=========================
முன்னோடி மிஷனெரிகளின் வாழ்க்கை சரிதை:
சாது சுந்தர் சிங்
(1889-1929)
=======================
சுந்தர் சிங் அவர்கள் உயர்ஜாதி சீக்கிய குடும்த்தில் பஞ்சாப் மாநிலத்தில் ராம்பூர் என்ற இடத்தில் 1889 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் நாள் பிறந்தார். இவருடை இளம் வயதில், இந்துமதத்தை சேர்ந்த இவருடைய தாயார் கல்வி கற்று கொள்வதற்காக பல பண்டிதர்களிடம் அனுப்பினார்.
இதனால் சுந்தர்சிங் தன்னுடைய ஏழாம் வயதிற்குள் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையையும், தன்னுடைய 13 ம் வயதிற்குள் இந்து மத நான்கு வேதங்கள், உபநிடதங்கள், இந்துமத புராணங்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் புனித நூலான குரான் ஆகியவற்றையும் நன்கு கற்றுக்கொண்டார்.
ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதற்காக சுந்தர்சிங் லூதியானாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனெரி பள்ளிக்கு அவருடைய தாயாரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருடைய பள்ளியில் தினமும் காலையில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மற்றும் நீதிபோதனைகள் கற்று கொடுக்கப்படும். ஆனால் சுந்தர் சிங் அதில் எதுவும் நாட்டம் காட்டவில்லை. மாறாக தன்னுடைய இந்துமத பக்தி வைராக்கியத்தினால் கிறிஸ்தவ மிஷனெரிகளையும், கிறிஸ்துவின் போதனைகளையும் தன் சக மாணவர்களோடு பேசி கேவலப்படுத்தி கொண்டே இருப்பார்.
இந்நிலையில் சுந்தர் சிங்கின் 14 ம் வயதில் திடீரென தான் மிகவும் நேசித்த அன்பான தாயார் மரித்துபோனது அவரது மனதை மிகவும் பாதித்தது. ஆகவே கோபத்தினால் சீக்கிய மதத்தையும் அதன் புனித நூல்களையும் இகழ்ந்து பேச ஆரம்பித்தார்.
இதற்கு இடையே ஒருநாள் லூதியானாவில் உள்ள மிஷனெரி பள்ளியில் பரிசுத்த வேதாகமத்தின் மூலம் இயேசுவின் நற்செய்தியை நீதிபோதனையை அறிவித்து எல்லா மாணவர்களுக்கும் புதிய ஏற்பாடு கொடுத்து அதை வீட்டில் வைத்து வாசிக்க சொன்னார்கள். ஆனால் சுந்தர் சிங் தன்னுடைய மூர்க்க குணமான கோபத்தினால் புதிய ஏற்பாட்டை எல்லோருக்கும் தெரியும்படி தெருவில் தீயீலிட்டு கொழுத்தினார்.
சுந்தர் சிங், தன்னுடைய தாயின் மரணத்திற்கு பின்னர் மனம் அமைதியை இழந்து தவிப்பதையும், வெறுமையையும் அறிந்து, அவருடைய வீட்டின் அருகே செல்லும் இரயில் தண்டவாளத்தில் இரயில் வரும்போது தலை வைத்து தற்கொலை செய்துகொள்ள யோசிக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் சுந்தர் சிங் இரவு நேரத்தில் மனம் அமைதியை இழந்து, தனிமையாய் கானப்பட்ட வேளையில் உண்மையான கடவுள் யார்? என்பதைகுறித்து கேள்வி எழுப்பிக்கொட்டே இருந்தார். எந்த கடவுள் மன அமைதியை கொடுக்க முடியும்? என்று அங்கலாய்த்து கொண்டு, தன்னுடைய மேல்வீட்டு அறையில் தனிமையாய் இருந்தவாறு ஓ கடவுளே! நீர் உண்மையான தெய்வமாய் இருந்தால் இன்று இரவு எனக்கு வெளிப்படும் இல்லையென்றால பஞ்சாபிலிருந்து பம்பாய் செல்லும் இரயிலில் அதிகாலை 5:30 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளவும் தீர்க்கமாய் முடிவுசெய்து விட்டார்.
