8) கர்த்தர் பிற தீர்க்கதரிசிகளின் வாயிலே என்னக் கட்டளையிட்டார்?
9) வேஷம் மாறி யுத்தத்தில் பிரவேசித்த ராஜா யார்?
10) தேவனாகியக் கர்த்தரிடத்தில் என்ன இல்லை?
11) யாருக்குப் பயப்படுகிறப் பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது?
12) யோசபாத் பயந்துக் கர்த்தரைத் தேடுகிறதற்கு யூதாவெங்கும் எதைச் செய்யக் கூறினான்?
13) கர்த்தருடையக் கரத்திலே என்ன இருக்கிறது?
14) யோசபாத்தும், ஜனங்களும் நாலாம் நாளிலே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தின ஸ்தலம் எது?
15) பொருத்துக
அ) அமரியா = நியாயாதிபதி
ஆ) செபதியா = உத்தியோகஸ்தர்கள்
இ) லேவியர் = ஆசாரியன்
===========
2 நாளாகமம் 16-20 (பதில்கள்)
============
1) யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்த ஞான திருஷ்டிக்காரன் யார்? Answer: அனானி
2 நாளாகமம் 16:7
2) இது முதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் யார் யாரிடம் கூறியது?
Answer: அனானி ஆசாவிடம்
2 நாளாகமம் 16:7-9
3) பூமியெங்கும் உலாவிக் கொண்டிருப்பது எது?
Answer: கர்த்தருடைய கண்கள்
2 நாளாகமம் 16:9
4) கர்த்தர் யாருடையக் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்?
Answer: யோசபாத்
2 நாளாகமம் 17:5
5) யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் தலைமையானவன் யார்?
Answer: அத்னா
2 நாளாகமம் 17:14
6) கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக் கொடுத்தவன் யார்?
Answer: சிக்ரியின் குமாரனாகிய அமசியா
Answer: சிக்ரியின் குமாரனாகிய அமசியா
2 நாளாகமம் 17:16
7) கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா. யார் யாரிடம்?
Answer: ஆகாப், யோசபாத்திடம்
2 நாளாகமம் 18:3
8) கர்த்தர் பிற தீர்க்கதரிசிகளின் வாயிலே என்னக் கட்டளையிட்டார்?
Answer: பொய்யின் ஆவியை
2 நாளாகமம் 18:22
9) வேஷம் மாறி யுத்தத்தில் பிரவேசித்த ராஜா யார்?
Answer: இஸ்ரவேலின் ராஜா ஆகாப்
2 நாளாகமம் 18:29
10) தேவனாகியக் கர்த்தரிடத்தில் என்ன இல்லை?
Answer: அநியாயம், முகதாட்சிணியம்
2 நாளாகமம் 19:7
11) யாருக்குப் பயப்படுகிறப் பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது?
Answer: கர்த்தருக்கு
2 நாளாகமம் 19:7
12) யோசபாத் பயந்துக் கர்த்தரைத் தேடுகிறதற்கு யூதாவெங்கும் எதைச் செய்யக் கூறினான்?
Answer: உபவாசம்
2 நாளாகமம் 20:3
13) கர்த்தருடையக் கரத்திலே என்ன இருக்கிறது?
Answer: வல்லமையும், பராக்கிரமமும்
2 நாளாகமம் 20:6
14) யோசபாத்தும், ஜனங்களும் நாலாம் நாளிலே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தின ஸ்தலம் எது?
Answer: பெராக்கா
2 நாளாகமம் 20:26
15) பொருத்துக
அ) அமரியா = சாரியன்
2 நாளாகமம் 19:11
ஆ) செபதியா = நியாயாதிபதி
2 நாளாகமம் 19:11
இ) லேவியர் = உத்தியோகஸ்தர்கள்
2 நாளாகமம் 19:11
============
நாளாகமம் 21-25 கேள்விகள்
============
1. யோராம் யாருடையசேஷ்ட புத்திரன்? அதனால் அவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?2. குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப் போனவன் யார்? அவன் இறுதி சடங்கு எப்படி செய்யப்பட்டது?
3. அகசியா ராஜாவின் தாயார் பெயர் என்ன? அவனுடைய தாத்தாக்கள் யார்?
4. யோவாஸை களவாய் எடுத்துக் கொண்டு ஒளித்து வைத்தவள் யார்? அவள் கணவன் பெயர் என்ன? அவள் தந்தை யார்? அவள் சகோதரன் யார்?
5. யார் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதைக் கண்டு, யார், துரோகம், துரோகம் என்று கூவினாள்?
6. யார் பலிபீடங்களுக்கு முன்பாக கொல்லப்பட்டான்?
