===========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
கிறிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் (1726-1798)
==============================
சுவாட்ஸ் அவர்கள் போலந்து தேசத்தில் 1726 ம் ஆண்டு அக்டோபர் 26 ம் நாள் ஜார்ஜ் மற்றும் மார்கரெட் தம்பதியினருக்கு மகனா பிறந்தார். சிறுவயதிலேயே தாயாரை இந்த சுவாட்ஸ் அவர்களை அவருடைய தந்தைய மிஷனெரி தரிசனத்தை கொடுத்து பக்தியிலும், ஒழுக்கத்திலும் வளர்த்துவந்தார்.
சுவாட்ஸ் அவர்கள் தன்னுடைய வாலிய வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நற்செய்திபணி செய்வதற்கு ஆயத்தமாக 1746 ம் ஆண்டு ஜெர்மனி தேசத்தில் உலகப புகழ் பெற்ற ஹாலே வேதாக கல்லூரியில் சேர்ந்து எபிரேயம், லத்தீன், கிரேக்கு மற்றும் ஆங்கில மொழிகளில் வேதாகமத்தையும் இறையியல் படிப்பையும் கற்று கொண்டிருந்த நேரத்தில் இவருடைய ஜெர்மன் மிஷனெரி நண்பர் ஷீல்ஸ் அவர்கள் தமிழ் மொழி வேதாகமத்தின் புதிய மொழிபெயர்ப்பு செய்யவும் மற்றும் புதிய பதிப்பினை செய்யவும் தமிழ்நாட்டிற்கு வந்து உதவும்டி அன்போடு அழைத்தார். ஆகவே சுவாட்ஸ் அவர்கள் இதை ஆண்டவரின் அழைப்பாக ஏற்றுக்கொண்டார்.
ஆகவே சுவாட்ஸ் அவர்கள் தன்னுடைய வேதாக கல்லூரியின் இறையியல் படிப்பிற்கு பின்னர் ஜெர்மனியில் ஒரு லூத்திரன் திருச்சபையில் 1749 ம் ஆண்டு குருவானவராக அருட்பொழிவு பெற்று பின்னர் ஆங்கில அரசாங்கத்தின் கிழக்கு இந்திய கம்பெனி கப்பல் மூலம் பல ஆபத்தான புயலுக்கு மத்தியில் கடல் பயணம் மேற்கொண்டு ஜெர்மன் லூத்தரன் மிஷனெரியாக தன்னுடைய 24 ம் வயதில் 1750 ம் ஆண்டு ஜுன் மாதம் 17 ம் நாள் கடலூரில் தரையிறங்கி பின்னர் தரங்கம்பாடியில் சீகன்பால்கு மூலம் ஆரம்பிக்கப்பட்ட டேனிஷ் மிஷன் பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தார்.
சுவாட்ஸ் ஐயர் தரங்கம்பாடி வரும்போது பர்தொலாமேயு சீகன்பால்கு அவர்கள் மூலமாக 1700 பேர் கிறிஸ்தவர்களாக இருந்தது நற்செய்திபணி செய்வதற்கு இன்னும் ஊக்கம் கொடுத்தது. சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தரங்கம்பாடியில் வெகுசீக்கிரத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்துஸ்தானி, பாரசீகம், மராத்தி, ஸ்பேனிஷ் மொழிகளை நன்கு கற்றுக்கொண்டார். இதற்கு இடையே முஸ்லிம் மக்களிடமும் நற்செய்திபணி செய்ய வசதியாக உருது மொழியையும் கற்றுக்கொண்டார்.
சுவாட்ஸ் ஐயர் அவர்கள் பல மொழிகளில் நற்செய்தி அறிவித்து அநேகரை நண்பர்கள் ஆக்கிக்கொண்டார். மேலும் அநேகர் இவருடைய நற்செய்தி பணியினால் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தரங்கம்பாடியில் 11 வருடங்கள் சீகன்பால்கு விட்டுசென்ற நற்செய்திபணியை மிகவும் அற்பணிப்போடு செய்து அநேக ஆத்தும ஆதாயம் செய்தார்.
