==========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை
சாமுவேல் வேதநாயகம் அசரியா
(1874-1945)
==========================
தாமஸ் வேதநாயகம் மற்றும் ஹெலன் தம்பதியினரின் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் குழந்தையின்மையால் அவர்கள் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணி, ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அவனை தேவ பணிக்கு அற்பணிப்போம் என்ற ஜெபித்தின் ஆசீர்வாதமாக 1874 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ம் நாள் தமிழ்நாட்டில், தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளாளன்விளை என்ற கிராமத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அவருக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள்.
இளமையிலே தகப்பனார் மரித்துவிட்டதால் சாமுவேல் அவர்கள் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி படித்தார். இப்பள்ளியில் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தை மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும். இதனால் சாமுவேல் அவர்கள் வேதத்தில் அநேக பகுதிகளை மனனம் செய்திருந்தார். சாமுவேல் அவர்களின் தாயார் ஹெலன் அவர்கள் இவரை பக்தியிலும் ஒழுக்கத்திலும் வளர்த்து மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தி வளர்த்தார்.
1885 ம் ஆண்டு ஒரு நாள் சாமுவேல் அவர்களின் பள்ளிக்கு உகாண்டாவிலிருந்து ஒரு மிஷனெரி வந்து நற்செய்திபணி தரிசனத்தை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். அப்போது 11 வயது நிறம்பிய சாமுவேல் உகாண்டாவின் நடைபெறும் நற்செய்திபணியின் தேவைகளுக்காக தன் கைகளில் அணிந்திருந்த வெள்ளிகாப்புகளை காணிக்கையாக கொடுத்தார்.
1889 ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் சாமுவேல் அவர்கள் சேர்ந்தார். தன்னுடைய 19 ம் வயதில் வாலிபர்கள் மத்தியில் நற்செய்திபணி செய்தார். கல்லூரி படிப்பின்போது கிறிஸ்தவ ஐக்கியம் என்ற அமைப்பை சாமுவேல் அவர்கள் ஏற்படுத்தி வாலிபர்களுக்கு முன்மாதிரியாக இருந்து அநேக வாலிபர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அவர்களிடம் வேத சத்தியங்களை உறுதியுடனும் கண்டிப்புடனும் விளக்கி கூறுவார். கல்லூரியில் படிக்கும்போதே சமுதாய ஒற்றுமைக்காகவும் கிறிஸ்தவர்களின் ஐக்கியத்திற்காகவும் ஜெபிப்பது வழக்கம். விடுமுறை நாட்களில் கிராமங்கள் தோறும் நண்பர்களுடன் சென்று நற்செய்திபணியை செய்து வந்தார்.
1892 ம் ஆண்டு உயர்கல்வி படிப்பிற்காக சாமுவேல் அவர்கள் சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் (MCC) சேர்ந்து B.A படிக்கும்போது அவருடைய கல்வி அறிவையும், வேத ஞானத்தையும் கண்டு அந்த கல்லூரியின் முதல்வர் அசரியா என்ற பெயரில் அவரை அழைத்தார். பின் நாட்களில் அசரியா என்ற பெயரே எங்கும் நிலைத்து நின்றது.
சாமுவேல் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆகவே சென்னையில் YMCA என்ற அமைப்பில் இணைந்து கொண்டார். இந்நிலையில் 1895 ம் ஆண்டு தென் இந்தித்தாவின் YMCA ன் பொது காரியதரிசியாக நியமிக்கப்பட்டு அநேக இளைஞர்களை நற்செய்திபணிக்கு ஊக்குவித்தார். வாலிபர்கள் மத்தியில் இவர் செய்த மகத்தான நற்செய்திபணியினால் அநேகர் மனம்திரும்பி கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர்.
