பரிசுத்தமாகவும் நீதியாகவும் நாம் வாழ வேண்டும் | கர்த்தருடைய ஊழியக்காரனை கர்த்தர் தாங்கி பிடிக்க வேண்டுமானாலும்; கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரன் பரிசுத்தமாகவும் நீதியாகவும்; சத்தியத்தை சத்தியமாக பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும் | கோளிகை கழுதை | உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் | பரிசுத்தவான்களுக்கு தேவன் தரிசனமாவார்
=======================
பரிசுத்தமாகவும் நீதியாகவும் நாம் வாழ வேண்டும்
========================
*வசன வாசிப்பு*
1 தீமோத்தேயு 3:16
மாற்கு 6:20
1 தெச 5:23
*சத்தியம்*
*பிழையில்லாத* *பரிசுத்தமான ஜீவியத்தைக்* *காத்துக்கொள்ளுங்கள்*
இன்றைய சத்தியத்திற்குரிய தலைப்பு :
*இயேசு கிறிஸ்துவின்* *ஆவியில் நீதி காணப்பட்டது*
1 தீமோத்தேயு 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது.
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்
மேலே உள்ள வசனத்தை பாருங்கள்
*வெளிப்பட்டார்*
*விளங்கப்பட்டார்*
*காணப்பட்டார்*
*பிரசங்கிக்கப்பட்டார்*
*விசுவாசிக்கப்பட்டார்*
*எடுத்துக்கொள்ளப்பட்டார்*
*கிருபையும் சத்தியமும்* *நிறைந்தவராக இயேசு* *கிறிஸ்து பிறந்தார்*
*மனிதனை பரிசுத்தப்படுத்த*
*இயேசு கிறிஸ்து மனிதனாக*
*பிறந்தார்*
*சாட்சியோடு அவர்* *வாழ்ந்தார்*
*பிதாவின் சுபாவங்களை*
*அவர் வெளிப்படுத்தினார்*
*பரிசுத்தமாக அவர் பிரசங்கம்* *பண்ணினார்*
*தேவகுமாரன் என்று அவர்* *தன்னை* *உறுதிப்படுத்தினார்*
*பரலோகத்திற்கு அவர்* *எடுத்துக்கொள்ளப்பட்டார்*
இந்த வழிமுறைகளுக்கு என்ன காரணம் ?
1 தீமோத்தேயு 3:16 ,
அதே வசனம் இயேசு கிறிஸ்து பற்றி என்ன பேசுகிறது ?
*தேவன் மாம்சத்திலே* *வெளிப்பட்டார், ஆவியிலே* *நீதியுள்ளவரென்று* *விளங்கப்பட்டார்*
(1 தீமோத்தேயு 3:16 )
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
இயேசு கிறிஸ்து மனித மாம்சமாகி : கிருபையினாலும் சத்தியத்தினாலும்
நிறைந்தவராக அவர் இந்த பூமியில் காணப்பட்டார்
அவருக்குள் ஜீவன் இருந்தது ;
அந்த ஜீவன் மனுஷனுக்கு ஒளியாக மாறியது
அவர் இந்த பூமியில் பரிசுத்தமாகவும் நீதியாகவும் வாழ்ந்தார்
*இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வாழ்ந்த நாட்களில்* *அவருடைய ஆவியில் கபடம்* *காணப்படவில்லை என்பதை ஆழமாக சொல்லுகிற* *வேதப்பகுதியை தான் நாம்* *இப்பொழுது வாசித்தோம்*
*இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் ஆனால்* *அவருடைய ஆவியில்* *தேவநீதியை காணப்பட்டது* *அவருடைய பரிசுத்தத்தை* *இந்த உலகம் கண்டது*
*இயேசு கிறிஸ்துவின்* *ஆவியில் நீதி காணப்பட்டது*
அவருக்குள் இருந்த பரிசுத்தம் நீதி இன்று மனிதனை நல்வழிப்படுத்துகிறது
அவருக்குள் இருந்த நல்மனசாட்சியுள்ள ஜீவியம் ; இன்று மனிதனுடைய பாவங்களை முற்றிலும் அது கழுவுகிறது
ஆவி ஆத்துமா சரீரம் என்கிற மூன்று தன்மைகள் மனிதனுக்குள் காணப்படுகிறது
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்,
சத்திய வசனங்கள் ,
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்,
ஆகிய மூன்றும் மனிதனை பரிசுத்தப்படுத்தவே ;
தேவன் தந்த நல்ல ஈவு என்று அது அழைக்கப்படுகிறது
