=============
குமாரன் - SON
===============
Strong's g5207
- Lexical: υἱός
- Transliteration: huios
- Part of Speech: Noun, Masculine
- Phonetic Spelling: hwee-os '
- Definition: a son, descendent.
- Origin: Apparently a primary word; a "son" used very widely of immediate, remote or figuratively, kinship.
- Usage: child, foal, son.
=============================
Verse for meditation..
1 யோவான் 5:20
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
=============================
1. மரியாளின் குமாரன் - SON OF MARY
லூக்கா 1: 31
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
மாற்கு 6: 3
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.
2. யோசேப்பின் குமாரன் - SON OF JOSEPH..
லூக்கா 4: 22
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
3. மனுஷகுமாரன் - SON OF MAN
வெளிப்படுத்தின விசேஷம் 14: 14
பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.
மத்தேயு 20: 28
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
4. ஆபிரகாமின் குமாரன் - SON OF ABRAHAM..
மத்தேயு 1: 1
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
5. தாவீதின் குமாரன் - SON OF DAVID
மத்தேயு 1: 1
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
6. தேவனுடைய குமாரன் - SON OF GOD
மத்தேயு 16: 16
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
7. உன்னதமானவருடைய குமாரன் - SON OF THE MOST HIGH..
லூக்கா 1: 32
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
8. முதற்பேறான குமாரன் - FIRST BORN SON
ரோமர் 8: 29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு , தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
9. ஒரேபேறான குமாரன் - ONLY BEGOTTEN SON
யோவான் 1: 28
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
10. நேசகுமாரன் - BELOVED SON
லூக்கா 9: 35
அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன் , இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
Closing thought..
பிதா முத்திரித்த குமாரன் - FATHER SEALED SON
யோவான் 6: 27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=======================
இந்தப் பாத்திரம் - This cup
========================
Verse for meditation..
மத்தேயு 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26:39
And He went a little farther, and fell on his face, and prayed, saying, O my Father, if it be possible, let this cup pass from me: nevertheless not as I will, but as thou wilt.
===========================
Divinty of "this cup"
"இந்தப் பாத்திரத்தின் " தெய்வீகம்
ஆதியாகமம் 44: 5
அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.
Genesis 44: 5
Is not this it in which my lord drinketh, and whereby indeed He divineth ? ye have done evil in so doing.
"இந்தப் பாத்திரம் " கிறிஸ்துவின் தெய்வீக மரணம்.. சுட்டிக்காட்டுகிறது
"This cup" metaphors Christ's divine death..
1. பிதா கொடுத்த பாத்திரம்
The cup that the father giveth
யோவான் 18: 11
அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு, பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
John 18: 11
Then said Jesus unto Peter, Put up thy sword into the sheath: the cup which my Father hath given me, shall I not drink it?
2. மற்றவர்களால் குடிக்க முடியாத பாத்திரம்
The cup no one has drunk..
மத்தேயு 20: 22
இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும் , நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
Matthew 20:22
But Jesus answered and said, Ye know not what ye ask. Are ye able to drink of the cup that I shall drink of, and to be baptized with the baptism that I am baptized with? They say unto him, We are able.
3. நீங்கக்கூடாத பாத்திரம்
The cup that passeth not
மத்தேயு 26: 39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26: 39
And He went a little farther, and fell on his face, and prayed, saying, O my Father, if it be possible, let this cup pass from me: nevertheless not as I will, but as thou wilt.
4. கிறிஸ்து பானம் பண்ணிலாலொழிய நீங்காத பாத்திரம்
The cup not passeth unless Christ tasteth
மத்தேயு 26: 42
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Matthew 26: 42
He went away again the second time, and prayed, saying, O my Father, if this cup may not pass away from me, except I drink it , thy will be done.
5. ருசி பார்க்கப்பட்ட பாத்திரம்
The cup that tasteth by the Lord
எபிரேயர் 2: 9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
Hebrews 2: 9
But we see Jesus, who was made a little lower than the angels for the suffering of death, crowned with glory and honour; that He by the grace of God should taste death for every man.
Worship message..
ஆராதனை செய்தி..
@ கர்த்தருடைய பாத்திரத்தை கவனமாக நிதானித்து பருகவும் ..