7. யோவாஸின் தாயார் யார்?அவள் எந்தப் பட்டணத்தாள்?
8. பொல்லாத ஸ்திரீயார்? அவள் யாருடைய மனைவி? அவள் குமாரன் யார்?
9. கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்த ராஜா யார்? யாருடைய நாளெல்லாம்?
10. ஆலய பிரகாரத்தில் கல்லெறிந்து கொல்லப் பட்டவன் யார்? யாருடைய குமாரன்?
11. பொருத்துக
(a) அமத்சியா -
(b) யோவாஸ் -
(c) அகசியா -
(d) யோராம் -
(e) யோசேபியாத் -
(அத்தாலியாள், யோவதானாள், அகசியா, சிபியாள், யோசபாத்)
==========
2 நாளாகமம் 21-25
கேள்விகள் - பதில்கள்
===========
1. யோராம் யாருடைய சேஷ்டபுத்திரன்? அதனால் அவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன?Answer: யோசபாத்; ராஜ்யம்
2 நாளாகமம் 21:1-3
2. குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனவன்யார்? அவன் இறுதி சடங்கு எப்படிச்செய்யப்பட்டது?
Answer: யோராம்;கந்தவர்க்கங்கள் கொளுத்தப்படவில்லை, அவன் உடல் ராஜாக்களின் கல்லறைகளில் வைக்கப்படவில்லை.
2 நாளாகமம் 21:16,18,19,20
3. அகசியா ராஜாவின் தாயார் பெயர் என்ன? அவனுடைய தாத்தாக்கள் யார்?
Answer: அத்தாலியாள்; ஒம்ரி, யோசபாத்
2 நாளாகமம் 22:1,2
4. யோவாஸை களவாய் எடுத்துக்கொண்டு ஒளித்து வைத்தவள் யார்? அவள் கணவன் பெயர் என்ன? அவள் தந்தை யார்? அவள் சகோதரன்யார்
Answer: யோசேபியாத்; யோய்தா; யோராம்; அகசியா
2 நாளாகமம் 22:11
5. யார் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதைக் கண்டு, யார் துரோகம்,துரோகம் என்று கூவினாள்?
Answer: யோவாஸ்; அத்தாலியாள்
2 நாளாகமம் 23:1,11,13
6. யார் பலிபீடங்களுக்கு முன்பாக கொல்லப்பட்டான்?
Answer: பாகலின் பூஜாசாரியாகிய. மாத்தான்
2 நாளாகமம் 23:17
7. யோவாஸின் தாயார் யார்?அவள் எந்த பட்டணத்தாள்?
Answer: சிபியாள்;பெயர்செபா
2 நாளாகமம் 24:1
8. பொல்லாத ஸ்திரீயார்? அவள் யாருடைய மனைவி? அவள் குமாரன் யார்?
Answer: அத்தாலியாள்; யோராம்; அகசியா
2 நாளாகமம் 24:7
2 நாளாகமம் 22:1,2
9. கர்த்தரின்பார்வைக்கு செம்மையானதைச் செய்த ராஜா யார்?
Answer: யாருடைய நாளெல்லாம் யோவாஸ்; யோய்தா
2 நாளாகமம் 24:2
10. ஆலய பிரகாரத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்? யாருடைய குமாரன்?
Answer: சகரியா; யோய்தா
2 நாளாகமம் 24:20,21
11.பொருத்துக
(a) அமத்சியா-யோவதானாள்
2 நாளாகமம் 25:1
(b) யோவாஸ் - சிபியாள்
2 நாளாகமம் 24:1
(c) அகசியா - அத்தாலியாள்
2 நாளாகமம் 22:2
(d) யோராம் - யோசபாத்
2 நாளாகமம் 21:1
(e) யோசேபியாத் - அகசியா
2 நாளாகமம் 22:11
===========
2 நாளாகமம் 26-30
வேதாகம கேள்விகள்
============
1. மரண நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்தது யார்?
2. உசியாவின் வர்த்தமானங்களை எந்த தீர்க்கதரிசி எழுதினான்?
3. பராக்ரமசாலிகளான வம்ச தலைவர்கள் எத்தனை பேர்?
4. யூதாவின் மலைகளிலே பட்டணங்களை கட்டினது யார்?
5. யோதாம் பதினான்கு வருஷம் எருசலேமில் அரசாண்டான் சரியா? தவறா?
6. கர்த்தருக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டிருந்த ராஜா யார்?
7. கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள் மேல் இருக்கிறது என்று யார் யாரிடம் கூறியது?
8. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டி போட்டு எருசலேமில் எதை உண்டு பண்ணினான்?
9. சபையார் தகனுவழிக்காக கொண்டு வந்தது என்ன?