ஆனால் அதிகாலை 5 மணி வரைக்கும் எந்த கடவுளும், குருக்களும் வெளிப்படவில்லை. இந்நிலையில் பம்பாய் செல்லும் இரயில் வரும் சப்தம் தொலைவில் கேட்டது. ஆகவே தன்னை மாய்த்துக்கொள்ள எழுந்தபோது, அவருடைய மேல் அறையில் திடீரென ஒரு வெளிச்சம் தோன்றியது. அத்துடன் சுந்தர் சிங் நீ என்னை எவ்வளவு நாள் மறுதலிப்பாய்?... உனக்காக நான் மரித்தேனே... எனக்காக நீ என்ன செய்வாய்? என்ற ஒரு சத்தமும் கேட்டது. அப்படியே ஒரு கரத்தில் ஆணியடிக்கப்பட்ட தரிசனமும் தோன்றி மறைந்தது. சுந்தர் சிங் ஒருபோதும் இயேசு கிறிஸ்து வெளிப்படுவார் என்று நினைக்க வில்லை. மாறாக சீக்கிய மத குருக்கள் அல்லது இந்துமத தெய்வங்கள் வெளிப்படுவார்கள் என்று நம்பி இருந்தார்.
இப்போது சுந்தர் சிங் மனதில் ஒரு தெய்வீக சமாதானத்தை உணர ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்துவின் மீதான கோபங்கள் மறைந்து அன்பினால் ஆட்கொள்ளப்படுவதை அவரால் உணரமுடிந்து.
இறுதியாக இயேசு கிறிஸ்துவே உண்மை தெய்வம் என்பதை சுந்தர்சிங் ஏற்றுக்கொண்டு அந்த மேல்வீட்டு அறையில் முழங்கால் படியிட்டு இயேசு கிறிஸ்துவுக்கு தன்னை அற்பணித்து அவருக்காக, அவருடைய நற்செய்தி பணிக்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணிக்க உறுதி ஏற்றுக்கொண்டார்.
இயேசு கிறிஸ்து கொடுத்த தெய்வீக சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அன்பையும் பெற்றுக்கொண்ட சுந்தர் சிங் அவர்களின் குணாதிசயமும் வாழ்க்கையும் மாற ஆரம்பித்தது.
சுந்தர்சிங் அவர்கள் தன்னுடை தகப்பனார் சேகர் சிங் மற்றும் மூத்த சகோதரன் ராஜேந்தர் சிங் அவர்களிடம் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்தார்.
தன்னுடைய குடும்த்தார் அனைவருக்கும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அவர்களும் ஏற்றுக்கொள்ள கேட்டுக் கொண்டார்.
சுந்தர் சிங் அவர்கள் தன்னை எப்படி இயேசு கிறிஸ்து சந்தித்தார் என்பதையும் அவர் மூலமாய் பெற்றுக்கொண்ட தெய்வீக சமாதானத்தையும் அன்பையும் தன் கிராமத்தில் உள்ளவர்களுக்குமட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களிலும் இயேசுவின் நற்செய்தி பணியை செய்ய ஆரம்பித்தார்.
இதற்கிடையே சுந்தர் சிங் அவர்களின் தகப்பனாரும் உடன்பிறந்த சகோதரர்களும் சுந்தர் சிங் அவர்களிடம் தங்களுடைய குடும்ப கௌரவம் கருதி இயேசுவை மறுதலிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் சுந்தர்சிங் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒருநாள் மிகவும் பணக்காரரான சுந்தர்சிங்கின் தாய்மாமா தன் மகளை சுந்தர்சிங்கிற்கு திருமணம் செய்துவைப்பதாயும் இதற்காக சுந்தர்சிங் இயேசு கிறிஸ்துவை விட்டுவிட்டு சீக்கிய மதத்திற்கு சேவை செய்யவும் நிர்பந்தித்தார். அந்த பெண்ணும் சுந்தர்சிங் கரத்தை பற்றிக்கொண்டு இயேசுவை மறுதலிக்கும்படி கேட்டுக்கொண்டாள். ஆனாலும் சுந்தர்சிங் இயேசுவை விட்டுகொடுக்கவில்லை.
