தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் மற்றுமொரு குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
சிட்டு குருவியும் குட்டி யானையும்
🐘🐘🐘🐘🐘🐘🐦🐦🐦🐦🐦🐦🐦
”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, ‘வணக்கம் யானை நண்பா’ என்று கூறியது”
அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது
‘உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம் எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?”
உடனே குருவி பதில் சொன்னது’
‘ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில் ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது? ” என்று கேட்டது.
”அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,
இந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு” என்றது
அதைக்கேட்ட குருவி சொன்னது
”அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தால் இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள் நான் வெற்றி அடைந்தால் மரத்தை ஒடிக்க்கூடாது’ என்றது சிட்டுக்குருவி.
‘பொடிப் பயல் உன்னோடு போட்டியா? சரி சொல்லு’ என்றது யானைக் குட்டி.
”நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி” என்றது சிட்டுக்குருவி.
யானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது.
போட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது.
பறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது.
”கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும், நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு” என்றது.
அதைக்கேட்ட கோழி சொன்னது ”அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி! அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்” என்றது.
யானையும் ஒத்துக் கொண்டது
கோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு இறக்கை அடித்தபடியே தாவியது, சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. ‘இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்’ என்றது.
யானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலைவிரிச்சிகிட்டு தாவியது, அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு. யம்மா, யப்பானு கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி. எங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.
யானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்’னு நினைச்சது.
அப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், ‘உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு.”
யானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,
காக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது.
அதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,
யானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,
அதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,
‘ ஏன் அண்ணே கோபப்படுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே என்றது.
யானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது
என்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது
யானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது,
யானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை,
இந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களால பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது
யானை யோசித்துப் பார்த்தது,
குருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,
அன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.
நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்.
என் அன்பு வாசகர்களே,
உயரமோ, உயர் பதவியோ, உயர்ந்த கல்வி அறிவோ எதுவாயினும் அவர்களால் செய்ய முடியாத காரியத்தை அவர்களை விட சிறியவர்கள் மிக எளிதாக செய்து முடித்து விடுவார்கள்.
To get daily message in whats app contact +917904957814
உதாரணமாக வேதியியலில் (Chemistry) தலை சிறந்த ஒரு விஞ்ஞானி எந்த பொருளாயினும் அதை கருக்கிடும் ஒரு அமிலத்தை(Acid) உருவாக்கினார். அதற்கு உயரிய விருதையும் பெற்றார். அதன் பின்னர் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது எந்த பொருளிலும் சேமிக்க முடியாத அமிலத்தை உருவாக்க போவதாக கூறினார். இதை கேட்டுக்கொண்டிருந்த அவருடைய உதவியாளர் அவரிடம் சென்று உங்களால் அதை உருவாக்க முடியாது என்று கூறினார். இதை கேட்ட அந்த விஞ்ஞானி மிகுந்த கோபத்தோடு "ஏன் முடியாது, என்னால் நிச்சயம் முடியும் என்று சவால் விட்டார்". அவருடைய உதவியாளர் மிகுந்த பணிவுடன், ஐயா எந்த பாத்திரத்திலும் சேமிக்க முடியாததை எதில் சேமித்து வைப்பீர்கள் என்று கேட்டான். அப்போது தான் அந்த விஞ்ஞானிக்கு புரிந்தது. தான் ஒரு தலைசிறந்த ஞானியாயிருந்தும் தனக்கு ஞானம் இல்லை என்று ஒப்புக்கொண்டார்.
சிலர் கணிதத்தில் தேறினவர்களாக இருப்பர் அவர்களிடம் எப்பேர்ப்பட்ட கடினமான கணக்கை கொடுத்தாலும் எளிதாக விடை கண்டுபிடித்துவிடுவர். ஆனால் அவர்களால் நான்கைந்து பக்கமுள்ள விடையை மனப்பாடம் செய்ய முடியாது. சிலருக்கோ சுட்டு போட்டாலும் கணக்கு வராது, ஆனால் எத்தனை பக்கம் இருந்தாலும் ஒன்று விடாமல் மனப்பாடம் செய்து எழுதிவிடுவர். அதுபோல வேலை இடங்களிலும் மூத்த ஊழியர்களால் செய்ய முடியாததை இளம் ஊழியர்கள் மிக எளிதில் செய்து முடிப்பர். ஊழியத்திலும் இதே நிலைதான்.
