=============
சபையின் சத்தியங்கள்..
சபையில் அனைவரும் ஒரே அவயவங்கள் ( members )
யூதராயினும்.. கிரேக்கராயினும்..
=============
1. ஒரே சரீரத்தில் ஞானஸ்நானம்.. ஒரே ஆவியில் தாகம்தீர்க்கப்பட்டோம்..
1 கொரிந்தியர் 12:13
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
2. யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்
ரோமர் 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை, எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
3. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்..
கொலோசெயர் 3:11
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்த சேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
4. கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
================
சபையின் சத்தியங்கள்..
1. சபையில் 3 வித ஜனங்களை கர்த்தர் சேர்க்கிறார்
===============
1. யூதர்கள்.. (மகிமை)
2. புறஜாதிகள்.. (ஒளி)
3. எல்லா ஜனம்..(இரட்சணியம்)
1. சிமியோன் விவரித்துக் கூறுவதை கவனியுங்கள்..
லூக்கா 2:32
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
2. சபை தமது நாமத்திற்காக தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஜனம்..
அப்போஸ்தலர் 15:14
தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.
3. சபையில் கர்த்தரே ஆத்துமாக்களை சேர்க்கிறார்..
அப்போஸ்தலர் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்.இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்.
அப்போஸ்தலர் 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 5:14
திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
========
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
THE CHRISTIAN BELIEVERS ASSEMBLY TUTICORIN 3
==============
ஷாலோம் சிந்தைகள் நிதானங்கள்..
கடிந்து கொள்ளுதல்.. REBUKING..
==========
தியான வசனம்..
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள்
@ உபதேசத்துக்கும்,
@ கடிந்து கொள்ளுதலுக்கும்
@ சீர்திருத்தலுக்கும்,
@ நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:17
கடிந்து கொள்ளுதல் இரண்டு பேருக்கும் கஷ்டத்தை கொண்டு வரும்.. கடிந்து கொள்பவர்.. கடிந்து கொள்ளப்படுகிறவர்..
ஆனால் வேதம் கூறுகிறது..
கடிந்து கொள்பவர் கர்த்தர்..
கடிந்து கொள்ளும் ஊடகம் வேதம்..
கடிந்து கொள்ளுதல் பற்றிய சத்தியங்கள்..
கடிந்து கொள்ளுதலை வெறுக்க கூடாது
==============
1. வெறுக்கிறவர்கள் மிருக குணம் உள்ளவர்கள்..
நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்: கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருகக்குணமுள்ளவன்.
2. வெறுக்கிறவன் சாவான்..
நீதிமொழிகள் 15:10
வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
3. பரியாசக்காரன் நேசியான்..
நீதிமொழிகள் 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்து கொள்ளுகிறவனை நேசியான்: ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
கடிந்து கொள்ளுதலினால் பிரயோஜனம்..
===============
1. கனமடைவான்
நீதிமொழிகள் 13:18
புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
2. விவேகம் அடைவான்..
நீதிமொழிகள் 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
3. ஞானமடைவான்..
நீதிமொழிகள் 15:32
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்: கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
4. அறிவுள்ளவன்.
நீதிமொழிகள் 19:25
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
5. பிரம்பும் கடிந்து கொள்ளுதலும்
நீதிமொழிகள் 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
6. வெளிப்படையான கடிந்து கொள்ளுதல்..
நீதிமொழிகள் 27:5
மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
சபையின் தலைமத்துவம் அறிந்து கொள்க
==============
1. விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
தீத்து 1. 14
2. இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக
தீத்து 2.15
3. மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
1 தீமோத்தேயு 5.20
4. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு
2 தீமோத்தேயு 4.2
சிந்தனை:
யோபு 6:25
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியம் என்ன?
என் சகோதரரே..
நீதிமொழிகள் 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
==============
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
===============
சபைக்கு செய்தி
தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் தந்திரங்களும்
==============
தியான வசனம்..
2 கொரிந்தியர் 2:11
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
இயேசு கிறிஸ்து:
மத்தேயு 4:1-11
லுக்கா 4:1-13
மாற்கு 1:13
மத்தேயு 4:1,3,5,8,11
1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:
8. மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
11. அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
1. தாவீது:
2 சாமுவேல் 24:1
கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
1 நாளாகமம் 21:1
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
சிந்தனை:
ரோமர் 8:13
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
2. யோபு:
யோபு 1:6,12
6. ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
12. கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது. அவன் மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார். அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டுப்போனான்.
யோபு 2:7
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
சிந்தனை:
யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
3. தானியேல்:
தானியேல் 10:13
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான். ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான். ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
சிந்தனை:
1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
4. பேதுரு:
லூக்கா 22:31,32
31.பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
32. நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
சிந்தனை:
வெளிப்படுத்தினத விசேஷம் 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான், பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
5. யூதாஸ்:
யோவான் 13:27
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
லூக்கா 22:3
அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
சிந்தனை:
வெளிப்படுத்தினத விசேஷம் 2:13
உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப்பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
6. அனனியா.. சாப்பிராள்:
அப்போஸ்தலர் 5:3
பேதுரு அவனை நோக்கி; அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
சிந்தனை:
கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
7. பவுல்:
1 தெசலோனிக்கேயர் 2:18
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன். சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
சிந்தனை:
ரோமர் 15:21,22
21. நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
22. உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.