சுந்தர்சிங்கின் குடும்பத்தார் இயேசுவை மறுதலிக்க அநேக காரியங்களை சுந்தர்சிங்கிற்கு எதிராக செய்தார்கள். அவர்கள் அதிக விஷம் நிறைந்த பாம்புகளை அவர் தங்கியிருந்த மேல் அறையில் போட்டார்கள்; ஆனாலும் தப்பித்துக்கொண்டார்.
சுந்தர்சிங்கின் தகப்பனார் இயேசு கிறிஸ்துவை சுந்தர்சிங் மறுதலியாவிட்டால் தன்னுடைய சொத்துக்களில் எதையும் சுந்தர்சிங்கிற்கு கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக கூறினார்.
சுந்தர்சிங்கின் உடன் சகோதரர்கள் சுந்தர்சிங்கை மிரட்டி, வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவதாகவும் எச்சரித்தார்கள்.
ஆனால் சுந்தர் சிங் அவர்கள் பயமுறுத்தல்களை பற்றி கொஞ்சம்கூட பயமில்லாமல் இன்னும் அநேகருக்கு வாழ்வு கொடுக்கும் இயேசுவின் நற்செய்திபணியை இன்னும் உத்வேகத்துடன் செய்தார். அநேக கிறிஸ்தவ மிஷனெரிகளின் தெடர்பும் கிடைத்தது.
ஆகவே சுந்தர் சிங் உயிருடன் இருந்தால் தங்கள் குடும்பத்திற்கு அவமானம் என்று கருதி உணவில் விஷம் வவைத்து சுந்தர் சிங்கிற்கு கொடுத்து அவரை கொன்றுவிட முடிவு செய்தார்கள்.
இப்படியாக ஒருநாள் இரவு நேரத்தில் விஷம் வைத்த உணவு சுந்தர்சிங்கிற்கு கொடுக்கப்பட்டது. அப்பொழுது தண்ணீர் கொண்டுவருவதற்காக கீழே வந்த நேரத்தில், அவருடைய நண்பர் சற்றுவெளியே வரும்படி அழைத்தார். அப்போது அவர் வீட்டிலிருந்த பூனை அவருடைய உணவை சாப்பிட்டது. சற்று நேரத்தில் அங்கு வந்த சுந்தர்சிங் பூனை அருடைய உணவை சாப்பிட்டதினால் வெளியே சென்று விட்டார். திரும்பி வருப்போது அந்த பூனை இறந்து கிடப்பதை பார்த்த சுந்தர்சிங், தான் இங்கிருந்தால், தன் குடுப்பத்தார் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
இந்நிலையில் சுந்தர்சிங் 1906 ம் ஆண்டு சிம்லா பகுதியில் இருந்த ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தன்னுடைய 17ம் வயதில் ஞானஸ்நானம் எடுத்து தன்னை இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தன்னை ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொண்டார். மேலும் தன்னுடைய சீக்கியமத அடையாளமான தலைமுடியையும் வெட்டிவிட்டதினால் சுந்தர்சிங்கின் குடும்பத்தார் மிகவும் கோபம் கொண்டு அவரை வீட்டைவிட்டு வெளியே துறத்திவிட்டார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய சுந்தர்சிங் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பல இடங்களுக்கு சென்று அறிவித்தார்.
1907 ம் ஆண்டு இஸ்ரேல்-பலஸ்தீனா பகுதிக்கு சென்று இயேசு நடந்து சென்ற எல்லா பகுதிகளையும், இடங்களையும் கண்டு இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை மனதில் தியானிக்கும்படி பம்பாய் வந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு விசா மறுக்கப்படவே சாது சுந்தர்சிங் வட இந்தியாவுக்கு நற்செய்திபணி செய்ய புறப்பட்டு சென்றார்.
ஒரு நாள் பஞ்சாப் இரயில் நிலையம் போகும்போது ஒரு இந்துமத பிராமணர் வெயிலின் அகோரத்தினால் தரையில் சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு உதவிசெய்ய அங்குவந்த ஆங்கிலேய ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய தண்ணீர் பாட்டலை கொடுத்து குடிக்க சொன்னபோது அந்த பிராமணர் மறுத்துவிட்டார்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த சுந்தர்சிங் அந்த தண்ணீரை சுந்தர்சிங் வைத்திருந்த பாட்டலில் ஊற்றி கொடுத்தபோது அந்த பிராமணர் வாங்கிக் கொண்டு தண்ணீர் அருந்தி பிழைத்துக்கொண்டார்.