வேதமும் அதைதான் சொல்கிறது,
22. சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
ஏசாயா 60:22
யார் யார் எந்த இடத்தில் சிறியவர்களாக்கபடுகிறோமோ அந்த இடத்தில் அவர்கள் கண்கள் முன்னே பலத்த ஜாதியாய் அநேகர் ஆச்சரியப்படத்தக்க விதமாய் சிறுமைப்பட்ட இடத்தில் தேவன் உங்களை உயர்த்துவார். இந்த வருடம் இந்த கொடிய நோயினால் உங்கள் வேலை, வருமானம், பதவி என எல்லாம் இழந்துவிட்டீர்களா?? சிறியவர்களாகிய உங்களை தேவன் உயர்த்தி பலத்த ஜாதியாய் தீவிரமாய் மாற்றுவார். இதை விசுவாசியுங்கள் பலத்த ஜாதியாய் மாறுங்கள்.
#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
தினம்
------ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும்,
அன்புடன் இனிய இரவு வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!!
#அழுக்கு மாமா_உஜாலா...
****////****
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக்கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
"ஏண்டா இன்னைக்கு குளிச்சியா" என்றாள் அப்புவின் அம்மா.
"நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான்.
அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.
வகுப்பில் அவன்தான் முதல் மாணவன்.
அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம் தான் வந்தார்.
"ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார். "மறந்திட்டேன் சார்" என்று சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக்
கொள்வதில் அக்கறை காட்டவில்லை.
பல நாட்கள் அப்பு பல் விளக்காமலே கூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.
அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர்.
அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.
"டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா. "குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு.
பரீட்சைக்கு இன்னும் இரண்டு நாள் தான்
இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.
மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.
அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு.
அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான்.
அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர்.
அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போக முடிய வில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.
"தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே
வராது" என்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில்
இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து
அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டுக் கொடுக்கப்பட்டது.
"முதல் மார்க் ரங்கராஜன்" என்று ஆசிரியர்
பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.
"சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும்
வெற்றிகரமாகச் செய்ய முடியும்"என்றார்.
அப்பு மௌனமாக இருந்தான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்"
என்று வந்தான்.
"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா"என்று ஒருவன் சொல்ல பையன்"கொல்" லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
என் அன்புக்குாியவா்களே,
சுத்தம் என்பது படிப்பை விட மேலானது. அதை பல்வலி வந்தவுடன் தான் அப்பு புாிந்து கொண்டான். எப்போது புாிந்து கொண்டானோ அப்போது அழுக்குமாமா என்ற அசுத்தம் நீங்கி சுத்தத்திற்கு அடையாளமாக பளிச்சிடும் வெண்மையான உஜாலா என்ற பேர் வரக்கூடிய சுத்தத்திற்கு மாறி விட்டானல்லவா.
இதைப்போல யாரும் அசுத்தமாய் இருக்க மாட்டார்கள். இதிலுள்ள கருத்து என்னவென்றால், புாிந்து கொள்ளுதல் எல்லாவிதமான நன்மைக்கும், மேன்மைக்கும், உயா்வுக்கும் ஆசீா்வாதத்திற்கும் காரணமாய் அமையும்.
இயேசு என்ற பேருக்கு அர்த்தம் இரட்சகர் என்பதாகும். அதாவது காப்பாற்றுகிறவா். தேவன் உலகிலுள்ள மனிதா்களுக்காகத் தான் உலகத் தோற்றத்திற்கு முன்பே தனக்குள் இருந்த ஆளத்துவத்தை குமாரனாக உண்டுப்ணினாா்.
குமாரனை எப்போது உருவாக்கினாரோ
அப்போது குமாரனுக்கும், உலகிலுள்ள அத்தனைபேருக்கும் அப்பா, பிதாவாக தம்மை வெளிப்படுத்திவிட்டாா். .
மனிதா்களுக்குள் தங்கி அவா்களை வழிநடத்த பாிசுத்தாவியானவா் என்ற ஆளத்துவத்தையும் தேவன் தனக்குள்ளிருந்து உண்டாக்கிவிட்டாா். தேவன் ஒருவரே. அவருக்கு மேல் ஒருவாில்லை. தேவன் அவா் தன்னை மூன்று விதங்களில் பிதா, குமாரன், பாிசுத்தாவியாக வெளிப்படுத்து கிறார். இது தேவனுடைய திாித்துவம் எனப்படும்.
ஆதாம் என்ற குமாரன் மூலமாய் பலுகிப் பெருக வேண்டிய தேவனுடைய சந்ததி தேவனால் விலக்கப்பட்ட கனியை சாத்தான் தனது தந்திரத்தினால் அதை புசிக்க வைத்ததினால் பாவமுள்ள சந்ததியாய் பெருகியது.
