=============================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
கனோன் ஆர்தர் மர்காஷியஸ் (1852-1908)
=============================
மர்காஷியஸ் அவர்கள் இங்கிலாந்து தேசத்தில் லெமிங்டன் என்ற இடத்தில் 1852 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் நாள் பக்தியான, வசதிபடைத்த கிறிஸ்தவ பெற்றோருக்கு 8 வது பிள்ளையாக பிறந்தார். இளமையிலே இவருடைய தாயாரும் பாட்டியும் ஆண்டவரைப் பற்றி அதிகமாக சொல்லிக்கொடுத்து ஊழிய வாஞ்சையை ஏற்படுத்தினார்கள்.
ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் இளம் பிராயத்திலிருந்தே பிறருக்கு நன்மை செய்வதையே தன் வாழ்வில் தனக்கு கிடைக்கும் பாக்கியமாக எண்ணி மற்றவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திட வேண்டும் என்ற துடிப்புள்ளவராய் வளர்ந்தார்.
மர்காஷியஸ் அவர்கள் தன்னுடைய பள்ளி படிப்பை நிறைவு செய்து St. Augustine's College, Canrebury, England ல் வேதாக கல்லூரில் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து எபிரேயம், கிரேக்கு, இலத்தீன் மொழிகளில் வேதாகமத்தை கற்று போதிப்பதில் சிறந்து விளங்கினார். பின்னர் லண்டனில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரியில் 1872 ம் ஆண்டு சேர்ந்து 3 ஆண்டுகள் இளங்கலை மருத்துவ படிப்பு முடித்து பின்னர் முதுகலை படிப்பில் சேர்ந்து இறுதி ஆண்டின் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.
இந்நிலையில் 1775 ம் ஆண்டு திருநெல்வேலி பகுதியில் இலண்டனில் SPG மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் இடையன்குடி என்ற கிராமத்தை மையமாக கொண்டு மிஷனெரியாக பணிபுரிந்து கொண்டிருந்த பேராயர் கால்டுவெல் அவர்கள் இந்தியாவில் நற்செய்தி பணியின் தேவைக்காக இங்கிலாந்து சென்று லண்டனில் உள்ள ஒரு திருச்சபையில் நற்செய்திபணியின் தேவையையும், இந்தியாவில் நற்செய்திபணிக்கு மிஷனெரிகள் தேவை என்று அறைகூவல் விடுத்தபோது ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் அதை கர்த்தரின் அழைப்பாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய வசதியான வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு, தன்னுடைய இறுதி ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பை நிறைவு செய்யால் தன்னுடைய 22 ம் வயதில் நற்செய்திபணி செய்வதற்கு அற்பணித்தார்.
அவருடைய நண்பர்கள் எல்லோரும் இறுதி ஆண்டு தேர்வை நிறைவு செய்து, இங்கிலாந்திலே வசதி வாய்ப்புகளுடன் வாழலாம் என்று ஆலோசனை கூறினபோது அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு என்னுடைய இஷ்டபடி நற்செய்திபணி செய்வதற்கு இது சாதாரண வேலை இல்லை; இது கடவுளின் உன்னத அழைப்பு என்று கூறிவிட்டு 1875 ம் ஆண்டு மர்காசியஸ் அவர்கள், இடையன்குடி பேராயர் கால்டுவெல்லுடன் அக்டோபர் மாதம் 26 ம் நாள் சென்னை துறைமுகத்தில் இறங்கி, பின்னர் இடையன்குடிக்கு வந்து அங்கு பேராயர் இராபட் கால்டுவெல் மூலமாய் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.
1876 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் நாள் நற்செய்திபணி அறிவிக்க சான்பாடு என்னும் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் இந்த கிராமம் நாசரேத் என்று அழைக்கப்படலாயிற்று.
மர்காஷியஸ் அவர்கள் நாசரேத் பகுதிக்கு வந்தபோது அது தரிசு நிலமாய், செம்மண் நிறைந்த பகுதியாய், கருவேல மரங்கள் நிறைந்த முள்காடுகளாகவும், பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. இங்கிருந்ந மக்கள் நன்றாக உழைக்கக்கூடிய ஆனால் கல்வி அறிவு இல்லாதவர்களாக, பனை மரங்கள் ஏறுபவர்களாக இருந்தார்கள். மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள்.