அசரியா அவர்கள் 1898 ம் ஆண்டு தென் இந்தியாவிலே முதன்முறையாக பாளையங்கோட்டையில் சாராள் டக்கர் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்திருந்த அன்பு மரியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடும்பமாக ஆத்தும ஆதாய பணியில் ஈடுபட்டார்கள். அநேக கல்லூரி முதல்வர்களும் உற்சாகத்துடன் முன்வந்து தங்கள் மாணவர்களுக்கு ஆவிக்குறிய கூட்டம் நடத்தவும், வாலிபர் முகாம் நடத்தவும் இவர்களை அழைத்தார்கள். கர்த்தருடைய இராஜ்யத்தின் கட்டுமான பணியில் வல்லமையாய் பயன்படுத்தப்படுகின்ற V.S. அசரியா அவர்களை அநேக குருவானவர்களும் அழைத்து தங்கள் திருச்சபையில் எழுப்புதல் கூட்டங்கள் நடத்தவும் அழைத்தார்கள்.
ஒருமுறை 1902 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அசரியா அவர்கள் எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்காக இலங்கையில் யாழ்பாணத்திற்கு சென்றார். அங்கு தமிழ் கிறிஸ்தவர்கள் நற்செய்திபணி சங்கம் அமைத்து சுவிசேஷபணி செய்வதை கண்டு திருநெல்வேலி பகுதியிலும் நற்செய்திபணி சங்கம் உறுவாக்கி இந்தியாவில் கிறிஸ்துவை அறியாத மக்கள் மத்தியில் நற்செய்திபணி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று தீர்மானம் பன்னினார். ஆகவே அடிக்கடி மெஞ்ஞானபுரத்திலுள்ள பனங்காட்டிற்கு சென்று, முழங்கால்படியிட்டு ஆண்டவரே இந்தியாவை மீட்டருளும், நற்செய்தி பணியாளர்களை எழுப்பும், ஊழியம் செய்ய வழிகாட்டும் என்று கதறி ஜெபித்தார். தன்னுடைய மனப்பாரத்தை தன் நண்பர்களோடும் திருச்சபை தலைவர்களோடும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் 1903 ம் ஆண்டு அசரியா அவர்கள் சென்னையில் நடந்த மாபெரும் மிஷனெரிகள் மாநாட்டிற்கு சிறப்பு செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். இறைச்செய்தியின் இனிய நேரத்தில் நற்செய்திபணியின் அவசியத்தை அனைவர் உள்ளத்திலும் பாயச்செய்தார். அப்போது மிஷனெரி பணிக்காக உங்களை அர்பணிப்போர் உங்களில் எத்தனைபேர்? அவர்கள் முன் வரலாம் என்று அறைகூவல் விடுத்தார்.
அப்போது ஒரு வாலிபன் உரத்த சத்தமாக அசரியா அவர்களிடம் நீங்களே ஏன் ஒரு மிஷனெரியாக செல்லக்கூடாது? என்று கேள்வி எழுப்பினான். இதைக்கேட்ட அசரியா அவர்கள், இயேசு கிறிஸ்து இந்த வாலிபன் மூலமாக தன்னை நற்செய்தி பணியாளராக அழைப்பதாக ஏற்றுக்கொண்டு தான் பொறுப்பாய் இருந்த YMCA ன் செயலாளர் பொறுப்பை வேறோருவருக்கு கொடுத்துவிட்டு தன்னை ஒரு மிஷனெரியாய் அற்பணித்தார்.
இந்நிலையில் 1903 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ம் நாள் ஜெபத்தோடு 10 திருச்சபை தலைவர்கள் மற்றும் 8 குருவானவர்களோடு கூடி ஜெபித்து இந்திய மிஷனெரி சங்கம் (IMS) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பிற் நோக்கம் எல்லாம் இந்திய மக்களால், இந்தியர்களுக்காக, இந்தியர்களின் நிர்வாகத்தினால், இந்திய மக்களின் பணத்தினால் நற்செய்திபணி அறிவிப்பதாகும். ஆகவே இந்திய மிஷனெரி சங்கம் (IMS) மூலமாக ஆந்திராவில் ஹைதரபாத் நிஜாம் ஆழுகைக்கு உட்பட்ட தோர்ணக்கல் பகுதிக்கு மிஷனெரியாக அனுப்பப்பட்டார்கள். இந்திய திருச்சபைகளின் வளர்ச்சிக்காக அமேரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் சுற்றித்திரிந்து உழைத்து வந்த அசரியா அவர்கள் நாகரீகமற்ற மக்களிடம் நற்செய்திபணி செய்ய குடும்பமாக சென்றார். அங்கு எளிய கொட்டகை ஒன்றில் மனைவி மற்றும் 6 பிள்ளைகளோடு வசித்து நற்செய்திபணியை செய்தார்கள்.
