=================
பரிசுத்த ஆவியானவரின் பொறுப்பும் பணியும்
=================
யோவான் 20:22
அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஆண்டவர் தமது உயிர்தெழுந்த நாளில் அவர் மேல் பரிசுத்த ஆவியை ஊதினார் இன்று அதை விசுவாசத்தோடு பெற்று கொள்ளுங்கள். இன்று தேவன் நமக்கு தந்த பரிசுத்த ஆவியானவர் அவரது பொறுப்பு மற்றும் அவரது பணிகள் அல்லது அவரது வேலைகளைக் குறித்து பார்க்க போகிறோம். பரிசுத்த ஆவியானவரை குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் ஊழியம், ஜீவியம் விராட் போய்விடும். அதாவது அடிக்கடி ஆவியானவர், ஆவியானவர் என்று கூப்பிடுவதில் பிரயோஜனம்மில்லை. ஆவியானவரைக் குறித்து, அவரது கிரியைகளைக் குறித்து அவருடைய செயல்பாடுகளைக் குறித்து ஒவ்வொரு ஊழியரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதை சரியாக கவனித்து அறிந்துக் கொள்ளுங்கள். ஆவியானவர்
உங்களுக்கு தமது ஆவியால் சகலத்தையும் வெளிப்படுத்துவார்.
1. பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்யும் தேற்றரவாளர்.
யோவான் 14: 16
2. பரிசுத்த ஆவியானவர் போதிப்பவர்
யோவான் 14: 26
3. பரிசுத்த ஆவியானவர் சாட்சி அளிப்பவர்
யோவான் 15: 26
4. கடிந்துரைப்பவர்
யோவான் 16: 7, 8
5. நடத்துபவர். பிதாவின் சத்தமானவர்
யோவான் 16: 13
6. கிறிஸ்துவை மகிமை படுத்துபவர்
யோவான் 16: 14
7. கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்
யோவான் 16: 15
8. வல்லமையாளர்
அப்போஸ்தலர் 1: 8
9. புத்திரசுவிகாரத்தின் சாட்சி பகருபவர்
ரோமர் 8: 16
10 விண்ணப்பத்தில் உதவியாளர்
ரோமர் 8: 26
11 ஆலோசகர்
வெளிப்படுத்தல் 22: 17
பரிசுத்த ஆவியானவர் அவரது செயல்பாடுகளை கவனித்தோம். தொடர்ந்து இயேசு நமக்கு தந்த பரிசுத்த ஆவியானவரைப் பெற்று ஊழியத்தை நிறைவாய் நிறைவேற்றறுங்கள். ஆவியானவர் இல்லாமல் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது. தொடர்ந்து இன்னும் ஆண்டவரைக் குறித்த வெளிப்பாடு எல்லாவற்றையும், வரங்களையும், ஆவியானவரது நடந்து தலையும் பெற்று தேவன் தந்த ஊழியத்தை நிறை வேற்றுங்கள். ஆவியானவர் உங்களோடு இருப்பாயாக.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
===========
ஆவியானவர்
===========
லூக்கா 12:12
நீங்கள் பேசவேண்டியகளைப் பரிசுத்த ஆவியானவர் ஆந்நேரத்திலே உங்களுக்கு போதிப்பார்.
பரிசுத்த ஆவியானவரின் போதனைகளைக் குறித்து இந்தக் குறிப்பில் அறிந்துக் கொள்ளலாம்.
1. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியானவர்
ஏசாயா 11:12
2. ஆலோசனைகளையும் பெலனையும் அருளும் ஆவியானவர்
ஏசாயா 11:2
3. அறிவையும் கரத்தருக்கு பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியானவர்
ஏசாயா 11:2
4. கண்டித்து உணர்த்தும் ஆவியானவர்
யோவான் 16:8
5. வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிக்கும் ஆவியானவர்
யோவான் 16:13
6. எல்லாவற்றையும் நமக்கு நினைவுப் படுத்தும் ஆவியானவர்
யோவான் 14:26
7. நமக்காக வேண்டுதல் செய்யும் ஆவியானவர்
ரோமர் 826
ஆவியானவர் எப்போது போதிப்பார்?
===============================
1.ஆவியானவருக்கு கீழ்படியும்போது போதிப்பார். ஆவியானவரும் பிலிப்பும்.
அப்போஸ்தலர் 8:26,29
2. ஆவியானவரை கவனிக்கும்போது போதிப்பார் ஆவியானவரும்
திருச்சபையும்
வெளிப்படுத்தல் 2:7
3. ஆவியானவருக்கு காத்திருக்கும் போது போதிப்பார் ஆவியானவரும் அப்போஸ்தலர்களும்
அப்போஸ்தலர் 2: 1-4
அப்போஸ்தலர் 13: 2-4
ஆவியானவரின் போதனைகளையும், ஆவியானவர் போதிக்கும் தகுதிகளையும் இந்த குறிப்பில் பார்த்தோம். ஆவியானவரைப்போல ஆவிக்குரிய காரியங்களை ஆழமாக கற்றுக் கொடுக்கும் போதகர் அவரை தவிர ஒருவரும்
இல்லை. ஆகையால் ஆவியானவரை பெற்றுக்கொண்டு ஆவியானவரின் போதனைகளை ஏற்றுக் கொண்டு ஆவியானவருக்கு நன்றி சொல்லுங்கள். ஆவியானவர் உங்களையும் உங்கள் சபையையும் நடத்துவாராக !