The cup that teacheth self examination .
1 கொரிந்தியர் 10:21
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே. நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
1 Corinthians 10:21
Ye cannot drink the cup of the Lord, and the cup of devils: ye cannot be partakers of the Lord's table, and of the table of devils.
@ எல்லோரும் பருக அருளப்பட்ட பாத்திரம் ..
The cup that mercieth everyone to drink..
மத்தேயு 26:27
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்,
Matthew 26:27
And He took the cup, and gave thanks, and gave it to them, saying, Drink ye all of it;
@ தொழுது கொள்ள ஆதாரமான ரட்சிப்பின் பாத்திரம்..
The cup that helps worship with cup of salvation ..
சங்கீதம் 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
Psalms 116:13
I will take the cup of salvation, and call upon the name of the LORD.
@ நிரம்பி வழிகிற என் பாத்திரம்..
My cup runneth over..
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Psalms 23:5
Thou preparest a table before me in the presence of mine enemies: thou anointest my head with oil; my cup runneth over.
@ சகோதர ஐக்கியத்தை ஸ்திரப்படுத்தும் பாத்திரம்..
The cup that establisheth brethren fellowship ..
1 கொரிந்தியர் 10:17
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம் .
1 Corinthians 10:17
For we being many are one bread, and one body: for we are all partakers of that one bread.
@ நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் ..
The cup of blessing which we bless ..
1 கொரிந்தியர் 10:16
நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?
1 Corinthians 10:16
The cup of blessing which we bless, is it not the communion of the blood of Christ? The bread which we break, is it not the communion of the body of Christ?
Remember ..
நினைவில் கொள்க..
No meaningful worship will send you empty..
எந்த ஒரு புத்தியுள்ள ஆராதனையும் உங்களை வெறுமையாய் அனுப்பாது..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
========================
தேவனுடைய அற்புதத்தின் காரணங்கள்
========================
1. To reveal Christ..
அப்போஸ்தலர் 2:22
இஸ்ரவேலேரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
2. To confirm word of God..
மாற்கு 16:20
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
3. To confirm salvation..
எபிரேயர் 2:4
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
4. To show Christ's authority as God..
@ Authority over nature..
மாற்கு 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி,கடலைப்பார்த்து, இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
@ Authority over forgiveness..
மாற்கு 2.10
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:
@ Authority over death..
லூக்கா 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
5. To reveal the works of God..
யோவான் 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
6. To reveal believer's witness..
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
7. To prove apostleship..
அப்போஸ்தலர் 5:12
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
8. To destroy man of sin..
2 தெசலோனிக்கேயர் 2:7-9
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான். அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
9. To prove that Jesus the Messiah..
மத்தேயு 11:2-5
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள், குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
கடைசியாக சகோதரரே..
யாத்திராகமம் 15.11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் ?
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
======================
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
BIBLICAL REVELATIONS
PRAYER - ஜெபம்
========================
ANSWERED PRAYERS
1. Praying in Persistence
லூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
2. Praying in Faith..
லூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
3. Praying in keeping God's commandments..
1 யோவான் 3:22
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
4. Praying in abiding Christ..
யோவான் 15:7
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
5. Praying in His will..
1 யோவான் 5:14
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
6. Praying in Holy Spirit..
எபேசியர் 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்.
7. Praying in one mindedness..
மத்தேயு 18:19
அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8. Praying in doing pleasing things..
1 யோவான் 3:22
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
UNANSWERED PRAYERS
1. Praying with Sin..
ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
2. Praying with idolatry..
எசேக்கியேல் 14:3
மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே, இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
3. Praying with selfishness..
நீதிமொழிகள் 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
4. Praying with lustfulness..
யாக்கோபு 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
5. Praying without family fellowship..
1 பேதுரு 3:7
அந்தப்படியே புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
6. Praying with old nature..
யாக்கோபு 4:2
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
7. Praying with self plans..
ஏசாயா 55:8
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
8. Praying with unconfessed sins..
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
கடைசியாக சகோதரரே..
ஜெபத்திற்கு மூன்று விதமான பதில்கள்..
@ Instant Answer ( God's will ) ..
தானியேல் 9.23
நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள்.
