------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
மனதைப் புரிந்து கொள்
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.
“ என்ன காரணம்?” என்று கேட்டார் அந்த பெரியவர்.
அதற்கு “மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்.
உடனே அந்த பெரியவர் மறுமொழியாக “உனக்குத் துன்பம் கொடுப்பது மற்றவர்களல்ல, உன்னுடைய இருதயம் தான்” என்றார்.
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?” என்று கேட்டான்.
“உன்னுடைய மனதைப் புரிந்து கொள்... அது போதும்.” என்றார்.
“மனதை எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
உடனே அந்த பெரியவர் "இந்தக் கதையைக் கேள் புரியும்“ என்று அவர் சொன்னார். அவனும் ஆவலாய் கேட்க ஆரம்பித்தான்.
“ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வாங்கி வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பூனை, அவருடைய வீட்டில் தொல்லையால் இருந்த எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது. உடனே அவர் அந்த பூனையை எடுத்து கொஞ்சி, அதற்கு பிடித்தமான உணவு வகைகளை வாங்கி கொடுத்தார். ஏனெனில் அது அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
மற்றொரு நாள் அந்தப் பூனை, அவர் தன் வீட்டில் கூண்டில் வைத்து ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்விக் கொண்டு வந்தது. இப்பொழுது அவருடைய முகத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக கோபத்தை ஏற்ப்படுத்தியது. தான் செல்லமாக வளர்த்த கிளியை கொன்றுவிட்டதே என்று அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
தற்போது வீட்டில் எதுவும் கிடைக்காததால் அந்தப் பூனை எங்கேயோ சென்று ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இதை பார்த்த அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது தான் பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பமும், தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பமும், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” என்று அவர் கதையை சொல்லி முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
என் அன்பு வாசகர்களே,
நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதை தான் இருதயம் செய்ய வேண்டுமே ஒழிய இருதயம் செய்ய நினைப்பதை நம் மூளை சிந்திக்க கூடாது. அதற்கு முதலாவது நம் மனதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
எவ்வாறு புரிந்துக் கொள்வது என்பதை இன்றைய கதையில் தெளிவாக அறிந்துக்கொண்டோம். நம்முடைய இருதயத்திலிருந்து தான் பலவிதமான வேண்டாத கிரியைகள் வெளிப்படுகிறது என்று மத்தேயு 15:19 சொல்கிறது. மேலும் நம் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம் இருதயத்தில் சிந்திப்பதை தான் பிரதிபலிக்கிறது.
To get daily message and pray requests in whats app contact +918148663456
நம் இருதயத்தில் நல்ல சிந்தை இருந்தால் நம் வாயின் வார்த்தை நல்லதாய் இருக்கும். நம் இருதயத்தில் அக்கிரம சிந்தை இருந்தால் நம் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் கோபமும், மற்றவர்களை எரிச்சலூட்டும் விதத்திலும் இருக்கும். நம் இருதயத்தில் தேவனை குறித்து அவிசுவாசமாய் இருந்தால் எப்பேர்ப்பட்ட போதகர் வந்து போதகம் பண்ணினாலும் நம் இருதயம் ஏற்றுக்கொள்ளாது மேலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள முனையும் போது அவர்களையும் ஏற்றுக்கொள்ள சம்மதிக்காது.
நம் மனது ஒரு காரியத்தை நல்லது என்று கணித்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் அந்த நிலையிலிருந்து மாறாது அதுவே தீமையாக கணித்துவிட்டால் யார் தலைகீழாக நின்று அது தீமையல்ல நன்மையான காரியம்தான் என்று விளக்கினாலும் அவ்வளவு எளிதாக இருதயம் ஏற்றுக்கொள்ளாது.
வேதத்தில் இஸ்ரவேலரின் முதலாம் ராஜாவாகிய சவுல் கோலியாத்தை கொன்ற தன் மருமகன் மேல் தீமையான சிந்தை கொண்டிருந்தான். சவுலின் மகனாகிய யோனத்தான், அவனுடைய அமைச்சர்கள் என அநேகர் பலமுறை அவனிடம் எடுத்துக்கூறியும் அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அவனுடைய தீமையான எண்ணம் இறுதியில் தன் ஜீவன் நல்ல முறையில் இருந்ததாக வேதம் கூறவில்லை.
சிந்தித்து பாருங்கள் ஒருவேளை நாம் நினைப்பது போல தேவனும் நினைத்திருந்தால் என்னவாகும். ஆனால் வேதத்தில் எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு உரைக்கிறார்,
11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
எரேமியா 29:11
எனவே நாமும் சமாதானத்துக்கான நினைவுகளை நினைப்போம் தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