அசரியா அவர்கள் வெகு சீக்கிரத்தில் தெலுங்கு மொழியை கற்று, கால்நடயாய் பல கிராமங்களுக்கு நடந்து சென்று நற்செய்திபணியை அறிவித்தார். இவருடைய நற்செய்திபணி மூலம் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆகவே 1906 ம் ஆண்டு சென்னை பேராயர் ஒயிட்ஹெட் அவர்களால் தோர்ணக்கல் பகுதியில் 23 பெரியவர்கள் 23 குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றார்கள். மேலும் 300 பேருக்கும் அதிகமானோர் ஞானஸ்நானம் பெற ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர்.
1909 ம் ஆண்டு ஜீன் மாதம் 29 ம் நாள் பரி. பேதுருவின் திருநாளன்று அசரியா அவர்கள் சென்னை பேராயர் மூலமாக உதவி குருவானவராக அருட்பொழிவு பெற்றார். பின்னர் தோர்ணக்கல்லின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதி வண்டியிலும் மாட்டு வண்டியிலும் பயணம் செய்து பலகிராமங்களுக்கு சென்று நற்செய்திபணி அறிவித்தார். நற்செய்திபணிக்கு செல்லும்போது கூடவே உணவு பொட்டலங்களையும், துண்டு பிரசுரங்கள் கொண்டு சென்று நற்செய்திபணி செய்தார்.
மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 4,000 ஆத்துமாக்களை ஆதாயம் செய்து அவர்களை கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தார்.
அசரியா அவர்கள் 1910 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலிக்கன் திருச்சபையின் குருவானவராக சென்னையில் அருட்பொழிவு செய்யப்பட்டார்.
1910 ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிடஜ்சர்லாந்தில் எடின்பரோவில் நடைபெற்ற உலக மிஷனெரி ஸ்தாபனங்களின் கூடுகைக்கு அழைக்கப்பட்டார். அதில் வெளிநாட்டு மிஷனெரிகளுக்கும் இந்திய கிறிஸ்தவர்களுக்கும் இடையே மிகவும் ஆழமான ஒத்துழைப்பை கோரினார். அதில் ஏழைகளுக்கு உணவளிக்க உங்கள் பொருட்களை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்...இப்போது உங்களிடம் அன்பை கேட்கின்றோம். எங்களுக்கு நண்பர்களை கொடுங்கள் என்று கேட்டார். இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, உண்மையான இந்திய தேவாலயம் உருவாக வேண்டுமானால் வெளிநாட்டு மிஷனெரிகளின் பங்கு குறைந்திட வேண்டும் என்று அசரியா நம்பினார். ஏனெனில் இந்திய கிறிஸ்தவர்கள் முழுமையாக ஐரோப்பிய மிஷனெரிகளை நம்பியே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தேவாலயத்தின் நற்செய்திபணி மற்றும் சுவிசேஷசபணி தவிர இந்தியாவின் திருச்சபை தலைமை, நிர்வாகம், வழிபாடு மற்றும் வழிபாட்டு முறைகள் மேற்கத்திய நாட்டையே சார்ந்து இருந்தது.
