==================
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்
===================
புலம்பல் 3:40
வருடத்தின் கடைசி நாட்களில் வந்து இருக்கிற நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.
1) இந்த வருடம் முழுவதும் ஒழுங்காக வேதம் வாசித்தீர்களா ? வேலைக்கு செல்கிறவர்கள்/படிக்கிறவர்கள் தினசரி 5 அதிகாரம் குறைந்தது வாசிக்க வேண்டும். மற்றவர்கள் அதிகம் வாசிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 1:2
2) தினசரி 1 மணி நேரம் ஜெபித்தீர்களா ? ஜெப ஜீவியம் இந்த வருடத்தில் எவ்வாறு இருந்தது ? Facebook, whatsapp பார்க்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறிர்கள். ஆனால் ஜெபிக்க நேரமில்லை. ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்
லூக்கா 21:36
3) கர்த்தரை ஒழுங்காக துதித்தீர்களா ? கர்த்தரை துதிப்பதில் குறைவு படக்கூடாது. சோர்ந்து போக கூடாது. துதிக்கிற மனுஷன், குடும்பம் வளரும் யாத்திராகமம் 12:24-27,31
4) எல்லா Sundays ஒழுங்காக ஆராதனைக்கு சென்றீர்களா ? உடல் நலமில்லாமல் படுக்கையில் இருந்தால் பரவாயில்லை. மற்றபடி எக்காரணத்தை கொண்டும் சபைகூடி வருவதை விட்டு விடக்கூடாது
எபிரெயர் 10:25
5) கர்த்தருக்கு தசமபாகம்/காணிக்கை ஒழுங்காக கொடுத்தீர்களா ? கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
லூக்கா 6:38
6) மற்ற எல்லாரை (கணவன்/மனைவி/பிள்ளைகள்) காட்டிலும் இயேசுவை அதிகம் நேசித்திர்களா?
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல
மத்தேயு 10:37
7) உங்கள் வேலை/தொழில் எல்லாவற்றிலும் உண்மை காணபட்டதா ? பேச்சிலும் கூட உண்மை காணப்பட வேண்டும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான்
நீதிமொழிகள் 28:20
8) உங்கள் ஜீவயத்தில் கனி காணப்பட்டதா ? கனி = நல்ல சுபாவங்கள். நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்னியிலே போடப்படும் (மத்தேயு 7-19) லூக்கா 13:6-9 ல் 3 வருடம் கனி கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம்
9) யார் மேலும் கசப்பு காணப்பட கூடாது. மற்றவர்கள் குற்றத்தை மன்னித்து அதை மறக்க வேண்டும். கர்த்தருடைய பிள்ளையே, தேவனுடைய வசனத்தின்படி (எபேசியர் 4-31) நமது வாழ்வில் எவரைக் குறித்தும் எந்த ஒரு மனக்கசப்பும் நமக்கு இருக்க கூடாது. அந்த மக்கள் நமக்கு எப்படிபட்ட துரோகம் செய்து நமது குடும்பத்தை பாழாக்கியிருந்த போதிலும், அதை நாம் மனதில் கொள்ளாமல் தேவனுடைய ஜீவனுள்ள வசனத்துக்கு கீழ்படிந்து, அவர்களை மன்னித்து அவர்களோடு நல்மனம் பொருந்தி கொள்ள வேண்டும்.
10) 2021 விட 2022 ல் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து காணப்படுகிறிர்களா? பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்
வெளிப்படுத்தல் 22:11
11) 2022 ல் எத்தனை ஆத்துமாக்கள் ஆதாயம் செய்தீர்கள் ? எத்தனை பேருக்கு சுவிஷேம் கூறினிர்கள் ?
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்
வெளிப்படுத்தல் 2:5
===========
Let us test and examine our ways and return to the Lord
===========
Lamentations 3:40
As we enter the final days of the year, we examine our spiritual lives.
1) Have you read the scriptures properly this whole year? Those who go to work/study should read at least 5 chapters daily. Others should read more. Blessed is the man who meditates day and night (Psalm 1:2)
2) Did you pray for 1 hour daily? How was the prayer life this year? How much time do you spend per day checking facebook, whatsapp? But there was no time to pray. Therefore watch ye always, that ye may escape all these things which shall come to pass, and be counted worthy to stand before the Son of Man.
(Luke 21:36)
3) Did you praise the Lord properly? Praise the Lord should not be lacking. Don't get tired. A man who praises, his family prospers (Exodus 12:24-27,31)
4) Did you go to worship regularly on all Sundays? It doesn't matter if you are sick and in bed. Otherwise, do not forsake the coming together of the church (Heb 10:25).
5) Have you given your tithe/offering to the Lord properly? Give, and it will be given to you (Luke 6:38).
6) Did you love Jesus more than anyone else (husband/wife/children)?
Whoever loves father or mother more than myself is not worthy of me, and whoever loves son or daughter more than myself is not worthy of me - (Matthew 10:37)
7) Is the truth seen in all your work/profession? Truth should be seen even in speech. A faithful man will receive perfect blessings (Proverbs 28:20).
