===========
வேதபகுதி: எண்ணாகமம் 1,2
===========
1. எந்த கோத்திரத்தின் தலைவர் குறிப்பிடப்படவில்லை?Answer: லேவி
2. ஊழியஞ்செய்தலில் தவறுகள் ஏற்பட்டால், யார் மேல் தேவனுக்கு கோபம் வரும்?
Answer: சபையின்மேல்
எண்ணாகமம் 1:53
3. பிதாக்களின் வம்சத்தின் கொடியை __________ என்றும் கூறலாம்
Answer: விருது
எண்ணாகமம் 2:2
4. ஆசரிப்புக் கூடாரம் எந்த சேனையின் நடுவே போகவேண்டும்?
Answer: லேவி
எண்ணாகமம் 2:17
5. எண்ணப்பட்டவர்களில் எந்த கோத்திரத்தின் சேனை பெரியது?
Answer: யூதா
எண்ணாகமம் 2:9
==========
வேதபகுதி: எண்ணாகமம் 3
==========
1. யாரை கர்த்தர் ஒரு மனுஷனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?Answer: லேவியரை
எண்ணாகமம் 3:9
2. எங்கள் இனத்தாரை சேர்ந்த ஒரு கூட்டத்தார் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, நாங்களோ பரிசுத்தப்பட்டுக் கொண்டே இருந்தோம்?
Answer: இஸ்ரவேலின் முதற்பேறானவை
எண்ணாகமம் 3:13
3. கயிறுகளுக்கு காவலர் யார்? யார்?
Answer: கெர்சோனியர், மெராரியர்
எண்ணாகமம் 3:25,26,33-37
4. ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் யார் யாருடைய குடியிருப்பு இருக்க வேண்டும்?
Answer: மோசே, ஆரோன் மற்றும் அவர் குமாரர்
எண்ணாகமம் 3:38
5. நாங்கள் லேவியருமல்ல, மனுஷருமல்ல ஆனால் தேவன் எங்களையும் தனக்கென பிரித்தெடுத்தார். இந்த பாக்கியம் பெற்ற நாங்கள் யார்?
Answer: லேவியரின் மிருகஜீவன்கள்
எண்ணாகமம் 3:41
==============
வேதபகுதி: எண்ணாகமம் 4,5,6
=============
1. ஆசரிப்புக் கூடாரத்தின் பணிமுட்டுகளை மூட என்னென்ன நிறமுள்ள துப்பட்டிகள் பயன்படுத்தப்பட்டன?Answer: நீலம், இளநீலம், சிவப்பு, இரத்தினம்
எண்ணாகமம் 4:6,8,9,13
2. எங்களுடைய கண்கள் பாவம் செய்தாலே மரணமாம். நாங்கள் யார்?
Answer: கோகாத்தியர்
எண்ணாகமம் 4:18-20
3. எங்கள் குடியிருப்பில் தேவன் குடியிருப்பதால் நாங்கள் குடியிருக்கக் கூடாதாம். நாங்கள் யார்?
Answer: குஷ்டரோகிகள், பிரமியமுள்ளவர்கள், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள்
எண்ணாகமம் 5:2,3
4. பூரணமாய் நிறைவேற்றாத எந்த பொருத்தனை வீணாகும்?
Answer: நசரேய விரதம்
எண்ணாகமம் 6:12
5. நசரேய விரதம் நிறைவேற்றியவர் எத்தனைவிதமான பலிகள் செலுத்த வேண்டும்?
Answer: 5
எண்ணாகமம் 6:14,15
===========
வேதபகுதி: எண்ணாகமம் 7
===========
1. பணிமுட்டுகள் பரிசுத்தப்பட்ட நாளில் வந்த காணிக்கையின் பெரும்பகுதியினை பெற்றவர்கள் யார்?Answer: மெராரியின் புத்திரர்
எண்ணாகமம் 7:8
2. இஸ்ரவேலின் பிரபுக்களை ____________ என்றும், _____________ என்றும் கூறலாம்.
Answer: பிதாக்களுடைய வம்சத்தலைவர், கோத்திர பிரபுக்கள்
எண்ணாகமம் 7:2
3. எதற்காக பன்னிரண்டு நாட்கள் காணிக்கை செலுத்தப்பட்டது?
Answer: பலிபீட பிரதிஷ்டைக்காக
எண்ணாகமம் 7:11
4. ஆண் இனம் ஒருவித பலியாகவும், பெண் இனம் வேறுவிதமான பலியாகவும் காணிக்கையாக படைக்கப்பட்டன. அவை யாவை?