நேர்மைக்கும் நல்லொழுக்கத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டார் சுவாட்ஸ் ஐயர் நற்செய்திபணி செய்தார். எளிய வாழ்க்கையாலும் சுய தியாகத்தினாலும் அனைத்து தரப்பினரும் அவரை அணுக வசதியான நற்பெயரை ஏற்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் 1762 ம் ஆண்டு திருச்சி சென்ற வழியில் அங்கிருந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் அவரை அன்போடு அழைத்து, SPCK மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் ஆங்கிலேய இராணுவ வீரர்களுக்கு குருவானவராக (சேப்ளின்) இருந்து இறைபணி ஆற்றவும் அப்படியே தமிழ் மக்கள் மத்தியில் நற்செய்திபணி செய்யவும், அவர்களுக்காக ஆலயங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாகவும் கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்டு சுவாட்ஸ் ஐயர் அவர்கள் திருச்சியில் 10 ஆண்டுகள் நற்செய்திபணி செய்து அநேக ஆத்துமா ஆதாயம் செய்தார். ஐரோப்பிய பிள்ளைகளுக்கு என்று 1761 ம் ஆண்டு திருச்சியில் பிஷப் ஹீபர் கல்விகூடத்தை நிறுவினார். மேலும் 1763 ம் ஆண்டு திருச்சியில் *தூய யோவான் ஆலயம் கட்டி அங்கு கள்விகூடத்தை நிறுவினார். இதில் ஏராளமான கிறிஸ்தவ பிள்ளைகள் கல்வி கற்றார்கள்.
சுவாட்ஸ் ஐயர் அவர்கள் ஆங்கிலேய இராணுவ குருவானவராக பணியாற்றியதால் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், பாளையங்கோட்டை முதலிய இடங்களுக்கு சென்று போதனை செய்யவும், திருவிருந்து ஆராதனை நடத்துவதற்கு அடிக்கடி செல்வதுண்டு. ராமநாத புரத்தில் ஒரு கல்விகூடத்தை நிறுவினார். இந்த பள்ளியில்தான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகனை மனிதர் என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம் அவர்கள் படித்தவர் என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் சத்திய மங்கலம், கரூர், திண்டுக்கல், பழனி, நாகப்பட்டினம் மற்றும் பவானி வரை சென்று நற்செய்திபணியை அற்பணிப்போடு செய்தார். இப்படியாக அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்தார்.
குருவானவர் சுவாட்ஸ் அவர்களின் இடைவிடா நற்செய்திபணியினாலும் கடினமான உழைப்பினாலும் கடவுளின் கிருபையும் வழிநடத்துதலும் அதிகமாக இருந்ததால் திரள் கூட்டமான ஜனங்கள் இந்து மதம் மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு என்று சுவாட்ஸ் ஐயர் பல ஆலயங்களை கட்டி, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த உபதேசியார்களையும் நியமித்தார். இதில் உத்தம பாளையத்தை சேர்ந்த உபதேசியார் திரு. கற்பகம் சத்தியநாதன் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் உயிருள்ள உபதேசியாராக, உற்சாமுள்ள உபதேசியாராக, உண்மையாய் ஊழியம் செய்யும் உபதேசியாராய் காணப்பட்டார்.
தஞ்சாவூரிலிருந்து சுவாட்ஸ் ஐயர் அவர்கள் அனுப்பிய உபதேசிமார்கள், கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் பகுதியில் நற்செய்திபணியை அறிவித்தார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர் மகராசன் வேதமாணிக்கம் என்பவர் ஆவார். இவருடைய முன்னோர்கள் தஞ்சாவூர் பகுதியில் பனையேறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் சுவாட்ஸ் ஐயரின் நற்செய்தி பணியினால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். மகாராசன் வேதமாணிக்கம் என்பவர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி பகுதியில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
சுவாட்ஸ் ஐயர் அவர்கள் சபை உபதேசியார்களை உற்சாகப்படுத்தி அவர்களுடன் காலையிலும் மாலையிலும் ஜெபம்செய்து அவர்கள் மூலமாய் பல கிராமங்களிலும் பட்டணங்களிலும் நற்செய்திபணி அறிவித்து வந்தார்.