1877 ம் ஆண்டு மர்காஷியஸ் அவர்கள் சென்னையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் உதவி குருவானவராக பட்டம் பெற்று பின்னர் பனை ஏறும் சாணார் குல மத்தியில் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். ஏனெனில் இவர்கள்தான் முதன்முதலில் இயேசுவின் நற்செய்தியை கேட்பதில் அதிக வாஞ்சை காட்டினார்கள். மர்காஷியஸ் அவர்கள் இவர்கள் மத்தியில் நற்செய்தி பணியும் சமுதாய பணியும் செய்து வந்தார். இதன் அறுவடையாக அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்கு நாசரேத்தில் இருந்த சிறிய ஜெப வீட்டிற்கு பதிலாக பெரிதாக கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு தூய யோவான் ஆலம் என்று பெயரிடப்பட்டது.
மர்காஷியஸ் அவர்கள் தன்னுடைய முழு உழைப்பையும் நாசரேத் பகுதி மக்களுக்காக அற்பணித்தார். முதல்முறையாக நாசரேத்தையும் சாத்தான் குளத்தையும் இனைப்பதற்கு ஆனந்தபுரம் வழியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். ரோட்டின் இரண்டு புறமும் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்தார்.
1879 ம் ஆண்டில் நாசரேத் பகுதிகளில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பட்டினி சாவு ஏற்பட்டது. ஆகவே ஆதறவற்ற நிலையில் இருந்த பல பிள்ளைகளுக்கு Indian Famine Orphand Fund என்ற அமைப்பை நாசரேத்தில் ஏற்படுத்தி அவர்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதியை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பிள்ளைகளை காப்பாற்றி பராமரித்தார். இதனால் இந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். மர்காஷியஸ் அவர்கள் 1879 ம் ஆண்டுகளுக்குள் 14 கிராமங்களில் ஆலயங்களை உறுவாக்கினார். இந்நிலையில் 1880 ம் ஆண்டு முழு குருவானவராக அருட்பொழிவு பெற்றார்.
புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு என்று நாசரேத்தில் மர்காஷியஸ் கல்வி கூடத்தையும், பெண் பிள்ளைகளுக்கு என்று St. John's பள்ளியையும் மேம்படுத்தினார். இங்கு மேற்கத்திய விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் திறமையான ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மர்காஷியஸ் அவர்கள் பல கிராமங்களில் கல்வி கூடங்களை ஆரம்பிப்பதற்கும், திறமையான ஆசிரியர்களை உறுவாக்குவதற்கும் 1887 ம் ஆண்டு நாசரேத்தில் ஆசிரியர் பயிற்ச்சி பள்ளியையும் நிறுவினார். இதில் பயின்ற மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்தார்கள். இவர்கள் மர்காஷியஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
மர்காஷியஸ் அவர்களின் நற்செய்திபணி மூலமாக அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே பிள்ளையன்மனை, வாழையடி, மூக்குப்பீரி, திருமறையூர், கச்சனாவிளை போன்ற பல கிராமங்களில் ஆலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
1890 ஆம் ஆண்டு மர்காஷியஸ் அவர்கள் திருச்சபை மக்களை கர்த்தருக்குள் வழிநடத்துவதற்காக உபதேசியார்களை நியமிக்கவும், அவர்களுக்கு பரிசுத்த வேதாகமத்தை கற்றுக்கொடுப்பதற்காக, நாசரேத்திற்கு அருகே திருமறையூர் என்ற இடத்தில் வேதாகம இறையியல் கல்லூரியை நிறுவினார். இதன் மூலம் அநேக உபதேசியார்கள், சுவிஷேசகர்கள் உறுவாக்கப்பட்டார்கள். பின்நாட்களில் இந்த வேதாகம இறையியல் கல்லூரி 1971 ம் ஆண்டு மதுரையில் உள்ள அரசரடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இது இன்று தமிழ்நாடு இறையியல் கல்லூரி (Tamilnadu Theolofical Seminary) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
மர்காஷியஸ் அவர்கள் 1890 ம் ஆண்டில் திருச்சபையில் பெண்கள் சங்க ஐக்கியத்தை ஏற்படுத்தி, பெண்கள் வீட்டு ஜெபக்குழு மூலமாக பெண்கள் மூலமாக நற்செய்திபணி அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக அநேக பெண்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
1891 ம் ஆண்டு மர்காஷியஸ் அவர்கள் நற்செய்திபணி க்கு என்று பக்தியான, ஒழுக்கம் நிறைந்த, திறமையான வாலிபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பாடல்களையும் இசையையும் கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலமாக கிராம சுவிசேஷ இயக்கங்களை ஆரம்பித்து, இரவு நேரங்களில் மண்ணெண்ணை விளக்கின் மூலம் தெரு ஜெபக்கூட்டங்கள் நடத்தி, கிறிஸ்தவ வேதாகம கதைகளை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி கதாகாலேட்சபம் (பஜனை) மூலமாக நற்செய்திபணி செய்ததினால் அனேக கிராமங்களை சேர்ந்த மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே தைலாபுரம், வகுத்தான் குப்பம், மணல்கேணி, முதலைமொழி, உடையார் குளம் போன்ற பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட்டார்கள்.