குருவானவர் V.S. அசரியாவின் வேத அறிவையும் திறமையையும் கண்ட சென்னை பேராயர் ஒயிட் ஹெட் அவர்கள் இவருக்குப் பேராயர் பொறுப்பு கொடுத்தால் ஆந்திராவில் கிறிஸ்தவம் வேகமாக பரவி தோர்ணக்கல் பகுதியை தனி பேராயமாக அமைத்துவிடலாம் என்று விரும்பினார். இவருடைய பெரும் முயற்ச்சியினால் 1912 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் நாள் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய நாட்டை சேர்ந்த அசரியா அவர்கள் கல்கத்தாவிலுள்ள தூய பவுலின் ஆலயத்தில் இந்தியாவின் முதல் ஆங்கிலிக்கன் திருச்சபையின் பேராயராக திருநிலைப் படுத்தப்பட்டார். இந்த நாள் இந்திய திருச்சபை வரலாற்றிலேயே ஒரு பொன்நாள். பின்னர் தோர்ணக்கல்லில் பேராயராக நியமிக்கப்பட்டார்.
பேராயர் அசரியா அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். அநேக பயணங்களை மேற்கொண்டார். சாலைகள் இல்லாத கிராமங்களுக்கும் மாட்டு வண்டியில் பயணம் செய்து நற்செய்திபணியை தொய்வின்றி செய்தார். பகலின் வெப்பத்தை தனிக்க இரவில் பயணம் மேற்கொண்டார். இதனால் திருடர்கள் மற்றும் காட்டு விலங்குகளின் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் தோர்ணக்கல் மக்களுக்காக விலைக்கிரயம் கொடுக்க ஆயத்தமாய் இருந்தார்.
பேராயர் அசரியா அவர்கள் சமுதாய, அரசியல், கலாச்சார, பொருளாதார வேற்றுமைகளையும் தாண்டி நற்செய்திபணி அறிவித்ததால் ஆந்திராவில் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. இதன் மூலமாக மலாஸ், மாதிகாஸ் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும், பழங்குடி இனத்தவர்களும் கிறிஸ்துவின் மந்தையில் அதிகமானோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இம்மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருந்தாலும் கிறிஸ்துவை உறுதியாக பற்றிபிடித்துக்கொண்டார்கள்.
தோர்ணக்கல் பகுதியில் உயர் ஜாதி மக்கள் தங்கள் பண்ணைகளில் வேலை செய்யும் மாலாஸ் மற்றும் மாதிகாஸ் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாக நடத்தினார்கள். இவர்களின் உழைப்பை உயர் ஜாதி மக்கள் சுரண்டி, ஏமாற்றி வந்தார்கள். ஆனால் பேராயர் அசரியாவும் மற்ற நற்செய்திபணியாளர்களும் தாழ்த்தப்பட்ட இம்மக்களிடம் அன்போடு பழகி அவர்களுக்கு கல்வி அறிவோடு, வேத அறிவையும் கொடுத்து, தொழில் பயிற்ச்சியோடு ஆரோக்கிய வாழ்வுக்கான பயிற்ச்சியையும் கொடுத்தார்கள். இம்மக்களிடையே காணப்பட்ட குடிப்பழக்கம், தெருக்களில் சண்டையிடுதல், திருட்டுத்தொழில் எல்லாம்மாறி அவர்களிடம் தூய்மை, ஒழுக்கம் நிரம்பி ஆங்காங்கே கிறிஸ்துவை ஆராதித்துபாடும் பாடல்தொனி எங்கும் கேட்கப்படலாயிற்று.
அசரியா அவர்கள் இம்மக்களின் வாழ்க்கை தரமும் பொருளாதார தரமும் உயருவதற்காக தோர்ணக்கல் பகுதியில் கல்விக்கூடங்களையும் தொழிற்கூடங்களையும் ஏற்படுத்தினார். ஆந்திராவில் பல மருத்துவமனைகளை ஏற்படுத்தினார். மேலும் சமுதாய நலக்கூடங்களையும் ஏற்படுத்தினார்.