என் சகோதரரே:
ஆவிக்குரிய பெருமை அகற்றுவோம்..
2 கொரிந்தியர் 12:7
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
முள் எடுக்கப்பட வேண்டுமா?
கிருபையும் அகற்றப்பட வேண்டுமா?
2 கொரிந்தியர் 12:8-10
8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
10. அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
==========
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
====================
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
எரியும் முட்செடி
வேத வெளிப்பாடுகள் Biblical Revelations
===================
எரியும் முட்செடி - BURNING BUSH
=====================
Verse for meditation
பழைய ஏற்பாடு
யாத்திராகமம் 3:1-6
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
புதிய ஏற்பாடு
மாற்கு 12:26
மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
முட்செடி சாபம் பாவம்
ஆரம்பம் ஏதேன் தோட்டம்
ஆதியாகமம் 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
ஆதியாகமம் 3:18
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.
கொல்கொதா மலை காட்சி 5000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை கொண்டு போகிறது
முட்செடி அல்ல முட்செடி சாயல்
கிறிஸ்து பாவ மாம்சத்தின் சாயல்
ஏசாயா 53:2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
முட்செடி எரிந்தும்
கிறிஸ்துவின் பாடுகள் மரணம்
எபிரேயர் 12:2-3
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
யோவான் 19.1-3, 5
அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
முட்செடி வெந்து போகவில்லை
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
அப்போஸ்தலர் 7:30-33
நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்;
நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.
பின்னும் கர்த்தர் அவனை நோக்கி; உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளை கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
அப்போஸ்தலர் 2:23-27
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அவரைக்குறித்துத் தாவீது; கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்.
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில்விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்.
ஆராதனை செய்தி
ஏசாயா 55:13
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும், அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
சவுலிடம் ஆண்டவர் தரிசனமாகி பேசுகிறார்
அப்போஸ்தலர் 9:3-5
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது.
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
அப்போஸ்தலர் 9:6
அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
தேவ சித்தத்தை ஆராதனையில் காண்போம்
தேவ சித்தத்தை வாழ்க்கையில் நிறைவேற்றுவோம்
==================
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
=============
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING DEVOTION
House of God & House of saints
==============
So many inseperable things in Jewish day to day life.
They are very particular about meaning for every names..
Beth – House
Beth meaning house
Beth El – house of God
Beth Lehem – house of bread
Beth Thany – House of dates
Beth Bege – House of figs
Beth Esda – House of grace
Beth Saida – House of fish
Beth Shimesh – House of Sun
Beth Hakkerim – House of vineyard
Beth Anath – House of prayer
Beth Araba – House of desert
1. A place of heaven
Door of salvation..
Gen 28:17
And he was afraid, and said, How dreadful is this place! this is none other but the house of God, and this is the gate of heaven.
2. A place of God's presence
Way of sanctification
Judges 20:26
Then all the children of Israel, and all the people, went up, and came unto the house of God, and wept, and sat there before the LORD, and fasted that day until even, and offered burnt offerings and peace offerings before the LORD.
3. A place of divine protection
House of protection – Israelites
Neh 6:10
Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.
4. A place of enjoying God's manna
Freshness of the word of God
Mat 12:4
How he entered into the house of God, and did eat the shewbread, which was not lawful for him to eat, neither for them which were with him, but only for the priests?
5. A place of fellow citizens
we see believers thrrough Jesus as God sees us through Jesus..
Eph 2:19
Now therefore ye are no more strangers and foreigners, but fellowcitizens with the saints, and of the household of God;
6. A place of pillar and ground of truth
House of truth – Knowing Christ..
Court / Holy place / Most holy place
1 Tim 3:15
But if I tarry long, that thou mayest know how thou oughtest to behave thyself in the house of God, which is the church of the living God, the pillar and ground of the truth.
7. A place of faithfulness
God is the most faithful in our life..
Heb 3:2
Who was faithful to him that appointed him, as also Moses was faithful in all his house.
8. High priest over House of God..
When we fails. Our failures & other failures - Foolish man / Ordinary man / Spiritual man
Heb 10:21
And having an high priest over the house of God;
===========
சமீபமான தேவன்
THE LORD IS NEAR
===========
தியான வசனம்:
உபாகமம் 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
Deuteronomy 4:7
For what nation is there so great, who hath God so nigh unto them, as the LORD our God is in all things that we call upon him for?
முதலாவது கர்த்தருடைய வார்த்தை சமீபம்..
நாம் கீழ்ப்படிய...
உபாகமம் 30:14
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்ததிலும் இருக்கிறது,
இரண்டாவது கர்த்தருடைய நாமம் சமீபம்...
ஜனங்கள் இரட்சிக்கப்பட...
சங்கீதம் 75:1
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம், உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
சங்கீதம் 85:9
நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
மூன்றாவது கர்த்தருடைய நீதி சமீபம்..
நாம் பாதுகாக்கப்பட..