மறுபடியும் பாிசுத்த தேவசந்ததியாய் மாற்ற குமாரனை இயேசுவாக கன்னிகை வயிற்றில் புருஷன் சித்தமில்லாமல் அவரே தனது வல்லமையால் வந்து பிறந்து மனித சாயலானாா்.
அவா் வந்த நோக்கமே மனிதனின் மீறுதலினால் வந்த பாவம் சாபம், தரித்திரம் வியாதி, நோய், மரணம், ஆகியவைகளை மனுகுலத்தை விட்டு அகற்றி விடுதலை செய்து தேவைக்கும் பிள்ளைகளாகவே மாற்றும்படியே சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டாா். தனது மரணத்தினாலே அவைகளை ஜெயித்து உயிா்த்தெழுந்தாா்.
இப்போது இயேசுவை ஏற்று கொள்கிற அனைவரையும் மேற் காணும் அனைத்துக்கும் பதிலாக நீதி, பரிசுத்தம்,ஆசீா்வாதங்கள்,ஐஸ்வா்யம், தெய்வீக சுகம், ஆரோக்கியம் ஜீவன், அழியாமை நித்திய ஜீவன் ஆகியவைகளை ஏற்படுத்தியுள்ளாா்.
யாரெல்லாம் இயேசுவை ஏற்றுக்கொள்கிறாா்களோ அத்தனை பேரையும் தேவனுடைய பிள்ளைகளாக்கி இவைகளைக் கொடுக்கிறாா்.
இதற்கு போ்தான் மீட்பு அல்லது இரட்சிப்பாகும்.
இரட்சிப்பைப் பெற்றுக் கொண்ட தேவ பிள்ளைகளை பாவம், சாபம் வியாதி, நோய் தரித்திரம்,மரணம் ஆகியவைகள் ஜெயிக்க முடியாது.
பழைய ஏற்பாட்டில் இரட்சிப்பை ஆடுகளை பலிசெலுத்தி அவரவருடைய முயற்சியினாலும், செய்கையினாலும் பெற்றார்கள்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவுே ஆடுகளுக்கு பதிலாக உலகத்தின் பாவத்தை சுமந்து தீா்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு உயிா்தெழுந்து இரட்சிப்பை ஏற்படுத்தி வைததுவிட்டாா்.
இது முழுக்க முழுக்க தேவனால் உண்டானதே தவிர மனித முயற்சி கொஞ்சம் கூட இல்லை.
இதை புாிந்து கொள்ளாமல் இரட்சிப்பு ,மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையே பழைய ஏற்பாட்டை போல ஒவ்வொருவாின் கிாியைகளினால் தான் அமையும். என்று தங்கள் பெலத்தை சார்ந்து வாழ்கிறார்கள்.
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிாியமாயிருக்கிறார் சங்.147:10-11
பழையஏற்பாடு கிாியைகள் செய்வதிலேயே அமைந்திருந்தது. புதிய ஏற்பாடோ புாிந்து கொள்வதில் அமைகிறது. வேதத்தின் மூலமாக உண்டாகிற அறிவும், புாிந்து கொள்வதுமே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையானதாயிருக்கிறது.
Ithula pola daily message ungal whats up group la venum endral +918148663456
சிலுவை மரணத்தைக் குறித்த அறிகிற அறிவானது அதன் உணா்வை ஏற்படுத்தி தேவ சித்தத்தின்படி நடக்க செய்கிறது. கிறிஸ்தவ வாழ்வு கிாியைகளானால்ல கிருபையினால் தான் என்பதை புாிந்து கொள்ளச் செய்கிறது.
அறிவும், புாிந்து கொள்ளலும் உள்ள கிறிஸ்தவன் யாரையும் சாா்ந்திருக்க மாட்டான் தேவனையும்,இயேசு கிறிஸ்து ஏற்படுத்தின
சுவிசேஷத்தையுமே விசுவாசித்து சாா்ந்திருப்பான்..அவன் செய்வது எல்லாமே ஆவியானவரே அவனோடிருந்து செய்ய வைப்பாா். எப்படி வாழ வேண்டுமென்றும் வழி நடத்துவாா்.
மாம்சீகமோ ,உலகமோ,சுயமோ, ஜென்ம குணங்களோ பிசாசின் கிாியைகளான பாவமோ அவனிடத்தில் வர முடியாது. ஆவியானவரே அவனை ஆட்கொள்வாா்..
அப்பு எப்படி புாிந்து கொண்டு உஜாலாவாய் மாறின பின் அழுக்கு மாமா என்ற போ் போய் விட்டதோ
அதே போல இதுவரை இருந்த பாரம்பாிய பிரமாண வாழ்க்கை உங்களை விட்டு நீங்கி கிருபையின் ஆவியானவா் உங்களை நடத்துகிற வாழ்வாக மாறட்டும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!
