======================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
இராபட்-டி-நோபிலி (15777-1656)
==========================
ராபர்டோ-டி-நோபிலி இத்தாலியில் ஒரு அரச குடும்பத்திவ் பிறந்து தன்னுடைய 18 ம் வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு கடவுளின் அழைப்பின்படி ஒரு மிஷனெரியாக ஊழியம் செய்ய தன்னை அற்பணித்தார்.
1605 ஆம் ஆண்டில் ராபட்-டி-நொபிலி தன்னை ரோமன் கத்தோலிக்க ஜேசுட் மிஷனரியாக சேர்ந்து இத்தாலியிலிருந்தது தமிழ்நாட்டின் மதுரையில் பிராமணர்கள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார்.
மதுரைக்கு வந்த நோபிலி தன்னுடைய ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் மூலம் இந்தியாவின் மக்களுக்கு (பிராமணர்) ஒருபோதும் சுவிஷேசம் அறிவிக்கமுடியாது என்று அவர் உடனடியாக கண்டு கொண்டார்.
ஆகவே இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் தன்னை ஒரு சன்னியாசியாக மாற்றிக்கொண்டு அதற்காக பொருத்தமான சிகை அலங்காரம் செய்து இந்திய கலாச்சார முறையை பின்பற்றி, அவர் தனது ஐரோப்பிய கருப்பு அங்கியை மாற்றிவிட்டு காவி அங்கியையும், தோல் செருப்புக்கு பதிலாக மரத்தால் செய்யப்பட்ட பாதரட்சையையும் அணிந்துகொண்டு சுவிசேஷம் அறிவித்தார்.
மூன்று ஆண்டுகளில் நோபிலி தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றார்.
மேலும் இந்து மத வேதங்களில் தேர்ச்சி பெற்ற முதல் ஐரோப்பிர் என்றால் மிகையாகாது.
மேலும் இந்துக்களின் புனித நூல்களான வேதங்கள், உபநிடதங்கள் யாவையும் கற்றுகொண்டார்.
அவர் இந்திய தத்துவங்களை(Indian Philosophy) கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகளை விவரித்து சொல்வதற்காக இவைகளை நன்கு பயன்படுத்தினார்.
பின்னர் டி-நோபிலி ஒர மடத்தை நிறுவி தன்னை ஒரு குருவாக நிலைநிறுத்தி துறவர வாழ்க்கை நடத்தி வந்தார். தன்னை வெளிநாட்டு துறவியாக காண்பித்ததினால், இவருடைய வாழ்க்கையை கண்ட பல பிராமணர்கள் அவரைப் தேடி வந்தார்கள்.
நோபிலி சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக யூதர்களுக்கு யூதனைபோலவும் கிரேக்கர்களுக்கு கிரேக்கரை போலவே பிராமணர்களுக்கு பிராமணர்களின் கலாச்சாரத்தின்படி அதிகாலையில் குளித்து; சம்மணமிட்டு அமர்ந்து, தன்னை ஒரு இந்திய சன்னியாசியாக காட்டிக்கொண்டார்.
ஆகவே அவர் ஒருபோதும் எந்த ஒரு அசைவ உணவையும் உண்ணாமல், காவி உடையணிந்து, நெற்றியில் சந்தனத்தாலும் குங்குமத்தினாலும் திலகமிட்டு, தலைமுடியை மழித்து அதில் சிறு குடுமியுடன் தன்னை இந்திய குருவாக மாற்றிக்கொண்டார்.
உயர்ஜாதி மக்களுடன் தெளிவான தமிழில் பேசினார், தனக்கு உணவு சமைப்பதற்காக ஒரு பிராமண சமையல்காரரையும் வைத்துக்கொண்டார். எப்போதுமே, பிராமணர்களுடன் மட்டுமே சாப்பிட்டார், அவர்களோடு மட்டுமே கலந்துரையாடினார்.
மேலும் பிராமணர்களை போலவே பூநூலையும் அணிந்துகொண்டார். இதைப்பார்த்த மக்கள் நோபிலியை சத்தியத்தின் தத்துவ போதகர் என்று அழைத்தனர். இவருடைய அனுகுமுறையால் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
இப்படியாக நோபிலி அவர்களின் பெயரும் புகழும் உயர்ந்தது. அவரைப் பார்க்க வந்தவர்களுடன் கிறிஸ்தவ மத போதனைகளை இந்திய தத்துவத்தின் அடிப்படையில் பல விவாதங்கள் செய்தார் . அங்கு இருந்த இந்து பண்டிதர்களிடம் அநேக சொற்பொழிவுகளை நடத்தினார்.