ஏசாயா 51:5
என் நீதி சமீபமாயிருக்கிறது, என் இரட்சிப்பு வெளிப்படும், என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும், தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.
ஏசாயா 50:8
என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார், என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
நான்காவது கர்த்தருடைய சமாதானம் சமீபம்..
நாம் குணமாக்கப்பட ..
ஏசாயா 57:19
தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின்பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபேசியர் 2:27
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், *சமீபமாயிருந்த* அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
ஐந்தாவது கர்த்தருடைய இரட்சிப்பு சமீபம்..
நாம் அனுதினம் பரிசுத்தமாக்கப்பட ..
ரோமர் 13:11
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
ஆறாவது கர்த்தருடைய இரத்தம் சமீபம்..
நாம் கிறிஸ்துவுடன் நெருங்கி சேர..
எபேசியர் 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
ஏழாவது கர்த்தரே சமீபம்..
நம் சாந்த குணத்தை வெளிப்படுத்த..
பிலிப்பியர் 4:5
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
எட்டாவது கர்த்தருடைய வருகை சமீபம்..
நம் இருதயம் ஸ்திரப்பட..
யாக்கோபு 5:8
நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
1 பேதுரு 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
சகோதரரே..
சமீபமாக இருக்கிற பகல் (தேவ கிருபை)
ரோமர் 13:12
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
நாட்கள் (தேவ அனுக்கிரகம்) சமீபம்..
எபிரேயர் 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
The Lord is near to all who call on him, to all who call on him in truth” is a verse from Psalm 145 that means God is close to those who call on him with sincerity and open hearts:
Sincerity: God is more likely to respond to those who call on him with truth in their hearts and words.
Openness: God looks for those who are open to divine direction and help.
Willingness to listen: God is willing to listen and respond with grace and help.
===============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
============
சபையில் தேவன் செயல்பட நம் அர்ப்பணிப்பும் ஒருமனப்பாடும் மட்டுமே
============
சபையின் பொறுப்புள்ள கர்த்தருடைய சகோதரர்கள், ஆசாரித்துவ ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தம் செய்ய வேண்டும்..
@ இயேசு கிறிஸ்து கூறின வார்த்தை சிந்தியுங்கள்...
யோவான் 17:19
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
@ அப் பவுல் கூறின வார்த்தை சிந்தியுங்கள்...
1 கொரிந்தியர் 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
2 கொரிந்தியர் 11:7
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
@ நாம் பலவீனர்கள்.. ஆனாலும் தேவனுடைய கிருபையினால் இந்த கனமான பணியை தேவன் நாம் செய்ய நியமிக்கிறார்..
எபிரேயர் 5:1
அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
எபிரேயர் 5:2
தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5:3
அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது.
@ முழு அர்ப்பணிப்போடு எந்த தேவனுடைய பணியை செய்யும் போது மட்டுமே தேவன் செயல்படுகிறார்..
=============
TCBA TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==========
தன் சகோதரன்
HIS BROTHER
==========
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..
தியான வசனம்:
சங்கீதம் 49:6-9
6. தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
7. ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
9. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒரு போதும் முடியாது.
@ தன் சகோதரன் ஆத்ம மீட்பு அருமையானது என்று அறிந்து மூத்த சகோதரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தன்னையே கொடுக்கிறார்..
@ ஆதியில் இருந்து தன் சகோதரன் பகைக்கப்படுகிறான்..
ஆதியாகமம் 4:8
காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
@ ஆனால் கிறிஸ்துவுக்கு நிழலான யோசேப்பு தன்னை பகைத்த தன் சகோதரர்களை அறிந்து கொள்கிறான்..
ஆதியாகமம் 42:7
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான். அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.
@ நியாயப்பிரமானம் தன் சகோதரர் பற்றிய நிறைய பிரமாணங்கள் குறிப்பிடுகிறது..
உபாகமம் 19:18
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள், சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாட்டினான் என்றும் கண்டால்,
@ சேனைகளையுடைய கர்த்தர் தன் தன் சகோதரன் பற்றி கூறுவது:
சகரியா 7:9
சேனைகளையுடைய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,
@ முதலாவது தன் சகோதரனுக்கு ஆண்டவரை அறிமுகம் செய்ய வேண்டும்..
யோவான் 1:41
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
@ தன் சகோதரன் மனைவி பற்றிய பழைய மற்றும் புதிய பிரமாணம்..
லேவியராகமம் 20:22
ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம், தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:4
4. தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5. உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
6. இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.
@ தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன்
யாக்கோபு 4. 6
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள். சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
@ தன் சகோதரனை பகைத்தால்?
1. இன்னும் இருளில் இருக்கிறோம் !!!!
1 யோவான் 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
2. தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறோம் !!!! .
1 யோவான் 2:11
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
3. தேவனால் உண்டானவனல்ல என்று அறிகிறோம் !!!!
1 யோவான் 3:10
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
4. தன் கிரியைகளே பொல்லாதவைகள் !!!!"
1 யோவான் 3:12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
5. மனுஷ கொலைபாதகனாயிருக்கிறோம் !!!!
1 யோவான் 3:15
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
6. தேவஅன்பு நிலைகொள்ளுகிறதில்லை என்றறிகிறோம் !!!!
