தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
நள்ளியும் புள்ளியும்
💦💦💦💦💦💦💦
"அக்கா!,
நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் நான் எப்படி இருக்க வேண்டும்?"
பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது. குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.
தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும். நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..
இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.
பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..
நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.
நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.
நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.
கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.
என் அன்பு வாசகர்களே,
இரக்க குணம் நல்லதுதான் ஆனால் நாம் யாரிடத்தில் இரக்கம் காண்பிக்கிறோமோ அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பொறுத்தே அதன் விளைவு தெரியும்.
இரக்க குணம் எங்கு காணப்படும்?? நாம் யாரிடத்தில் மிகுந்த அன்பு செலுத்துகிறோமோ அவர்களிடம் தான் மிகுந்த இரக்கத்தோடு நடந்துக்கொள்வோம். ஆனால் அவர்களோ அந்த அன்பை இரக்கத்தை தவறாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
இக்கதையிலும் கூட அந்த ஓநாய் தனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்ப்ட்டபோது தன்னோடு அன்பாய் ஆதரவாய் மற்றவர்கள் எதிர்த்தபோதும் தன்னோடு பழகிய நள்ளியை இரையாக்கிக்கொண்டது. இதுபோலத்தான் அநேகர் தனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் மற்றவர்கள் யார் என்று பார்ப்பதில்லை அவர்கள் முதலாவது தங்களை தற்காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
Ithu pola daily story venum endral contact +917904957814
வேதத்தில் சிம்சோனின் வாழ்க்கை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தன் பார்வைக்கு அழகாய் இருந்த பெலிஸ்திய பெண்ணை விவாகம் செய்ய தன் தகப்பனையும் தாயையும் அழைத்து சென்ற போது அங்கு ஏழு நாட்கள் விருந்து செய்யப்பட்டது. அந்த நாட்களில் சிம்சோன் அவளுடைய விருந்தாளிகளிடம் ஒரு விடுகதையை கேட்டு ஏழு நாட்களில் விடுகதையை விடுவித்தால் 30 மாற்று வஸ்திரங்கள் தருவதாக ஒப்புக்கொண்டான். அவர்களும் தாங்கள் விடுவிக்கவில்லையென்றால் 30 மாற்று வஸ்திரங்கள் தருவதாக ஒப்புக்கொண்டான்.
ஆனால் ஆறு நாளளவும் அவர்களால் விடுவிக்க முடியவில்லை எனவே அந்த பெலிஸ்தியர் அந்த பெண்ணிடம் சென்று அவளையும் அவள் வீட்டாரையும் விடுகதையை விடுவிக்கவில்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். எனவே தான் திருமணம் செய்ய போகின்றவர் என்றும், அதிகமாய் நேசித்தவர் என்றும் பாராமல் அனுதினமும் தன்னை அவனுக்கு முன்பு அலட்டிக்கொண்டிருந்தபடியால் அவளுக்கு அந்த விடுகதையை விடுவித்தார். அவளோ அதை தன் ஜனங்களிடத்தில் விடுவித்தாள். அவர்கள் மறுநாள் அதிகாலையில் சிம்சோன் முன்பாக சென்று அந்த விடுகதையை விடுவித்தார்கள். அவனோ அவன் சொன்னதுபோல் 30 மாற்று வஸ்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தான்.
இந்த உலகத்தில் நாம் யாரிடத்தில் அதிக அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் தான் நமக்கு எதிராய் அவர்களின் இக்கட்டு சூழ்நிலையில் மாறுகிறார்கள். ஆனால் நம் தேவனோ தன்னை சாவுக்கு ஒப்புக்கொடுப்பார்கள் என் தெரிந்தும் நம் மீது கொண்ட அன்பால் தன்னை சாவுக்கு ஒப்புக்கொடுத்தார். தனக்கு இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை என்றபோதும் தான் தப்பித்துக்கொள்ள முயற்சிக்காமல் தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். எனவே நாம் நமது அன்பை மற்ற மனிதர்களை விட தேவனிடம் அதிகமாய் செலுத்துவோம். எப்படி தேவனிடம் அன்பு செலுத்துவது?? வேதம் வாசித்து, ஜெபித்து தேவனிடம் நெருங்கி வாழ்வோம் நம் இக்கட்டான சூழ்நிலையில் நம் தேவன் நம்மோடு என்றும் இருப்பார் நாம் சுகமாய் வாழ்வோம்.
23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான் 14:23
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x--x
தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
யானைக்கு வந்த திருமண ஆசை
💑💑💑💑💑👩❤️👩👩❤️👩👩❤️👩👩❤️👩👩❤️👩💑
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.
தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.
ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.
நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.
செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.
முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.
"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது.
மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.
என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.
மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.
மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.
வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தையும் அழிவையும் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.
Ithu pola daily message and prayer requests venum endral contact +918148663456
மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார். பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.
என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையின் சம்பவத்தை போலத்தான் அநேகர் தங்கள் பிள்ளைகளாலோ, பெற்றோர்களாலோ, இன் ஜன பந்தங்களாலோ மற்றவர்கள் பாதிக்கப்படும் போது அதை குறித்து முழுவதும் ஆராயாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்து அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று வாக்குவாதம் செய்து அவர்களை தப்புவிக்க நினைக்கிறார்கள்.
உண்மையில் அவர்களால் ஏற்ப்பட்ட பாதிப்பு கொஞ்சமல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி தங்கள் ஜீவனையே வெறுக்கிற அளவிற்கு அவர்கள் செய்கிற காரியம் இருக்கும் ஆனாலும் அவர்கள் பட்சமாகத்தான் பேசுவார்கள். இப்படி அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் தாங்கள் அதற்குரிய பிரதிபலனை நிச்சயம் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
நாம் என்ன செய்கை செய்து கொண்டிருக்கிறோம்? நம்முடைய செய்கைக்கு ஏற்ற பூரண பலன் காத்துக்கொண்டிருக்கிறது. நன்மை செய்தால் நன்மை தீமை செய்தால் தீமை என எல்லாவற்றிற்கும் இருக்கிறது. அதை நாம் இழந்துபோகாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதம் கூறுகிறது,
8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
2 யோவான் 1:8
எனவே நன்மையை மாத்திரம் செய்து அதற்கேற்ற பிரதிபலனை இழந்து போகாமல் பெற்றுக்கொள்வோம்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!
