================================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
குளோரிந்தா (1746-1806)
===============================
குளோரிந்தா அம்மையாரின் இயற்பெயர் கோகிலா, இவர் 1746 ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் இந்து பிராமண பெற்றோருக்கு பிறந்தார். கோகிலாவின் தந்தையும் தாத்தாவும் தஞ்சாவூரையும் ஆண்டுகொண்டிருந்த மராட்டிய மன்னர் சரபோஜி அரண்மனை கோவிலில் பண்டிதர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் 1756 ம் ஆண்டு ஏற்பட்ட கொடிய காலரா நோயினால் கோகிலாவின் பெற்றோர் மரித்து போனதினால், தாத்தா பாட்டியின் பராமரிப்பில் கோகிலா வளர்க்கப்பட்டார். கோகிலா சிறுவயதிலேயே சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழியில் புலமை பெற்று விளங்கினார்.
இப்படியாக ஒருநாள் தஞ்சாவூர் கோவிலில் சமஸ்கிருத சுலோகங்களை ஓதுவதற்கு, மராத்திய அரச நந்தவனத்திலிருந்து புறப்பட்டு செல்லும்போது கொடிய விஷதன்மை கொண்ட பாம்பு கடித்தது. அப்போது அந்த வழியாய் வந்துகொண்டிருந்த ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரி பாம்பு கடித்த இடத்தை தன் உடைவாளால் சற்று கீறி தன் வாயால் இரத்தத்தையும் விஷத்தையும் உறிஞ்சியதால் கோகிலாவை காப்பாற்றப்பட்டாள்.
இந்நிலையில் 1759 ம் ஆண்டு கோகிலாவுக்கு 13 வயதாக இருக்கும்போது ஒரு மராட்டிய இந்து பிராமணரோடு திருமணம் நடந்தது. எதிர்பாராதவிதமாக கோகிலாவின் கணவர் ஒரு வருடத்திற்குள்ளாக மரித்துவிட்டார். ஆகவே இந்துமத சம்பிரதாயபடி ஒருவருடைய கணவர் மரித்துவிட்டால் அவரை எரியூட்டும்போது அவர் மனைவியையும் உயிரோடு சிதையில் தள்ளிவிட்டு எரித்து விடுவார்கள். இதை சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில் கோகிலாவை மரித்துபோன அவள் கணவருடன் எரிப்பதற்காக இந்துமத பூசாரிகள் கோகிலாவை குளிக்க வைத்து, அலங்கார ஆடை அணிவித்து, குங்கும பொட்டிட்டு, மேள தாளம் முழங்க கணவன் பிண ஊர்வலத்தில் அழைத்து சென்றார்கள். ஊர்வலம் சுடுகாட்டையடைந்தது.
ஆனால் கோகிலாவோ கதறி அழுது கொண்டு தன்னை காப்பாற்றும்படி கைக்கூப்பி மன்றாடினாள். இதை யாரும் கேட்பதற்கு ஆயத்தமாக இல்லை. ஆகவே கோகிலா தன்னை யாராவது காப்பாற்றும்படி கூச்சலிட்டாள்.
இந்நிலையில் அந்த சுடுகாட்டின் பாதை வழியாய் சென்று கொண்டிருந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரி ஒரு பெண்ணின் அலறல் குரலைக்கேட்டு என்ன என்று விசாரிக்கும்படி போர்வீரர்களை அனுப்பினார். வந்தவர்களை இந்துமத பூசாரிகள் யாவரும் சேர்ந்து வாக்குவாதம் செய்து விரட்ட முற்பட்டபோது அங்கு வந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரி கர்னல் ஹென்றி லிட்டில்டன், போர்வீரர்களின் உதவியோடு கோகிலாவை இந்துமத பூசாரிகளிடம் இருந்து காப்பாற்றினார்.
அப்போதுதான் கர்னல் ஹென்றி லிட்டில்டன் கோகிலாவை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். அந்த ஆங்கிலேய அதிகாரி கோகிலாவின் உறவினர்களை அழைத்து கோகிலைவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் இந்துமத பூசாரிகள் ஈமசங்கு பூரணமாய் நிறைவேற்றப்படவில்லை என்று இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து கோகிலாவின் உறவினர்களை மிரட்டி, கோகிலாவை உயிரோடுவிட்டால் தெய்வகுற்றம் என்று சொல்லி பயமுறுத்தினார்கள். கோகிலாவுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்ககூடாது என்று எச்சரித்தார்கள். ஆகவே எவரும் கோகிலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. கோகிலாவின் நிலை பரிதாபமாயயிற்று.