மனிதனுக்குள் இருக்கும் ஆவி கர்த்தர் தந்த தீபம் என்று அழைக்கப்படுகிறது
கர்த்தர் நமக்கு தந்த
மனித ஆவியில் பரிசுத்தமும் நீதியும் காணப்பட வேண்டும்
*சாட்சி*
யோவான் ஸ்நானகன் என்கிற ஊழியக்காரனை சாட்சியாக
நாம் இப்பொழுது எடுத்துக்கொள்ளலாம்
மாற்கு 6:20
அதேனென்றால்
*யோவான் நீதியும்* *பரிசுத்தமுமுள்ளவனென்று* ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
மேலே உள்ள வசனத்தை படியுங்கள் :
*யோவான் என்கிற* *ஊழியக்காரனுக்குள் நீதியும் பரிசுத்தமும் காணப்பட்டது*
அவனுடைய மனித ஆவியில் , இயேசுவுக்குள் இருந்த பரிசுத்தம் நீதி காணப்பட்டது
யோவானைக் குறித்து இயேசு கிறிஸ்து வேதத்தில் நல்ல சாட்சி கொடுத்துள்ளார்
யோவானைப்போல பரிசுத்தமாகவும் நீதியாகவும் நாமும் இந்த பூமியில் வாழ்ந்து இயேசு கிறிஸ்துவிடம் சாட்சி பெற வேண்டும்
நம்முடைய ஆவி ஆத்துமா
சரீரம் முழுவதும் பரிசுத்தம் காணப்பட வேண்டும்
ஒரு வசனத்தை நாம் வாசிக்கலாம்
1 தெசலோனிக்கேயர் 5:23
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.
உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
மேலே உள்ள வசனத்தை படித்துப்பாருங்கள் அதில்
*முற்றிலும் பரிசுத்தம்* என்கிற வார்த்தைகளை கவனியுங்கள்
*முற்றிலும் பரிசுத்தம்*
பேச்சு மூச்சு சிந்தை பார்வை நடக்கை எல்லாவற்றிலும் பரிசுத்தம் காணப்பட வேண்டும்
அதே சமயம்
ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் பரிசுத்தம் காணப்பட வேண்டும்
1 தீமோத்தேயு 3 : 16 −வது வசனத்தின்படி நம்முடைய ஆவியில் *நீதி* காணப்பட வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:23−வது வசனத்தின்படி நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் *பரிசுத்தம்* காணப்பட வேண்டும்
தேவனுக்கு முன்பாக பிழையில்லாத பரிசுத்த ஜீவியம் நமக்குள் காணப்பட வேண்டும்
யோவான் ஸ்நானகனுக்கு இயேசு கிறிஸ்து வேதத்தின் மூலமாக சாட்சிக் கொடுத்துள்ளார்
யோவான் : பரிசுத்தமும் நீதியும் நிறைந்தவனாக இருந்தப்படியால் ஏரோது ராஜா அவனைக் கண்டு பயந்தான்
அப்போஸ்தலர் 3 : 14 −வது வசனத்தில் இயேசுவை பற்றின சாட்சியை பாருங்கள்
இயேசுவின் சீஷர்கள் இயேசுவைக்குறித்து கொடுத்துள்ள சாட்சியை
பாருங்கள்
பரிசுத்தமும் நீதியும் இயேசுக்குள் இருந்தது என்று அவருடைய சீஷர்கள் இயேசுவைக்குறித்து சாட்சி
கொடுத்துள்ளார்கள்
இயேசுவுக்குள் பரிசுத்தமும் நீதியும் காணப்பட்டது
( அப்போஸ்தலர் 3 : 14 )
யோவானுக்குள் பரிசுத்தமும் நீதியும் காணப்பட்டது
( மாற்கு 6 : 20 )
நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் மிகுந்த பரிசுத்தம் காணப்பட வேண்டும்
பரிசுத்தம் உங்களுக்குள் இருந்தால் உங்களுடைய கண்ணீர் மாறும்
பரிசுத்தம் உங்களுக்குள் இருந்தால் உங்களுடைய கடன்தொல்லைகள் மாறும்
பரிசுத்தம் உங்களுக்குள் இருந்தால் உங்களுடைய வியாதி மாறும்
உங்களை நீங்கள்
பரிசுத்தமான ஜீவியத்திற்கு ஒப்புக்கொடுங்கள்
அப்பொழுது கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர் கொண்டு வருவார்
பரிசுத்தத்தை
உங்களுடைய தலைமீது வைத்துக்கொள்ளுங்கள்
நீங்களிடம் உள்ள
பணம் பொருள் சொத்துக்களையெல்லாம் ; உங்களுடைய காலின்கீழ் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் !
