தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய மாலை வணக்கம் !! இந்த இரவு உங்களுக்கு நல்ல சிந்தனைகளோடும், கனவுகளோடும் அமைவதாக!!!
நல்வழிப்படுத்தும் வசனத்துடன் கூடிய குட்டிக் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.!!!
ஏழைகளுக்கு நம்மிடத்தில் இருப்பதைக்கொண்டு உதவி செய்தால் என்ன கிடைக்கும் என்பதை இக்கதை மூலம் அறிந்துக்கொள்வோம்.
‘டூர்’ போனானா குமார்??
\\\\%%%%\\\\%%%%\\\\
குமார் ஐந்தாம் வகுப்புக்கு செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்கு போவதுதான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா, வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார், முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக்கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத்தான் படிப்பான்.
அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள்.
நான்காம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலா செல்லும் சமயம் அப்பா கையில் சுத்தமாகக் காசே இல்லாமல் போய்விட்டது. குமாரால் சுற்றுலா போக முடியவில்லை.
நண்பர்கள் சென்று வந்து தாங்கள் பார்த்ததை எல்லாம் கதை கதையாகச் சொன்னபோது ஏக்கமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் அழுதான். அடுத்த வருடம் எப்படியும் தானும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். சின்ன உண்டியல் தயார் செய்தான்.காசு கிடைக்கும்போது எல்லாம் அதில் சேமித்து வந்தான். ஊரில் இருந்து அத்தை, பாட்டி வரும் போது காசு கொடுப்பார்கள். அதையும் போட்டு வைத்தான். கடைக்குப் போய் வரும்போது மீதம் இருக்கும் ஒரு ரூபாய், 50 காசுகளை அம்மாவின் அனுமதியோடு உண்டியலில் போட்டு சேமித்து வந்தான்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர் “அடுத்த வாரம் நாம் சென்னைக்கு சுற்றுலா செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
கட்டணம் இருநூறு ரூபாய். குமாருக்கு உண்டியலில் அவ்வளவு பணம் சேர்ந்து இருக்குமா என்ற சந்தேகம். வீட்டுக்குப் போனதும் உண்டியலை உடைத்து எண்ணிப் பார்த்தான். நூற்றி இருபத்தெட்டு ரூபாய் இருந்தது. அப்பாவிடம் தனக்கு இன்னும் எழுபத்திரெண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்டான். ஆசிரியரிடம் பெயரும் கொடுத்துவிட்டான். சுற்றுலா கட்டணத்தை குமார் மட்டும் கட்டவில்லை மற்றவர்கள் கட்டிவிட்டார்கள். அவன் அப்பா கடைசி நாள்தான் தர முடியும் என்றார். ஆசிரியரிடம் பேசி, பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் தரவேண்டும் என்ற ஒப்புதல் பெற்றான். அன்றிலிருந்து தினமும் சுற்றுலா பற்றிய கனவுதான்.
மறுநாள் சுற்றுலா. அன்றிரவு தூக்கமே வரவில்லை. அம்மாவிடம் தனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டான். பேருந்தில் யார் பக்கத்தில் உட்கார வேண்டும் என முடிவு செய்துவிட்டான். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவேயில்லை. சென்னை எப்படி இருக்கும்? படத்தில் காண்பிப்பது போல அழகாக இருக்குமா? நிறைய மக்கள் இருப்பார்களா? மெரினா கடற்கரையில் குளிக்கலாம். ஏதாவது கதாநாயகனை பார்க்கலாம். முதலமைச்சரை வழியில் காணலாம்…என்று ஏதேதோ யோசனைகள் குமாருக்கு.