இந்த சூழ்நிலையில் கோகிலா தன்னை இந்துமத பூசாரிகள் கொண்றுவிடுவார்கள் என்றும் ஆகவே தன்னை காப்பாற்றும்படி கர்னல் லிட்டில்டனிடம் கைகூப்பி கேட்டுக்கொண்டாள். ஆகவே அந்த கர்னல் கோகிலாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இந்த சூழ்நிலையில் மூன்று மாதத்திற்குள் தஞ்சாவூரில் பணியாற்றிக்கொண்டிருந்த கர்னல் லிட்டில்டன் 1760 ம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார். எனவே கோகிலாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாயாரின் நினைவாக கோகிலாவுக்கு கிளாரா இந்தியா என்று பெயரிட விரும்பினார். பின்னர் இந்த பெயரே கிளாரிந்தா அல்லது குளோரிந்தா என்று மாறியது.
பாளையங்கோட்டைக்கு வந்த கர்னல், கோகிலாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் ஆங்கில வேதபுத்தகத்தையும் வாசிக்க கொடுத்தார். தன்னோடுகூட கோகிலாவையும் ஆலயத்திற்கு அழைத்து சென்றார். இதன்மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சுவிஷேசம் கூறினார்.
இயேசு கிறிஸ்துவை கர்னல் மூலம் அறிந்து கொண்ட கோகிலா கொஞ்சம் கொஞ்சமாக இயேசுவின் அன்பையும் வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்ததையும் அறிந்து கொண்டு இயேசுவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
காலபோக்கில் கோகிலாவின் ஆதறவற்ற நிலையை எண்ணி, அவளுடைய எதிர்காலம் கருதி, கோகிலாவை கர்னல் லிட்டில்டன் தன் மறுமனையாட்டியாக வைத்துக்கொண்டார்.
இந்த சூழ்நிலையில் 1775 ம் ஆண்டு ஆங்கிலேய இராணுவ வீரர்களுக்கு ஆராதனை நடத்துவதற்கு குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
ஒருமுறை சுவாட்ஸ் ஐயரிடம், கர்னல் லிட்டில்ன் தன்னுடைய பராமரிப்பில் இருக்கும் கோகிலா பற்றி கூறி, அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கேட்டுக்கொண்டார். ஆனால் குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் கர்னலுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருப்பதை அறிந்துகொண்டு, இங்கு கோகிலாவை ஒரு மறுமனையாட்டியாக வைத்திருந்ததினால் ஞானஸ்நானம் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதைக்கேட்ட கோகிலா இயேசுவைப்பற்றிப்பிடித்து வாழ்வதினின்றும் மாறிவிடவில்லை.
இந்நிலையில் 1778 ம் ஆண்டு பாளையங்கோட்டை பகுதியில் பணிபுரிந்த ஆங்கிலேய மக்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் மற்றும் திருமணம் செய்துவைப்பதற்காக குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் மீண்டும் பாளையங்கோட்டை வந்தார். சுவாட்ஸ் குருவானவரின் அருளுரை கோகிலாவை முழுவதுமாக இயேசுவண்டை திருப்பியது. கோகிலா, தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவளாக வேண்டும் என்ற விருப்பத்தை சுவாட்ஸ் குருவானவரிடம் தெரிவித்தார்.
அப்பொழுது கிளாரிந்தாவின் நற்குணங்களையும் நற்செயல்களையும் இயேசுவின்மீதுகொண்ட பக்தி வைராக்கியத்தையும் பார்த்து 25/03/1778 அன்று அவருக்கு ராயல் குளோரிந்தா என்று ஞானஸ்நானம் கொடுத்தார். ஏனெனில் குளோரிந்தா மராட்டிய மன்னர்களின் பரம்பரையை சார்ந்தவர்களாய் இருந்ததினால் அவ்வாறு பெயரிடப்பட்டது. அப்போது அவருக்கு வயது 32.
