*நீத்திய ஜீவன் யாருக்கு*
1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு - யோ 5:24
2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு - ரோ 6:22,23
3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு - ரோ 2:7
4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு - யோ 5:39
5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு - யோ 6:54,56
*"சுத்தமான பக்தி"*
*_“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்... தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”_* – யாக்கோபு 1:27
*"மிக அதிக சம்பளம் வாங்குகிற ஒரு நபர், பெரிய கடை ஒன்றுக்கு சென்றார். தங்களுக்குத் தேவையானவற்றை, தாங்களே எடுத்துக் கொள்ளும் கடை அது! ஆகவே அவர் கையிலுள்ள ஒரு தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வரிசையாக சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு, அதனுள் போட்டுக் கொண்டே வந்தார். ISI முத்திரையிட்ட பொருட்களை மட்டுமே அவர் தெரிவு செய்தார். அவைகள் மட்டுமே சுத்தமானவை உடலுக்கு பாதுகாப்பானவை, கலப்படமற்றவை என்று அவர் அறிந்திருந்ததே அதற்கு காரணம்.*
*இதேப்போலத்தான் மாசில்லாத சுத்தபக்தி என்ற ஒன்றைக் குறித்து வேதம் தெளிவாய் கூறுகிறது. நாம் நினைக்கிறோம், “அதிகமாக வேதம் வாசித்து வசனங்களை மனனம் செய்து, ஜெபம் செய்தால் நாம் அதிக பக்தியுள்ளவர்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். தசமபாக காணிக்கையை செலுத்தி, ஆண்டவருக்கு கொஞ்சம் ஊழியமும் செய்து விட்டால் நம் பக்திக்கு நிகரே இல்லை என்று திருப்தியும் அடைந்து விடுகிறோம். இவை எல்லாம் நல்லதே. இவையெல்லாம் பக்திக்குரிய செயல்களே! ஆனாலும் நாம் அனைவரும் இதோடு நின்றுவிடாமல் மாசில்லாத சுத்தமான பக்தி உடையவர்களாய் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக காணப்பட வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது. எது மாசில்லாத சுத்தமான பக்தி? திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு நம்மைக் காத்துக் கொள்கிறதுமே!*
*ஆம், சிறுவயதிலே தாய் தகப்பனை இழந்து, அன்பிற்காக ஏங்கி நிற்கும் பிள்ளைகள் நம்மை சுற்றி உண்டே! அவர்களை அன்புடன் ஏற்றுக் கொண்டு அவர்களுடைய போஷிப்பு, பராமரிப்பு, படிப்பு முதலியவற்றில் மனமுவந்து உதவ முன்வர வேண்டும். அவர்களுக்கு இயேசுவின் அன்பை நம் செயலின் மூலம் காட்ட வேண்டும். விதவை என்பது எத்தனை வேதனையான வாழ்க்கை. விதவையிருப்பு என்பது நிந்தை என்று வேதம் சொல்லுகிறது. அவர்களுடைய கசந்த வாழ்க்கையை இயேசு மாத்திரமே மதுரமாக்கமுடியும். இயேசு இல்லாமலே வாழ்ந்து, மரித்தால் நித்தியமும் அவர்களுக்கு வேதனையாய் மாறிவிடுமே! அவர்கள் அதை அறியாமல் வாழலாம். ஆனால் அறிந்த நாமோ அவர்களுக்கு ஜெபித்து, உதவி செய்து, அன்புகாட்டி இயேசுவை அவர்களின் நாயகராக அறிமுகப்படுத்தலாமே.*
*அன்பானவர்களே! பக்தியுள்ளவர்கள் இன்னும் அதிகமாய் சுத்தபக்தியுள்ளவர்களாய் மாறுவோம். அன்றாட வாழ்வில் ஆண்டவரை அறிவிப்போம்.*
"காலை வணக்கம்"
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"
