*தலைப்பு*
*ஏழு விதமான* *விடுதலையை கர்த்தர்* *உங்களுக்கு தருவார்*
யோவான் 8 :34
லூக்கா 13:11
1 கொரியந்தியர் 15 :26
யோவான் 10 :10
வெளிப்படுத்துதல் 12 :3,4
எபேசியா் 6:12
மத்தேயு 16 :18
இன்றைக்கு ஏழுவிதமான விடுதலையைப்பற்றி நாம் பார்க்கப் போகிறோம்
*1. பாவம்*
*2. வியாதி*
*3. மரணம்*
*4. பிசாசு*
*5. வலுசர்ப்பம்*
*6. வான மண்டலத்துள்ள பொல்லாத சேனைகள்*
*7. பாதாளத்திலுள்ள அசுத்த வல்லமைகள்*
அருமையானவர்களே !
இப்படி ஏழுவிதங்களில்
நாம் விடுதலையை பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது
இதைப்பற்றி சத்திய உபதேசங்களை ஆவியானவர் உதவியோடு நாம் அறிந்துக்கொள்ளப் போகிறோம்
அருமையானவர்களே !
மேலே உள்ள
ஏழு விதமான வார்த்தைக்கும், ஏழுவிதமான விளக்கத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்
*1.பாவம் என்பது :*
மனிதனுடைய அடிமைத்தனம்
(யோவான் 8 :34)
*2.வியாதி என்பது :*
பெலவீனப்படுத்தும் ஆவி
(லூக்கா 13:11)
*3. மரணம் என்பது :*
பரிகரிக்கப்படும் சத்துரு
(1 கொரியந்தியர் 15 : 26)
*4. பிசாசு என்பது:*
திருடன் கொல்லுகிறவன் அழிக்கிறவன்
(யோவான் 10 :10)
*5. வலுசர்ப்பம் என்பது:*
ஜெயம் கொண்ட ஆண்பிள்ளையை பரலோகத்திற்கு போகவிடாமல் தடை செய்கிற ஆவி
(வெளிப்படுத்துதல் 12 :3,4)
*6. வான மண்டலத்துள்ள பொல்லாத சேனைகள் என்பது :*
ஜெபத்தை தடை செய்கிற
ஆவிகள்
(எபேசியா் 6:12)
*7. பாதாளத்திலுள்ள அசுத்த வல்லமைகள் என்பது*
சபையில் ஆராதனையை நடத்தவிடாமல் தடை செய்கிற ஆவிகள்
(மத்தேயு 16 :18)
இந்த ஏழுவிதமான தடைகளையும் அசுத்த வல்லமைகளையும் நீங்களும் நானும் ஜெயிக்க வேண்டுமானால்...
தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவானவர் நமக்கு தேவை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே இவ்வாறாக சொல்லுகிறார்
*34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்*
யோவான் 8:34
*36 ஆகையால் குமாரன்* *உங்களை* *விடுதலையாக்கினால்* *மெய்யாகவே* *விடுதலையாவீர்கள் என்று*
*ஆண்டவராகிய இயேசு* *கிறிஸ்துதாமே* *சொல்லுகிறார்*
யோவான் 8:36
அதுமாத்திரமல்ல...
*சத்தியத்தையும்* *அறிவீர்கள், சத்தியம்* *உங்களை* *விடுதலையாக்கும் என்றும்
ஆண்டவராகிய இயேசு* *கிறிஸ்துதாமே* *சொல்லுகிறார்*
யோவான் 8:32
சத்தியத்தை எந்தளவுக்கு நாம் அறிந்துக் கொள்ளுகிறோமோ ? அந்தளவுக்கு தான் நமக்கு விடுதலை கிடைக்கும்
சத்தியத்தை அறிந்துக்கொள்ளும்போது
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்காக யுத்தம் பண்ணுவார்
ஆவியானவர்
பாவத்திலிருந்து நம்மை அவர் முற்றிலும் விடுதலை செய்வார்
நம்முடைய சரீரத்தில் அடிக்கடி பெலவீனத்தும் வியாதியை கர்த்தர் கடிந்துக்கொள்வார்
மரணத்தை நமக்குள் இருந்து பரிகரித்து, நித்திய ஜீவனை அவர் நமக்கு அளிப்பார்
பிசாசையும், அவனுடைய சேனைகளையும், வலுசர்ப்பத்தையும், வான மண்டலத்திலுள்ள பொல்லாத சேனைகளையும், நமக்காக அவர் கடிந்துக்கொள்வார்
இன்றைக்கு காண்கிற எகிப்தியரை இனி நீ காணாதிருப்பாய் என்று சொல்லி... கர்த்தர் நம்மோடு பேசுவார்
ஆனப்படியினால்
இப்பொழுது !
பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிரப்பப்படுங்கள்
அப்பொழுது
கர்த்தர் உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் அவர் ஜெயம் கொடுப்பார்
ஆவியானவர் கரத்தில் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தை நாம் ஒப்புக்கொடுப்போம்
ஆவியானவர்தாமே நமக்கு அவர் உதவி செய்வாராக