சுவாட்ஜ் ஐயர் அவர்களில் காலத்தில் (1770-1795) தமிழ் நாட்டிலும் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. பல நேரங்களில் ஆங்கிலேய அரசாங்கம், சுவாட்ஸ் ஐயர் அவர்களை சமாதான தூதுவராக பயன்படுத்தி இனக்கமான சூழ்நிலையை உறுவாக்கி, போர் ஏற்படும் பதட்டத்தை தனித்தார்கள்.
இந்நிலையில் 1773 ம் ஆண்டு தஞ்சாவூரை, ஆர்காடு நவாப் தலைமையில் படையெடுத்து வந்து, தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் வட்டாரங்களை அழித்து, தீக்கொழுத்தினார்கள். இதனால் உண்டான போர், பஞ்சம், பசி, பட்டினி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மரித்தார்கள். ஆகவே தொற்றுநோய் ஏற்பட்டு 7,000 த்திற்கும் அதிகமானோர் மரித்தார்கள் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.
இந்நிலையில் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் ஆங்கிலேய அரசாங்க உதவியின் மூலம் தஞ்சாவூர் பகுதி மக்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஆதரவாக இருந்து உணவு பஞ்சத்தை தடுத்து நிறுத்தி, ஆயிரக்கணக்கான ஜனங்களை காப்பாற்றினார். ஆகவே அநேக மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இதன் மூலம் சுவாட்ஸ் ஐயர் அவர்களின் பெயரும் புகழும் பெறுகியது. இது நற்செய்திபணி அறிவிப்பதற்கு இன்னும் உதவியாக இருந்தது. தஞ்சாவூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அதிகமாக உழைத்தார். ஆகவே அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்காக ஆலயங்களையும் கல்விகூடங்களையும் நிறுவினார்.
இந்நிலையில் 1778 ம் ஆண்டு பாளையங்கோட்டை பகுதியில் இருந்த ஆங்கிலேய இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும், திருவிருந்து ஆராதனை நடத்தவும் அவர்களுக்கு திருமண ஆராதனைகள் நடத்துவதற்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் பாளையங்கோட்டையில் கோகிலா என்ற பிராமண பெண் ஆங்கிலேய கர்னல் லிட்டில்டான் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் சுவாட்ஸ் ஐயர் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால் சுவாட்ஸ் ஐயர் கோகிலா ஆங்கிலேய கர்னலின் வைப்பாட்டியாக இருந்ததினால் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூர் திரும்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் 1778 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே விஜயராம புரத்தில் வசித்து வந்த சின்னமுத்து என்ற ஒரு வாலிபன் அவருடைய தாய்மாமா வளர்ப்பில் இருந்தபோது, வீட்டில் அத்தையுடன் சண்டை போட்டுவிட்டு கருப்பட்டி கொண்டு செல்லும் மாட்டு வண்டி மூலம் இராஜபைளையம் வழியாக தஞ்சாவூருக்கு ஓடிப்போனான். பின்னர் அங்கு சுவாட்ஸ் ஐயரிடம் வேலைக்கு சேர்ந்தார். அவர் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதிதானால் அவனுக்கு தாவீது சுந்தரானந்தம் என்று ஞானஸ்நானம் கொடுத்தார். அத்துடன் தான் எங்கு சென்றாலும் தாவீது சுந்தரானந்தத்தையும் ஊழியத்திற்கு அழைத்து செல்வார்.
இந்நிலையில் 1779 ம் ஆண்டு மீண்டும் சுவாட்ஸ் ஐயர் தஞ்சாவூரில் இருந்து பாளையங்கோட்டை வந்து அங்கிருந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும், திருவிருந்து ஆராதனை நடத்தவும் மேலும் சிலருக்கு திருமணம் செய்து வைக்கவும் வந்தார். அப்போது கோகிலா சுவாட்ஸ் ஐயரிடம் வந்து ஆங்கிலேய கர்னல் லிட்டில்டன் இங்கிலாந்தில் மரித்துவிட்டதாகவும், ஆனால் தான் கிறிஸ்துவை விட்டுவிடவும் இல்லை என்று கூறி தன் விசுவாசத்தை வெளிப்படுத்தி ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள். கோகிலாவின் பக்தியையும் நற்குணங்களையும் கேள்விப்பட்ட சுவாட்ஸ் ஐயர் அவர்கள் 1779 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ம் தேதி கோகிலாவுக்கு ராயல் குளோரிந்தா என்று ஞானஸ்நானம் கொடுத்தார். இந்த குளோரிந்தா தான் திருநெல்வேலியின் முதல் தமிழ் கிறிஸ்தவர் ஆவார்.