1924 ம் ஆண்டில் தோர்ணக்கல் திருமண்டலத்தில் 8 ஆங்கில குருவானவர்களும், 53 இந்திய குருவானவர்களும் கொண்டிருந்த திருமண்டலத்தில் அசரியா அவர்களின் தலைமையில் நற்செய்திபணி சிறந்துவிளங்கி 1935 ம் ஆண்டில் 250 இந்திய குருவானவர்களும் 2,000 திற்கும் அதிகமான சுதேச ஊழியர்களும் நற்செய்திபணியை சிறப்பாக செய்ததினால் 2,40,000 திற்கும் அதிகமான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
1935-43 ம் ஆண்டுகளில் பேராயர் அசரியாவின் காலத்தில் இந்திய கிறிஸ்தவர்களை, இந்துமத பூசாரிகள் இந்தியாவின் எதிரிகளாக கருதினார்கள். இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது இந்திய தேசியத் தலைவர்களும், பிற மதங்களைச் சேர்ந்த தீவிர மக்களும் உண்மையான இந்தியர்கள் அல்ல என்று குற்றம் சாட்டினார்கள்.
மகாத்மா காந்தி அவர்களுக்கும் பேராயர் அசரியா அவர்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவு இருந்தது. மகாத்மா காந்தி அவர்கள் பேராயர் அசரியாவை ஒருமுறை பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு பிந்தய இந்தியர்களின் முதல் எதிரி என்று குறிப்பிட்டார். மேலும் தோர்ணக்கல் பகுதியில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய இந்தியர்களை கடுமையாக குறைகூறினார். இதைக்கேட்ட பேராயர் அசரியா அவர்கள், மகாத்மா காந்தியை தோர்ணக்கல் பகுதிக்கு வருந்தி அழைத்து, புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளிடம் வந்து உண்மை தன்மை என்ன விசாரிக்க கேட்டுக்கொண்டார். பேராயர் அசரியா அவர்கள், மக்கள் இந்து மத கொடுமைகளில் இருந்து மனம்மாறி கிறிஸ்தவர்கள் ஆகின்றார்கள் என்றும் நற்செய்திபணி அறிவிப்பது கிறிஸ்துவின் கட்டளை என்றும் கூறியதை மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளாமல் பேராயர் அசரியாவின் அழைப்பை நிராகரித்தார்.
1941 ம் ஆண்டில் பேராயர் அசரியா அவர்கள் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவானவர் பிதாவினிடத்தில் ஜெபித்தபடி யோவான் 17:21 ல் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்தியாவில் பிரிந்து கிடக்கும் எல்லா பிரிவு திருச்சபைகளையும் ஒன்றாக இணைக்கும்படி முழு முயற்சியை எடுத்தார். இதன் மூலம் திருச்சபையில் ஐக்கியமும் ஒருமைப்பாடும் வளர்ச்சியும் ஏற்படும் என்று திருச்சபை தலைவர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
பேராயர் அசரியா அவர்கள் அநேக புத்தகங்களை படித்து 180 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி இந்திய கிறிஸ்தவத்தை இந்தியா முழுவதும் இலக்கிய துறையில் மேம்பட செய்தார்.
பேராயர் அசரியா அவர்கள் தென் இந்தியாவில் திருச்சபைகளின் ஐக்கியத்தை தன்னுடைய மறைவுக்கு முன்னர் கானவிரும்பினார். அதற்காக அஞ்சா நெஞ்சத்துடன் அயராது உழைத்தார். கிறிஸ்துவின் உத்தம தொண்டன்; கிறிஸ்தவர்களின் வழிகாட்டி, அற்பணிப்பின் மகுடம் என்ற பெரும் புகழுடைய பேராயர் அசரியா அவர்கள் 1945 ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாள் 71 ம் வயதில் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். தோர்ணக்கல் பகுதி மக்களுக்காக தன்னை அற்பணித்த பேராயர் அசரியா அவர்களின் சரீரம் தோர்ணக்கல் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேராயர் அசரியா அவர்கள் ஒரு மாபெரும் மிஷனெரி, இந்தியாவின் மிஷனெரி இயக்கத்தின் விடிவெள்ளி, முதல் இந்திய பேராயர் என்று போற்றப்பட்ட இவர் இந்திய மிஷனெரி சங்கம் (IMS), நேஷனல் மிஷனெரி சங்கம் (NMS), Church of India (CSI) போன்ற மாபெறும் இயக்கங்கள் உறுவாக அடித்தளமிட்டார். பேராயர் அசரியா அவர்கள் பல ஆண்டுகளாக இந்திய தேசிய கிறிஸ்தவ கவுன்சில் (NCCI) தலைவராகவும், மற்றும் சர்வதேச மிஷனெரி கவுன்சிலின் (IMC) பிரதிநிதியாக இருந்து இந்தியாவில் நற்செய்திபணியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றார்.
