==============
1 நாளாகமம் 1-5 கேள்விகள்
==============
1. இரண்டெழுத்து என் பெயர். முதல் எழுத்து 'இல்லை'.இரண்டாம் எழுத்து ஆங்கிலத்தில்கம் என்று அர்த்தம். நான் யார்?2. கூஷின் மகன் யார்? அவன் எப்படிப்பட்டவன்?
3. பூமி யார் நாட்களில் பகுக்கப்பட்டது? அவன் யாருடைய குமாரன்?
4. நான்கெழுத்து என் பெயர்.முதல் மூன்று எழுத்துக்களும் இனிப்பானது. நான் யார்? என் தந்தை பெயர் என்ன?
5. இரண்டெழுத்து என் பெயர்.என்னை வயல் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள். நான் யார்?
6. யாருக்கு குமாரர்கள் இல்லை? யாருக்கு குமாரத்திகள் மட்டுமே இருந்தனர்?
7. நான்கெழுத்து என் பெயர். முதல் மூன்று எழுத்துகளும் தவறு. நான் யார்? என் தகப்பன் யார்?
8. என்னுடைய பெயரில் எலியும் ஓநாயும் கலந்திருக்கிறார்கள். நான் யார்? என் தகப்பன் யார்?
9. பெத்லெகேமுக்கு மூப்பன் யார்?
10. நான் என் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனானேன். என் தாய் நான் பிறக்கும் போது துக்கத்தோடே பெற்றதால் எனக்கு இந்த பெயரிட்டாள். நான் யார்?
11. கராஷீமன் என்பது என்ன?அதற்கு மூப்பன் யார்?
12. இரண்டெழுத்து என் பெயர்.என் சகோதரன் மூன்றெழுத்து கொண்டவன். அவனுடைய முதல் இரண்டெழுத்துகளில் நான் இருக்கிறேன். நாங்கள் யார்?
13. மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தி யார்?
14. மெல்லிய புடவை நெய்தவர்கள் யார்?
15. கூனியின் பேரன் யார்? அவன் என்னவாயிருந்தான்?
16. என் பெயருக்கு கஞ்சன் என்கிற அர்த்தமும் உண்டு.நான் யார்?
=============
1 நாளாகமம் 1-5 (கேள்வி-பதில்)
==============
1. இரண்டெழுத்து என் பெயர்.முதல் எழுத்து 'இல்லை'.இரண்டாம் எழுத்து ஆங்கிலத்தில்கம் என்று அர்த்தம். நான் யார்?Answer: நோவா
1 நாளாகமம் 1:4
2. கூஷின் மகன் யார்? அவன் எப்படிப்பட்டவன்?
Answer: நிம்ரோத்; பூமியிலே பலசாலியானவன்
1 நாளாகமம் 1:10
3. பூமி யார் நாட்களில் பகுக்கப்பட்டது? அவன் யாருடைய குமாரன்?
Answer: பேலேகு; ஏபேர்
1 நாளாகமம் 1:19
4. நான்கெழுத்து என் பெயர்.முதல் மூன்றெழுத்துகளும் இனிப்பானது. நான் யார்? என் தந்தை பெயர் என்ன?
Answer: அல்வான்;சோபால்
1 நாளாகமம் 1:40
5. இரண்டெழுத்து என் பெயர்.என்னை வயல் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.நான் யார்? என் தந்தை யார்?
Answer: ஏர்; யூதா
1 நாளாகமம் 2:3
6. யாருக்கு குமாரர்கள் இல்லை? யாருக்கு குமாரத்திகள் மட்டுமே இருந்தனர்
Answer: யெத்தேர்;சேசான்
1 நாளாகமம் 2:32,34
7. நான்கெழுத்து என் பெயர். முதல் முன்றெழுத்துகளும் தவறு. நான் யார்? என் தகப்பன் யார்?
Answer: தப்புவா;எப்ரோன்
1 நாளாகமம் 2:43
8. என்னுடைய பெயரில் எலியும் ஓநாயும் கலந்திருக்கிறார்கள்.நான் யார்? என் தகப்பன் யார்?
