=====================================================
விசுவாசிகளின் பரலோக உடைமைகள்
பூலோக பொறுப்புகள்
Believer's Heavenly possessions
Earthly responsibilities
=====================================================
_Believer's three worlds.._
விசுவாசிகள்
_மூன்று உலகங்களை_ குறித்து அறிந்து செயல் பட வேண்டும்..
1. பூலோகம்
2. இனி வரும் உலகம்
3. பரலோகம்
===========================
_இனி வரும் உலகத்தை குறித்து பேசுகிறோமே_ ?
_இவ்வுலகில் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுங்கள்_ ..
===========================
1. _பரலோகத்தில் ஒரு இரட்சகர் இருக்கிறார்_ ..
_A saviour is in Heaven.._
இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.
அப்போஸ்தலர் 5:31
*பூலோகத்தில் இரட்சகர் வர எதிர்பார்த்திருங்கள்* ..
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோ ம்.
பிலிப்பியர் 3:20
------------------------------ ----------------------
2. _பரலோகத்தில் ஒரு எஜமான் இருக்கிறார்_ ..
_A master is in Heaven_ ..
எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்டசபாதம் இல்லையென்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
எபேசியர் 6:9
*பூலோகத்தில் எஜமான் சித்தத்தை அறிந்து செயல் படுங்கள்* ..
அவன் நடுங்கித் திகைத்து; ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்; நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
அப்போஸ்தலர் 9:6
------------------------------ ----------------------
3. _பரலோகத்தில் நாமங்கள் எழுதப்பட்டிருக்கிறது_ ..
_Names written in Heaven_ ..
ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
லூக்கா 10:20
*பூலோகத்தில் சுவிசேஷத்தில் பிரயாசப்படுங்கள்* ..
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
பிலிப்பியர் 4:3
------------------------------ ----------------------
4. _பரலோகத்தில் குடியிருப்பு இருக்கிறது.._
_Our citizenship is in Heaven_ ..
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
எபிரேயர் 12:22
*பூலோகத்தில் பரலோக குடியுரிமை பற்றோடு வாழுவோம்* ..
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோ ம்.
பிலிப்பியர் 3:20
------------------------------ ----------------------
5. _பரலோகத்தில் நம்பிக்கை இருக்கிறது._ .
_Hope is in Heaven.._
பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
கொலோசெயர் 1:4
*பூலோகத்தில் மறுபடியும் பிறத்தல் நம் அனுதின அனுபவமாக வேண்டும்.* .
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 3:3
------------------------------ ----------------------
6. _பரலோகத்தில் சுதந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது_ ..
_Inheritance is in Heaven.._
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 1:5
*பூலோகத்தில் உன்னத ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்* ..
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
எபேசியர் 1:3
------------------------------ ----------------------
7. _பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்_ ..
_Reward is in Heaven.._
அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
லூக்கா 6:23
*நம்முடைய கிரியைகள் பரலோக நிஜமாக பூலோகத்தில் நிழலாக இருக்கிறதா* ???
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12
------------------------------ ----------------------
8. _பரலோகத்தில் ஒரு மனம் இருக்கிறது_ ..
_Oneness is in Heaven.._
அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18. 19
*பூமியிலே ஒருமனப்படுங்கள்* ..
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18.20
------------------------------ ----------------------
*Closing thought..*
_Heavenly possession.._
*பரலோக உடைமைகள்..*
*பரலோகத்தில்* உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
_Earthly Desire.._
*பூலோக விருப்பம்..*
*பூலோகத்தில்* உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
சங்கீதம் 73.25
Whom have I in heaven but thee? and there is none upon earth that I desire beside thee.
Psalms 73:25