கிறிஸ்தவ மக்களின் பொருளாதார வாழ்க்கை நிலை வறுமை கோட்டிற்கு கீழே இருந்ததினால் அவர்களின் பொருளாதாரத்தை பெருக்குவதற்கு என்று நாசரேத்தில் தொழிற்கல்வி கூடம் (Art and Industrial School) ஆரம்பித்து இளைஞர்களுக்கு தொழிற்கல்வியையும் ஆண்களுக்கு என்று தச்சு வேலை, இரும்பு பட்டறை, அச்சு வேலை, இயந்திரம் பழுது நீங்குதல், ஓடு தயாரித்தல், செங்கள் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரித்தல் போன்ற தொழில்களை கற்று கொடுத்து வேலை வாய்ப்புகளை உறுவாக்கி அவர்களின் பொருளாதாரத்தில் உயர்த்தினார்.
மர்காஷியஸ் அவர்கள் பெண்களுக்கு என்று தையல் கலை, காலணி தயாரித்தல், மற்றும் கைவினை பொருட்களை தயாரிக்கவும் கற்றுக்கொடுத்து அதை சந்தை படுத்துவதற்கு கடைகளையும் ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார். மேலும் நாசரேத்தில் பஞ்சு நூற்பாலை அமைத்து அநேகருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தினார்.
1894 ம் ஆண்டு மர்காஷியஸ் அவர்கள் கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்கு என்று சேமிப்பு திட்டங்களை தொடங்கி, திறமையான மக்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி செய்து தொழில் வளம் உயற ஊக்கப்படுத்தினார்.
மேலும் மர்காஷியஸ் அவர்கள் 1896 ம் ஆண்டு விதவைளுக்கு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தினார். ஆயுள் காப்பீட்டு திட்ட முறைகளை அறியாத காத்தில் தொழிலாலர்களின் எதிற்காலத்திற்கு என்று எதிர்கால சகாய நிதி திட்டத்தை செயல்படுத்தினார்.
1900 ம் ஆண்டில் மர்காஷியஸ் அவர்கள் நாசரேத் பகுதிக்கு அஞ்சல்துறையை ஏற்படுத்தி தபால் மற்றும் தந்தி போன்ற சேவைகளையும் நாசரேத்தில் அறிமுகம் செய்தார். மேலும் திருநெல்வேலியிலிருந்து நாசரேத் வழியாக திருச்செந்தூருக்கு செல்ல இரயில் நிலையம் கொண்டு வந்தார்.
1991 ம் ஆண்டு மர்காஷியஸ் அவர்கள் முதல் தலைமுறை கிறிஸ்தவர்களின் திருமண காரியங்களுக்காக தோத்திர பண்டிகையை மூன்று நாள் ஒழுங்கு படுத்தி எல்லா கிறிஸ்தவர்களையும் அழைத்து, உணவும் உறைவிடமும் ஏற்பாடு செய்து பண்டிகை கொண்டாடி, அநேக திருமண காரியங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தார்.
மருத்துவ வசதி இல்லாத காரணத்தினாலும், அநேகருக்கு சரியான நேரத்தில் மருத்துவம் செய்யப்படாததினால் அநேக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆகவே இதைக்கண்ட மருத்துவரான மர்காஷியஸ் அவர்கள் இங்கிலாந்து தேசத்தில் இருந்த தன்னுடைய சொத்துக்களை விற்று 1892 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ம் தேதி நாசரேத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய புனித லூக்கா மருத்துவமனையை அமைத்து அதில் மருத்துவராக செயல்பட்டு, அறுவை சிகிச்சையும் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்து பிழைக்க வைத்தார்.