காலை சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து கிளம்பும். ஐந்து மணிக்கே பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். குமார் நான்கு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டான்.அம்மாவை எழுப்பி காலை, மதிய உணவை செய்து தரச்சொன்னான். அப்பா இரவு வரவில்லை. இந்த வாரம் இரவில் வண்டி ஓட்டுகின்றார். முடிந்தால் வந்து பள்ளியில் விடுவதாகவும், இல்லையெனில் குமாரே பள்ளிக்கு செல்லுமாறும் சொல்லிவிட்டு சென்றார் அப்பா. அவர் நாலரை மணியாகியும் வரவில்லை. அதனால் தானே கிளம்பி பள்ளிக்குச் சென்றான் குமார்.
விடியற்காலை என்பதால் இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. பள்ளி நெருங்கும் தெரு முனையில் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. முதலில் பயந்துவிட்டான். பிறகு சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையைத் திருப்பினான். பாட்டி ஒருத்தியின் முனகல்தான் அது. கூனிக்குறுகி தெரு ஓரத்தில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்திருந்தாள். வாடிய முகம். இரவெல்லாம் கத்திக் கத்தி தொண்டை வறண்ட சத்தம்.
“என்ன பாட்டி? என்னாச்சு?”
“இரண்டு நாளா சாப்பிடல” பாட்டியிடம் இருந்து ஒரு பெருமூச்சு வந்தது. “உடம்புக்கு முடியலை. டாக்டர்கிட்டே போக காசில்லே, அம்மா…” மீண்டும் முனகல்.
தன் சுற்றுலா முக்கியமா, இந்தப் பாட்டி முக்கியமா என்று யோசித்தான் குமார். தன் கையில் இருந்த 200 ரூபாயும் உணவுப் பொட்டலங்களையும் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.
அழுதுகொண்டே அம்மாவிடம் நடந்ததை சொன்னான் குமார். அம்மா அவனை வாரி அணைத்துக்கொண்டாள். வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று திறந்தாள். அங்கே குமாரின் ஆசிரியர். பயந்துவிட்டான் குமார். அவன் வீட்டு வாசலில் பள்ளிப் பேருந்து.மாணவர்கள் ‘ஹோ’ என்ற கூச்சலோடு ஜாலியாக இருந்தார்கள்.
“நான் வரலை சார். பணம் இல்லை” அழுதுகொண்டே சொன்னான் குமார்.
“குமார் நீ செஞ்ச காரியத்தை நம் பள்ளி முதல்வர் முத்தையா தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அந்தப் பாட்டியை அவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். உனக்கு தன் பாராட்டைத் தெரிவித்து, வீட்டிற்குச் சென்று சுற்றுலாவிற்கு அழைத்து வரச்சொன்னார். நீ என் மாணவன் என்று சொல்லிக்கொள்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது குமார்” என்றார்.
தன் மகன், கன்றுக்குட்டி போல் துள்ளிக்கொண்டு பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்து சந்தோஷமாகக் கையசைத்தாள் குமாரின் அம்மா.
என் அன்பு வாசகரே,
ஏழைகளுக்கு உதவி செய்தால் அதற்கேற்ற பிரதிபலன் நிச்சயம் கிடைக்கும் என்பதே இக்கதையின் கருத்து.
நம் அன்றாட வாழ்க்கையில் நம்மால் அநேகருக்கு உதவி செய்ய நேர்ந்தும் நாம் உதவி செய்ய தவறி விடுகிறோம் காரணம் நம்முடைய சூழ்நிலையை மட்டுமே நாம் நோக்குவது. நம்முடைய சூழ்நிலையை நோக்கும் போது நமக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருந்தும் உதவி செய்ய முடியாதவர்களாய் இருக்கிறோம்.