Answer: சர்வாங்க தகனபலி - காளை, சமாதான பலி - மாடுகள்
எண்ணாகமம் 7:15,17
5. தலைவர்கள் சிலருடைய முதல் பகுதியின் பெயர்கள் ஒரு மிருகஜீவனுடைய பெயரைக் கொண்டுள்ளது. அவர்கள் யார்? யார்?
Answer: எலியாப், எலிசூர், எலியாசாப், எலிஷாமா
எண்ணாகமம் 7:24,30,42,48
===========
வேதபகுதி: எண்ணாகமம் 8,9,10
==========
1. காணிக்கையாக படைக்கப்பட்டவர்கள் யார்?Answer: லேவியர்
எண்ணாகமம் 8:11
2. ஆசரிப்பு கூடார பணிவிடை சேனையில் ஒரு லேவியர் அதிகபட்சமாக எவ்வளவு காலம் பணிபுரிய கூடும்?
Answer: 25 ஆண்டு காலம்
எண்ணாகமம் 8:24,25
3. கர்த்தர் கட்டளையிடுகிறபடியே இஸ்ரவேலர் செய்த மூன்று காரியங்களைப் பட்டியலிடுக.
Answer: பாளயம் இறங்குவார்கள், பிரயாணம்பண்ணுவார்கள், காவல் காத்துக் கொள்வார்கள்
எண்ணாகமம் 9:23
4. ஆசரிப்பு கூடார பணியின்போது செய்யப்படாமல் பின்னர் செய்யப்பட்ட பொருள் ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடுக.
Answer: வெள்ளிப் பூரிகைகள்
எண்ணாகமம் 10:2
5. பயணத்தை துவக்கும்போதும், முடிக்கும்போதும் ஜெபிக்கும் பழக்கம் யாருக்கு இருந்தது?
Answer: மோசேக்கு
எண்ணாகமம் 10:35,36
============
வேதபகுதி: எண்ணாகமம் 11,12,13
============
1. பாதி வயது கடந்தவர்களையும் பாலகராய் கருதியவர் யார்?Answer: கர்த்தர்
எண்ணாகமம் 11:12
2. எண்ணாகமம் 11:10-ல், ஜனங்கள் என்ன சொல்லி அழுதிருப்பார்கள்?
Answer: நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம்
எண்ணாகமம் 11:20
3. மற்ற தீர்க்கதரிசிகளுக்கும் மோசேக்குமான ஏதேனும் ஒரு வேறுபாட்டினைக் கூறவும்.
Answer: மற்ற தீர்க்கதரிசிகள் - தரிசனத்தில் கர்த்தர் தன்னை வெளிப்படுத்துவார்.
Answer: மோசே - கர்த்தரின் சாயலைக் கண்டார்
எண்ணாகமம் 12:6,8
4. ஒருவருடைய பாதி பெயர் மற்றொருவரின் முழு பெயராம். அப்பெயர்கள் என்ன?
Answer: காதியேல் - காதி
எண்ணாகமம் 13:10,11
5. நீர்வளம் பொருந்திய இடங்களை குடியிருப்பாய் கொண்டிருந்தோர் யார்?
Answer: கானானியர்
எண்ணாகமம் 13:29
============
வேதபகுதி: எண்ணாகமம் 14,15
============
1. எண்ணாகமம் 14:2-ன் கடைசி பகுதியை கேட்டு கொண்டிருந்தவர் யார்?Answer: கர்த்தர்
எண்ணாகமம் 14:28
2. பாவமன்னிப்பின் நிச்சயத்தினை இஸ்ரவேலர் எப்போதிலிருந்து பெற்றுக்கொண்டே இருந்தனர்?
Answer: எகிப்தை விட்டதுமுதல்
எண்ணாகமம் 14:19
3. எண்ணாகமம் 14:3லுள்ள கேள்விக்கு எதிர்மறையான ஜனங்களின் வார்த்தைகளை எங்கு வாசிக்கிறோம்?
Answer: எண்ணாகமம் 14:40
4. கர்த்தரை நிந்திப்பவன் யார்?
Answer: துணிகரமாய் பாவம் செய்பவர்
எண்ணாகமம் 15:30
5. பிரசங்கி 11:9, "உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட" - இதற்கு எதிர்மறையான இன்றைய வேதபகுதியின் வசனத்தினைக் குறிப்பிடவும்.
Answer: எண்ணாகமம் 15:39
============
வேதபகுதி: எண்ணாகமம் 16,17
=============
1. மோசேயின் பார்வையில் யார் பரிசுத்தவான்?Answer: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்படுபவர்
எண்ணாகமம் 16:7
2. எகிப்தையும், இஸ்ரவேல் தேசத்தையும் குறிப்பிடுகிற ஒரேவிதமான அடைமொழி என்ன?
