==========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
பர்தொலாமேயு சீகன் பால்க் (1682-1719)
=========================
அகில உலக கிறிஸ்தவ சபை சரித்திரத்தில் சீர்திருத்த திருச்சபைகள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பரவியது.
சீகன் பால்க் அவர்கள் தன்னுடைய வாலிப வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நற்செய்தியை மற்ற நாடுகளில் அறிவிப்பதற்காக தன்னை ஒரு மிஷனெரியாக அற்பணித்தார்.
சீர்திருத்த திருச்சபையின் (Protestant Church) மிஷனரிகளை இந்தியாவுக்கு அனுப்பும் தரிசனத்தை முதலில் பெற்றவர் டென்மாக் தேசத்து இளவரசர் ஃபிரடெரிக் IV. இதற்காக இவர் தனது சொந்த நாட்டில் இருந்து மிஷனரிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்ப விரும்பினார், ஆனால் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஜெர்மன் தேசத்தில் Halley University--ல் வேதாக கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களான சீகன் பால்க் மற்றும் ஹென்ரிச் புளூச்சோ ஆகியோரை டேனிஷ் மன்னர் ஃபிரடெரிக் IV இன் வேண்டுகோளின் பேரில் டென்மார்க் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார்கள்.
சீர்திருத்த திருச்சபையின் மிஷனெரியாக இந்தியா வந்த முதல் மிஷனெரி பர்தொலாமேயு சீகன் பால்க் அவர்களே.
சீகன்பால்க் மற்றும் ஹென்றி புளுச்சோ இருவரும் எபிரேயம், கிரேக்கு, பானிஷ், இலத்தீன், ஆங்கிலம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்கள். இருவரும் தமிழ்நாட்டில் டேனிஷ் காலனியான தரங்கம்பாடிக்கு 9/07/1706 மூன்று மாத கடல் பயணத்தை, பல ஆபத்துக்களை கடந்து வந்தடைந்தனர்.
இங்கு வந்ததும் கடவுளின் நாமத்திற்காய் பெரிய காரியங்களை சாதிக்கவேண்டும் என்ற வாஞ்சையில் பல பாடுகள், உணவு பழக்க வழக்கங்கள், கடுமையான வெயிலின் பாதிப்புகள் எல்லாவற்றின் மத்தியிலும் தமிழ் மொழியை சீக்கிரமாக கற்றுக்கொண்டு வேதத்தை போதிக்கும் அளவிற்கு நன்கு தேர்ச்சி பெற்றார்கள்.
ஆனால் ஹென்றி புளூச்சோ இங்குள்ள சீதோஷனநிலை அவருக்கு சரியில்லாததினால் அவர் ஜெர்மனி திரும்பினார். மாறாக சீகன் பால்க் தொடர்ந்து நற்செய்தி பணியை தரங்கம்பாடி பகுதியில் செய்து வந்தார்.
சீகன்பால்க் இந்திய கலாச்சாரத்தையும், இந்துமத நூல்கள், உபநிடதங்கள், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகள் பலவற்றையும் கற்று புலமை பெற்றார்.