அப்பொழுது
பரலோக ராஜ்யம் உங்களுக்கு சமீபமாக இருக்கும்
*கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துவோம்*
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
என்னுடைய முகவரி
நம்பர் 66 மேட்டு தெரு, புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
ஜெப உதவிக்கும் மற்றும் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள
*My address*
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
pr.Jeevan (ஜீவன்)
phone : 9840593839
*My address*
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
pr.Jeevan (ஜீவன்)
phone : 9840593839
========================
கர்த்தருடைய ஊழியக்காரனை கர்த்தர் தாங்கி பிடிக்க வேண்டுமானாலும்; கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரன் பரிசுத்தமாகவும் நீதியாகவும்; சத்தியத்தை சத்தியமாக பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும்
=======================
*உண்மையான* *ஊழியக்காரனுக்கு கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும்*
*பூரண கிருபையை* *அளிப்பார்*
( அப்போஸ்தலர் 4 : 33 )
வசனவாசிப்பு
லூக்கா 13:31-33
லூக்கா 10 : 38
அப்போஸ்தலர் 4 : 33
*கர்த்தருடைய மன்னாவை*
*தினமும் விடியோவில்* *பாருங்கள்*
*சத்தியம்*
*1.மனிதனுடைய அதிகாரம்*
2. *இருளின் அதிகாரம்*
3 *வான மண்டலத்திலுள்ள* *அதிகாரம்*
4. *பாதாளத்தின் அதிகாரம்*
5. *வாலு சர்ப்பத்தின்* *அதிகாரம்*
6. *கள்ள தீர்க்கதரிசனத்தின்*
*அதிகாரம்*
7. *பிசாசின் அதிகாரம்*
மேலே உள்ள ஏழு அதிகாரங்களும் சபைக்கு விரோதமாகவும் சத்தியத்திற்கு விரோதமாக செயல்படுகிறது
இயேசு சிலுவையில் தன்னுடைய ஜீவனை ஜீவபலியாக கொடுத்து ; பிசாசின் சகல துரைத்தனங்களையும் ;
சகல அதிகாரங்களையும் வெளியரங்கமாக்கி ;
சிலுவையின் மீது வெற்றிச் சிறந்தார்
அதன் பிறகு பரிசுத்தாவியின் அபிஷேகம் 120 மேல் ஊற்றப்பட்டு புதிய ஏற்பாட்டு சபையை இயேசு கிறிஸ்து ஸ்தாபித்தார்
*சபைக்குரிய உபதேசம்*
*ஊழியர்கள் கவனியுங்கள்*
*மனிதனுடைய அதிகாரம்* *என்கிற தலைப்பில்* *சத்தியங்களை நாம்* *அறிந்துக்கொள்ளலாம்*
சபையை நீங்கள் நடத்தும்போது மனிதனுடைய அதிகாரங்கள் சபைக்குள் காணப்படும்
மனிதனை பிரியப்படுத்தி பிரசங்கம் பேசினால் ; உங்களுடைய சபை வளரும் ; வருமானம் வளரும் என்று உங்களுடைய காதில் பிசாசு தினமும் பேசுவான்
கர்த்தருடைய உபதேசங்களை நயவஞ்சகமாக திரித்து பேச உங்களை நீங்கள் விற்றுப்போட வேண்டாம்
*கஞ்சி , கூழ் , கிடைத்தாலும்* *சத்தியத்தை சத்தியமாக* *பேசுங்கள்*
இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் மனிதனுடைய அதிகாரங்கள் அவருக்கு விரோதமாக தொடந்து செயல்ப்பட்டு கொண்டே இருந்தது
ஒரு காலக் கட்டத்தில் கொலை மிரட்டல் கூட இயேசுவுக்கு வந்தது ( லூக்கா 13:31-33 )
அவர் எதையும் பொருட்ப்படுத்தாமல் தேவன் அவருக்கு தந்த ஊழியத்தை அவர் ஜெயமாக செய்தார்
அவருக்குள் தேவவல்லமை இருந்தது ( லூக்கா 10 : 38 )
நன்மை செய்ய மட்டுமே தன்னுடைய கரங்களை நீதியின் ஆயுதமாக அவர் தரித்துக்கொண்டார்
லூக்கா 13:31-33
31. அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
*கர்த்தருடைய மன்னா*
ஏரோது ராஜாவுடைய அதிகாரங்களை இயேசு ஜெயித்தார்
இயேசுவின் ஊழியத்திற்கு விரோதமாக ஏரோது யூதர்கள் அதிகாரிகள் கலகக்காரர்கள் எழும்பி வந்தார்கள்
லூக்கா 10 : 38-ல் சொல்லப்பட்டுள்ள வாா்த்தையின்படி அவா் *ஜெயமெடுத்தார்*
அப்போஸ்தலர் 10:38
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.