1 யோவான் 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
7. நாம் பொய்யன் !!!!
1 யோவான் 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
@ கிறிஸ்துவின் பிரதான கற்பனை:
1 யோவான் 4:21
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
1 யோவான் 2:10
தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.
இறுதியாக சகோதரரே
தன் சகோதரன் தவறினால்?
1 யோவான் 5:16
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
கலாத்தியர் 6:1
சகோதரரே, ஒருவன் (தன் சகோதரன்) யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
=============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
TCBA TUTICORIN
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
===========
இன்றைய ஆராதனை தியானம்..
WORSHIPPING THE MOST HIGH GOD..
உன்னதமான தேவனை ஆராதித்தல்
===========
தியான பகுதி:
ஆதியாகமம் 14.18-23
லூக்கா 1:32
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
1. உன்னதமான தேவனை கனம் பண்ணும் பந்தி
ஆதியாகமம் 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
சங்கீதம் 7:17
நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
2 பேதுரு 1:17
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
2. உன்னதமான தேவன் யார்?
ஆதியாகமம் 14:19
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.
2 சாமுவேல் 22:14
கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப் பண்ணினார்.
யோபு 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
சங்கீதம் 47:2
உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
3. உன்னதமான தேவன் சிலுவையில் எதை ஜெயித்தார்?
ஆதியாகமம் 14:20
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
கொலோசெயர் 2:13-15
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
எபிரேயர் 1.3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்தவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
4. உன்னதமான தேவனுக்கு நாம் எதாவது கொடுக்க முடியுமா?
ஆதியாகமம் 14:22
சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,
எபிரேயர் 12:28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
யோவான் 4:23-24
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்.
24. இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
லூக்கா 2:14
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
லூக்கா 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
5. உன்னதமான தேவனை பணிந்து கொள்வோம்..
ஆதியாகமம் 14:23
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
சங்கீதம் 92:1
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
சங்கீதம் 92:8
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
சங்கீதம் 97:9
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர், எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
ஆராதனை அர்ப்பணிப்பு:
சங்கீதம் 26:6-8
6. கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
7. நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8. கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
யோவான் 3:31
உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
=============
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
TCBA TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==============
SHALOM STEWARD THOUGHTS
CHURCH ORDINANCES..
சபையின் நெறிமுறைகள்
===============
1 கொரிந்தியர் 14:34
சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.
1 Corinthians 14:34
Let your women keep silence in the churches: for it is not permitted unto them to speak; but they are commanded to be under obedience as also saith the law.
1 கொரிந்தியர் 11:5 ன் படி ஸ்திரிகள் ஜெபம், தீர்க்கதரிசனம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் தலை மூடிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை..
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
அப்போஸ்தலர் 2:17-18, 21:9-ன் படி குமாரத்திகள் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்..
ஆனால் 1 தீமோத்தேயு 2:12 ன் படி..
உபதேசம் அதாவது அதிகாரம் செலுத்துவது ( Doctrine means Authority ) சகோதரிகளுக்கு அனுமதி இல்லை..
காரணம் உபதேசம் அதிகாரத்தை காட்டுகிறது.. சகோதரிகள் உபதேசம் சபையில் வழங்கும் போது மறைமுகமாக புருஷர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள். இது வேதத்திற்கு முரண்..
1 தீமோத்தேயு 2:12
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
மீண்டும் 1 கொரிந்தியர் 14:34 வாசியுங்கள்..
சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.
வேதமும் அப்படியே சொல்லுகிறது..
வேதம் என்றால் ஆங்கிலத்தில் Law..
Law of Moses..
மோசேயின் பிரமாணம்..
மோசேயின் பிரமாணமும் கிறிஸ்துவும்..
மத்தேயு 5:17
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்,அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
மத்தேயு 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
மத்தேயு 11:13
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
மோசே எழுதியபடி..
ஆதியாகமம் 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
பிரமாணம் சொல்லுகிறது ஸ்திரியை புருஷன் சகலத்திலும் ஆண்டு கொள்ளுவான்..
இது தேவ நியமம்..
To continue..
=============
TCBA TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
============
இரவு உணர்த்துதல் NIGHT DISCERNS..
பாடுகள் மகிமைகள் SUFFERINGS GLORIES
===========
CHRIST'S SUFFEINGS GLORIES FORETOLD
1 பேதுரு 1:11
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.
OUR SUFFERINGS GLORIES ARE CHRIST'S INHERITANCE..
ரோமர் 8:17
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
PRESENT SUFFERINGS FUTURE GLORIES INCOMPARABLE..
ரோமர் 8:18
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
THINK:
1 பேதுரு 4:13
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
=============
TCBA TUTICORIN
Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
=========
இன்றைய சிந்தனை
கர்த்தர் திறந்தருள்கிறவர்..
GOD WHO OPENETH..
=======
1. கண்களைத் திறந்தருளும்..
தேவனுடைய மகத்துவத்தைக் காண..
2 இராஜாக்கள் 6:17
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
2. கண்களைத் திறந்தருளும்..
நம்மை சுற்றியுள்ள சத்துருக்களை காண..
2 இராஜாக்கள் 6:20
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான், பார்க்கும்படி கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
3. உதடுகளைத் திறந்தருளும்..