இந்த மருத்துவமனைக்கு திருவைகுண்டம், உடன்குடி, காயாமொழி, காயல்பட்டிணம் ஆகிய ஊர்களில் இருந்து வரும் நோயாளிகள், மருத்துவ மனையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் சேவையினால் இயேசுவின் அன்பை கண்டு கொண்டார்கள். சிகிச்சை பெறவரும் மக்கள் காலணா கூட இல்லாத நிலையிலிருந்ததை கண்ட மர்காஷியஸ் ஐயர் அவர்கள் கட்டணங்களை ரத்து செய்தார்.
1879 ம் மர்காஷியஸ் அவர்கள் ஆண்டு உயர்ஜாதி என்று கருதப்படும் மக்கள் மத்தியில் நற்செய்திபணி செய்ய நாசரேத் அருகில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு சென்று நற்செய்திபணி செய்தார். ஆகவே இவ்வூழியத்தின் முதல் பலனாக ரங்கையா நாயுடு என்பவர் 1879 ம் ஆண்டு நாசரேத் ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் 26 இந்துமத பிராமணர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
பின் நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரியினால் அநேக உயர்ஜாதி இந்து மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். 1889 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் நாள் குருகாட்டேரில் 303 பேருக்கும், நவம்பர் மாதம் 12 ம் தேதி 98 பேருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து மத பூசாரிகள் சென்னையிலிருந்து ஆரிய சமாஜ் சங்கம் மூலமாக பலர் ஆழ்வார் திருநகரி வந்து புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதற்கு முயன்றனர். இதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்காததால் மீண்டும் சென்னை திரும்பி சென்றார்கள்.
ஆகவே புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் மீது நீதிமன்றத்தில் பொய் வழக்குகளை பதிவு செய்து கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார்கள். கிறிஸ்தவர்களானவர்களுக்கு வேலை வாய்புகள் மறுக்கப்பட்டன. மேலும் கிறிஸ்தவர்களின் வீடுகளை தீயிலிட்டு கொளுத்தினார்கள். அவர்களுடைய சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அநேக கிறிஸ்தவர்களை அடித்து, உதைத்து, பெண்களை மானபங்கம் செய்யப் பட்டார்கள். ஆயினும் எவரும் கிறிஸ்துவை மறுதலிக்கவும் இல்லை; பின் மாற்றம் அடையவும் இல்லை. உபத்திரவத்திலும் கிறிஸ்தவர்கள் உறுதியாய் விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள்.
1902 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாசரேத் பகுதி கடுமையான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அநேக கிராமங்கள் நீரில் மூழ்கின. பல கிராமத்து குளங்கள் உடைந்தன. இதன் காரணமாக ஆயிக்கணக்கான ஆடுகள், மாடுகள் வெள்ளத்தில் பலியாயின. ஆகவே தொற்று நோய் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில் உயில்கொல்லி காலரா நோயும் பரவ ஆரம்பித்து, பல கிராம மக்களை காவு வாங்கியது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், உயிரற்ற சடலங்களும் கரை ஒதுங்கியது. இந்த காலரா நோயினால் நாசரேத் பகுதிகளில் 25% மக்கள் பலியானார்கள். அநேக கிறிஸ்தவர்களும் மரித்துப்போனார்கள். பல பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டனர். ஆற்றுவாரும் , தேற்றுவாரும் இல்லாமல் மக்கள் அழுது புரண்டனர். மர்காஷியஸ் அவர்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சத்தித்து 5,964 மக்களுக்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவிகளை செய்து காப்பாற்றினார். ஆயினும் பலர் மரித்துக்கொண்டே இருந்தார்கள்.
மார்காஷியஸ் ஐயர் மக்களை காப்பாற்றும் வழிமுறையை யோசித்தார். ஆகவே அவசரம் அவசரமாய், நாசரேத்தில் அவர் மூலமாய் கட்டப்பட்ட தூய யோவான் ஆலயத்தினுள் நுழைந்து, அழுது , அழுது ஜெபித்தார். ஆண்டவர் மட்டுமே குணமாக்க முடியும் என்பதை அறிந்து முழங்காலில் நின்று மணிக்கணக்காய் ஆண்டவரின் கிருபைக்காய் மன்றாடினார்.