சீகன்பால்க் அவர்கள் இந்து மதத்தை பற்றி பழித்தோ அல்லது வெறுப்பு காட்டாமல் கிறிஸ்துவின் அன்பையும் கிறிஸ்துவின் நற்செய்தியையும் அறிவித்ததினால் அநேகர் இவர்கள் மீது நன்மதிப்பை வைத்தார்கள்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பலர் ஆண்டவரின் அன்பையும் இரட்சிப்பையும் பெற்றுக்கொண்டு இயேசுவை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே இவர்களுக்கு என்று ஒரு சிறிய தேவஆலயத்தை கட்டினார். அந்த முதல் ஆராதனையில் 9 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். முதலில் ஞானஸ்நானம் பெற்றவர் ஆரோன் என்பவர் ஆவார். இவர்களுக்கு பரிசுத்த வேதாகமம் தமிழ் மொழியில் இல்லாததினால் சீகன்பால்க் வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிகூடம் ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வி அறிவையும் ஏற்படுத்தினார். இதனால் அநேக தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
இதற்கிடையே உயர்ஜாதி இந்து மக்கள் சீகன்பால் நற்செய்தி பணியும் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவும் பெறகூடாது என்பற்காக சீகன்பாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பல பொய் வழக்குகளை அரசாங்கத்தில் பதிவு செய்து பொய் குற்றச்சாட்டுகளை பேச செய்தமையால் 1707 ம் ஆண்டு 4 மாதங்கள் சீகன்பால்க் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீகன்பால் சிறையிலிருக்கும் போது பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்து ரூத் புத்தகம் வரை தமிழில் மொழி பெயர்த்தார். வாழ்க்கையில் பல்வேறுவிதமான கடினமான சூழ்நிலையை சந்தித்தும் சோர்ந்துபோகாமல் அநேக ஆத்துமா ஆதாயம் செய்தார். இவருக்கு முன்பு எவரும் வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தது இல்லை. தமிழ் மொழியில் பாடல்களையும் பிரார்த்தனைகளையும் மொழிபெயர்த்தார்.
அரசியல் எதிர்ப்புகளோடு, அவர் இந்தியாவின் கால சீதோஷன நிலைமைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஜீகன்பால்க் எழுதும்போது: "என் தோல் ஒரு சிவப்பு துணி போல் காட்சி அளித்தது. இங்குள்ள வெப்பம் மிகவும் கடுமையானது, குறிப்பாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், உள்நாட்டிலிருந்து காற்று மிகவும் வலுவாக வீசுகிறது, இதனால் வெப்பம் சூளை நெருப்பாய் இருக்கிறது" என்ற குறிப்பு இவர் எப்படியெல்லாம் நற்செய்தி பணிக்காக பாடு அனுபவித்தார் என்று காட்டுகிறது.
சீகன்பால்க் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும் என்பதற்காக தமிழ் இலக்கணத்தைத் தொகுத்து, இந்திய தத்துவங்கள், இந்திய மதங்கள் மற்றும் சாதி அமைப்பு போன்ற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதினார்.
இந்நிலையில் 1716 ஆம் ஆண்டில், நற்செய்தி பணியின் தேவைகளுக்காக ஜீகன்பால் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அந்த சமயத்தில் அவர் ஒரு போதகரின் மகளை திருமணம் செய்து, பின்னர் தரங்கம்பாடி வந்தடைந்து குடும்பமாக கர்த்தருடைய ஊழியத்தை செய்தார்.
இவர்களுடைய ஊழியத்தின் மூலமாக அநேக மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவர்களுக்கு என்று புதிய ஆலயம் கட்டி அதற்கு புதிய எருசலேம் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்திய திருச்சபைகள் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் சுவிஷேசம் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீகன் பால்க் ஜெர்மனியில் இருந்து பிரிண்டிங் மிஷின் இறக்குமதி செய்து இந்திய மொழிகளிலே முதன்முறையாக தமிழ் மொழியில் வேதாகமம் அச்சிடப்பட்டது.
பின்னர் ஆண் பிள்ளைகளுக்கு என்று தனியாகவும் பெண் பிள்ளைகளுக்கு என்று தனியாகவும் கல்வி கூடம் நிறுவினார். தாய், தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக விடுதியை நிறுவினார். தமிழில் திருச்சபைகளில் ஊழியர்களை உறுவாக்குவதற்காக வேதாகம கல்லூரியை நிறுவினார்.
வேலை வாய்பினை உறுவாக்குவதற்காக தொழில் மையங்களை நிறுவி தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்.
இந்நிலையில் 1718 ஆம் ஆண்டில் திடீரென அவரது உடல்நிலை சரியில்லாமல் மிகவும் மோசமானது. பின்னர் 23/02/ 1719 ல் சீகன்பால்க் இந்த உலக வாழ்க்கையை தன்னுடைய 36-ம் வயதில் நல்ல போராட்டத்தை போராடி, ஓட்டத்தை ஓடி, ஜீவ கீரிடத்தை பெற்றுக்கொண்டார்.