Answer: எலியோனாய்;நெரியா
1 நாளாகமம் 3:23
9. பெத்லெகேமுக்கு மூப்பன் யார்?
Answer: எப்ராத்தா
1 நாளாகமம் 4:4
10. நான்,என் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனானேன். என் தாய் நான் பிறக்கும் போது துக்கத்தோடே பெற்றதால் எனக்கு இந்தப் பெயரிட்டாள். நான்யார்?
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
11. கராஷீமன் என்பது என்ன?அதற்கு மூப்பன் யார்?
Answer: பள்ளத்தாக்கு;யோவாப்
1 நாளாகமம் 4:14
12. இரண்டெழுத்துஎன் பெயர்.என் சகோதரன் மூன்றெழுத்து கொண்டவன்.அவனுடைய முதல் இரண்டெழுத்துகளில் நான் இருக்கிறேன். நாங்கள் யார்?
Answer: சீப்; சீப்பா
1 நாளாகமம் 4:16
13. மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தி யார்?
Answer: பித்தியாள்
1 நாளாகமம் 4:18
14. மெல்லிய புடவை நெய்தவர்கள் யார்?
Answer: அஸ்பெயா வீட்டு வம்சங்கள்
Answer: அஸ்பெயா வீட்டு வம்சங்கள்
1 நாளாகமம் 4:21
15. கூனியின் பேரன் பெயர் என்ன? அவன் என்னவாயிருந்தான்?
Answer: அகி; பிதாக்களின்வீட்டுத் தலைவன்
1 நாளாகமம் 5:15
16. என் பெயருக்கு கஞ்சன் என்கிற அர்த்தமும் உண்டு. நான் யார்?
Answer: கர்மீ
1 நாளாகமம் 15:3
=============
வேதாகம கேள்விகள்
வேத பகுதி: 1 நாளாகமம் 6-10
=============
1. பினெகாஸின் தாத்தா பெயர் என்ன?2. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்தில் ஆசாரிய பணி விடையைச் செய்தவன் யார்?
3. தூபங்காட்டும் பீடத்தின் மேல் தூபங்காட்ட வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
4. எலிஷாமா பேரனின் பெயர் என்ன?
5. யெத்தேரின் குமாரர் யார் யார்?
6. யாருடைய குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள் ?
7. பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட கோத்திரம் எது?
8. தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் யார்?
9. ஆசரிப்புக்கூடாரவாசல் காவல்காரனாய் இருந்தது யார்?
10. மாக்காளின் கணவன் பெயர் என்ன?
11. இஸ்ரவேலர் வெட்டுண்டு விழுந்த இடம் எது?
12. கர்த்தர் ராஜ்யபாரத்தை யார் வசமாய் திருப்பினார்?
13. சவுலின் தலையை எங்கே வைத்தார்கள்?
14. எப்ரோன் எந்த தேசத்திலிருந்தது?
15. சேரேஸ் தமையன் பெயர் என்ன?
===============
வேதாகம கேள்வி பதில்கள்
வேத பகுதி: 1 நாளாகமம் 6-10 (பதில்கள்)
=============
1. பினெகாஸின் தாத்தா பெயர் என்ன?Answer: ஆரோன்
1 நாளாகமம் 6:3,4
2. சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்தில் ஆசாரிய பணிவிடையைச்செய்தவன் யார்?
Answer: அசரியா
1 நாளாகமம் 6:10
3. தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்ட வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?
Answer: ஆரோனும் அவன் குமாரரும்
1 நாளாகமம் 6:49
4. எலிஷாமா பேரனின் பெயர் என்ன?
Answer: யோசுவா
1 நாளாகமம் 7:27
5. யெத்தேரின் குமாரர் யார் யார்?
Answer: எப்புனே,மிஸ்பா, ஆரா
1 நாளாகமம் 7:38
6. யாருடைய குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள் ?