அந்நேரத்தில் மர்காஷியஸ் அவர்கள் ஆண்டவரிடம் ஒரு பொருத்தனையை செய்தார். அதின்படி இந்த காலரா கொள்ளை நோய் தடுத்து நிறுத்தப்பட்டால், நாசரேத் ஆலயத்தில் தினமும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடத்துவதாக பொருத்தனை செய்தார். கர்த்தர் மர்காஷியஸ் அவர்களின் பொருத்தனையை கனம் பண்ணினார். ஆகவே கொள்ளை நோய் மறைந்து போனது.
ஆகவே 1902 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 7:00 மணிக்கு திருவிருந்து ஆராதனை ஆரம்பித்தார். இந்த ஆராதனை இன்று வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இப்படி தினமும் திருவிருந்து ஆராதனை உலகத்தில் முதலில் இங்கிலாந்து தேசத்தில் ஒரு ஆலயத்திலும் அதற்கு பின்னர் இரண்டாவதாக நாசரேத்திலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பஞ்சம் பட்டினி சாவு மற்றும் காலரா நோயின் பாதிப்பிலிருந்து மீண்ட நாசரேத் பகுதி கிறிஸ்தவ மக்களிடம் ஒருவித மரண பயமும், மரித்தோர்களின் ஆவி பயமுறுத்தல்கள் பற்றிய பயமும் இருந்ததால் மர்காஷியஸ் ஐயர் அவர்கள் அவர்கள் 1903 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியில் சகல பரிசுத்தவான்களின் திருநாள் ஆலய ஆராதனையில் கர்த்தருக்குள் மரித்த விசுவாசிகளை நினைவுகூர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், மரித்துப்போனவர்களுகு மரியாதை செலுத்தும் படி நவம்பர் இரண்டாம் நாள் சகல ஆத்துமாக்களின் திருநாளை விஷேசமாக கொண்டாட வைத்தார்.
அன்று எல்லா கிறிஸ்தவர்கள் பவனியாக கல்லரை தோட்டத்திற்கு அழைத்து, அங்கு மரித்துப்போன விசுவாசிகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே உயிர்த்தெழுவார்கள் என்ற திருமறை சத்தியத்தை எடுத்து சொல்லியதால் உயிர்தெழுதலின் நம்பிக்கையை பெற்ற கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் பலப்படுத்தப்பட்டார்கள். ஆகவே கிறிஸ்தவர்கள், பயத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்று நிம்மதி அடைந்தார்கள்.
1904 ம் இண்டு மர்காஷியஸ் ஐயர் அவர்களின் வேத அறிவையும், பக்தியையும் பாராட்டி சென்னை பேராயர், மர்காஷியஸ் ஐயர் அவர்களுக்கு கனோன் என்ற பட்டம் கொடுத்து கொரவித்தார். 1095 ம் ஆண்டு அரசாங்கமும் இவர் பொது சேவையை பாராட்டி கைசர்-இ-ஹிந்த்(Saviour of India) என்ற விருதையும் இந்தியாவின் வைசிராய் மூலம் பதக்கத்தையும் அளித்து கௌரவப்படுத்தியது. இவருடைய மகத்தான கல்விப் பணியைப் பாராட்டி, சென்னை பல்கலைகழகம் தங்கள் கல்வி பாட திட்டக்குழுவில் ஒருவராக அவரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் தன்னுடைய சரீரத்தையும் பொருட்படுத்தாமலும், திருமணம் செய்யாமலும் 32 ஆண்டுகள் இரவும் பகலும் நாசரேத் பகுதி மக்களை தன்னுடைய பிள்ளைகளாக கருதி அவர்களுக்கு நற்செய்திபணியையும், சமுதாய பணியையும், மற்றும் கல்விப்பணியையும் இடைவிடாமல் செய்ததினால் அவருடைய சரீரம் பாதிக்கப்பட்டதோடு, கடுமையான ஆத்துமா நோயும் தொற்றிக்கு கொண்டது. அநேகர் மர்காஷியஸ் அவர்களை இங்கிலாந்து சென்று மருத்துவ சிகிச்சைபெற்று இறுதி காலம்வரை அங்கு நற்செய்திபணி செய்ய வற்புறுத்தினார்கள். ஆயினும் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பாமல் நாசரேத்திலே இருக்கவே விரும்பினார்.