பின்னர் குளோரிந்தா அவர்கள் நற்செய்திபணியை பாளையங்கோட்டையில் செய்ய ஆரம்பித்து அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். ஆகவே பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த ஒரு உபதேசியாரை அனுப்பும்படி குளோரிந்தா அவர்கள் சுவாட்ஸ் ஐயர் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களோடு தாவீது சுந்தரானந்தம் என்ற வாலிபனையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
இவர்கள் திருநெல்வேலி பகுதிகளில் நற்செய்திபணி செய்து அவர்கள் மூலமாக பாளையங்கோட்டையில் குளோரிந்தா அவர்கள் ஒரு ஆலயத்தை கட்டி அதை 1785 ம் ஆண்டு ஆகஸ்டு 24 ம் தேதி சுவாட்ஸ் ஐயர் குளோரிந்தா ஆலயம் என்று பெயர்சூட்டி அந்த ஆலயத்தை மங்கள பிரதிஷ்டை செய்து, அதில் முதல் ஞானஸ்நான ஆராதனையையும் நடத்தினார். அப்போது 40 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். இதுதான் திருநெல்வேலி பகுதி கிறிஸ்தவர்களுக்கு முதல் ஆலயம் ஆகும்.
இவர்களின் நற்செய்தி பணியினால் அப்போது தாழ்த்தப்பட்ட பனை ஏறும் அநேக சாணார் குல மக்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். பின்நாட்களில் சுவாட்ஸ் ஐயர் 1790 ம் ஆண்டு உபதேசியாராக இருந்த திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களை திருநெல்வேலி பகுதிக்கு குருவானவராக அருட்பொழிவு செய்து வைத்தார். இதன் மூலம் அநேக ஆலயங்கள் கட்டப்பட்டன.
சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்திப ணியினால் தஞ்சாவூரில் மிகப் பெரிய ஆலயத்தை கட்டி 1780 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் நாள் அதற்கு தூய பேதுருவின் ஆலயம் என்று மங்கள பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவர்களில் பிரபலமானவர்கள் தஞ்சாவூரில் வேதநாயகம் சாஸ்திரியார் குடும்பத்தினர் ஆவார்கள். பின்னர் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூரில் தாம் நிறுவிய தமிழ் பள்ளிகூடத்திற்கு வேதநாயகம் சாஸ்திரியாரை தலைமை ஆசிரியராக நியமித்தார். இக்கால கட்டத்தில் வேதநாயகம் சாஸ்திரியார் சிறந்த தமிழ் கவிஞராக இருந்ததினால் பல பக்திபாடல்களை இயற்றினார். இவைகள் நற்செய்திபணி செய்வதற்கு பிரயோஜனமாக இருந்தது.
மேலும் சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூரில் ஆரோன், சந்தியாகு மற்றும் இராஜநாயகம் போன்ற சிறந்த சபை உபதேசியார்கள் ஆகியோரின் நற்செய்திபணி மூலம் அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இவர்கள் மூலமாக பல கிராமங்களில் நற்செய்திபணி அறிவிக்கப்பட்டது. அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
1784 ம் ஆண்டு தஞ்சாவூரில் புது கிறிஸ்தவர்களுக்கு என்று தூய பேதுரு பள்ளி நிறுவி இறைபோதனைகளையும், தமிழ் மற்றும் மேல்நாட்டு கல்வி பாடங்களை கற்று கொடுத்தார். இதில் அநேக உபதேசியார்களை பணியமர்த்தி, அவர்களுக்குரிய சம்பளத்தை தன் சொந்த பணத்திலிருந்தே கொடுத்தார்.