To get daily message in whats app contact +918148663456
ஆனால் இக்கதையில் அந்த சிறுவனை நோக்கும்போது நமது தேவை மிகவும் சிறியதே. ஆனாலும் அவன் மற்றவரிடம் கடன் வாங்கியோ அல்லது அவனிடம் அவனுடைய தேவைக்கு அதிகமாகவோ அந்த மூதாட்டிக்கு உதவவில்லை. தன்னிடம் இருப்பதை கொடுத்தால் அவனுடைய கனவே பாழாகிவிடும் என்பதை நன்றாய் அறிந்தும் அரைகுறை மனதாக அல்ல முழுமனதோடும் உதவினான். சிறுவன் அவனைவிட ஏழைக்கு முழுமனதோடு உதவியதால் அவனுடைய கனவு வீணாகாதபடிக்கு கடவுள் ரூபத்தில் வேறொருவருவரால் கனவு நனவானது.
வேதமும் அதை இவ்வாறு கூறுகிறது,
17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழிகள் 19:17
எனவே நாமும் நம்மிடம் இருப்பதில் முழுமனதோடு ஏழைகளுக்கு இரங்குவோம், கடனாக தேவனுக்கு கொடுத்ததை பலமடங்காய் திரும்ப பெற்றுக்கொள்வோம்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்.
😱😱😱😱😱😱🥶🥶🥶🥶🥶🥶🤢🤢🤢🤢🤢🤢🤢🤢
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான். ‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.
என் அன்பு வாசகர்களே,
இவர்களில் யார் படு முட்டாள் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. கதையை படித்து முடித்ததும் நீங்களே அறிந்திருந்திருப்பீர்கள். முட்டாள்கள் என் அறிந்தும் அவர்களிடம் முட்டாள்த்தனமான காரியத்தை செய்ய சொல்லுபவர்கள் தான் உண்மையிலேயே படு முட்டாள்.
உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள், நீங்கள் சம்பளம் கொடுப்பதினால் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் நிச்சயம் செய்வார்கள். நீங்கள் சொல்வதையெல்லாம் செய்வதினால் அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் உங்களிடத்தில் சம்பளம் வாங்குவதால் நீங்கள் யாரிடத்திலும் அவமானப்பட்டுவிட கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் நீங்கள் சொல்வதற்கு கீழ்படிகிறார்களே ஒழிய மற்றபடியல்ல. எனவே அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை அவர்களுக்கு சொல்லுங்கள்.
To get daily story and pray for nation contact +917904957814
ஒரு நல்ல முதலாளி, முட்டாளாய் தன்னிடத்தில் சேருகிற தன் பணிவிடைக்காரனை அறிவாளியாய் மாற்றுவான். அப்படி மாற்றவில்லையெனில் அவன் நல்ல முதலாளியல்ல. அது மாத்திரமல்ல தன் பணியாளர்களின் தேவைகளை முன்னரே அறிந்து அவர்கள் தேவை பூர்த்தியடைய செய்கிறான். மற்ற முதலாளிகளோ அப்படியல்ல தங்களிடன் பணியாளர்களை எவ்வளவு வேலை கொள்ள முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிக்கொண்டு அதற்கான சம்பளம் கொடுப்பதில்லை.
மேலும் பணியாளர்கள் தங்கள் முதலாளி என்ன காரியம் செய்ய சொன்னாலும் அதை உய்த்து ஆராய்ந்து செய்ய தகுந்த காரியமா?? செய்ய தகாத காரியமா?? என்பதை ஆராய்ந்து பார்த்து அதன் பின்னர் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் மீதுள்ள நல்ல முதலாளியின் மதிப்பை நிச்சயம் அதிகரிக்கும். அதுவே மற்ற முதலாளி என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படும். எனவே முதலாளிகள் நல்லவர்களாகவும், பணியாளர்கள் வல்லவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் பல்வேறு நிலைகளை அடைந்து உச்சத்தில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது உலக பிரகாரமான வேலைக்கு மாத்திரமல்ல ஊழியத்திற்கும் பொருந்தும் எனவே நமது பணியார்களை வல்லவர்களாக்குவது நமது கரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து,
எபேசியர் 6:5
6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:6
9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்டசபாதம் இல்லையென்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
எபேசியர் 6:9
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