1908 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ம் நாள் மர்காஷியஸ் ஐயர் அவர்கள் மரிக்கும் தருணத்திற்கு செல்ல நேரிட்டது. ஆஸ்துமா வியாதியும் வாத நோயும் அவரை வேதனைக்குள்ளாக்கிது. ஆனாலும் கிறிஸ்துவுக்குள்ளாக தன்னைப் பலப்படுத்திக் கொண்டார்.
1908 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ம் நாள் மர்காஷியஸ் ஐயர் அவர்கள் காலையில் தேநீர் அருந்திவிட்டு, அங்கு இருந்தவர்களிடம் தான் இன்னும் சற்று நேரம் உறங்க வேண்டும் என்று சொல்லி, தன்னை யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்றும் அன்பாய் கேட்டுக்கொண்டு மீண்டும் நித்திரைக்கு சென்றார். ஒரு சில மணிகள் கடந்து சென்று இருக்கும். அவருடைய இன்னுயிர் நித்திரையின்போதே அவரைவிட்டு பிரிந்தது.
கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் தன்னுடைய 56 ம் வயதில் 1908 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ம் நாள் இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்தார். தமது பணிகாலத்திற்குள் 25 புதிய திருச்சபைகளை உருவாக்கி இருந்தார்.
நாசரேத் பகுதி மக்கள் எல்லோருக்கும் ஜாதி, மதம், இனம் என்று பாராமல் அவர்களின் மேம்பாட்டிற்காக மர்காஷியஸ் ஐயர் அவர்களின் மறைவுக்காக கண்ணீர் சிந்தினார்கள். பலிபீடத்தின் பணிவிடைக்காரராய் தேவனுடைய சமூகத்தில் அநேக ஆத்துமாக்களை கொண்டுவந்த கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்களின் சரீரம், நாசரேத் தூய யோவான் ஆலய வாளாகத்தில், பலிபீடத்தின் அருகில் சாயர்புரத்தை சேர்ந்த கோடன் ஐயர் அவர்களால் 28/04/1908 அன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் நாசரேத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.நற்செய்தி பணியிலும், சமுதாயபணியிலும் மற்றும் கல்விப்பணியிலும், மருத்துவ பணியிலும், தொழில் வளர்ச்சியிலும் மிகப்பெரிய சகாப்தத்தை ஏற்படுத்தி சென்ற கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் இன்றய ஊழியர்களின் முன் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய முன்மாதிரி மற்றும் சவால்கள் ஆகும்.
இன்றைக்கு நாசரேத் பகுதி மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கி உலகின் பல நாடுகளில் உயர்ந்த நிலையில் இருப்பதை எண்ணி, மர்காஷியஸ் ஐயர் அவர்களின் தியாகத்தை நன்றி பெருக்கோடு நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றார்கள். இன்றைக்கு நாசரேத் பகுதி மக்கள் கல்வி அறிவில் 95% பெற்றும் மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கு காரணம் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்களே.
குருவானவர் கனோன் ஆர்தர் மர்காஷியஸ் அவர்கள் ஒரு கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். அவர் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து இன்றுவரை அநேக மிஷனெரிகள், சுவிசேஷகர்கள், தீர்க்கதரிசிகள், குருவானவர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் முளைத்துக்கொண்டே இருந்து தமிழ்நாட்டில் மாத்திரம் அல்ல, இந்தியாவிலும், இன்னும் அநேக வெளிநாடுகளிலும் நற்செய்திபணியை செய்துகொண்டு தேவ இராஜ்ஜியத்தை கட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
========================
The Gospel Pioneers:
Canon Arthur Margoschis(1852-1908)
==============================
Arthur Margoschis, the eighth and last child to his parents was born in 1852 at England. His parents dedicated him for God’s ministry when he was in Child. After completing his graduation, the burning zeal in him to become a missionary drove him to learn theology and then medicine.
Then Bishop Caldwell who was ministering in Idaiyankudi of Tirunelveli District went on furlough to England and shared the needs of the people of Tirunelveli there. By hearing this, Margoschis gave up his final year when recruited by Caldwell for the Tirunelveli mission.