Answer: பாலும் தேனும் ஓடுகிற தேசம்
எண்ணாகமம் 16:13,14
3. எண்ணாகமம் 16-ல் எந்தெந்த விதங்களில் ஜனங்கள் மரித்தனர்?
Answer: பூமியால் விழுங்கப்பட்டு, தேவ அக்கினியால் பட்சிக்கப்பட்டு , வாதையினால்
எண்ணாகமம் 16:32,35,49
4. வேரில்லாமல் கனிகொடுத்தது எது?
Answer: ஆரோனின் கோல்
எண்ணாகமம் 17:8
5. எது ஒழியும்போது மரணம் நிகழாது?
Answer: முறுமுறுப்பு
எண்ணாகமம் 17:10
=============
வேதபகுதி: எண்ணாகமம் 18,19,20
=============
1. நாங்கள் படைத்த காணிக்கை ருசியுள்ள ரசமல்ல, ஆனால் கர்த்தர் அவ்வாறு கருதினார். நாங்கள் யார்?Answer: லேவியர்
எண்ணாகமம் 18:26,27
2. சரி/தவறு
ஆரோனுக்கு தசமபாகத்தில் பங்கு உண்டு.
Answer: சரி
எண்ணாகமம் 18:28
3. தீக்கிரையான திரவம் என்ன?
Answer: சிவப்பான கிடாரியின் இரத்தம்
எண்ணாகமம் 19:5
4. எதனிடம்/யாரிடம் தண்ணீர் இருந்தது?
Answer: கன்மலை
எண்ணாகமம் 20:8
5. யாக்கோபு பஞ்சகாலத்தில் எகிப்திற்கு சென்றதுமுதல் இஸ்ரவேலரின் கானான் பிரயாணம் வரையுள்ள அனைத்துக் காரியங்களையும் நன்றாய் அறிந்திருந்த இஸ்ரவேல் அல்லாதவர் யார்?
Answer: ஏதோமின் ராஜா
எண்ணாகமம் 20:14,15
==============
வேதபகுதி: எண்ணாகமம் 21,22
=============
1. பிரதிக்கினை பண்ணினார்கள் என்றால் என்ன?Answer: பொருத்தனை பண்ணினர்
2. எண்ணாகமம் 21-ல் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபர் யார்?
Answer: மோவாபியரின் முந்தின ராஜா
3. வனாந்தரத்தில் தண்ணீர் தேடுவோரின் கண்களில் தென்படுகிற நீர்நிலை எது?
Answer: அர்னோன் ஆறு
3. வனாந்தரத்தில் தண்ணீர் தேடுவோரின் கண்களில் தென்படுகிற நீர்நிலை எது?
Answer: அர்னோன் ஆறு
எண்ணாகமம் 21:13
4. பிலேயாம் தேடிய ஆயுதமொன்று அவர் கண்ணெதிரே தான் இருந்தது. அவர் அதை சிலகாலம் காணவில்லை. அது என்ன?
Answer: பட்டயம்
எண்ணாகமம் 22:29,31
5. பிலேயாம் தனியாக பாலாக்கிடம் சென்றாரா?
Answer: இல்லை
எண்ணாகமம் 22:22
==============
வேதபகுதி: எண்ணாகமம் 23,24,25
=============
1. பிலேயாமின் வாசஸ்தலம் எங்கிருந்தது?Answer: ஆராம்
எண்ணாகமம் 23:7
2. பிஸ்காவின் கொடுமுடியிலிருந்து கடைசி பாளயத்தை பார்க்குமுன், பிலேயாம் அவர்களை எங்கிருந்தாவது பார்த்ததுண்டா?
Answer: ஆம்
எண்ணாகமம் 22:41
3. எந்த வசனத்தின் அடிப்படையில் பிலேயாம் ஆசீர்வதிக்கப்பட்டவராவார்?
Answer: எண்ணாகமம் 24:9
4. எண்ணாகமம் 24-ல் உள்ள எந்த இருவசனங்கள் ஏறக்குறைய ஒன்று போல உள்ளது?
Answer: எண்ணாகமம் 24:3,15
5. இஸ்ரவேலுக்கு பாவநிவிர்த்தியை உண்டாக்கியவர் யார்?
Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 25:11
==============
வேதபகுதி: எண்ணாகமம் 26,27,28
=============
1. ஒரு நீர்நிலையை குறிப்பிடும் சொல்லை பெயராய் கொண்ட சந்ததி எது?Answer: ஏரி
எண்ணாகமம் 26:16
2. இஸ்ரவேலர் எங்கெல்லாம் எண்ணப்பட்டார்கள்?