Answer: ஊலாமின் குமாரர்
1 நாளாகமம் 8:40
7. பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட கோத்திரம் எது?
Answer: யூதா
1 நாளாகமம் 9:1
8. தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் யார்?
Answer: அசரியா
1 நாளாகமம் 9:11
9. ஆசரிப்புக்கூடாரவாசல் காவல்காரனாய் இருந்தது யார்?
Answer: சகரியா
1 நாளாகமம்9:21
10. மாக்காளின் கணவன் பெயர் என்ன?
Answer: யெகியேல்
1 நாளாகமம் 9:35
11. இஸ்ரவேலர் வெட்டுண்டு விழுந்த இடம் எது?
Answer: கில்போவா மலை
1 நாளாகமம் 10:1
12. கர்த்தர் ராஜ்யபாரத்தை யார் வசமாய் திருப்பினார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 10:14
13. சவுலின் தலையை எங்கே வைத்தார்கள்?
Answer: தாகோன் கோவிலில்
1 நாளாகமம் 10:10
14. எப்ரோன் எந்த தேசத்திலிருந்தது?
Answer: யூதா
1 நாளாகமம் 6:55
15. சேரேஸ் தமையன் பெயர் என்ன?
Answer: பேரேஸ்
1 நாளாகமம் 7:16
===============
வேத பகுதி
1 நாளாகமம் 11-15 அதிகாரம் கேள்விகள்
================
1) யார், யாரால் ,எங்கு மறைந்திருந்தார்?2) தேவனுடைய பெட்டிக்கு எங்கு ஒரு ஸ்தலம் ஆயத்தப் படுத்தப்பட்டது?
3) சமமான எண்ணிக்கையில் காளை மற்றும் ஆட்டுக்கடா ஏன் பலியிடப்பட்டது?
4) உமது பட்சத்தில் இருப்போம் யார் யாரிடத்தில் கூறியது?
5) ஒரே விலங்கினம் மூன்று கொல்லப்பட்டது யாரால்?
6) ஜனங்கள் பெலிஸ்தரை பார்த்து ஓடினாலும் தாவீதோடு இருந்தது யார்?
7) லேவியர்கள் தேவனுடைய பெட்டியை எப்படி கொண்டு வந்தனர்? ஏன் அப்படி கொண்டு வந்தனர்?
8) கர்த்தர் யாருக்கு பயப்படும் பயம் யாருக்கு உண்டாக்கினார்?
9) தேவனுடைய பெட்டி எப்போது தேடப்படவில்லை?
10) தங்கள் தெய்வங்களை விட்டு ஓடியவர்கள் யார்?
11) பொருத்துக கீழே அடைப்பில் உள்ள பெயர்/சொற்களுடன்
1) மாடுகள் இடறியது
2) வாசல் காவலர்
3) செமனீத்
4) தேவ சமுகத்தில் செத்தான்
5) 300 பேரை மடங்கடித்தான்
(இசை; அபிசாய்; கீதோன்; யாசியேல்; ஊசா)
4) தேவ சமுகத்தில் செத்தான்
5) 300 பேரை மடங்கடித்தான்
(இசை; அபிசாய்; கீதோன்; யாசியேல்; ஊசா)
===========
வேத பகுதி
1 நாளாகமம் 11-15 கேள்விகள் பதில்கள்
===========
1) யார், யாரால் ,எங்கு மறைந்திருந்தார்?Answer: தாவீது, சவுலினிமித்தம், சிக்லாக்கில்
1 நாளாகமம் 12:11
2) தேவனுடைய பெட்டிக்கு எங்கு ஒரு ஸ்தலம் ஆயத்தப் படுத்தப்பட்டது?
Answer: தாவீதின் நகரத்தில்
1 நாளாகமம் 15:1
3) சமமான எண்ணிக்கையில் காளை மற்றும் ஆட்டுக்கடா ஏன் பலியிடப்பட்டது?
Answer: லேவியருக்கு தேவன் அநுக்கிரகம் பண்ணின படியால்
1 நாளாகமம் 15:26
4) உமது பட்சத்தில் இருப்போம் யார் யாரிடத்தில் கூறியது?