*கர்த்தருடைய மன்னா*
*ஊழியர்கள் கவனியுங்கள்*
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார் என்று நாம் பாா்க்கிறாம்
அதே தேவன் :
குமாரன் மூலமாக
பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் உங்களையும் அவர் நிரப்புவார்
உங்களுடைய சபைக்கு விரோதமாக மனிதர்கள் விசுவாசிகள் எழும்பினாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்
ஊழியம் கர்த்தருடையது
சபை கர்த்தருடையது
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவாா்
சபையை நீங்கள் நடத்தும்போது பல எதிர்ப்புகள் உங்களுக்கு வரும் ; உங்களுடைய சொந்த விசுவாசிகள் கூட உங்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்
ஆதி அப்போஸ்தலர்கள் வசனத்தை எடுத்து பிரசங்கம் பேச அவர்களால் முடியாமல் போனது
அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்
அப்போஸ்தலர் 4:18-20,29-31
18. அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19. பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
20. நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
*ஜெபம்*
29. இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30. உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
31. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
*கர்த்தருடைய மன்னா*
இயேசு என்கிற நாமத்தைக்கூட உச்சரிக்க முடியாத காலக்கட்டத்தில் அப்போஸ்தலர்கள் எப்படி கிரியை செய்தார்கள் என்று
அப்போதலர்கள் நடப்படிகள் 4− அதிகாரத்தில் பாருங்கள்
அவர்களை அநேக அதிகாரிகள் பயமுறுத்தினாா்கள்
பேதுருவும் யோவானும் நாங்கள் கர்த்தருக்கு மட்டும் தான் ஊழியம் செய்வோம்
மனிதர்களுடைய அதிகாரங்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம் என்று அவா்கள் தங்களை பயமுறுத்தின அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு ஊக்கத்தோடு ஜெபம்பண்ணினார்கள்
அவர்கள் கூடி இருந்த இடம் அசைக்கப்பட்டது ; அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்
அவர்கள்மேல் பூரண கிருபை அன்று இரங்கி வந்தது
(அப்போஸ்தலர் 4 :33 )
*கர்த்தருடைய* *ஊழியக்காரனுக்கு கர்த்தர் பூரண கிருபை தருகிறாா்*
கர்த்தருடைய கிருபையால் தான் ; கர்த்தருடைய ஊழியக்காரன் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறான்
அவனுக்கு விரோதமாக உலகமே எழும்பினாலும்
விசுவாசிகள் எழும்பினாலும் ,
பாதாளத்தின் வல்லமைகளும்,
பிசாசின் அதிகாரங்களும் ,
மனிதனுடைய அதிகாரங்கள் எழும்பினாலும் ; கர்த்தருடைய ஊழியக்காரனை கர்த்தர் தாங்கி பிடிப்பார்
*கர்த்தருடைய* *ஊழியக்காரனை கர்த்தர்* *தாங்கி பிடிக்க* *வேண்டுமானாலும் ;* *கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரன்* *பரிசுத்தமாகவும் நீதியாகவும் ; சத்தியத்தை சத்தியமாக* *பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும்*
*உண்மையான* *ஊழியக்காரனுக்கு கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும்*
*பூரண கிருபையை* *அளிப்பார்*
இதை வாசிக்கிற உங்களுக்கும் கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும்
பூரண கிருபை அளிப்பாா்
கர்த்தர் தாமே உங்களை
ஆசீர்வதிப்பாராக
*இயேசுவைப்போல மாற* *வாஞ்சியுங்கள்*
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துவோம்*
*ஆமேன்*
*என்னுடைய முகவரி*
பாஸ்டா் .G. ஜீவன்
நம்பர் 66 . மேட்டு தெரு , புழல்
*சென்னை* - 600066
( இந்தியா தமிழ்நாடு )
cell no : 9840593839
*My address*
pr. Jeevan
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
( INDIA Tamil nadu )
cell no : 9840593839
=========
கோளிகை கழுதை
============
வசன வாசிப்பு:
ஆதியாகமம் 45:23
*கர்த்தருடைய மன்னாவை*
*தினமும் ஆடியோவில்* *கேளுங்கள் கீழே உள்ள youtube link* *அழுத்துங்கள்*
*சத்தியம்*
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
*அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்*
(ஆதியாகமம் 45:23)
பிரியமானவர்களே !