இவருடைய ஊழியத்தின் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களிடம் உருவ வழிபாடு காரியங்களை தவிர்த்து அவர்களின் உடை, உணவு, உடை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றத் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
அவர் தமிழில் ஞானோபதேசம், ஞானசஞ்சீவி மற்றும் நூறு சமஸ்கிருத ஸ்லோகங்களில் கிறிஸ்தவ கோட்பாட்டின் சுருக்கத்தையும் எழுதினார். இவருடைய எழுத்துக்கள் நவீன தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தது.
அவர் தமிழில் ‘நித்திய வாழ்க்கையின் உரையாடல்’ மற்றும் ‘வாழ்க்கையின் பொருளை விசாரித்தல்’ ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதி உள்ளூர் பிராமணர்களை விவாதங்களுக்கு அழைப்பு கொடுத்தார். 'செந்தமிழ்' என்ற பெயரில் உயர்தர தமிழ் கவிதைகளை எழுதினார். தமிழில் அவரது உரைநடை படைப்புகள் அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. அவரது காலத்தில் அவரது பல எழுத்துக்கள் அச்சிட முடியவில்லை, அவை பனை ஓலைகளில் இருந்தன.
டி-நோபிலியின் இந்திய கலாச்சாரத்தின்படி இந்திய மக்களுக்காய் சுவிஷேசம் அறிவிக்க, சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தினார். இதன் விளைவாக 1200 க்கும் மேற்பட்ட பிராமணர்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
பின்பு நோபிலி அவர்கள் சேலம், திருச்சி மற்றும் மொரமங்கலம் பகுதியிலும் ஊழியத்தை நிறைவேற்றினார். இதனால் 1625 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சேந்தமங்கலத்தின் ஆட்சியாளரான திருமங்கல நாயக்கர், அவருடைய தாய், மனைவி மற்றும் பிள்ளைகள் யாவரும் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
1645 ம் ஆண்டு அவர் மதுரையை விட்டு வெளியேறி மைலாப்பூருக்கு சென்றாம். அங்கேயே தன்னுடைய இறுதி காலத்தை கழித்தார். பின்னர் ஜனவரி 16, 1656 இல் தனது 79 ம் வயதில் இவ்வுலக ஓட்டத்தை வெற்றியாய் நிறைவு செய்தார்.
ஒரு மிஷனரியாக சென்ற நோபிலி, அவருடைய ஊழியத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1656 இல் 30,000 பேராக இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 1706 ஆண்டில் 1, 00,000 க்கும் அதிகமாய் இருந்தது. இராபட்-டி-நோபிலி அவர்கள் இந்திய கிறிஸ்தவ இறையியலின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.
நோபிலி அவர்கள் எதிர் காலத்தில் இந்திய மக்களுக்கு அவர்கள் சொந்த மொழிகளில் கிறிஸ்துவை அறிவிக்க விரும்பினார். ஏனெனில் எல்லா கிறிஸ்தவ மதச் சொற்களும் ஐரோப்பிய வார்த்தைகளாக இருந்தன. கிறிஸ்தவ இறையியலில் நன்கு பயிற்சி பெறுவதற்காக பிராமணர்களுக்கு என்று வேதாகம கல்லூரி நிறுவ வேண்டும் என்று மிகவும் பிரயாசப்பட்டார் ஆனால் அவருடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறவில்லை.
இந்திய அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுகின்ற சாது சுந்தர் சிங் அவர்களின் மேற்கோளுடன் நான் இங்கே முடிக்க விரும்புகிறேன், அவர் கூறுகின்றார் "கிறிஸ்தவ ஊழியர்களே, கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிக்க அவரவருடைய கலாச்சார அடிப்படையில் நற்செய்தியை பறைசாற்றுங்கள். இல்லையென்றால் உங்கள் நற்செய்தி சமுதாயத்தில் கீழ்தட்டு மக்களை மாத்திரமே சென்றடையும்.
இதுதான் இன்றுவரை நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையை மாற்ற உங்கள் பிள்ளைகளை ஊழியத்திற்கு அற்பணிப்பீர்களா? இந்தியாவில் உள்ள உயர்ஜாதி மக்கள் உட்பட அனைத்து மக்களையும் கிறிஸ்துவுக்கு நேராய் வழி நடத்தும் வல்லமை கிறிஸ்தவ நற்செய்திக்கு உண்டு.
ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் மிஷனெரிமார்களே, கிறிஸ்தவர்கள் அல்லாத ஒவ்வொருவரும் மிஷனெரி பணித்தளம். ஆகவே, நம்முடைய கிறிஸ்தவ குணாதிசங்கள் மூலம் இந்த சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து இந்திய தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம். நன்றி
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
=================
The Gospel Pioneers
Robert- De-Nobili(1577-1656)
==================
Robertto-De-Nobili came to Madurai as a young Italian royal family as well as Roman Catholic Jesuit Missionary in 1605. He immediately concluded that he could never come close to the people (Brahmin) of India by living a European life, and so decided to act the role of a Christian sanyasi and to adopt the appropriate grab and style of living.