@ Delayed Answer ( God's time )
பிரசங்கி 3.11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும், செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
@ No Answer ( God's sovereignty )
2 கொரிந்தியர் 12:8-9
8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+91996505030
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
TABLE REMEMBRANCE THOUGHT
மேஜை நினைவு கூறுதலின் தியானம்..
========================
THE UNIQUE BURIAL OF JESUS CHRIST
இயேசு கிறிஸ்துவின் தனித்துவ அடக்கம்
========================
MEN AROUND THE CROSS
சிலுவையை சூழ்ந்திருந்த மனிதர்கள்..
========================
தீர்க்கதரிசனம் ..
ஏசாயா 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
நிறைவேறுதல் ..
அப்போஸ்தலர் 13:29
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
சரித்திரம் ..
யோவான் 19:38-42
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான் ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும்,அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் யோசேப்பின் பங்கு
1. யோசேப்பு ஒரு சீஷன்..
2. யோசேப்பு ஒரு ஐசுரியவான்..
3. யோசேப்பு அரிமத்திய ஊரான்..
மத்தேயு 27:57
சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
4. யோசேப்பு ஒரு கனம்பொருந்திய ஆலோசனைக்காரன் ..
5. யோசேப்பு தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவன் ..
மாற்கு 15:43
கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
6. யோசேப்பு ஒரு உத்தமனும் நீதிமானுமாயிருந்தவன் ..
லூக்கா 23:50
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
7. யோசேப்பு யூதருக்குப் பயந்ததவன்..
யோவான் 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்
இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் நிக்கோதேமு பங்கு
1. நிக்கோதேமு யூதருக்குள்ளே அதிகாரி ..
யோவான் 3:1
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
2. நிக்கொதேமு பரிசேயன் ..
யோவான் 7:50
இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி:
3. நிக்கொதேமு போதகன்..
யோவான் 3:10
இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தில் ஸ்திரீயின் பங்கு
மாற்கு 14.8
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்: நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
இயேசு கிறிஸ்துவின் அடக்கத்தின் தனித்துவம்
1. புதிய கல்லறை..
மத்தேயு 27:60
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
2. ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறை..
லூக்கா 23:53
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
3. இயேசு கிறிஸ்து தாமே உயிர்த்தெழுந்தார்.. என்பதை நிரூபிக்க ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறை.. அவருக்கு ஆயத்தமானது
2 இராஜாக்கள் 13:20-21
எலிசா மரணமடைந்தான், அவனை அடக்கம்பண்ணினார்கள், மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள், அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
இயேசு கிறிஸ்துவின் அடக்கம் விசுவாசிகளின் ஞானஸ்னானத்திற்கு ஒப்புமை..
1. கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்
ரோமர் 6.4
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம் .
கொலோசெயர் 2.12
ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும் , அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
shalomsteward1@gmail.com
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
=============
பரிசுத்தமும்
=========-==
கிறிஸ்து
1. பரிசுத்தமும் பயங்கரமுமான நாமம்
சங்கீதம் 111.9
அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார், அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
2. பரிசுத்தமும் மகிமையுமுள்ள வாசஸ்தலம் ..
ஏசாயா 63.15
தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?
3. பரிசுத்தமும் மகிமையுமான ஆலயம்..
ஏசாயா 64.11
எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.
4. பரிசுத்தமும் நீதியுமுள்ள கிறிஸ்து. .
அப்போஸ்தலர் 3.14
பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,
5. பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவர். .
வெளிப்படுத்தின விசேஷம் 6.10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
6. பரிசுத்தமும் மீட்புமான கிறிஸ்து ..
1 கொரிந்தியர் 1.31
அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
சபை
பரிசுத்தமும் பிழையற்றதுமான சபை
எபேசியர் 5.27
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
விசுவாசிகள்
பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடக்க வேண்டும் ..
1 தெசலோனிக்கேயர் 2.10
விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
இஸ்ரவேல் ..
பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமான இஸ்ரவேல் ..
எரேமியா 2.3
இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது, அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள், பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்படியிருக்க, சகோதரரே,
பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாகிய உங்கள் சரீரங்கள் ..
ரோமர் 12.1
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை