கப்பர்நகூமில் இயேசு கிறிஸ்து | அறிவு | பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள் | உன் கட்டுகளை அறுப்பேன் | இளைப்பாறுதல்
====================
கப்பர்நகூமில் இயேசு கிறிஸ்து
====================
லூக்கா 4:31
கப்பர்நகூம் பட்டணத்தில் இயேசு பிரவேசித்து அந்தப் பட்டணத்தில் இயேசு செய்த ஊழியமாகிய போதக ஊழியத்தையும், சுகமளிக்கும் ஊழியத்தைக் குறித்து இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
இங்கு கப்பர்நகூமில் இயேசுவின் ஊழியம் சமாதானத்தின் ஊழியமாக காணப்பட்டது. ஊழியம் செய்கிறவர்கள் இப்படி இயேசு செய்த ஊழியங்களை பின்பற்றி ஊழியம் செய்ய வேண்டும். எல்லா ஊழியர்களுக்கும் இயேசுவின் ஊழியமே முன்மாதிரி. இயேசு கப்பர்நகூம் எல்லை முழுவதும் சமாதானத்தை ஏற்படுத்தி சமாதானத்தின் ஊழியத்தை நிறை வேற்றினார்.
வேத பாடம்மத்தேயு: 8, 9 அதிகாரம்.
1. கப்பர்நகூம் எல்லையில் அவர் வாசம் பண்ணினார்.
மத்தேயு 8:5
2. ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தை நிறைவேறியது.
மத்தேயு 8: 16, 17
லூக்கா 4:40, 41
3. கப்பர்நகூமில் இயேசு அந்த பட்டணத்தில் செய்ததைப்போல தங்கள் சொந்த ஊரிலும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்.
லூக்கா 4:23
4. நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனை குணமாக்கினார்.
மத்தேயு 8:5-13
5. கப்பர்நகூமில் இயேசு பேதுருவின் மாமி சுகவீனத்தை மாற்றி சுகம் தந்தார்.
லூக்கா 4:38,39
6. கப்பர்நகூமில் இயேசு இயற்க்கை விதிகளை கடந்து அற்புதம் நடத்தினார்.
மத்தேயு 8:23-27
யோவான் 6: 17 - 24
7. கப்பர்நகூமில் இயேசு பிசாசு பிடித்த மனிதனுக்கு விடுதலைக் கொடுத்தார்.
மத்தேயு 8: 28-32
லூக்கா 4:31-36
8. கப்பர்நகூமில் இயேசு திமிர்வாதக்காரனை எழும்பி நடக்கச் செய்தார்.
மத்தேயு 9:1-7
மாற்கு 2:1-12
கப்பர்நகூமில் இயேசு செய்த ஊழியம் அற்புதத்தின் ஊழியமாக விளங்கியது. கப்பர்நகூமில் இயேசு போதித்தார் மற்றும் ஜனங்களை சொஸ்த்தமாக்கி அற்பதங்களையும் செய்தார்.
ஆமென்!
========
அறிவு
========
தீத்து 1:3நாம் அறிந்துகொள்ளும் அறிவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம். உலக அறிவு வேண்டுமா அல்லது மற்ற புதைபொருள் அறிவா எப்படிப்பட்ட அறிவை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்வோம். பொதுவாக அறிவிலே சிறந்த அறிவு இயேசுவை அறிகிற அறிவுதான். எப்படிப்பட்ட அறிவை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நாம் அறிய வேண்டிய அறிவைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
1. தேவனை அறிகிற அறிவு
1 யோவான் 17:31 யோவான் 4:8
2. இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவு.
2 பேதுரு 2:20
2 பேதுரு 3:18
3. மனிதன் தன்னை அறிகிற அறிவு.
சங்கீதம் 90:12
4. பாவத்தை அறிகிற அறிவு.
ரோமர் 3:20
5. சத்தியத்தை அறிகிற அறிவு.
தீத்து 1:3
6. தேவனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து அறிகிற அறிவு.
சங்கீதம் 8:3
7. சாத்தானைக் குறித்து அறிகிற அறிவு.
1 பேதுரு 5:8,9
8. இனி வெளிபடபோகும் உலகத்தைக் குறித்த அறிவு.
2 பேதுரு 3:5-7
நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அறிவைக் குறித்து இந்த குறிப்பில் சிந்தித்தோம். இப்படிப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும். இவைகளே நாம் பெற்றுக்கொள்ளும் அறிவு. மேலும் நாம் யாவரும் இப்படிப்பட்ட அறிவில் வளருவோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
=======================
பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்டவர்கள்
=======================
தீத்து 3: 7
1 சாமுவேல் 10: 6
பெந்தேகோஸ்தின் நாளின் வாழ்த்துக்கள்
1. பரிசுத்த ஆவியால் மாற்றப்பட்ட வெற்றியுள்ள மனிதன் சிம்சோன்.
ஆமென்!
==================
உன் கட்டுகளை அறுப்பேன்
===================
இப்போதும் நான் உன் மேலிருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
இந்த குறிப்பில் தேவன் சொல்லுகிற வார்த்தை " உன் கட்டுகளை அறுப்பேன் " என்று வாக்குக் கொடுத்திருக்கிறர். பல மனிதர்கள் கட்டுகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுகள் பலருடைய வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு அடிமையாக்கி வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. பிசாசு பலரை கட்டுகளால் கட்டிவைத்திருக்கிறான். இந்த குறிப்பில் என்னென்ன கட்டுகள் இருக்கிறது, இந்தக் கட்டுகள் அறுக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த குறிப்பில் நாம் கவனிக்கலாம்.
என்னென்ன கட்டுகள்?