இந்த சூழ்நிலையில் 1779ம் ஆண்டு கர்னல் ஹென்றி லிட்டில்டன் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டியதிருந்தது. இங்கிலாந்து சென்று திரும்பி வருவேன் என்றவர் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்தில் சூலைநோயினால் வியாதிப்பட்டு மரித்துப்போனார்.
இதை சற்றும் எதிர்பாராத குளோரிந்தா அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. ஆயினும், என் காலங்கள் இயேசுவின் கரத்தில் இருப்பதால் நான் பயப்படேன் என்று கிறிஸ்துவுக்குள் தன்னை தேற்றிக்கொண்டாள். கர்னல் ஹென்றி லிட்டில்டன் மரிப்பதற்குமுன் தன் சொத்துக்கள் அனைத்தும் கோகிலாவுக்கே சொந்தம் என்று எழுதி மரித்ததினால் இப்பொழுது கோகிலா ஒரு பெரிய சீமாட்டி.
கர்னல் வீட்டில் வேலைபார்த்த சமையல் பெண்ணின் மகனை தத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளையைப்போல் வளர்த்து கர்னல் ஹென்றி லிட்டில்ன் நினைவாக அவனுக்கு ஹென்றி என்று ஞானஸ்நானம் கொடுத்து தன் மகனாக்கிக்கொண்டார். திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவர் குளோரிந்தா, இரண்டாவது கிறிஸ்தவர் ஹென்றி.
இந்நிலையில் குளோரிந்தா அவர்கள் லிட்டில்டன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம் சுவிஷேச பணியை செய்வதற்கும் சமுதாய சேவை செய்வதற்கும் பயன்படுத்தினார். பாளையங்கோட்டை பகுதியில் பெண்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டிற்குள் 40 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆகவே இவர்கள் ஆராதிப்பதற்கு என்று ஒலைக்குடிசையினால் ஒரு சிற்றாலயத்தை கட்டினார். அங்கு பெண்களுக்கு தினமும் வேதத்தை கற்றுக்கொடுத்து அவர்களை தன்னைப்போல விசுவாசத்தில் பலப்படுத்தினார். இப்படியாக அநேக பெண்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
குளோரிந்தா அவர்கள் தன்னிடம் இருந்த பணத்தின் மூலமும் மற்றும் சில ஆங்கில அதிகாரிகளின் உதவியுடன் நல்ல ஒரு பெரிய ஆலயத்தை கட்டினார். 1785 ம் ஆண்டு குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் மூலமாய் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் 80 பேருக்கு நற்கருணை பறிமாறப்பட்டது. இதுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு என்று முதலாவது கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயம் அப்போது பாப்பாத்தி அம்மாள் கோவில் என்று அழைக்கப்பட்டது. இது இன்று குளோரிந்தா ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில் குளோரிந்தா அவர்கள் நற்செய்திபணி மூலம் அநேக குடும்பங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே மீண்டும் குருவானவர் சுவாட்ஸ் அவர்களை அழைத்து 120 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
குளோரிந்தா அவர்களின் இடைவிடாத நற்செய்தி பணியினால் குறுகிய காலத்தில் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
1792 ம் ஆண்டிற்குள் 2000 த்திற்கும் அதிகமானவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த தஞ்சாவூரில் சபை ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்த சத்தியநாதன் அவர்களை திருநெல்வேலி பகுதிக்கு அனுப்பிவைக்குமாறு குளோரிந்தா அவர்கள் சுவாட்ஸ் ஐயரை கேட்டுக்கொண்டார்கள். இதினிமித்தம் சத்தியநாதன் உபதேசியார் பாளையங்கோட்டை வந்தார்.பின்னர் அவரை ஆங்கில குருவானவர்கள் ஜெனிக்கே மற்றும் கோலாப் ஐயர் முன்னிலையில் போதகராக சுவாட்ஸ் ஐயர் அபிஷேகித்தார்.