His friends and relatives asked him not to be in a hurry but forsaking all the comforts of his native land, he came to Madras in October 1875 at the age of 24 in obedience to the call of God. He was not only a missionary but also being a doctor an educationist, a philanthropist, and a philosopher.
He plunged into his work with enthusiasm and felt the need to do a lot to alleviate the sufferings of the helpless and poverty stricken people. The village once called Saan Pathu that had nothing but red soil, thorny trees and Palmyra tees had been blossomed to become Nazareth due to the tireless efforts and the sweat of Margoschis.
He met many challenges even in the beginning of his ministry during 1876. The river Tamiraparani flooded and there was great destruction. Many lost their houses, their belongings and many children died of Cholera diseases.
The following year, there was a severe famine. The ravage of famine swept away 25% of the local population and left many helpless in starvation and became orphans.
The non-Christians mocked the new believers and saying that that was divine retribution of Hindu gods In order to edify their faith, Margoschis made a vows with God, he introduced to have the Holy Communion in the morning service everyday since 6-12-1902 as a remedy to the dreadful malady, even today is a rarity found in a few churches only.
In the neighbouring village Azhwar Thirunagari, a place where high-class people by caste “Vaishnavite” lived, gospel was preached to them. Many Brahmins accepted Jesus as their Savior but they underwent untold persecution in the hands of the people of their community. Special Gospel campaign among Hindus was vigorously done. Consequently thousands of persons were converted to Christianity.
As the ministry progressed, Madras Arya Samaj, a Hindu militant outfit, sent Hindu missionaries to Azhwar Thirunagari; but their mission was not fulfilled, so they returned to Madras. The Hindu high caste people opposed Margoschis tooth and nail. False charges were made against the new believers. The enraged people planned to burn alive the new converted Christians.
Since Canon Margoschis adopted Nazareth as his “Child”, he put his heart and soul to see Nazareth filled with many blessings of God. He laid the road from Nazareth to Valaiyadi and planted trees on both side. He started schools in many places.
He started a boys school(Margoschis) in 1876 and a girls(St. John) school in 1882 which is the first high school for girls in the South India. He found Teacher Training School in 1887.
Another brain child of Margoschis was the Theological Seminary for the Catechists at Thrimaraiyur in 1890 later it was shifted to Madurai knows as *Tamil Nadu Theological Seminary*.
He introduced Various ministries like the Journal banner of the Cross, Sangham offertory, Native Evangelists’ Team, Women’s Fellowship festival, Street prayer meeting, Procession in the streets singing hymns during Lent, Bajans, etc All these ministries paved the way for the spiritual growth of the native believers.
Margoschis preached in and round Nazareth on horseback. Churches were established in Pillaiyanmanai, Mukuperi, Muthalai Mozhi, Kachanavilai, Thailapuram, Udaiyarkulam, etc
He introduced technical Institute for the less-privileged people and trained them in Carpentry, Black-smithy for men likewise sewing and lace work for women and then weaving section was introduced in 1884.
He started St. Luke Hospital in 1892 by helping thousands of sick flocking even from 20 to 30 miles away. He conducted weddings of the girls of marriageable age himself in a grand manner, finding suitable bridegrooms for them.
He started a Thrift Fund society for disbursing loans on credit for the benefit of the poor people. He started the scheme “Future provides funds”. “S.P.G. Nazareth Christian Death Aid-Fund” was setup by him; also he founded “S.P.G. Widows’ Association” to help the helpless widows. Postal and Telegraph office, Railway Station and lines, roads were the gifts the people of Nazareth received from Margoschis.
Though he was suffering from Asthma and had not enjoyed good health, yet he loved the people of Tamil Nadu and had not chosen to go back to London. The Great Man, who had endeared himself to the people of Nazareth, passed away on 27th April 1908. People shed tears lamenting that they had lost the chariot of Israel and horseman. They placed his tomb in the Church premises. The 32 years of selfless service of Canon A.Margoschis has left behind the memory of a great and good life, lived usefully.
A memory that has become a legacy, one that deserves to be passed on to generations unborn. Today, this town is known for its literacy and economic growth.
Nazareth has an average literacy rate of 94%, higher than the national average of 59.5%. Male literacy is 95%, and female literacy is 93%. His period of ministry is called the golden era of Nazareth church. Canon Arthur Margoschis, an apostle of Christ Jesus, the “Father of the Nazareth” of Tamil Nadu.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.