கர்த்தருடைய புகழை அறிவிக்க...
சங்கீதம் 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும், அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
4. கண்களைத் திறந்தருளும்..
வேதத்திலுள்ள அதிசயங்களை காண..
சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
5. இருதயத்தைத் திறந்தருளினார்...
கர்த்தருடைய வசனத்தை கவனிக்க...
அப்போஸ்தலர் 16:14
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
6. செவிகளை திறந்தீர் ..
பலியினால் தேவனுடைய இரட்சிப்பை உறுதி செய்ய..
சங்கீதம் 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
7. சுவிசேஷ வாசலைத் தேவன் திறந்தருளுவார்.
திருவசனம் எல்லா இடங்களிலும் செல்ல..
கொலோசெயர் 4:4
திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
2 கொரிந்தியர் 4:4-6
4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, 5. இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
6. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
=============
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
==============
TCBA SHALOM THOUGHTS
BLESSINGS OF CLOSED DOOR
==============
1. DOOR OF SALVATION
Genesis 7:13
In the selfsame day entered Noah, and Shem, and Ham, and Japheth, the sons of Noah, and Noah's wife, and the three wives of his sons with them, into the ark;
Genesis 7:16
And they that went in, went in male and female of all flesh, as God had commanded him: and the LORD shut him in.
2. DOOR OF PRAYER
Matthew 6:6
But thou, when thou prayest, enter into thy closet, and when thou hast shut thy door, pray to thy Father which is in secret; and thy Father which seeth in secret shall reward thee openly.
Acts 12:12-16
2 Chron 32:20,21
3. DOOR OF BLESSING
2 Kings 4:1-7
5. So she went from him, and shut the door upon her and upon her sons, who brought the vessels to her; and she poured out.
6. And it came to pass, when the vessels were full, that she said unto her son, Bring me yet a vessel. And He said unto her, There is not a vessel more. And the oil stayed.
7. Then she came and told the man of God. And He said, Go, sell the oil, and pay thy debt, and live thou and thy children of the rest.
4. DOOR OF QUICKENING
2 Kings 4.18-37
33. He went in therefore, and shut the door upon them twain, and prayed unto the LORD.
34. And He went up, and lay upon the child, and put his mouth upon his mouth, and his eyes upon his eyes, and his hands upon his hands: and stretched himself upon the child; and the flesh of the child waxed warm.
35. Then He returned, and walked in the house to and fro; and went up, and stretched himself upon him: and the child sneezed seven times, and the child opened his eyes.
5. DOOR OF PEACE WITHIN
John 20:19,26
19. Then the same day at evening, being the first day of the week, when the doors were shut where the disciples were assembled for fear of the Jews, came Jesus and stood in the midst, and saith unto them, Peace be unto you.
26. And after eight days again his disciples were within, and Thomas with them: then came Jesus, the doors being shut, and stood in the midst, and said, Peace be unto you.
6. DOOR OF GRACE
THIS WILL HAPPEN SOON AT LORD'S COMING..
BE PREPARED..
Matthew 25.1-10
10. And while they went to buy, the bridegroom came; and they that were ready went in with him to the marriage: and the door was shut.
===============
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
============
இந்த வாரம் சபைக்கு செய்தி
தேவனால் பிறந்தவன்..
BORN OF GOD
=============
தேவனால் பிறப்பது என்றால் என்ன?
இரண்டு வசனங்கள் வாசிப்போம்..
சொந்தமானவர்கள்
Vs
தேவனாலே பிறந்தவர்கள்
யோவான் 1:11
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:12
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
தேவனால் பிறந்தவன் என்பதை வேதம் 3 நிலைகளில் விவரிக்கிறது..
1. தேவனாலே பிறப்பது..
யோவான் 1.12,13
13. அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
2. ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறப்பது..
யோவான் 3.5
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
3. ஆவியினால் பிறந்தவன்..
யோவான் 3:8
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
ஆபிராகமுக்கு 2 குமாரர்கள் இருந்தார்கள்
கலாத்தியர் 4:22
===========
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
1. அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஆகார்.. இஸ்மவேல்.. மாம்சத்தின்படி பிறத்தல்
2. சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.. சாராள். ஈசாக்கு.. ஆவியின்படி பிறத்தல்
கலாத்தியர் 4:23
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.
மாம்சம் ஆவிக்கு விரோதமாக இச்சிக்கிறது..
கலாத்தியர் 4:28
28. சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகயாயிருக்கிறோம்.
29. ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
30. அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
31. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.
மாம்சம் Vs ஆவி
கலாத்தியர் 5:16-19
16. பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
17. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
தேவனால் பிறந்தவனின் தெய்வீக குணங்கள்
தேவனால் பிறந்தவன்
=============
1. இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறான்
1 யோவான் 5:1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
2. தேவனை அறிந்திருக்கிறான்
1 யோவான் 4:7
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
3. தேவனால் பிறப்பிக்கப் பட்டவர்களிடத்தில் அன்பு கூறுகிறான்
1 யோவான் 5:1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
4. அவருடைய வசனங்களுக்கு செவி கொடுக்கிறான்..
யோவான் 8:47
தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான், நீங்களும் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.