மேலே உள்ள வசனத்தை படித்தீர்கள்
அதில்
யோசேப்பு என்கிற பரிசுத்தவான்.... எகிப்து தேசத்தில் பார்வோன் ராஜாவுக்கு அடுத்தப்படியாக அவன் இருந்தப்படியால் ...
அவன் தன் தகப்பனுடைய வறுமையையும், பஞ்சத்தையும், பசியையும் மாற்றும்படியாக...
இருவது கழுதையின் மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும்,
பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான் என்று நாம் பார்க்கிறோம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
யாக்கோபு கானான் தேசத்தில் பஞ்சத்தில் இருந்தான்
ஆனால்
யோசேப்பு எகிப்து தேசத்தில் பஞ்சத்தோடு இருக்கிற ஜனங்களுக்கு தானியத்தை அவன் விற்றான்
அந்த சமயத்தில் யோசேப்பின் பத்து சகோதரா்கள் அவனை தேடி எகிப்துக்கு வந்தார்கள்
அதன்பிறகு
யோசேப்பை அவனுடைய பத்து சகோதரரும் அறிந்துக்கொண்டார்கள்
தன் தகப்பன் யாக்கோபு உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தியை யோசேப்பு அறிந்துக்கொள்கிறான்
அதன்பிறகு
கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பன் யாக்கோபுக்காகவே...
யோசேப்பு இருவது கழுதைகளை பத்து பத்தாக இரண்டாக பிரித்து
முதல்...
பத்து கழுதையின்மேல்
எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களை யோசேப்பு தன் தகப்பனுக்கு அனுப்பினான்
இரண்டாவது...
பத்து கோளிகை கழுதையின்மேல் தானியத்தை யோசேப்பு தன் தகப்பனுக்கு அனுப்பினான்
பத்து சாதாரண கழுதைகள்
பிறகு பத்து கோளிகை கழுதைகள் அன்றைக்கு யோசேப்பு மூலமாக இந்த இருவது கழுதைகள் பயன்படுத்தப்பட்டது
எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களை சுமக்கிற
கழுதைகளைவிட ;
தானியத்தை சுமந்த கோளிகை கழுதைகளை மிகவும் நாம் மிகவும் உற்றுப்பார்க்க வேண்டும்
காரணம்
எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களின் சுமையைவிட .....
தானியத்தின் சுமை மிகவும் அதிகமாக இருக்கும் அதனால் தான் யோசேப்பு தானியத்தை சுமக்க
கோளிகை கழுதைகளை அவன் தெரிந்துக்கொண்டான்
கோளிகை கழுதை பார்ப்பதற்கு குதிரையை போல இருக்கும்
வெகுதூர பிரயாணத்தை எளிதாக சுமையை சுமந்து செல்லும் ஆற்றல் உள்ளது
பிரியமானவர்களே !
பூலோகத்திற்கும்
பரலோகத்திற்கும் வெகுதூரம் இருக்கிறது
எந்த விதத்திலும் நாம் சோர்ந்துப் போகக் கூடாது
கோளிகை கழுதையைப்போல நாம் சிலுவை என்கிற பாரமான சுமையை சந்தோஷமாக சுமக்க வேண்டும்
எகிப்துக்கும்
கானான் தேசத்திற்கும் உள்ள பிரயாண தூரத்தை அளவிட்டு பாருங்கள்
பல மைல் தூரம்
தானியத்தை அந்த பத்து கோளிகை கழுதைகளை சுமந்து சென்றது
கழுதையுடைய இயற்கையான சுபாவம் என்னவென்றால் அது தாழ்மையை தன்னுடைய இயற்கை சுபாவத்தில் வெளிப்படுத்துகிறது
கானான் தேசத்தில் இருக்கிற யாக்கோபுக்கு தானியத்தை கொண்டுபோய் அவைகள் சேர்த்தது
அருமையான
ஊழியக்கார நண்பனே !