10. சகரியாவின் குமாரத்தி யார்?
11. நீங்கள் கர்த்தரை துதியுங்கள் என்று யார் யாரிடம் கூறியது?
12. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் லேவியர் எங்கே கொண்டு போனார்கள்?
13. அஞ்சல்காரர் எந்த தேசங்களில் செபுலோன்மட்டுக்கும் திரிந்தார்கள்?
14. இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எத்தனை நாள் ஆசரித்தார்கள்?
15. ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும் சிலர் எப்படி எங்கே வந்தார்கள்?

வேதாகம கேள்வி பதில்கள்
===========
1. மரண நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்தது யார்?Answer: உசியா
2 நாளாகமம் 20:21
2. உசியாவின் வர்த்தமானங்களை எந்த தீர்க்கதரிசி எழுதினான்?
Answer: ஏசாயா
2 நாளாகமம் 26:22
3. பராக்ரமசாலிகளான வம்ச தலைவர்கள் எத்தனை பேர்?
Answer: 2600
2 நாளாகமம் 26:12
4. யூதாவின் மலைகளிலே பட்டணங்களை கட்டினது யார்?
Answer: யோதாம்
2 நாளாகமம் 27:4
5. யோதாம் பதினான்கு வருஷம் எருசலேமில் அரசாண்டான் சரியா? தவறா?
Answer: தவறு
2 நாளாகமம் 27:1
6. கர்த்தருக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டிருந்த ராஜா யார்?
Answer: ஆகாஸ்
2 நாளாகமம் 28:22
7. கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள் மேல் இருக்கிறது என்று யார் யாரிடம் கூறியது?
Answer: ஓதேத் சமாரியாவின் சேனையை பார்த்து
2 நாளாகமம் 28:9,11
8. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டி போட்டு எருசலேமில் எதை உண்டு பண்ணினான்?
Answer: மூலைக்கு மூலை பலிபீடங்களை
2 நாளாகமம் 28:24
9. சபையார் தகனுவழிக்காக கொண்டு வந்தது என்ன?
Answer: 70காளைகள், 100ஆட்டுக்கடாக்கள், 200ஆட்டுக்குட்டிகள்
2 நாளாகமம் 29:32
10. சகரியாவின் குமாரத்தி யார்?
Answer: அபியாள்
2 நாளாகமம் 29:1
11. நீங்கள் கர்த்தரை துதியுங்கள் என்று யார் யாரிடம் கூறியது?
Answer: எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரிடம்
2 நாளாகமம் 29:30
12. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் லேவியர் எங்கே கொண்டு போனார்கள்?
Answer: கீதரோன் ஆற்றிற்கு
2 நாளாகமம் 29:16
13. அஞ்சல்காரர் எந்த தேசங்களில் செபுலோன்மட்டுக்கும் திரிந்தார்கள்?
Answer: எப்பிராயீம் மனாசே
2 நாளாகமம் 30:10
14. இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை எத்தனை நாள் ஆசரித்தார்கள்?
Answer: ஏழுநாள்
2 நாளாகமம் 30:21
15. ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும் சிலர் எப்படி எங்கே வந்தார்கள்?
Answer: மனத்தாழ்மையாய், எருசலேமுக்கு
2 நாளாகமம் 30:11
=============
கேள்விகள்
வேதப் பகுதி 2 நாளாகமம் 31-36 அதிகாரங்கள்
===========
1) யார், ஏன் ஊற்றுகள், ஒடையையும் தூர்த்துப் போட்டார்கள் 2) கர்த்தருக்கான பலிகளுக்காக தன் செல்வத்திலிருந்து கொடுத்துமல்லாமல் மற்றவர்களையும் கொடுக்க வைத்தது யார்
3) "அவனோடிருக்கிறவர்க்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" யார் யாரிடம் கூறியது
4) கர்த்தரின் பேச்சை அசட்டை பண்ணியவர்கள் யார்
5) ஒன்றை தவிர எல்லாவற்றிலும் அப்பாவை போல செயல்பட்ட மகன் யார் ?அந்த ஒன்று என்ன?
6) இரண்டெழுத்து பெயர் உடையவர் தன்னை எதிர்க்க வேண்டாம் ஒருவரிடம் கூறியவர் யார்?
7) தேவன் சொன்னதை யார் யாருக்கு கூறினார்?
8) கட்டப்பட்டு அயல்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட ராஜா யார்?
9) கர்த்தருடைய கோபம் யார் மேல் ஊண்டாகி இரக்கம் இல்லாமல் ஆயிற்று ஏன்?
10) ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சுத்திகரிப்பு பணிகளை துவங்கியவன் யார்?