5. பாவம் செய்யான்
1 யோவான் 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
6. நீதியை செய்கிறான்
1 யோவான் 2:29
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
7. உலகத்தை ஜெயிக்கிறான்..
1 யோவான் 5:4
4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
8. தன்னைக் காக்கிறான்..
1 யோவான் 5:18-21
18. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
19. நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
21. பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
Double Fold Protection.
உபதேசம்:
யோவான் 10:28-30
28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், 30. அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
நடைமுறை ஜீவியம் :
Protection on Lord's side:
2 தீமோத்தேயு 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
Protection on Holy Spirit Side:
2 தீமோத்தேயு 1:14
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
What is my Responsibility?
2 தீமோத்தேயு 1:13
நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
கர்த்தர் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்வாராக!!!
=================
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
=============
DRS UNCLE'S SERMONS
SHALOM STEWARD BOOK SHELF
LEARN.. கற்றுக்கொள்ளுங்கள்..
=============
1. கர்த்தருக்கு பயந்திருக்க பழகு (கற்றுக்கொள்)
உபாகமம் 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,
உபாகமம் 17:19
இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,
1 பேதுரு 2:17
கற்றுக்கொள்ள கூடாத காரியங்கள் அறிந்து கொள்ள வேண்டும்..
எரேமியா 10:2
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் *கற்றுக்கொள்ளாதிருங்கள்* , வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
சங்கீதம் 115:13
2. நன்மை செய்ய படியுங்கள்..
ஏசாயா 1:17
நன்மைசெய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
எபேசியர் 2:8-10
தீத்து 3:14
3. வித ஜனங்களுக்கு நன்மை:
@ அழிந்து போகிற ஆத்துமாவுக்கு நன்மை சுவிசேஷம் அறிவித்தல்
@ நமக்கு நன்மை தான தர்மம் செய்தல்.. தீத்து 3.8..
@ சபைக்கு வருதல் நம் ஆத்துமாவுக்கு நன்மை..
3. மன ரம்மியமாயிருக்க கற்றுக்கொள்ளுங்கள்..
பிலிப்பியர் 4:11-13
1 தீமோத்தேயு 6:6,10,17
2 பேதுரு 1:3
4. கீழ்ப்படிய கற்றுக்கொள்ளுங்கள்..
எபிரெயர் 5:8
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிடயுங்கள்
எபேசியர் 5:21
1 பேதுரு 5:5
தேவனுக்கு கீழ்ப்படியுங்கள்
யாக்கோபு 4:7
5. கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்
மத்தேயு 11:28-30
சாந்தம், மனத்தாழ்மை
உலகத்தில் அன்பு கற்றல் கூடாது..
1 யோவான் 2:13-17
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
1 யோவான் 2:15
==========
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
================
இந்த வாரம் சபைக்கு செய்தி..
BELIEVER'S BLAMELESSNESS
விசுவாசிகள் குற்றமற்றிருத்தல்
===============
உண்மையான இரட்சிப்பை பெற்றுக்கொண்ட விசுவாசிகள் குற்றமற்றிருத்தல் அவசியம்...
தியான வசனம்:
எபிரேயர் 7:26
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
Heb 7:26
He is the kind of high priest we need because he is holy and blameless, unstained by sin. He has been set apart from sinners and has been given the highest place of honor in heaven.
முதலாவது
ஒரு விசுவாசி தனது இரட்சிப்பை இழக்க முடியுமா? என்பதை சிந்திப்போம்..
முதலாவதாக, கிறிஸ்தவன் என்கிற சொல் வரையறுக்கப்பட வேண்டும்.
ஒரு "கிறிஸ்தவன்" என்பது ஒரு பிரார்த்தனை செய்கிறவனோ அல்லது கிறிஸ்தவ ஒழுக்கத்தில் நடத்தல் அல்லது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட ஒருவர் அல்ல.
இவை ஒவ்வொன்றும் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறபோதும், அவைகள் ஒருபோதும் ஒருவரை கிறிஸ்தவனாக மாற்றுவதில்லை.
ஒரு கிறிஸ்தவன் தான் இயேசு கிறிஸ்துவில் முழு நம்பிக்கை வைத்து அவர் ஒருவரை மட்டுமே ஒரே இரட்சகராக ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியானவரையும் கொண்டிருக்கிறவராவார்.
யோவான் 3:16
அப்போஸ்தலர் 16:31
எபேசியர் 2:8-9
எனவே, இந்த பொருள்விளக்கத்தை மனதில்கொண்டு, ஒரு விசுவாசி தனது இரட்சிப்பை இழக்க முடியுமா?
இது ஒரு மிகவும் முக்கியமான கேள்வி ஆகும்.
இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை ஆராய்வதற்கும், இரட்சிப்பை இழந்துபோகும் காரியங்களைப் புரிந்துகொள்வதற்கும் என்ன செய்யலாம் என்பதைச் சோதித்துப் பார்ப்பதுதான் சிறந்த வழியாகும்:
1. ஒரு கிறிஸ்தவன் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறான்.
NEW CREATURE...