இந்நிலையில் 1785 ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும் மைசூரை ஆண்டுகொண்டிருந்த ஹைதர் அலியுடன் யுத்தம் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே ஆங்கிலேயர்கள் சூவாட்ஸ் ஐயரை சமாதான தூதுவராக அனுப்பினார்கள். சுவாட்ஸ் ஐயர் ஹைதர் அலியுடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு பெரிய யுத்தத்தை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் காப்பாற்றினார்.
1769 ம் ஆண்டு தாழ்மை, தூய்மை, அன்பு, எளிமை, இரக்கம் நிறைந்த சுவாட்ஸ் ஐயருக்கு தஞ்சாவூரை ஆண்டு கொண்டிருந்த மராட்டிய மன்னர் துளசி மகாராஜா, சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்திபணி, கல்விப்பணி மற்றும் சமுதாய பணியினால் ஈர்க்கப்பட்டு சுவாட்ஸ் ஐயர் அவர்களோடு நெருங்கிய நட்புறவு உண்டாயிற்று. சுவாட்ஸ் அவர்கள் விரைவாக இந்த மன்னனின் நம்பிக்கையை பெற்றார். இதை நற்செய்திபணிக்கு சரியாய் பயன்படுத்திக் கொண்டார்.
சுவாட்ஸ் ஐயர் அவர்களை தஞ்சாவூர் மராத்திய மன்னன் அரசாங்கத்தின் ஆலோசகராகவும் நியமித்துக்கொண்டார். இந்த மன்னனுடைய வாரிசு 10 வயதாக இருந்தபடியினால் சுவாட்ஸ் ஐயரை அரசாங்கத்தை நடத்தும்படி அன்பாய் கேட்டுக்கொண்டார். ஆனால் சுவாட்ஸ் அவர்கள் நற்செய்தி பணியினிமித்தம் இவருடைய அன்பான கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆகவே துளசி மன்னர் இறக்கும்முன்னர் அவருடைய பத்து வயதான மகன் சரபோஜி இளவரசனுக்கு ராஜகுருவாக சுவாட்ஸ் ஐயரை நியமித்தார். இதை சுவாட்ஸ் ஐயர் ஏற்றுக்கொண்டார்.
சுவாட்ஸ் ஐயரும் சரபோஜி இளவரசனை தன் மகன் போல பாவித்து நல்ல ஆலோசனைகளை கொடுத்து, இராஜ தந்திரங்களை கற்றுக்கொடுத்து, மக்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை கொடுத்து, அத்துடன் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். சரபோஜி இளவரசசனும் சுவாட்ஸ் ஐயரிடம் தன் பாசத்தை வெளிப்படுத்தும்படி தஞ்சாவூரில் ஒரு பெரிய ஆலயத்தை கட்டிக்கொடுத்தார். அத்துடன் சுவாட்ஸ் அவர்களை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தினான். அநேக கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை வாய்பினை கொடுத்தான்.
இந்நிலையில் சுவாட்ஸ் ஐயர் தஞ்சாவூர் பகுதி மக்களுக்காக திருமணம் செய்து கொள்ளாமல், இரவும் பகலும் நற்செய்திபணி, கல்விப்பணி மற்றும் சமுதாயபணிகளை 48 ஆண்டுகள் இடைவிடாமல் செய்து, ஒருமுறையேனும் கூட தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பி செல்ல விரும்பாமல், தன்னுடைய 72 ம் வயதில் 1798 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ம் நாள் பல அனாதை குழந்தைகளுக்கு தகப்பனாகவும், திக்கற்ற பெண்கள், விதவைகள் போன்றோருக்கு ஆதரவாக இருந்தவர் நித்திய இழைப்பாறுதலுக்கு கடந்து சென்றார்.