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
==========
பேசக்கூடாத பேச்சுக்கள்
===========
1 தீமோத்தேயு 1: 6
இவைகளைச் சிலர் நோக்காமல் வீண் பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்
நாம் பேசக் கூடாத பேச்சுக்கள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்திக்கலாம். வேண்டாத பேச்சுகளை நாம் பேசக்கூடாது.
1. ஆகாத சம்பாஷனை நல்லழுக்கத்தை கெடுக்கும்
1 கொரிந்தியர் 15: 33
2. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் அழிவோம்
கலாத்தியர் 5: 15
3. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் நியாயத்தீர்ப்பு
உண்டு
யாக்கோபு 5: 9
4. கடுஞ்சொற்கள் கோபத்தை உண்டாக்கும்.
நீதிமொழிகள் 15: 1
5. நாவை அடக்காதவன் தேவபக்தி வீண்
யாக்கோபு 1: 26
6. பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்துபோடுவார்
சங்கீதம் 12: 3
7. வாயிலிருந்து புறப்படுவது மனுஷனை தீட்டுப் படுத்தும்
மத்தேயு 5: 11
8. வீண்பேச்சு அவபக்தியை உண்டாக்கும்
2 தீமோத்தேயு 2: 16
9. வீண்பேச்சு பேசினால் கர்த்தரை விட்டு விலகி போவோம்
1 தீமோத்தேயு 1: 6
இந்தக் குறிப்பில் பேசக்கூடாத பேச்சுக்கள் பேசக்கூடாது என்றும் அப்படி பேசினால் என்ன நடக்கும் என்பதையும் இதில் அறிந்துக் கொண்டோம். வீண் பேச்சிற்க்கு விலகி நம்மை காத்துக்
கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
============
விசாரிப்பார்
============
சங்கீதம் 34:11
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்ன வென்றால், இதோ, நான் நானே என் ஆடு களை விசாரித்து, அவைகளைத் தேடிப் பார்ப்பேன்.
இந்தக் குறிப்பில் ஆண்டவர் ஆடுகளாகிய நம்மை தேடி விசாரிக்கிற தேவன். யாரை யெல்லாம் அவர் விசாரிப்பார் என்பதை
இதில் சிந்திக்கலாம்.
1. ஆத்துமாவை விசாரிப்பார்
சங்கீதம் 142: 4
2. ஜனங்களை நீதியோடு விசாரிப்பார்
சங்கீதம் 72: 2
3. நீதியின் படி ஏழைகளை விசாரிப்பார்.
சங்கீதம் 72: 2
ஏசாயா 11: 4
4. எளிமையானவர்களை விசாரிப்பார்
சங்கீதம் 140: 12
5. சிறுமையாறவர்களை விசாரிப்பார்
சங்கீதம் 72: 4
யோபு 36: 23
6. விதவைகளை, திக்கற்றவர்களை விசாரிப்பார்
சங்கீதம் 68: 5
7. நம்மையும் நம்முடைய கவலைகளையும் விசாரிப்பார்
1 பேதுரு 5:7
நம்முடைய தேவன் நம் யாவரையும் விசாரிக்கிற தேவனாயிருக்கிறார். அவர் யாரையெல்லாம் அவர் எப்படி விசாரிப்பரர் என்பதைக் குறித்து அறிந்துக்கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
======
நல்லதல்ல
=======
நீதிமொழிகள் 20: 14
கொல்லுகிறவன் நல்லதல்ல, நல்லதல்ல என்பான். போய்விட்ட பின்போ மெச்சிக்கொள்வான்
இந்தக் குறிப்பில் நல்லதல்ல என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எவைகளெல்லாம் நல்லதல்ல, ஏழைகள் தகுதியல்ல என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
எவைகள் நல்லதல்ல?
===============
1. மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல
ஆதியாகமம் 2: 18
2. முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல.
நீதிமொழிகள் 18: 5
நீதிமொழிகள் 28: 21
3. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல.
நீதிமொழிகள் 19: 2
4. கள்ளத் தராசு நல்லதல்ல
நீதிமொழிகள் 20: 23
5. தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல
நீதிமொழிகள் 25: 27
6. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல.
மத்தேயு 15: 26
7. நீங்கள் மேன்மை பாரட்டுகிறது நல்லதல்ல.
1 கொரிந்தியர் 5: 6
எவைகள் தகுதியல்ல?
==================
1. திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல.
நீதிமொழிகள் 31: 4
2. மதுபானம் பிரபுகளுக்குத் தகுதியல்ல
நீதிமொழிகள் 31: 4
3. நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
நீதிமொழிகள் 17: 26
4. மேன்மை பாரட்டுகிறது எனக்கு தகுதியல்ல
2 கொரிந்தியர் 12: 1
5. லேமுவேலே, அது ராஜாக்களுக்கு தகுதியல்ல.
நீதிமொழிகள் 31: 4
இந்தக் குறிப்பில் எது நல்லதல்ல என்பதைக் குறித்தும் எது தகுதியல்ல என்பதைக் குறித்தும் சிந்தித்தோம.
எவைகளெல்லாம் நல்லதல்ல, எவைகளெல்லாம் தகுதியல்ல என்பதை நாம் இதில் அறிந்துக்கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.