He exchanged his black cassock for kavi robes and his leather shoes for wooden sandals, and became a sanyasi. By 1608 he was able to speak in Tamil, Telugu, and Sanskrit.
He managed to find a Brahman willing at the risk of his life to teach him Sanskrit, and to become the first European to master the language of the Hindu scriptures.
He masters both the Vedas and the Vedanta and so to use Indian philosophy and philosophical language as a vehicle for conveying Christian theological truth.
Then De-Nobili builds a little mud-walled house and chapel was built, and there he established himself as a guru in his mutt, observing a strict ascetic life. Hearing of the foreign sannyasi, many wished to see him.
He decided to make himself an Indian to save the Indians; and to become a Brahman to the Brahmans. He bathed daily; sat down cross-legged and called himself a sanyasi.43He ate no meat, and wear wooden clogs and a saffron robe (kavi) instead of the traditional Jesuit black cassock. He shaved his head except for a small tuft of hair.
He spoke only Tamil, hired a Brahman cook and houseboy, and became a vegetarian.44 Like all Brahmans, De Nobili limited himself to one meal a day. To cover the "nakedness" of his forehead, he put sandalwood paste on his brow to indicate that he was a guru or teacher.
Eventually, he ate only with Brahmans, and for a brief period, he also wore the Brahman thread of three strands of cotton cord (ponool), (muppirinul) draped from the shoulder to the waist as a sign of rank (which symbolise Trinity).
He bathed daily and cleansed himself ceremonially before saying mass. 46Closely following the social habits of Brahmins, he lived like a Brahmin Sanyasi and the Tamils called him Thathuva Pothagar (The teacher of Truth).
As his reputation grew, much time was spent in religious and philosophical discussions with people who came to see him. The converts were not required to change their dress, food or mode of life except in the matter of idolatry. Those who had worn the sacred cord and thekudumi or hair-tuft retained them and they were able to remain in their families.
He approached high-caste people, and eagerly engaged in dialogue with Hindu scholars about the truths of Christianity. His methodology helped him to make some very interesting literary attempts to present Christian gospel in a form which would be intelligible to the Brahmans of Madurai.
He composed in Tamil such as Gnanopadesam(Teaching of Knowledge), GnanaSancheevi(Spiritual Medicine) and the summery of Christian doctrine in hundred Sanskrit slokas.
He composed Catechisms, apologetic works and philosophic discourses in Tamil, and contributed greatly to the development of modern Tamil prose writing. He wrote two books in Tamil ‘Dialogue of Eternal life’ and ‘Inquiry into the meaning of life’ and used them to draw the local Brahmins to debates. He wrote Tamil poems in classical style named 'Senthamil'. His prose works in Tamil could be easily understood by everybody. Many of his writings could not be printed during his time and they remained in palm leaves.
De-Nobili’s methods of work were indigenous and highly original, and he is greatly to be commended for his study and use of Sanskrit and Tamil. He used Hindu terminology for the exposition of Christian doctrine. He established Madurai Mission to evangelize the Brahmins and he achieved it with the help of Holy Spirit which resulted more than 1200 Brahmins accept Christ as their Savior.
He spent in the area of Salem, Trichi and Moramangalam and on Christmas day 1625 he baptized Tirumangala Nayak, the ruler of Sendamangalam, with his wife, mother and children.
By 1645 he left the Madurai mission and went to Mylapore until his death in 16th January, 1656 in his 79 yrs. His success as a missionary became evident when the Christian population swelled from around 30,000 in 1656 to over 100,000 in 1706. He is the father of Indian Christian Theology.
He wanted his future priests to present Christianity to the India people in their own languages, not in a jargon in which all religious terms were European; to be well trained in Christian theology but also experts in the religion of the Hindus around him.
He dreamed of a college where Brahmin Christians might be trained for the priesthood, his plan never fulfilled.
I would like to end here with Sadhu Sunder Singh quote that “O Christian preachers give the Christian gospel in their own cultural flavor to build the kingdom of God else your gospel may go the Subaltern people”(the people of inferior rank). The Christian gospel has the power to transform all people including high cast people in India. Every Christians are missionary and every non-Christians are mission field. So Let us influence the faith of other people by our Christian values end evangelize India in our generation.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?
The Gospel came to India 2000 years back but still we are 2.8% of Indian population. The harvest is plenty but the labourers are few. So come...let's together build the Kingdom of God in our Nation and let's evangelize our Nation in Christ in our Generation.