நீ கர்த்தருடைய கோளிகை கழுதையாக மாறுவாயாக
கர்த்தர் உன்மேல் வைத்துள்ள சபை என்கிற ஆவிக்குரிய தானியத்தை பரம கானான் தேசத்திலுள்ள பரலோக தகப்பனிடம் கொண்டுபோய் சேர்க்க தினமும் நீ பிரயாசப்படுவாயாக
கோளிகை கழுதையாக நீ மாறி... உனக்கு ஆண்டவர் தந்த விசுவாசிகளை உன் தோள்மேல் சுமந்து பரம கானான் தேசத்திலுள்ள பரலோக தகப்பனிடம் கொண்டுபோய் சேர்க்க தினமும் நீ பிரயாசப்படுவாயாக
ஜீவனின் அதிபதியாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வெளிப்படப்போகிறார்
அவருடைய ரகசிய வருகையில் நாம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமானால்...
கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துவோம்
கழுதையை போல தாழ்மையாக
நாம் ஜீவிப்போமாக
ஆண்டவர் நம்மீது ஏறி பவனி வருவாராக
கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக
ஆமேன்
ஜெப உதவிக்கு :
பாஸ்டர் ஜீவன்
pastor. Jeevan
9840593839 (puzhal)
chennai india
============================
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
=============================
(சங்கீதம் 73:24)
*வசன வாசிப்பு*
ஆதியாகமம் 45:23
*சத்தியம்*
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*
இந்த பிரசங்கம் இந்தியாவிலிருந்து... மலேசியா நாட்டுக்கு... ஊழியத்திற்கு விமானத்தில் போகும்போது..
விமானத்தில் உட்கார்ந்துக்கொண்டு எழுதப்பட்டது
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாவதாக
*உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்*
(சங்கீதம் 73:24)
அருமையானவர்களே !
தேவன் தம்முடைய ஆலோசனை நமக்கு அவர் வெளிப்படுத்துகிறார்
இந்த பூமியில் நாம் எப்படி பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று அவர்தாமே சத்தியத்தின் மூலமாக அவர் நமக்கு சொல்லித் தருகிறார்
ஆரம்பம் ஒன்று இருந்தால், முடிவு என்பது ஒன்று இருக்கும்
இதைப்பற்றி தாவீது சொல்லும்போது...
என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என்று தாவீது சங்கீதம் 73−ம் அதிகாரம், 24−வது வசனத்தில் அவர் சொல்லுகிறார்
பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கையில்
பல தோல்விகள்,
பல அவமானங்கள்,
பல நிந்தைகள் நமக்கு வருகிறது
கர்த்தருக்காக அவமானங்கள்,
நிந்தைகள்,
இழப்புகள் நமக்கு வரும்போது அதையே அதிக பாக்கியம் என்று நாம் எண்ண வேண்டும்
கர்த்தருக்காக அவமானங்களை நாம் படும்போது தான் ; ஆசீர்வாதங்களை கர்த்தர் நமக்கு அவர் தர முடியும்
அவமானங்களை சகிக்காதவர்கள் பரலோக ராஜ்யத்தில் அவர்கள் காணப்பட முடியாது
பவுல் சொல்லும்போது...
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே என்று பவுல் சொல்லுகிறார்
(ரோமர் 8 : 35,36,37)
பிரியமானவர்களே !
கிறிஸ்துவினிமித்தமாக நமக்கு ஒரு ஜெயம் கொடுக்கப்பட்டுள்ளது..
அந்த ஜெயத்தை நாம் அடைய வேண்டுமானால்...
கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்ற வேண்டும்
பவுல் இதை அனுபவித்து சொல்லுகிறார்
கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை யாருமே பிரிக்க முடியாது என்று அவர் சொல்லுகிறார்
பவுல் இயேசு கிறிஸ்துவுக்காக அவர் பாடுகளை அவர் பட்டார்
அந்த பாடுகள் அவரை இன்றைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது
ஆகவே !
பாடுகளைக் கண்டு நாம் பயப்படக்கூடாது
கர்த்தர் நம்மோடு இருக்கிறார் அவர் நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்
முடிவிலே நம்மை அவர் மகிமையிலே கொண்டுப்போய் சேர்ப்பார்
பிரியமானவர்களே !