2 கொரிந்தியர் 5:17
"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின"
ஒரு கிறிஸ்தவன் என்பவன் ஒரு நபரின் "மேம்படுத்தப்பட்ட" பதிப்பு அல்ல; ( Reformed Version..) மாறாக ஒரு கிறிஸ்தவன் என்பவன் முற்றிலுமாக ஒரு புதிய ஜீவனாக இருக்கிறான். அவன் "கிறிஸ்துவில்" இருக்கிறான்.
ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமானால், புதிய சிருஷ்டிப்பே அழிக்கப்பட வேண்டும்.
2. ஒரு கிறிஸ்துவன் மீட்டுக்கொள்ளப்பட்டவன்.
REDEEMED...
1 பேதுரு 1:18-19
“உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே”
மீட்டெடுக்கப்பட்ட என்கிற வார்த்தை விலைக்கு வாங்குவதை மற்றும் விலையை செலுத்துகிறதைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் விலைக்கு நாம் வாங்கப்பட்டோம்.
ஒரு கிறிஸ்தவன் தன் இரட்சிப்பின் இழக்க வேண்டுமானால், தேவன் அவனை தம்முடைய கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை சிந்தி சம்பாதித்ததை வேண்டாம் என்று திரும்ப பெறுதல் வேண்டும்.
3. ஒரு கிறிஸ்தவன் நீதிமானாக்கப்படுகிறான்.
JUSTIFIED...
ரோமர் 5:1
"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்"
நியாயப்படுத்துதல் என்பது நீதிமான் என்று அறிவிப்பதாகும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்கள் தேவனால் "நீதியுள்ளவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க கூடுமானால், தேவன் அவரது வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர் முன்பு அறிவித்த "அறிக்கையை" நீக்கிப்போடவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மறுபடியும் முயற்சி செய்து குற்றவாளிகள் எனக் கருதப்பட வேண்டும். தேவன் தெய்வீக தீர்மானத்தின்படி வேண்டாம் என்று கைவிடப்பட்ட தண்டனை மீண்டுமாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
4. ஒரு கிறிஸ்தவன் நித்திய ஜீவனையுடையவனாக வாக்குறுதியளிக்கப் பட்டிருக்கிறான்.
ETERNAL LIFE..
யோவான் 3:16
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்"
நித்திய ஜீவன் என்பது தேவனோடு பரலோகத்தில் என்றென்றுமாக செலவழிப்போம் என்கிற வாக்குறுதியாகும். “விசுவாசியுங்கள் அப்பொழுது நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்" என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார்.
ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க வேண்டுமென்றால், நித்திய ஜீவன் மீண்டுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். கிறிஸ்தவன் என்றென்றுமாக வாழ உறுதியளிக்கப்பட்டிருக்கிறார். நித்தியம் என்பது "நித்தியம்" என்பதாக அர்த்தம் அல்லவா?
5. ஒரு கிறிஸ்தவன் தேவனால் குறிக்கப்பட்டு ஆவியானவரால் முத்திரையிடப்படுகிறான்.
SEALED BY HOLY SPIRIT..
எபேசியர் 1:13-14
"நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்"
கிறிஸ்துவில் விசுவாசித்த தருணத்தில், புதிய கிறிஸ்தவன் குறிக்கப்பட்டு மற்றும் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படுகிறார், பரலோக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வைப்பதாக உறுதியளித்தார். இறுதி முடிவானத்து தேவனுடைய மகிமையை புகழ்கிறது. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க நேரிடும் என்றால், தேவன் குறியை அழித்து பரிசுத்த ஆவியானவரை திரும்ப விலக்கிக் கொள்ளுதல், வைப்புத்தொகையை ரத்து செய்தல், அவருடைய வாக்குறுதியை முறித்துக் கொள்ளுதல், உத்தரவாதத்தைத் திரும்பப் பெறுதல், பாராட்டுக்குத் துரோகம் செய்தல், மற்றும் அவருடைய மகிமையைக் குறைத்தல்.
6. ஒரு கிறிஸ்தவனுக்கு மகிமை உறுதியாக இருக்கிறது
GLORIFIED..
ரோமர் 8:30
"எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்''.
ரோமர் 5:1-ன் படி, விசுவாசித்த அந்த தருணத்தில் நீதிமானாக்கப்படுதல் நடைபெறுகிறது. ரோமர் 8:30 படி, நீதிமானாக்கப்படுதலோடு மகிமை வருகிறது. தேவன் நீதிமான்களாக்கியிருக்கிற எல்லாரையும் மகிமைப்படுவதாக வாக்களிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பரிபூரண உயிர்த்தெழுதல் சரீரத்தைப் பரலோகத்தில் பெற்றுக்கொள்வதால் இந்த வாக்குறுதி நிறைவேறும். ஒரு கிறிஸ்துவர் இரட்சிப்பினை இழக்க வேண்டுமானால், பின்னர் ரோமர் 8:30 பிழை உள்ளதாகிவிடும், ஏனெனில் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்து, நீதிமான்களாக்கி, மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கமுடியாது.
7. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க முடியாது.
SECURITY OF SALVATION..