Answer: மோவாபின் சமனான வெளியில், சீனாய் வனாந்தரத்தில்
Answer: மோவாபின் சமனான வெளியில், சீனாய் வனாந்தரத்தில்
எண்ணாகமம் 26:3,64
3. ஒருவர் இறந்தால் அவருக்குரிய சுதந்தரம் யார் யாருக்கெல்லாம் சேரலாம்?
Answer: அவர் குமாரன், குமாரத்தி, சகோதரன், தகப்பனுடைய சகோதரன், கிட்டின உறவின் முறையான்
எண்ணாகமம் 27:8-11
4. எதன்மூலம் ஆசாரியன் ஆலோசனைக் கேட்க வேண்டும்?
Answer: ஊரீம்
எண்ணாகமம் 27:21
5. ஓய்வுநாளில் செலுத்தப்பட வேண்டிய பலிகள் யாவை?
Answer: போஜனபலி, பானபலி, சர்வாங்க தகனபலி
எண்ணாகமம் 28:9,10
==============
வேதபகுதி: எண்ணாகமம் 29,30
=============
1. எக்காளம் ஊதப்படுகிற நாள் எது?Answer: 7-ம் மாதம் 1 தேதி
எண்ணாகமம் 29:1
2. நாள் கூட கூட எங்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. நாங்கள் யார்?
Answer: செலுத்தப்படுகிற காளைகள்
எண்ணாகமம் 29:13,17,20,23,26,29,32
3. ______ மாதம் _____ தேதி விசேஷித்த ஆசரிப்பு நாளாய் இருக்கக்கடவது
Answer: 7-ம் மாதம், 22-ம் தேதி
எண்ணாகமம் 29:35
4. வாயின் வார்த்தைகளால் நிபந்தனைக்குள்ளாக்கப்படுவது என்ன?
Answer: ஆத்துமா
Answer: ஆத்துமா
எண்ணாகமம் 30:6
5. செய்ததோ நான், ஆனால் மன்னிப்பு எனக்கு உண்டு, அக்கிரமம் அவருக்கு உண்டு. நாங்கள் யார்?
Answer: மனைவியும், மனைவியின் பொருத்தனைகளை செல்லாமற் செய்த கணவனும்
எண்ணாகமம் 30:12,15
===========
வேதபகுதி: எண்ணாகமம் 31,32
===========
1. யுத்தத்திற்கு சென்ற ஆசாரியன் யார்?Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 31:6
2. அக்கினியினாலும் ஜலத்தினாலும் சுத்திகரிக்கப்பட வேண்டியவைகளை பட்டியலிடுக.
Answer: பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம்
Answer: பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம்
எண்ணாகமம் 31:22
3. பொன் ஆபரணங்களை காணிக்கையாய் செலுத்தியவர்கள் யார்?
Answer: சேனாபதிகள்
எண்ணாகமம் 31:48-51
4. ஒரு நாட்டின் பெயரும், ஒரு பட்டணத்தின் பெயரும் ஒன்றே. அது என்ன?
Answer: யாசேர்
எண்ணாகமம் 32:1,3
5. கடைசியாக சுதந்தரம் பெற்ற கோத்திரத்தார் யார்? யார்?
Answer: காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்
எண்ணாகமம் 32:29
==============
வேதபகுதி: எண்ணாகமம் 33,34,35
=============
1. எல்லாருக்கும் சரிசமமாய் கொடுக்கப்படாதது என்ன?Answer: சுதந்தரம்
எண்ணாகமம் 33:54
2. ஆசிரியரைக் குறிக்கும் வார்த்தை ஒன்றினை தன் பெயராய் கொண்டிருந்தவர் யார்?
Answer: ஆசான்
Answer: ஆசான்
எண்ணாகமம் 34:26
3. தங்களுக்கு உள்ளதின்படி கொடுக்க வேண்டுமாம். அது என்ன?
Answer: லேவியருக்கு கொடுக்க வேண்டிய பட்டணங்கள்
Answer: லேவியருக்கு கொடுக்க வேண்டிய பட்டணங்கள்
எண்ணாகமம் 35:8
4. எங்கள் இருவரின் செயல்களும் ஒன்றே, ஆனால் இருவருக்குமான ஆக்கினை ஒன்றல்ல. எங்களைக் குறித்து எங்கு சொல்லப்பட்டுள்ளது?
Answer: எண்ணாகமம் 35:20-25
5. மீட்கும்பொருள் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?
Answer: கொலைபாதகனுடைய ஜீவனுக்காக, அடைக்கல பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன் திரும்புவதற்காக
எண்ணாகமம் 35:31,32