தன் வாழ்க்கை முழுவதுமே நற்செய்தியைப் பரப்புவதில் முழு அர்ப்பணிப்புடன் வாழ்க்கையை முடித்தார். அவர் இறக்கும்போது அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகளையும், மற்றும் 250 தமிழ் கிறிஸ்தவ குடும்பங்களையும் விட்டு சென்றார். அவருடைய சரீரம் புதிய எருசலேம் ஆலயத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. சீகன் பால்க் மரித்தாலும், இன்றும் பேசப்பட்டு கொண்டே இருக்கின்றார்.
சீகன் பால்க் ஊழியத்தின் முதல் ஆத்தும அறுவடை ஞானஸ்நானம் பெற்று, குருத்துவ கல்வி பயின்று சீர்திருத்த திருச்சபையின் முதல் தமிழ் குருவானவராக Rev. Aaron அவர்கள் 28/12/1733 ம் ஆண்டு லூத்ரன் சபையில் நியமனம் செய்யப்பட்டார்.
சீகன்பால்கு ஐயரின் சாதனைகள்
1. முதன் முதல் இந்தியா வந்த புரோட்டஸ்டன்ட் அருள்தொண்டர்.
2. முதன் முதல் அரசின் உரிமை பெற்ற அருள்தொண்டர்
3. முதன் முதல் இந்தியாவில் புரோட்டஸ்டன்ட் பக்தியை பரப்பினவர்
4. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர்
5. முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர்
6. முதன் முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்தவர்
7. முதன் முதல் புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டவர்
8. முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர்
9. முதன் முதல் ஜெர்மன் ஞானப்பாடல்களை தமிழில் அச்சிட்டவர்
10. முதன் முதல் தமிழ் நூல்களை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர்
11. முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர்
12. முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்
13. முதன் முதல் ஏழைப்பிள்ளைகளுக்குக் காப்பகத்தை துவங்கியவர்.
14. முதன் முதல் பெண்களுக்குத் தையற்கூடம் ஆரம்பித்தவர்.
15. முதன் முதல் இலவச மதிய உணவு வழங்குவதைத் துவங்கினவர்.
16. முதன் முதல் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடநூலை அச்சிட்டவர்.
17. முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தைக் கட்டினவர்.
18. முதன் முதல் தமிழ் மொழியில் அருளுரை ஆற்றினவர்.
19. முதன் முதல் இறையியல் கல்லூரியை உருவாக்கினவர்.
20. முதன் முதல் பல் சமய உரையாடலை துவக்கினவர்.
21. முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர்.
22. முதன் முதல் தென்னிந்தியக் கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.
23. முதன் முதல் அருள்தொண்டில் பன்னாட்டு உறவை உருவாக்கினவர்.
24. முதன் முதல் ஜெர்மனியில் தமிழைக் கற்றுக்கொடுக்க பரிந்துரைத்தவர்.
இந்தியா வந்து, இங்கு வாழ்ந்து, இம்மண்ணிலே தனது இன்னுயிரைத் துறந்த சீகன்பால்க் ஐயர் தான் வாழ்ந்த 13 ஆண்டுகளில் இத்தனை காரியங்களை சாதித்துள்ளார்.
சீகன்பால்கின் பணி நிறைவடைந்து கிட்டத்தட்ட 303 ஆண்டுகள் மேல் ஆகின்றது. இவர் மூலமாகத்தான் பிற்காலத்தில் அநேக இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டது. இதனால் அநேகர் இயேசுவின் நற்செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. இன்னும் பல இந்திய மொழிகளில் ஊழியர்களின் குறைவினால் வேதாகமம் மொழிபெயர்க்க படாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வேதாகம மொழிபெயர்ப்பு இன்று இந்தியாவில் ஒரு மிக பெரிய தேவையாக உள்ளது.