8) Have you seen fruit in your life? Kani = good natures. Every tree that does not bear good fruit will be cut down and thrown into the fire (Matthew 7-19) In Luke 13:6-9 we read that it did not bear fruit for 3 years.
9) Who should not be seen as bitter. Others should forgive the offense and forget it. Child of God, according to the word of God (Ephesians 4-31) we should not have any grudge against anyone in our life. Regardless of how those people have betrayed us and ruined our family, we should not mind it and obey the living word of God, forgive them and reconcile with them.
10) Are you seeing more growth in your spiritual life in 2022 than in 2021? Let him who is holy be still more holy (Revelation 11-22)
11) How many souls did you gain in 2022? How many people did you congratulate?
Therefore, remember from what condition you have fallen, repent and do the works you did in the beginning; Otherwise I will come to you quickly and remove your lampstand from its place, unless you repent (Revelation 2:5)
============
ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
=============
ரோமர் 15:7
கிறிஸ்து நம்மை ஏற்று கொண்டது போல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்று கொள்ளுங்கள்.
அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்தி விருத்தியை உண்டாக்கும்
1 கொரிந்தியர் 1:8
இறுமாப்பு பிரிவினையை உண்டாக்கும்,
பிசாசு மனிதர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிறான். தேவ அன்போ மனிதர்களை இணைத்து பிணைத்து விடுகிறது
எந்த விதத்திலும் தகுதியில்லாத நம்மை அவரோடு இருக்கும்படி இயேசு நம்மை ஏற்றுக் கொண்டார். அதே போல் நாமும் பிறரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு அநேகர் நான் எதையும் மன்னிப்பேன் ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிக்கவே மாட்டேன் என்று வீர வசனம் பேசுகிறார்கள்.
மனித உறவுகள் சரியில்லாத நேரங்களில் நாம் பிசாசுக்கு இடம் கொடுக்கிறோம்.பதிலாக அவன் நமக்கு சகல தீமைகளையும் கொடுக்கிறான் .
நாம் பிறரை மன்னிக்காவிட்டால் அந்த பாவம் என்னும் பாம்பு வாசலில் படுத்துக்கிடக்கும்.
மன்னிக்கும் போதெல்லாலாம் சாத்தானை நம் கால்களால் மிதிக்கிறோம்.
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்
ரோமர் 16:20
பகை விரோதங்களை எழுப்பும். அன்போ சகல பாவங்களை மூடும்
நீதிமொழிகள் 10:12
உன் சகோதரனோடே ஒப்பரவாகி வந்து காணிக்கை செலுத்து
மத்தேயு 5:24
நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11 :25
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20
மேற்கண்ட வசனங்கள் எல்லாம் நமக்கு நன்கு தெரியும். அனேக முறை படித்திருக்கிறோம், பிரசங்கம் கூட செய்வோம்,
ஆனால் நமது ஜீவயத்தில் கடைபிடிக்கிறோமா என்பது மிக மிக முக்கியம்.
குறைகளை பேசிக் கொண்டு திரியாதபடி தேவ அன்பினால் நிறைந்து பிறர் குற்றங்களை மன்னிப்போம்.
மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும் , மன்னிக்கவும் தேவ கிருபை நமக்கு அவசியம். அப்படிப்பட்ட கிருபைகளை தேவன் வருகிற புதிய ஆண்டில் உங்களுக்கும் எனக்கும் தருவாராக
இயேசு சிலுவையில் கூட மற்றவர்களை மன்னித்தார். "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்றார்.
உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தபடு (ஆமோஸ் 4:12)
=======
Accept one another
========
Ro 15:7
Accept one another, just as Christ accepted us.
1Cor 1:8 Knowledge produces growth, love produces growth
divisive,
The devil causes division among men. God's love binds people together
Jesus accepted us to be with Him, unworthy in any way. Similarly we should accept others.
Many people today speak the heroic verse that I will forgive anything but never forgive those who betray their faith.
When human relationships are not right, we give place to the devil. Instead, he gives us all evil.
If we do not forgive others, the snake called sin will lie at the door.
Whenever we forgive, we trample Satan under our feet.
The God of peace will quickly crush Satan under your feet. (Rom 16:20)
Enmity raises enmity. Love covers all sins (Proverbs 10:12)
Be reconciled to your brother and pay tribute (Matthew 5:24).
When you stand and pray, if you have a fault against any man, forgive him that fault, that your Father in heaven may forgive you your trespasses.
Mark 11:25
If a man says he loves God, but hates his brother, he is a liar; He who does not love his brother whom he has seen, how can he love God whom he has not seen?
1 John 4:20
All the above verses are well known to us. We have read many times, even preached,
But whether we follow it in our life is very important.
Let us forgive the sins of others by being filled with the love of God so that we do not dwell on grievances.
We need God's grace to accept and forgive others. May God give you and me such graces in the coming new year
Jesus forgave others even on the cross. He said, "Father, forgive them."
Prepare to meet your God (Amos 4:12)