இன்றைக்கு நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால்...
நம்முடைய மனவிருப்பத்தின்படி,
நம்முடைய சொந்த ஆலோசனையின்படி,
கர்த்தர் நமக்கு அதிசயம் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பக்கூடாது
கர்த்தர் நம்மை அவருடைய ஆலோசனையின்படி நடத்த, நம்மை அவருடைய கரத்தில் மனப்பூர்வமாக நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும்
அப்பொழுது
நம்முடைய குடும்பத்தையும்,
நம்முடைய சபையையும்,
சபை விசுவாசிகளையும்,
நம்முடைய பொருளாதாரத்தையும், நமக்கு உண்டான அனைத்தையுமே கர்த்தர் நிச்சயமாக அவர் ஆசீர்வதிப்பார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தாவீது சொல்வதை பாருங்கள்...
*தேவனே,*
*என் கூப்பிடுதலைக்கேட்டு*
*என் விண்ணப்பத்தைக்* *கவனியும்*
*என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்* என்று சொல்லி தாவீது ஜெபிக்கிறான்
(சங்கீதம் 61:1,2)
பிரியமானவர்களே !
நமக்கு எட்டாத உயரமான கன்மலை என்றால் அது என்ன ?
அது தான்
பரலோக ராஜ்யம்
இதைப்பற்றி பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கிறார்
வேதத்தில் சாட்சியுள்ள பரிசுத்தவான்கள்... உலகத்தை அவர்கள் தேடாமல்; கர்த்தருக்காக அவர்கள் வாழ்ந்து மரித்தார்கள்
அவர்கள் மூலமாக ஆவியானவரால் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்கும் நாம் சாட்சியாக ஜீவிக்க வேண்டும்
சத்தியத்தின்படி நாம் வாழ்ந்தால் பரிசுத்த ஆவியானவர் நம்மை அவர் அவருடைய சாயலுக்கு, ஒப்பாய் நம்மை அவர் மறுரூபப்படுத்துவார்
பிரியமானவர்களே !
நாம் அனைவரும் தேவசாயல் அடைந்து
இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அவரோடுக்கூட நாமும் மகிமையில் எடுத்துக் கொள்ளப்படுவோம்
இது தான்,
கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற அவருடைய சித்தம்
இதை தாவீதும் ஆவியில் புரிந்துக்கொண்டு
தாவீது சொல்லுகிறார்
என் ஆண்டவரே!
*உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்* என்று தாவீது சொல்லுகிறான்
(சங்கீதம் 73:24)
பிரியமானவர்களே !
தாவீது பெற்றுக்கொண்ட இந்த தரிசனத்தை நாமும் பெற்றுக்கொண்டு தேவசித்தம் செய்வோம்
கர்த்தருடைய ஆவியானவர் அவருடைய ஆலோசனையின்படி நம்மை அவர் நடத்த, அவருடைய கரத்தில் நம்மை நாம் பூரணமாக ஒப்புக்கொடுப்போம்
கர்த்தர் நம்மை அவருடைய ஆலோசனையின்படி நடத்தி, உன்னதம்வரை அவர் நம்மை கொண்டுபோய் உயர்த்துவாராக
அல்லேலூயா !
ஆமேன் !
ஜெப உதவிக்கு :
பாஸ்டர் ஜீவன்
pastor. Jeevan
9840593839 (puzhal)
chennai india
===========================
பரிசுத்தவான்களுக்கு தேவன் தரிசனமாவார்
=============================
*வசன வாசிப்பு*
ஆதியாகமம் 35:9
ஆதியாகமம் 35:3
ஆதியாகமம் 35:11
*யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து*
(ஆதியாகமம் 35:9)
பரிசுத்தவான்களுக்கு தேவன் தரிசனமாவார் என்கிற தலைப்பில் சத்தியங்களை ஆவியானவர் உதவியோடு நாம் அறிந்துக்கொள்ளலாம்
பிரியமானவர்களே !