குளோரிந்தா அவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததினால் தைரியமாக பிராமண பெண்களிடம் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பேசி நற்செய்திபணியை அறிவித்ததினால் அநேக இந்துமத பிராமணர்களும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
குளோரிந்தா அவர்கள் தன்னோடு அநேக பெண்களை பயன்படுத்தி ஜாதி, மதம், இனம், குலம், ஆண், பெண் என்று பார்க்காமல் எல்லோருக்கும் சுவிஷேசம் அறிவித்ததினால் திருநெல்வேலி பகுதியில் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
1802 ஆம் ஆண்டுக்குள் 5000 த்திற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
குளோரிந்தா அம்மையார் கல்வி அறிவு இல்லாத புது விசுவாசிகளுக்கு என்று 1787 ம் ஆண்டு ஒரு குடிசையில் பள்ளிக்கூடம் ஏற்டுத்தினார். இதுதான் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவ பள்ளிக்கூடம். அதுதான் இன்று இது தூய. யோவான் கல்லூரி அளவிற்கு உயர்ந்திருக்கின்றது.
குளோரிந்தா அவர்கள் பிணியாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவிகளை செய்துவந்தார்கள். இவருடைய பண்பும் அன்பும் அரிய உபதேசமும் அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தியது. அவர்கள் குளோரிந்தா அம்மையாரை பாசமாக பாப்பாத்தி அம்மா என்று அழைத்தார்கள்.
1810 ம் ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் குடி தண்ணீர் எடுப்பதை இந்துமத பூசாரிகள் எதிர்த்தார்கள். ஆகவே குளோரிந்தா அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஒரு கிணறு வெட்டினார்கள். அது இன்றுவரை பாப்பாத்தியம்மாள் கிணறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த கிணறு 190 ஆண்டுகளாக நல்ல தண்ணீர் கொடுத்து வருகிறது. இன்றும் அந்த கிணறு குளோரிந்தால் ஆலய வளாகத்திற்கு அருகில் இருக்கிறது.
இதற்கிடையே குளோரிந்தா அவர்களின் நற்செய்திபணிக்கு அநேக இந்துமத பூசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன் மூலம் குளோரிந்தா அவர்கள் பல பாடுகள் பட்டார்கள். இவைகளின் மத்தியிலும் கிறிஸ்துவுக்கு நல்ல போர்சேவகியாய் இருந்து அநேக ஆத்துமாக்களை ஆதாயமாக்கினார்கள்.
இந்நிலையில் குளோரிந்தா அம்மையார் சில இந்துமத பூசாரிகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியினால் மர்மமான முறையில் இறந்து போனார்கள். தண்ணீர் நிறைந்த ஒரு தடாகத்தில் அவருடைய சரீரம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அவருடைய சரீரம், குளோரிந்தா ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குளோரிந்தா அம்மையார் தன்னுடைய 60 ம் வயதில் 1806 ம் ஆண்டு இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்து, திருநெல்வேலி கிறிஸ்தவத்தில் ஒரு எழுப்புதலையும், சமுதாய சேவையில் சரித்திரத்தையும், ஒரு பெண்ணாக சாதித்து காட்டியது இன்றைய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய முன்மாதிரி. இன்று குளோரிந்தா அவர்கள் திருநெல்வேலி திருச்சபையின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்கள்.
ஆசாரம் மிக்க பிராமணக் குடியில் பிறந்து, சாதி ஆசாரங்களைத் தகர்த்து, ஏழை எளியவர்களுடன் சமமாக பழகி, அவர்களுக்கு பண உதவி அளித்து, அவர்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக உழைத்து, தனக்கென ஒரு முத்திரையை திருச்சபை வரலாற்றில் பதித்த குளோரிந்தா அம்மையார் திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் மூலைக்கல் மற்றும் விடிவெள்ளி என்றால் மிகையாகாது.
குளோரிந்தா அம்மையார் கிறிஸ்துவுக்காக ஒரு அடி எடுத்து வைத்தார்கள்; ஆனால் ஆண்டவர் அவர் மூலமாய் திருநெல்வேலி கிறிஸ்தவத்தில் ஒரு பெரிய எழுப்புதலை ஏற்படச்செய்து இன்றுவரை அநேக மிஷனெரிகள், சுவிஷேசகர்கள், சபை ஊழியர்கள் குருவானவர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் போன்றோர்களை உறுவாக்கிக்கொண்டே இருக்கின்றார்...
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
========================
The Gospel Pioneers:
Clarinda(1746-1806)
========================
Kokila was born in 1746 for Hindu Brahmin parents. Her father was a Hindu Pundit in the palace of King Saraboji in Thanjavoor(Marathi Dynasty). Her parents passed away in her earlier stage, she was in the care of her grandfather, who is the chief priest of the king.