தஞ்சாவூர் சரபோஜி மன்னன், தான் சுவாட்ஸ் ஐயரின் மாணவன் என்பதாலும், தாம் அரசனாக அரியணையில் அமருவதற்கு நல்ல ராஜகுருவாய் இருந்ததினால், கனம் சுவாட்ஸ் ஐயரின் சரீரத்திற்கு தங்க சரிகைப் போர்வை அணிவித்து மரியாதை செய்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியும் சுவாட்ஸ் ஐயரை கௌரவபடுத்த 1798 ம் ஆண்டு சென்னையில் உள்ள தூய மேரி தேவாலயத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து நன்றி செலுத்தியது. இறுதியாக சுவாட்ஸ் ஐயர் அவர்களின் சரீரம் தஞ்சாவூரில் அவரால் கட்டப்பட்ட தூய பேதுருவின் ஆலயத்தில் கோதுமை மணியாய் விதைக்கப்பட்டது.
சுவாட்ஸ் ஐயரின் மரணத்திற்கு முன்னர் சுமார் 8,000 க்கும் அதிகமான ஆத்துமாக்களை ஆதாயம் செய்து தேவ இராஜியத்தை தரங்கம்பாடி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் கட்டினார். வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியமாக கருதிய சுவாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூர் பகுதி தாழ்த்தப்பட்ட ஏழை எளிய பாமரமக்களின் வாழ்க்கையை உயிரடையச் செய்திருந்தார். இவருடைய புகழ்பெற்ற வாசகம் விருப்பம் இல்லாத காரியம் எதிர்படும்போது ஒருமணிநேரம் வேதத்துடன் ஒட்டிக்கொள் என்பதாகும்.
தமிழ்நாட்டு திருச்சபை சரித்திரத்தில் கிரிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் அவர்கள் தென் இந்தியாவின் அப்போஸ்தலன் என்ற பெயரொடு தஞ்சாவூர் பகுதி சுற்றுவட்டார மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அத்துடன் திருநெல்வேலியின் தந்தை என்றும் பாசமாக அழைக்கப் படுகின்றார். இதை வாசீக்கின்ற அன்பரே நீங்கள் கிறிஸ்துவின் இராஜ்ஜியம் செய்த தியாகம் என்ன???
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
=========================
The Gospel Pioneers:
Christian Fredrich Schwartz (1726-1798)
============================
Christian Frederich Schwarz was born on 26 October 1726 in Prussia. At the age of 20, Schwartz entered the University of Halle. While becoming proficient in Hebrew, Greek, and theology, he met his friend Schultz, who had just returned from the Danish mission at Tranquebar, and invited Schwartz's help in his new edition of the Tamil Bible.
Schultz inspired Schwartz with a wish to become a missionary, and Schwartz proposed that he wants to go out to Tranquebar Misssion. He received ordination at Copenhagen on 8 August 1749, and after spending some time in England to acquire the English language; they sailed in an East India vessel, and after stormy weather, landed on 17 June, 1750 at the Danish settlement of Tranquebar on the Coromandel coast of India.
Schwartz benefited from the work of Bartholomäus Ziegenbalg(1683-1719) and Heinrich Plütschau (1678-1747). The Tamil-speaking Christian community established by Ziegenbalg and others exceeded seventeen hundred persons.
When Schwartz arrived in Tranquebar, his first business was to learn Tamil. He served for 12 years at Tranquebar, his power of acquiring languages was remarkable, and he began to speak fluently Tamil, Telugu, Sanskrit, Persian, Marathi, as well as German, English, and Portuguese. He learned Urdu in order to converse with Muslims, in particular, the representatives of the ruling prince.
In 1762, he visited Trichirapalli, which was then held by a large English garrison under Army Major Preston. The Major Preston and the other officers welcomed Schwartz warmly, and offered to build a mud house for a school and church.
In 1764, at Preston's request, he accompanied his troops to the siege of Madurai as chaplain, and received for his care of the sick and wounded. The Army Preston actively aided to build a stone church in the Trichy Fort; and a substantial structure, capable of holding fifteen hundred people, was dedicated as Christ's Church on 18 May 1766. Later, a mission-house and English and Tamil schools were added.
In 1767, Schwartz was sponsored by the Anglican Society for the Promoting Christian Knowledge, London. In 1768, the East India Company appointed Schwartz as a chaplain in Trichi.
Ten years later, Schwartz moved to Tanjore.