யாக்கோபு என்கிற பரிசுத்தவானுக்கு தேவன் தரிசனமானார் என்று ஆதியாகமம் 35−ம் அதிகாரம், 9−வது வசனம் பேசுகிறது
யாக்கோபுக்கு தேவன் தரிசனமானார் என்றும் அவனை தேவன் ஆசீர்வதித்தார் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது
கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு தேவன் தம்முடைய சுதந்திரத்தை அவர் தரும்படி விரும்புகிறார்
பஞ்ச காலத்தில் ஈசாக்கு தேவன் தரிசனமானார் என்றும் வேதத்தில் நாம் பார்க்கிறோம்
தேவன் மனிதனை அவர் ஆசீர்வதிக்க விரும்புகிறபடியால் ; பூமியில் காணப்படும் மனிதர்களுக்கு தேவன் இன்றும் அவருடைய கல்வாரி தரிசனத்தை அவர் வெளிப்படுத்தி காண்பிக்கிறாா்
கல்வாரி தரிசனத்தை, தங்களுடைய தரிசனத்தில் பார்த்த அநேக சாட்சிகளை இன்றும் நாம் பார்க்கிறோம்
அவர்களுடைய இரட்சிப்பின் அனுபவத்தை அவர்கள் சாட்சியாக சொல்லுகிறார்கள்
ஆகவே !
யாக்கோபுக்கு தரிசனமாகி அவனோடு பேசின சர்வ வல்லமையுள்ள தேவன் இன்றும் மத்தியில் அவர் அசைவாடுகிறார்
அவருடைய பிரசன்னத்தை நீங்கள் இப்பொழுது உணர்ந்துப்பார்த்து நன்றியோடு தேவனை நீங்கள் துதியுங்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பிரியமானவர்களே !
யாக்கோபு ஜீவியத்தில் அநேக சோதனைகளை
நாம் பார்க்கிறோம்
ஆனால்
அவனுடைய சாட்சியை ஒரு வசனத்தின் மூலமாக நாம் இப்பொழுது பார்க்கலாம்
*நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்*
(ஆதியாகமம் 35:3)
மேலே உள்ள வசனத்தில் யாக்கோபுடைய சாட்சியை நாம் பார்க்கிறோம்
யாக்கோபுடைய ஜீவியத்தில் தேவன் நல்லவராக அவனுக்கு அவர் வெளிப்பட்டு இருக்கிறார்
யாக்கோபு சொல்லுகிறான்
எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு தேவன் உத்தரவு அருளிச்செய்தார் என்று யாக்கோபு சொல்லுகிறான்
யாக்கோபுடைய ஜீவியத்தில் அநேக ஆபத்துகள் வந்தது ஆனால் தேவன் யாக்கோபை அவர் கைவிடவே இல்லை
இதை வாசிக்கிற
அருமையான சகோதரனே !
சகோதரியே ! சோதனைகளை கண்டு நீ பயப்படாதே !
உன்னுடைய ஜீவியத்தில் ஏற்படும் ஆபத்துகளை கண்டு நீ பயப்படாதே
யாக்கோபின் தேவன் உன்னோடு இருக்கிறார்
அவர் உன் விண்ணத்தை கேட்கிறவர்
உனக்கு தரிசனமாகி உன்னை அவர் ஆசீர்வதிப்பார்
யாக்கோபுபோல போராடி நீ ஜெபம் பண்ணு ! கர்த்தர் உன்னோடு இருக்கிறார்
யாக்கோபை பார்த்த தேவன் சொல்லுகிற வார்த்தையை பார் !
*பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்* என்று தேவன் யாக்கோபை அவர் ஆசீர்வதித்தார்
(ஆதியாகமம் 35:11)
இந்த ஆசீர்வாதங்களை நீங்களும் நானும் இன்று பெற்றுக்கொள்ளப் போகிறோம்
அருமையானவர்களே !
நீதியோடும்
பரிசுத்தத்தோடும்
நாம் ஜீவிப்போமானால்
யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் நம்மை அவர் இடம்கொள்ளாமல் ஆசீர்வதிப்பார்
தேவசித்தம் செய்ய நம்மை நாம் ஒப்புக்கொடுப்போமாக
*பரிசுத்த ஜீவியத்தை* *காத்துக்கொள்ளுங்கள்*
*இயேசுவை போல மாற* *வாஞ்சியுங்கள்*
என்னுடைய முகவரி
நம்பர் 66 மேட்டு தெரு, புழல்
*சென்னை* - 600066
இந்தியா தமிழ்நாடு
ஜெப உதவிக்கும் மற்றும் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள
*My address*
no : 66 mettu steet
puzhal , chennai - 600066
INDIA Tamil nadu
pr.Jeevan (ஜீவன்)
phone : 9840593839