சுவிசேஷம் அறிவிக்கப்பட, நற்செய்தி பணி இன்னும் சிறந்து விளங்க, வேதாக மொழிபெயர்ப்பின் வேலையை செய்ய இதை வாசிக்கும் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கர்த்தரின் ஊழியத்தை செய்ய அற்பணிப்பீர்களா? வாருங்கள்...நாம் யாவரும் சேர்ந்து, நம்முடைய தலைமுறையில் இந்திய தேசம் இயேசுவுக்கு சொந்தமாக நற்செய்தி பணியினை செய்வோம். அதற்க்கு நம்மை அற்பணிப்போம்.
✝️. இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
🛐. இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
=======================
The Gospel Pioneers
Bartholomaeus Zieganbalg (1682-1719)
=====================
BartholomaeusZieganbalg is a pioneer German missionary to India. In youth his faith was shaped by Pietism(it is a revival movement which had begun in the Lutheran Church in Germany). The man who first conceived the idea of sending the Protestant missionaries to India was King Frederick IV.
King Frederick IV of Denmark was unable to find in his own country any missionary prepared to undertake missionary work in his colony of Tanquebar(Tamil Nadu) in India. The young theological students Ziwganbalg and Heinrich Plutschau went to study in Halle University in Germany at the request of the Danish King, Frederick IV and they were the first protestant missionaries to India.
The two traveled to the Danish colony of Tranquebar, which they reached on July 9, 1706 in Tamil Nadu after many dangers. Ziegenbalg accomplished great things for God in the prime of his youth and that too, in an alien country, despite the inclement climatic conditions and the hostile attitude of the local people to the preaching of the gospel.
They began their work by setting themselves to learn Tamil. Ziwganbalg began preaching in Tamil after eight months and was soon translating hymns and prayers. He studied the Indian culture and Hindu religion. He held great respect for the culture of the Hindus and stood for human dignity independent of race, status and caste.
Zieganbalg entered into religious discussions with Hindus in Tamil and began to preach to them and many came to see him and talk with him. In 1707, Ziegenbalg spent four months in prison on a charge that by converting the natives, and their work was opposed both by militant Hindus and by the local Danish authorities.
He faced many obstacles through his life’s work. Along with the political opposition, he had to cope with the climatic conditions in India. Ziegenbalg wrote: "My skin was like a red cloth. The heat here is very great, especially during April, May and June, in which season the wind blows from the inland so strongly that it seems as if the heat comes straight out of the oven”.
A little congregation was formed in 1707 and a small mission church was built outside the fort. The first Tamil converts, nine in number, were baptized in the following month. Within two years of his arrival he began to translate the New Testament, a thing which apparently no one had ever attempted in any Indian language before.
Beside his Biblical translations, he had finished the NT and gone as far as the book of Ruth in the Old Testament. He compiled a Tamil grammar and wrote scholarly works on such topics as Indian Philosophy, religion and the caste system.
In 1716, Ziegenbalg made a tour of Germany, during which he married a wife, and then he returned to India by way of England sailing in an English ship to Madras. He reached Tranquebar at the end of August 1716 then he builds the new church which is known as the New Jerusalem Church for the native converts.
Ziegenbalg’s conviction that the indigenous church would be Lutheran in faith and the worship pattern is Indian in culture. In 1718 his health began to fail and he died in 23rd February 1719 he died at the early age of 36, ending a life of total dedication to the propagation of the Gospel. When he died, not yet 36, he left his two children, a church of 250 Tamil Christians. He thus became a pioneer in the Western study of South Indian culture, society, and religion.
We can speak of a number of ‘firsts’ in its history-schools, the first girls’ schools, seminary for the training of teachers in India, the first Protestant printing press and on 28 Dec 1733 the ordination of the first Tamil pastor, Aaron. The ordination took place in the New Jerusalem Church which has been dedicated in 1718, and in which Ziegenbalg is buried.
Even though Ziegenbalg’s work is now nearly 307 years old, Bible translation remains a big need in India today. The country is home to 438 languages, of which more than 150 have no Scripture and a definite need. Can you come forward to support the work of Bible translation so that the Gospel may reach the unreached.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?