Answer: அதிபதிகளுக்கு தலைவனான அமாசா , தாவீதிடத்தில்
1 நாளாகமம் 12:18
5) ஒரே விலங்கினம் மூன்று கொல்லப்பட்டது யாரால்?
Answer: பெனாயா
1 நாளாகமம் 11:22
6) ஜனங்கள் பெலிஸ்தரை பார்த்து ஓடினாலும் தாவீதோடு இருந்தது யார்?
Answer: எலெயாசார்
1 நாளாகமம் 11:12,13
7) லேவியர்கள் தேவனுடைய பெட்டியை எப்படி கொண்டு வந்தனர்? ஏன் அப்படி கொண்டு வந்தனர்?
Answer: தோள் மேல், கர்த்தருடைய வார்த்தையின்படியே மோசே கற்பித்த பிரகாரம்
1 நாளாகமம் 15:15
8) கர்த்தர் யாருக்கு பயப்படும் பயம் யாருக்கு உண்டாக்கினார்?
Answer: தாவீதுக்கு, சகல ஜாதிகளின் மேலும்
Answer: தாவீதுக்கு, சகல ஜாதிகளின் மேலும்
1 நாளாகமம் 14:17
9) தேவனுடைய பெட்டி எப்போது தேடப்படவில்லை?
Answer: சவுலின் நாட்களில்
1 நாளாகமம் 13:3
10) தங்கள் தெய்வங்களை விட்டு ஓடியவர்கள் யார்?
Answer: பெலிஸ்தர்
1 நாளாகமம் 14:11,12
11) பொருத்துக கீழே அடைப்பில் உள்ள பெயர்/சொற்களுடன்
1) மாடுகள் இடறியது -----கீதோன்
1 நாளாகமம் 13:9
2) வாசல் காவலர் -----யாசியேல்
1 நாளாகமம் 15:15
3) செமனீத்-----இசை
1 நாளாகமம் 15:21
4) தேவ சமுகத்தில் செத்தான் ----------- ஊசா
1 நாளாகமம் 13:10
5) 300 பேரை மடங்கடித்தான் --------அபிசாய்
1 நாளாகமம் 11:21
(இசை; அபிசாய்; கீதோன்; யாசியேல்; ஊசா)
=========
கேள்விகள்
1 நாளாகமம் 16-20
==========
1. கர்த்தருக்கு முன்பாக கெம்பீரிப்பது எது?2. கர்த்தருடைய சமுகத்தில் இருப்பது எது?
3. ஐ பிராத் நதியண்டையில் தன் ராணுவத்தை நிறுத்தியது யார்?
4. யாருக்கு மன தைரியம் கிடைத்தது?
5. பூரிகைகளை ஊத நியமிக்கப்பட்டவர்கள் யார்?
6. தாவீதுக்கு அருவருப்பானவர்கள் யார்?
7. கோலியாத்தின் சகோதரன் யார்?
8. யோவாப் எதை அடித்து சங்கரித்தான்?
9. சீரியர் யாருக்கு உதவி செய்ய மனதில்லாதிருந்தார்கள்?
10. சுவிசேஷமாய் அறிவிக்க பட வேண்டியது எது?
11. கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணியது யார்?
12. யார் தாவீதை சேவிக் கிறவர்களானார்கள்?
13. தாவீதின் மந்திரி யார்?
14. தாவீதை சேவித்து காணிக்கை செலுத்தியது யார்?
15. ஜனங்களுக்குள்ளே பிரசித்த படுத்த வேண்டியது எது?
1 நாளாகமம் 16-20
கேள்விகள் பதில்கள்
===============
1. கர்த்தருக்கு முன்பாக கெம்பீரிப்பது எது? Answer: காட்டு விருட்சங்கள் எல்லாம்
1 நாளாகமம் 16:33
2. கர்த்தருடைய சமூகத்தில் இருப்பது எது?