With his linguistic skills and engaging manner, Schwartz won the hearts of Hindus, Muslim and European nationalities in India. During his service with the British, Schwartz was known as a peacemaker (i.e., diplomat) during times of war caused by the East India Company's aggressive policies in India.
In 1773, the storming of Thanjavur by the Aarcot Nawab’s forces brought suffering to many people in that city. Schwartz came to them and began to organize relief efforts. When no grain could be obtained and people were starving, his simple word was sufficient to underwrite loans and stabilize prices. Without such surety, grain would not come onto the market, and food purchases for masses who were dying from family would not have occurred.
Schwartz dedicated his life to the cause of poor people regardless of religion. His efforts to help the poor and suffering, brought recognition and his fame spread.
Schwartz contributed significantly to the strengthening of an indigenous church in Tirunelveli. He made every effort to find and train young Indians for the ministry, often supporting them from his own pocket. He also encouraged the spontaneous expansion of small groups of Christians, such as those discovered during a visit to Palayamkottai in 1778, the nucleus of what later became the large and vigorous Tirunelveli church.
In 1777, an affluent Brahmin woman Kokilla, resident at Palayamkottai, who was cohabiting with an English officer, learnt from him the doctrines of Christianity, but when she applied to Schwartz for baptism, she was of course refused.
In 1778, after the officer's death, she applied again; and Schwartz, having satisfied himself as to her sincerity, baptized her at Palayamkottai under the name of “Clarinda”.
When Clarinda later made a personal endowment to pay for construction of a proper school building for the new congregation, Schwartz sent Satyantan Pillai, one of his most gifted catechists to serve as a permanent resident pastor-teacher. When the congregation grew rapidly, Satyanathan was formally ordained in 1790; who was the first Tamil evangelical to be so designed.
In 1799, Satyanathan joined David Sundarandam, a local and disciple who had come from the lowly Shanar(Nadar) community, in organizing one of India’s earliest modern “Mass Movements” of the conversion to Christianity in Tirunelveli.
Schwartz went to Thanjavur and established an English school known as St. Peter's Higher Secondary School. He established a school in every local congregation. In these schools the teaching of Christianity was a conspicuous element.
Schwarz was also responsible for the education of Vedanayagam Sastri, son of a catechist who was trained under Schwartz; Vedanayagam became one of the greatest Tamil poets and hymn composers. Three Tamil preachers, Aaron, Diago and Rajanayagam began to serve local congregation and they provided basic literacy for believers in each congregation.
Schwartz also tried to be of use to the British, who on one occasion sent him as a special envoy of peace to Haider Ali, the despot of Mysore. Schwartz returned with respect for the Muslim ruler but complained of the insincerity and avarice of the British.
Another remarkable aspect of Schwartz’s ministry is when he had moved to Thanjavur, he had secured the friendship of the Marathi king Raja Tuljaji, who, although he never converted to Christianity, afforded him every countenance in his missionary labours.
When Tulaji Rajah died, Schwartz became the raju-guru(i.e., protector and regent) for Serfoji, Tulaji Rajah's adopted son. Schwarz taught the Prince Serfoji, and he came to view Schwartz as a father figure. In his last illness Schwartz gave the young man his blessing, bidding him to rule justly, be kind to the Christians, and forsake his idols for the true God. Serfoji also promised to take care of the Christian community of Thanjavur.
Schwartz died on 13 February 1798 and his body laid to rest in St. Peter's Church in Thanjavur. At Schwartz's memorial service, Serfoji composed and read a eulogy in English; he also had a monument to Schwartz erected in Christ Church, Tanjore.
King Serfoji built a church to show his affection to Schwartz and it is still seen as a symbol of tolerance towards different religions.
Schwartz worked in Tranquebar, Trichinopoly, and Tanjore, for forty-eight consecutive years without returning to his native Prussia.
At his death in 1798, the East India Company erected a monument honoring Schwartz in St. Mary's Church, Madras. Schwartz was a German Lutheran missionary to India, who was mainly instrumental in the development of Tamil Evangelical Protestant Christianity. By the time of his death, Schwartz was effective in gaining over six thousand Indian converts--both Hindus and Muslims. The Church missions referred to Schwartz as the apostle to South India after which William Carey became the apostle to North India.