She was well talented in Sanskrit, Tamil, Marathi literatures. At the age of 12, a deadly snake bit her while going for temple to recite the slokas and mantras, but at that time a British soldier John Littleton saved her on the way. In the mean time, she got married at the age of 13, to a Marathi Brahmin Pundit.
Unexpectedly Kokila’s husband died within one year of marriage. As per the Hindu social customs on those days if a husband died then the wife also to be burned along with the dead body of her husband(Sati or Udankattai Yearuthal). When Kokila was being pushed on the pyre, some of British soldiers under the leadership of Carnal John Littledon ordered the soldiers to rescue her.
The Hindu Pundits were very angry and ordered that the family should not take her back home. Whoever will come forward to give her shelter will also be punished. No one was ready to accept the young widow so the carnal came forward to give shelter in his house.
Now Carnal was transferred to Palayamkottai from Thanjavoor, so he came along with Kokilla. He renamed her as Clara India, as his mother's name was Clara, later she was known as Clarinda. Now he began to teach Christianity in English to Clarinda and she came to know Jesus Christ.
She was so inspired by him that she wished to become a Christian. C.F. Schwartz, a chaplain for the army of the East India Company stationed in the city of Tiruchi. He came to minister among the British Soldiers.
Clarinda met Schwartz in Thanjavur and asked him to give baptism but he refused her because he came to know that Clarinda was a concubine to Carnal Littleton so he refused baptism for Clarinda. But Clarinda did not give up her faith in Jesus.
In the mean time Littleton had died and again Clarinda became widow but she received the strength from the Lord and God comforted her.
In 1778, Schwartz was requested to perform a European marriage, and baptize several children in Palayamkottai. When Schwartz arrived, he was approached by Clarinda for her baptism. After the British soldiers gave their testimony about Clarinda, Schwartz baptized her at the age of 32 and gave her the Christian name Royal Clarinda on 25/2/1778 because she belongs to the royal family of Marathi dynasty.
Clarinda adopted the son of her housemaid and baptized him as Henry. Clarinda was the first Tirunelveli Christian. Within two years of her ministry, 40 people took baptism.
She began to preach Christianity to all whom she encountered and even establishing a small chapel. Clarinda was extremely zealous in propagating the Christian faith.
She held women's meetings in her home, she arranged marriages. Clarinda was a kind hearted lady who was dedicated to the cause of helping the needy and the growth of Christianity in Tirunelveli.
Assisted by English officers, Clarinda used her funds to build a: small church that stands to this day, known affectionately as "Clarinda's Church." Schwartz travelled once again to visit the church the following year. It was during this visit that he consecrated "Clarinda’s Church.
In 1785 Schwartz dedicated this church building, which is now known as the Clarinda Church but people began to call it as “Pappathi Ammal Koil”.
In 1786, Clarinda travelled all the way• to Tanjavoor to request for a permanent pastor for the new church. She asked for the Catchiest Satyanathan Pillai, Schwarz accepted her petition and left behind one of his most trusted Indian friend, Satyanathan Pillai, to pastor the flock.
In 1802, the church membership was 5000. When many Hindu Brahmins came to know that she was a Brahmin lady so many Brahmin people came forward to know about Jesus and many of them accepted Christ in their life.
She did house visit ministry irrespective of birth, caste, class, race and gender and preached the gospel. People called her as Pappathi Amma. She wanted to build a school for new believers so that they can read Christian teachings.
In 1787 she built a school and it was the first school in Tirunelveli area. Now it is known as St. John’s College. She dug a “well” from her own money for Dalit people and now it is called as “Pappathi Amma Kinaru”. That was her greatest achievement in Palayamkottai in the years between 1778 and 1806.
One day suddenly she fell sick and died at the age of 60 in 1806. She stood for the empowerment of women and children. Clarinda, was called as the ‘Cornerstone of Tirunelveli Diocese’, she was the morning star of Tirunelveli Diocese.
One step taken by this Brahmin lady for Christ made a huge difference in the lives of Tirunelveli people. It was not an easy task. She underwent many hardships, faced many challenges in her life but never gave up. She lived her life to the fullest for the glory of the Lord. Are we ready to take that first step for Christ?
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.