பேராயர் அசரியாக அவர்களின் கனவான CSI என்ற திருச்சபையின் ஐக்கியம் அவர் மறைந்து இரண்டு ஆண்டிற்குள் நிறைவுபெற்று 1947 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம் நாள் Church of South India (CSI) உறுவாயிற்று. இது இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பின் பெரிய கிறிஸ்தவ திருச்சபை அமைப்பாகும்.
இன்று ஆந்திரா மாநிலத்தில் தோர்ணக்கல் பகுதியில் இவர் நினைவாக பேராயர் அசரியா கல்லூரியும் பெண்களுக்கு என்று பேராயர் அசரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. மேலும் இவர் பிறந்த ஊரான வெள்ளாளன்விளை யில் பேராயர் அசரியா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது.
பேராயர் அசரியா அவர்கள் இந்திய மிஷனெரி இயக்கங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவர் மூலமாய் ஏற்படுத்தப்பட்ட இந்திய மிஷனெரி சங்கத்தில் (IMS) தற்போது 1830 மிஷனெரிகள் நேப்பாளம் மற்றும் பூட்டான் உட்பட இந்தியாவின் 24 மாநிலங்களில் 253 மாவட்டங்களில் சுமார் 38,850 கிராமங்களில் கிறிஸ்துவின் நற்செய்திபணி அறிவித்து, 6125 ஜெபக்குழுக்களை ஏற்படுத்தி, ஆதிவாசி பிள்ளைகள் கல்வி பயில 36 விடுதிகளை ஏற்படுத்தியும் 8 கல்விக்கூடங்களை நிறுவியும் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மருத்துவமனையையும் நிறுவி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்து, கல்வி பணியிலும் சமுதாய பணியிலும், மருத்துவசேவை பணியிலும் சிறந்து விளங்கி கிறிஸ்துவின் இராஜ்யத்தை இந்தியாவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். இது இன்னும் வளர்ந்து கர்த்தர் அருள்புரிவாராக. ஆமென்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
=======================
The Gospel Pioneers:
Samuel Vedanayagam Azariah
(1874-1945)
============================
Samuel was born in the village of Vellalanvilai, Tirunelveli Dist, Tamil Nadu in 1874 after his parents had waited and prayed for 13 years. When he was child his father Vedanayakam died but his devoted mother Mrs. Ellen brought him up in the fear of God and in strict discipline.
From childhood, Samuel had a great love for missionaries. So, he founded the “Christian Brotherhood Association” to fight against the caste spirit among the students and to inspire spiritual renewal. Bible study class, street preaching and hospital visitations attracted Samuel to involve with YMCA(Young Men’s Christian Association) at the age of 19, For the higher studies he went to the Christian College, Madras, where he joined the B.A class, and there the principal gave the name Azariah, which he became famous.
In 1898, Azariah married Ambu Mariammal, one of the first Christian women in South India to take a college course, whom he described as "the most spiritually minded girl in Tirunelveli."
In 1902, Azariah traveled to Jaffna in Sri Lanka to evangelize among the Tamils, which caused him to reevaluate the relatively prosperous Tirunelveli church's position concerning evangelization. He felt ashamed to think of his own church in Trunelveli with all its richness, not having made any efforts for mission. Azariah shared his vision and burden with other like-minded Christians. He prayed with them and in Feb 1903, they founded the IMS(Indian Missionary Society) and its principles were to be: “Indian money, Indian missionaries and Indian management”.