Answer: மகிமையும்கனமும்
1 நாளாகமம் 16:27
3. ஐபிராத் நதி அண்டையில் தன் ராணுவத்தை நிறுத்தியது யார்?
Answer: சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர்
1 நாளாகமம் 18:3
4. யாருக்கு மன தைரியம் கிடைத்தது?
Answer: தாவீதுக்கு
1 நாளாகமம் 17:24
5. பூரிகைகளை ஊத நியமிக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பெனாயா யாகாசியேல்
1 நாளாகமம் 16:6
6. தாவீதுக்கு அருவருப்பானவர்கள் யார்?
Answer: அம்மோன் புத்திரர்
1 நாளாகமம்19:6
7. கோலியாத்தின் சகோதரன் யார்?
Answer: லாகேமி
1 நாளாகமம் 20:5
8. யோவாப் எதை அடித்து சங்கரித்தான்?
Answer: ரப்பாவை
1 நாளாகமம் 20:1
9. சீரியர் யாருக்கு உதவி செய்ய மனதில்லா தருந்தார்கள்?
Answer: அம்மோன் புத்திரருக்கு
1 நாளாகமம் 19:19
10. சுவிசேஷமாய் அறிவிக்கப்பட வேண்டியது எது?
Answer: கர்த்தருடைய இரட்சிப்பு
1 நாளாகமம் 16:23
11. கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணியது யார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 17:1
12. யார் தாவீதை சேவிக்கிறவர்களானார்கள்?
Answer: ஏதோமியர்
1 நாளாகமம் 18:13
13. தாவீதின் மந்திரி யார்?
Answer: ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத்
1 நாளாகமம் 18:15
14. தாவீதை சேமித்து காணிக்கை செலுத்தியது யார்?
Answer: மோவாபியர்
1 நாளாகமம் 18:2
15. ஜனங்களுக்குள்ளே பிரசித்த படுத்த வேண்டியது?
Answer: கர்த்தருடைய செய்கைகள்
1 நாளாகமம் 16:8
Answer: அம்மோன் புத்திரருக்கு
1 நாளாகமம் 19:19
10. சுவிசேஷமாய் அறிவிக்கப்பட வேண்டியது எது?
Answer: கர்த்தருடைய இரட்சிப்பு
1 நாளாகமம் 16:23
11. கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணியது யார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 17:1
12. யார் தாவீதை சேவிக்கிறவர்களானார்கள்?
Answer: ஏதோமியர்
1 நாளாகமம் 18:13
13. தாவீதின் மந்திரி யார்?
Answer: ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத்
1 நாளாகமம் 18:15
14. தாவீதை சேமித்து காணிக்கை செலுத்தியது யார்?
Answer: மோவாபியர்
1 நாளாகமம் 18:2
15. ஜனங்களுக்குள்ளே பிரசித்த படுத்த வேண்டியது?
Answer: கர்த்தருடைய செய்கைகள்
1 நாளாகமம் 16:8
=============
கேள்விகள்
வேத பகுதி: 1 நாளாகமம் 21 - 25 அதிகாரங்கள்
==============
1. சாத்தான் தாவீதை என்ன செய்யுமாறு ஏவியது? 2. எண்ணிறந்த கேதுரு மரங்களை சம்பாதித்தவன் யார்?
3. கொள்ளை நோயால் இறந்தவர்கள் எத்தனை பேர்?
4. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?
5. பாடல் பயிற்சி பெற்று, சீட்டுப்போடப்பெற்ற பாடகர்கள் எத்தனை பேர்?
6. யாருடைய ஆட்சியில் சமாதானம் அருளப்பட்டது?
7. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
8. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்? மகன் யார்?
9. யோவாப் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
10. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
11. தாவீது எங்கு போக கட்டளைப் பெற்றான்?
12. ஞானதிருஷ்டிக்காரனாகிய பாடகரின் பிள்ளைகள் எத்தனை பேர்?
13. ஆரோனின் குமாரர்கள் பெயர்களை சீட்டுகளில் எழுதியது யார்?