ரோமர் 11:29
இரட்சிப்பு இழக்க நேர்ந்தால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, வேதாகமம் நிகழ்வதாக கூறும் எல்லாவற்றிற்கும் மேலானது, செல்லுபடியாகாது. இரட்சிப்பு தேவனுடைய ஈவு, மற்றும் தேவனின் ஈவுகள் "மாற்றமுடியாதது"
தீத்து 1:2
ஒரு கிறிஸ்தவன் புதிதாக உருவாக்கப்பட்டவனாக இருக்க முடியாது. விலைக்கொடுத்து மீட்டெடுக்க முடியாது. நித்திய வாழ்க்கை தற்காலிகமாக இருக்க முடியாது. தேவன் அவரது வார்த்தையை பின்வாங்கிக் கொள்ள முடியாது. தேவன் பொய் சொல்லுகிறவர் என்று சொல்ல முடியாது என்று வேதம் கூறுகிறது.
ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பை இழக்க இயலாது என்கிற நம்பிக்கைக்கு இரண்டு பொதுவான ஆட்சேபனைகள் இந்த அனுபவங்களைக் குறித்து விவாதிக்கப்படுகின்றன:
1) பாவத்தில் வாழ்கிற, மனந்திரும்பாத வாழ்க்கை வாழ்வில் வாழும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
2) விசுவாசத்தை நிராகரித்து கிறிஸ்துவை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
இந்த ஆட்சேபனைகளைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால், தன்னை ஒரு "கிறிஸ்தவன்" என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே மறுபடியும் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுவதாகும். ஒரு உண்மையான கிறிஸ்தவன் தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவத்தின் நிலையில் வாழ மாட்டான் என வேதாகமம் அறிவிக்கிறது
(1 யோவான் 3:6). விசுவாசத்தைப் புறக்கணிப்பவர் எவரும் உண்மையில் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்பதையே நிரூபிக்கிறார்கள்
(1 யோவான் 2:19).
அவர் ஒரு மதபக்தனாக இருந்திருக்கலாம், அவர் ஒரு நல்ல செயல்களை வாழ்வில் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் தேவனின் வல்லமையால் மறுபடியும் பிறக்கவில்லை.
மத்தேயு 7:16
"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்"
தேவனால் மீட்கப்பட்டவர்கள், "நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி"
(ரோமர் 7:4) அவருக்கு சொந்தமானவர்களாக இருக்கிறார்கள்.
பிதாவின் அன்பிலிருந்து தேவனுடைய பிள்ளைகளை எதுவும் பிரிக்க முடியாது
(ரோமர் 8:38-39).
ஒரு கிறிஸ்தவனை தேவனுடைய கையிலிருந்து பறிக்க முடியாது (யோவான் 10:28-29).
தேவன் நமக்கு அளித்த நித்திய ஜீவனை உறுதிப்படுத்துகிறார், மற்றும் அவர் நமக்கு அளித்த இரட்சிப்பைப் பராமரிக்கிறார்.
நல்ல மேய்ப்பன் காணாமற்போன ஆடுகளை தேடுகிறார், "கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு” வீட்டிற்குப் போகிறான்"
(லூக்கா 15:5-6). ஆட்டுக்குட்டியைக் கண்டபின்பு, மேய்ப்பன் மகிழ்ச்சியுடன் அதைச்சுமப்பான்; இழந்துபோனதை மீண்டுமாய் வீட்டிற்கு பத்திரமாய் கொண்டு வருவதற்கு கர்த்தர் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறார்.
யூதா 1:24-25 நம்முடைய இரட்சகராகிய நற்குணத்தையும் உண்மையையும் மேலும் வலியுறுத்துகிறது:
"வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்."
=================
@ இரட்சிப்பு உறுதி செய்யப்பட்ட விசுவாசிகள் குற்றமற்ற ஜீவியம் செய்வது மிக அவசியம்!!!
யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம் எலிகூ கோபம் கொண்டு யோபுவிடம் கூறின வார்த்தை..
யோபு 33:9
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
@ குற்றமற்று வாழ முடியும்!!!
சகரியா எலிசபெத்து
லூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
@ அப் பவுல் பிரயாசம்!!!
அப்போஸ்தலர் 24
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
@ தேவனுடைய தீர்மானமே நாம் குற்றமற்று ஜீவிக்க வேண்டும்!!!
பிலிப்பியர் 2:15
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,
@ கிறிஸ்துவின் மரணமே நாம் குற்றமற்று வாழ அடிப்படை..
கொலோசெயர் 1:21
முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
@ ஆவி ஆத்துமா சரீரம் மூன்றும் குற்றமற்றிருத்தல் அவசியம்..
1 தெசலோனிக்கேயர் 5:23
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக
@ குற்றமற்ற ஆராதனை அவசியம்..
சங்கீதம் 73:13
நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
==================
தலைமைத்துவமும் குற்றமற்றிருத்தலும்..
ரோமர் 8:33
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ரோமர் 14:10
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
1 கொரிந்தியர் 1:10
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
எபேசியர் 1:10
தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
பிலிப்பியர் 3:6
பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
1 தீமோத்தேயு 3:6
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியமுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3:10
மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும் குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்
1 தீமோத்தேயு 5:7
அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளை கட்டளையிடு.
இறுதியாக சகோதரரே!!
1 தீமோத்தேயு 6:13
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,
==================
TCBA கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301