On Christmas Day 1905, in William Carey’s historic library at Serampore, the NMS(National Missionary Society) was launched by a group of Indian leaders, with Azariah as its first general secretary. The NMS was an interdenominational society aiming to spread Christianity in India and surrounding territories such as Afghanistan, Tibet, and Nepal.
In 1908, while conducting a missionary service in Madras where he appealed for people to go as missionaries, a student whispered loudly said that why doesn’t he go as a missionary? Azaraiah took it as a God’s will and offered himself to the missionary service.
In 1909, at age 35, Azariah was ordained as an Anglican priest, left his positions with the YMCA, learned Telugu and began as a missionary in Dornakal. He lived first in a tent, unprotected from dangerous wildlife, and began the strenuous work of evangelizing non-Christian Telugu villagers and supervising new Christian congregation.
He travelled by foot, bullock cart, and bicycle, with his food and Bible tracts hanging in a bag suspending from the handlebars. On 29 December 1912, after three years as a priest, Azariah was consecrated the first Indian Anglican Bishop of the new Diocese of Dornakal. As a Christian leader in a non- Christian culture, he negotiated complex cultural, social, political, and economic pressures with exceptional skill and diplomacy.
There was great evangelical moment during his tenure. Azariah inspired mass movements that brought roughly 240,000 outcast Malas and Madigas, tribals and low-caste non-Brahmins who were wholly illiterate, living in unbelievable squalor and desperate poverty. He gave importance to the teaching and training of local leaders and instructing them to teach the new believers that resulted the greater growth.
By 1924, the Diocese of Dornakal had 8 English-born priests and 53 Indian clergy. By 1935, his diocese had 250 ordained Indian clergy and over 2,000 village teachers, plus medical clinics, cooperative societies, and printing presses.
In the 19th & 20th centuries, Christianity in India was accused by Indian national leaders for not being truly Indian. Azariah also took sharp issue with Mahatma Gandhi, who was unalterably opposed to Christians trying to convert Indians. Azariah saw conversion as foundational to Christian mission.
Mahatma Gandhi acknowledged the dominant Hindu religion needed reform, but Azariah went further and said it was repressive and grounded in a destructive caste system. He said, “It is by proclamation of the truth that the early Church turned the world upside down ... It is this that will today redeem Indian society and emancipate it from the thralldom of centuries.”
In 1936, Dr. B.R. Ambedkar issued a statement that “I was born as a Hindu but I will not die as a Hindu”. He said that the Hindu Dalits should embrace a religion, which would give them equal status and dignity. Azariah approached him with the hope that Ambedkar might regard Christianity as an accepted religion.
Azariah was shaken when Ambedkar asked him which denomination(Christianity) he would suggest for his Dalits followers ‘which deeply embarrassed and disturbed’ him, and ‘plunged him back into renewed efforts at ecumenism and reform within the church’. Ambedkar criticized the church for denominational disunity and for the persistence within it of caste prejudice.
V. S. Azariah also became a champion of ecumenism among the Churches of South India. So, he took the initiative for both Indianization and indigenization of Christianity in India. He believed that the Church's mission should express its unity, and thus continued to take a leading role in negotiating to reunite Protestant Christian missions in India.
Bishop V.S Azariah saw the CSI(Church of South India) just like Moses who viewed the Promised Land before his death. But he moved on to eternal glory on January 1, 1945 in Dornakal. Two years later of of Azariah’s dreams was realized and the historic creation of the CSI was formed in 1947.
Bishop Azariah became the first, and remained the only native Indian bishop of an Anglican diocese from 1912 until his death in 1945. The diocese's only college, Bishop Azariah College in Dornakal, is also named for him. The girls' school which he established was also renamed in his honor. The secondary school in his native Vellalanvilai is also now named in his honor. Even though Bishop V.S. Azariah went to the glory, his life still speaks today.
Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.