14. 17-வது பாடகர் வரிசை சீட்டு யாருக்கு விழுந்தது?
15. எது மகா பெரியதாக இருக்க வேண்டும் என தாவீது எண்ணினான்?
============
பதில்கள்
வேத பகுதி:1 நாளாகமம் 21-25 அதிகாரங்கள்
============
1. சாத்தான் தாவீதை என்ன செய்யுமாறு ஏவியது? Answer: இஸ்ரவேலைத் தொகையியல்
1 நாளாகமம் 21:1
2. எண்ணிறந்த கேதுரு மரங்களை சம்பாதித்தவன் யார்?
Answer: தாவீது
1 நாளாகமம் 22:4
3. கொள்ளை நோயால் இறந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: எழுபதினாயிரம் பேர்
1 நாளாகமம் 21:14
4. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்?யார்?
Answer: மூன்று பேர், எலெயாசார் (23:22), நாதாபும், அபியூவும்
1 நாளாகமம் 24:2
5. பாடல் பயிற்சி பெற்று, சீட்டுப்போடப்பெற்ற பாடகர்கள் எத்தனை பேர்?
Answer: இருநூற்றெண்பத்தெட்டுப் பேர்
1 நாளாகமம் 25:7
6. யாருடைய ஆட்சியில் சமாதானம் அருளப்பட்டது?
Answer: சாலொமோன்
1 நாளாகமம் 22:9
7. தாவீது வாங்கின நிலத்தின் தொகை எவ்வளவு?
Answer: அறுநூறு சேக்கல் நிறைபொன்
1 நாளாகமம் 21:25
8. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்? மகன் யார்?
Answer: எலியேசர், ரெகபியா
1 நாளாகமம் 23:17
9. யோவாப் கணக்கெடுக்கப்படாத கோத்திரங்கள் எவை?
Answer: லேவி, பென்யமீன்
1 நாளாகமம் 21:6
10. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
Answer: நாலாயிரம் பேர்
1 நாளாகமம் 23:5
11. தாவீது எங்கு போக கட்டளைப் பெற்றான்?
Answer: எபூசியனாகிய ஒர்னானின் களம்
1 நாளாகமம் 21:18
12. ஞானதிருஷ்டிக்காரனாகிய பாடகரின் பிள்ளைகள் எத்தனை பேர்?
Answer: பதினேழு பேர், பதினாலு குமாரர், மூன்று குமாரத்திகள்
1 நாளாகமம் 25:4-5
13. ஆரோனின் குமாரர்கள் பெயர்களை சீட்டுகளில் எழுதியது யார்?
Answer: லேவியரில் சம்பிரதியாகிய செமாயா
1 நாளாகமம் 24:5-6
14. 17-வது பாடகர் வரிசை சீட்டு யாருக்கு விழுந்தது?
Answer: யோஸ்பேக்காஷா
1 நாளாகமம் 25:24
15. எது மகா பெரியதாக இருக்க வேண்டும் என தாவீது எண்ணினான்?
Answer: கர்த்தருக்கு கட்டப்படும் ஆலயம்
1 நாளாகமம் 22:5
===========
கேள்விகள் 1 நாளாகமம் 26-29
===========
1) தேவனுடைய ஆலயத்ததுப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டை ஆக்கப்பட்ட பொக்கிஷங்களையும் விசாரிக்கிறனாய் இருந்தவன் யார்?2) விவேகம் உள்ள யோசனைக்காரன் யார்?
3) புத்தியும் படிப்பும் உள்ள மனுஷனும் ஆலோசனைக்காரனுமாய் இருந்தவன் யார்?
4) தேவன் தாவீதிடம் நீ என் நாமத்திற்கு ஆலயத்தை கட்ட வேண்டாம் என்று ஏன் சொன்னார்?
5) தாவீது ராஜாவின் தோழனாய் இருந்தவன் யார்?
6) பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தை கட்டுவதற்கு கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார் என்று சொன்னது யார்?
7) கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்தது பராக்கிரமசாலியாக இருந்தவன் யார்?
8) கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும்?
9) தாவீது ராஜாவின் கடைசி ஜெபம் என்ன ?வசனம் குறிப்பிடவும்?
10) கழுதையின் மேல் விசாரிப்புகாரன் யார்?
11) யாருடைய நாட்களில் மிக்லோத் என்ன பதவி வகித்தான்?
12) இரண்டாம் விசை ராஜாவானது யார்?
13) தேவன் யாரை ஆசீர்வதித்திருந்தார்?
14) யார் யாரிடம் கூறியது?
A) செய்ய வேண்டிய வேலை பெரியது
B) பூமியில் எங்கள் நாட்கள் ஒரு நிழவைப் போல இருக்கிறது
C) நீ திடன் கொண்டு அதை நடப்பி
கேள்வி & பதில் 1 நாளாகமம் 26-29
============
1) தேவனுடைய ஆலயத்ததுப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டை ஆக்கப்பட்ட பொக்கிஷங்களையும் விசாரிக்கிறனாய் இருந்தவன் யார்?Answer: லேவியரில் அகியா என்பவன்
1 நாளாகமம் 26:20
2) விவேகம் உள்ள யோசனைக்காரன் யார்?
Answer: சகரியா
1 நாளாகமம் 26:14
3) புத்தியும் படிப்பும் உள்ள மனுஷனும் ஆலோசனைக்காரனுமாய் இருந்தவன் யார்?
Answer: தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான்
1 நாளாகமம் 27:32
4) தேவன் தாவீது இடம் நீ என் நாமத்திற்கு ஆலயத்தை கட்ட வேண்டாம் என்று ஏன் சொன்னார்?
Answer: நீ யுத்த மனுஷனாய் இருந்து ரத்தத்தை சிந்தினாய் என்பதினால்
1 நாளாகமம் 28:3
5) தாவீது ராஜாவின் தோழனாய் இருந்தவன் யார்?
Answer: அர்கியனான ஊஷாயி
1 நாளாகமம் 27:33
6) பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தை கட்டுவதற்கு கர்த்தர் யாரை தெரிந்து கொண்டார் என்று சொன்னது யார்?
Answer: தாவீது, சாலமோனை தெரிந்து கொண்டார்
1 நாளாகமம் 28:10,11
7) கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்தது பராக்கிரமசாலியாக இருந்தவன் யார்?
Answer: சாலமோன்
1 நாளாகமம் 29:23
8) கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும்?
Answer: உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும்
1 நாளாகமம் 28:9
9) தாவீது ராஜாவின் கடைசி ஜெபம் என்ன வசனம் குறிப்பிடவும்
Answer: 2 நாளாகமம் 29:10-19
10) கழுதையின் மேல் விசாரிப்புகாரன் யார்?
Answer: எகெதியா
1 நாளாகமம் 27:30
11) யாருடைய நாட்களில் மிக்லோத் என்ன பதவி வகித்தான்
Answer: தாவீதின், தளகர்த்தன்
1 நாளாகமம் 27:4
12) இரண்டாம் விசை ராஜாவானது யார்
Answer: சாலமோன்
1 நாளாகமம் 29:22
13) தேவன் யாரை ஆசீர்வதித்திருந்தார்
Answer: ஒபேத் ஏதோம்
1 நாளாகமம் 26:4,5
14) யார் யாரிடம் கூறியது
A) செய்ய வேண்டிய வேலை பெரியது
Answer: தாவீது ராஜா சபையார் எல்லா இடமும் கூறியது
1 நாளாகமம் 29:1
B) பூமியில் எங்கள் நாட்கள் ஒரு நிழவைப் போல இருக்கிறது
Answer: தாவீது கர்த்தரிடம் கூறியது
1 நாளாகமம் 29:15
C) நீ திடன் கொண்டு அதை நடப்பி
Answer: தாவீது தன் குமாரனாகிய சாலமோனிடம் கூறியது
1 நாளாகமம் 28:10