11) கண்டு எடுக்கப்பட்ட புத்தகம் எது, யாரால் எடுக்கப்பட்டது?

12) இந்த வேதப் பகுதியில் தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் நடந்ததாக கூறப்பட்டுள்ள வசனங்கள் எவை ? வசன எண்கள் கூறவும்?
13) ஒரே வயதில் ராஜா ஆனவர்கள் யார் யார்?
14) பொருத்துக
அ) அசீரியா - மனாசே
ஆ) யூதா, எருசலேம் - கோரேஸ்
இ) எகிப்து - சனகெரிப்
ஈ) எருசலேம் - சிதேக்கியா
எ) பெர்சியா- நோகோ
============
வேதப் பகுதி 2 நாளாகமம் 31-36 அதிகாரங்கள் கேள்விகளுக்கு பதில்
============
1) யார், ஏன் ஊற்றுகள், ஒடையையும் தூர்த்துப் போட்டார்கள்?Answer: யூதாவின் அநேக ஜனங்கள்; அசீரியா ராஜாக்கள் வந்து அதிக தண்ணீரைக் கண்டு பிடிப்பானேன் என்று சொல்லி
2 நாளாகமம் 32:1- 4
2) கர்த்தருக்கான பலிகளுக்காக தன் செல்வத்திலிருந்து கொடுத்துமல்லாமல் மற்றவர்களையும் கொடுக்க வைத்தது யார்
Answer: எசேக்கியா ராஜா
2 நாளாகமம் 31:3,4
3) "அவனோடிருக்கிறவர்க்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" யார் யாரிடம் கூறியது
Answer: எசேக்கியா; ஜனத்தின் மேலான படை தலைவர்களிடம்
2 நாளாகமம் 32:6
4) கர்த்தரின் பேச்சை அசட்டை பண்ணியவர்கள் யார்?
Answer: மனோசேயும் அவனுடைய ஜனமும்
2 நாளாகமம் 33:30
5) ஒன்றை தவிர எல்லாவற்றிலும் அப்பாவை போல செயல்பட்ட மகன் யார் ?அந்த ஒன்று என்ன?
Answer: ஆமோன்; கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தவில்லை
Answer: ஆமோன்; கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தவில்லை
2 நாளாகமம் 33:22,23
6) இரண்டெழுத்து பெயர் உடையவர் தன்னை எதிர்க்க வேண்டாம் ஒருவரிடம் கூறியவர் யார்?
Answer: நோகோ
2 நாளாகமம் 35:20
7) தேவன் சொன்னதை யார் யாருக்கு கூறினார்?
Answer: நோகோ யூதாவின் ராஜா யோசபாத்துக்கு
8) கட்டப்பட்டு அயல்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட ராஜா யார்
Answer: யோயாக்கீம்
2 நாளாகமம் 36:5,6
9) கர்த்தருடைய கோபம் யார் மேல் ஊண்டாகி இரக்கம் இல்லாமல் ஆயிற்று ஏன்?
Answer: கர்த்தருடைய ஜனத்தின் மேல் ; தேவனுடைய ஸ்தானபதிகளை பரியாசம் பண்ணி அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால்
2 நாளாகமம் 36:16
10) ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சுத்திகரிப்பு பணிகளை துவங்கியவன் யார்?
Answer: யோசியா ராஜா
2 நாளாகமம் 34:1-3
11) கண்டு எடுக்கப்பட்ட புத்தகம் எது, யாரால் எடுக்கப்பட்டது?
Answer: கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகம்; ஆசாரியானாகிய இலக்கியாவால்
Answer: கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகம்; ஆசாரியானாகிய இலக்கியாவால்
2 நாளாகமம் 34:14
12) இந்த வேதப் பகுதியில் தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் நடந்ததாக கூறப்பட்டுள்ள வசனங்கள் எவை .வசன எண்கள் மட்டும் கூறவும்
2 நாளாகமம் 36:21,22,23
13) ஒரே வயதில் ராஜா ஆனவர்கள் யார் யார்?
Answer: யோசியா
2 நாளாகமம் 34:11
Answer: யோயாக்கீன்
2 நாளாகமம் 36:9
14) பொருத்துக
அ) அசீரியா ---- சனகெரிப்
2 நாளாகமம் 32:10
ஆ) யூதா, எருசலேம் -----சிதேக்கியா
2 நாளாகமம் 36:10
இ) எகிப்து ---- நோகோ
2 நாளாகமம் 35:20
ஈ) எருசலேம் ----- மனாசே
2 நாளாகமம் 33:1
எ) பெர்சியா---- கோரேஸ்
2 நாளாகமம் 36:22