============
1. மரணக்கட்டுகள்
சங்கீதம் 18:4
2. பாதளக்கட்டுகள்
சங்கீதம் 18:5
3. பிசாசின் கட்டுக்கள்
லூக்கா 13:16
4. பாவக்கட்டுக்கள்
நீதிமொழிகள் 5:22
5. அக்கிரமத்தின் கட்டுக்கள்
ஏசாயா 58:6
கர்த்தர் நம் கட்டுகளை அறுக்க நாம் என்ன செய்யவேண்டும்?
=================
கர்த்தர் நம் கட்டுகளை அறுக்க நாம் கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும்
சங்கீதம் 107:13,14
எப்படி கூப்பிடவேண்டும்?
1. உண்மையாக கூப்பிடவேண்டும்
சங்கீதம் 145:18
2. இரவும் பகலும் கூப்பிடவேண்டும்
சங்கீதம் 88:1
3. மிகவும் அதிகமாய் கூப்பிடவேண்டும்
லூக்கா 18:38
4. சத்தமிட்டு கூப்பிடவேண்டும்
ஏசாயா 58:1
கர்த்தர் நம் கட்டுகளை அறுக்க நாம் கர்த்தரை நோக்கி துதித்து பாட வேண்டும்
=====================
அப்போஸ்தலர் 26:25,26
எப்படி பாட வேண்டும்?
1. முழு இருதயத்துடன் பாட வேண்டும்
சங்கீதம் 9:1
2. மனபூர்வமாய் பாடவேண்டும்
லேவியராகமம் 22:29
3. சத்தமாய் பாடவேண்டும்
சங்கீதம் 66:8
4. இசை கருவிகளுடன் பாடவேண்டும்
சங்கீதம் 150:3,6
5. என்றென்றைக்கும் பாடவேண்டும்
சங்கீதம் 145:2
கர்த்தர் நம் கட்டுகளை அறுக்க நாம் ஆவியால் நிரம்பவேண்டும்
நியாயாதிபதிகள் 15:13,14
===================
எப்போது ஆவியானவர் வருவார்?
1. நாம் தாகமாக இருக்கும்போது ஆவியானவர் வருவார்
சங்கீதம் 44:3
2. நாம் ஜெபிக்கும் போது அவியானவர் வருவார்
லூக்கா 11:13
3. நாம் காத்திருக்கும் போது ஆவியானவர் வருவார்.
அப்போஸ்தலர் 2:1,4
4. நாம் விருப்பமாக இருக்கும்போது ஆவியானவர் வருவார்
வெளிப்படுத்தல் 22:17
கர்த்தர் நம் கட்டுகளை அறுக்க நாம் ஊழியம் செய்யவேண்டும்
சங்கீதம் 116:16
===================
எப்படி ஊழியம் செய்யவேண்டும்?
1. பரிசுத்தத்துடனும், நீதியுடனும் ஊழியம் செய்யவேண்டும்
லூக்கா 1:71
2. உற்சாகமாக ஊழியம் செய்யவேண்டும்
1 கொரிந்தியர் 9:17
3. வெட்கபடாமல் ஊழியம் செய்ய வேண்டும்
2 தீமோத்தேயு 2:15
4. சண்டைபண்ணாமல் ஊழியம் செய்ய வேண்டும்
2 தீமோத்தேயு 2:24
5. அவர் சித்தத்தின்படி ஊழியம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:36
6. நன்றாக ஊழியம் செய்யவேண்டும்
1 தீமோத்தேயு 3;13
7. உண்மையுடன் ஊழியம் செய்ய வேண்டும்
சங்கீதம் 78:72
சங்கீதம் 2:13,22
உன் கட்டுகளை அறுப்பேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். நாம் கட்டுகளோடு வாழ்வதை தேவன் விரும்பவில்லை. இதில் நாம் என்னென்ன கட்டுகள் இருக்கிறது என்பதை கவனித்தோம். அதுபோல கட்டுகளை அறுக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்தோம். வேதத்தில் அநேகருடைய வாழ்வில் இயேசு கட்டுக்களை அறுத்து அந்த மனிதர்களுக் கெல்லாம் விடுதலைக் கொடுத்தார் இதில் சொல்லியிருக்கிறப்படி நாம் செய்தால் இயேசு கட்டுக்களை அறுத்து நமக்கு விடுதலைத்தர வல்லவர்.
=============
இளைப்பாறுதல்
==============
யாத்திராகமம் 33:14
அதற்கு அவர் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்
இந்தக் குறிப்பில் இளைப்பாறுதலைக் குறித்து சிந்திக்கலாம். எப்படிப்பட்ட இளைப்பாறுதல் சொல்லப்பட்டிருக்கிறதென்பதை இதில் கவனிக்கலாம்.
1. சிருஷ்டியின் இளைப்பாறுதல்
ஆதியாகமம் 2:1,2
2. மீட்ப்பின் இளைப்பாறுதல்
செப்பனியா 3:17
3. பாவிகளின் இளைப்பாறுதல்
மத்தேயு 11:28
4. பரிசுத்தவான்களின் இளைப்பாறுதல்
மத்தேயு 11:29
5. ஊழியரின் இளைப்பாறுதல்
மாற்கு 6:30,31
6. பரலோக இளைப்பாறுதல்
வெளிப்படுத்தல் 14:13
2 கொரிந்தியர் 5:8
7. நித்திய இளைப்பாறுதல்
எபிரெயர் 4:9
வெளிப்படுத்தல் 22:5
8. கர்த்தருடைய பிரசன்னமே இளைப்பாறுதல்
யாத்திராகமம் 33:14
இந்தக் குறிப்பில் நமக்கு தேவன் கொடுத்த இளைப்பாறுதலைக் குறித்து சிந்தித்தோம். நமக்கு இளைப்பாறுதல் தருகிறவர்
ஆமென் !