இதை புரிந்துகொண்ட சுந்தர்சிங் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியை இந்தியாவில் அறிவித்தால், பக்திவைராக்கியம் நிறைந்த இந்துமத ஜனங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் இந்தியர்களுக்கு இந்திய கலாச்சாரத்தின்படி நற்செய்திபணி அறிவித்தால் மட்டுமே அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை சுந்தர்சிங் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
ஆகவே சுந்தர்சிங் அவர்கள் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணிக்காக தன்னை ஒரு கிறிஸ்தவ சன்னியாசியாக மாற்றிக்கொண்டு, காவி உடையை அணிந்துகொண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து அதன் மூலம் சுவிஷேசபணியை மேற்கொண்டார்.
இதன் மூலமாக அநேக உயர்ஜாதி இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இயேசுவைபற்றி கேட்பதிலும், பின்னர் ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள்.
இந்நிலையை பரிசுத்த வேதாகமத்தை முறைப்படி கற்றுக்கொள்ள 1909 ம் ஆண்டு பாக்கிஸ்தானில் உள்ள லாகூர் வேதாகம கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்குள்ள படிப்பு, உணவு, கலாச்சார முறைகள் யாவும் மேற்கத்திய கலாச்சாரத்தால் இருந்தது.
மேலும் வேதாகம கல்லூரியில் சாது சுந்தர்சிங் அணிந்திருந்த காவி உடையை அணியாமல் இருக்க சொல்லி, ஐரோப்பிய உடையையும், பாமாலை பாடல்கள், ஆராதனை முறமைகளையும், மேற்கத்திய இசைக்கருவிகளை கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் நிர்பந்தித்தார்கள். ஆகவே ஜூலை 1910 ம் ஆண்டு வேதாகம கல்லலூரியை விட்டு வெளியேறினார்.
சுந்தர்சிங் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணியை இந்திய கலாச்சாரத்தின்படியாக தன்னை ஒரு கிறிஸ்தவ சன்னியாசியாக, எளிய வாழ்க்கை வாழ்ந்து, மாமிச உணவுகளை தவிர்த்து, காவி உடையை அணிந்து, ஒரு சாதுவைப்போர் துறவறம் மேற்கொண்டு, ஒரு வேதாகமத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இந்தியாவின் பல குதிகளுக்கு சென்று சுவிஷேசபணியை செய்தார். இவருடைய ஊழியத்தினால் அநேக உயர்ஜாதி இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். இவரை சாது சுந்தர்சிங் ஆக அழைத்தார்கள்.
இதற்கிடையே 1913 ம் ஆண்டு ஆண்டவர், சாது சுந்தர்சிங்கை திபெத் தேசத்திற்கு சென்று ஊழியம் செய்ய அழைத்தார்.
தீபெத் நாடு புத்த மதத்தை சார்ந்த மக்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவோ, கேட்கவோ தடை செய்யப்பட்ட நாடு. இதையும் மீறினால் பாழடைந்த கினற்றில் போட்டுவிடுவார்கள். உடல் அழுகி சாக வேண்டியதுதான்.
உள்ளத்தில் கிறிஸ்துவையும் கரங்களில் வேதாகமத்தையும் சுமந்து புறப்பட்டார். பல முறை திபெத் லாமாக்களால் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு, அவ்விடத்திவிருந்து விரட்டப்பட்டார். இன்னொரு முறை பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டார். உள்ளே விழுந்த உடன் அவர் தோள்பட்டை உடைந்தது. அழுகிய பிண நாற்றத்தால் வயிறு குமட்டியது. அங்கிருந்து ஜெபிக்க ஆரம்பித்தார். மூன்று நாட்களுக்குபின் ஒரு அதிசய மணிதரால் காப்பாற்றப்பட்டார்.
துன்பங்களை இன்பமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சுவிஷேசபணியை தொடர்ந்தார். இதனால் திபெத் தேசத்திலும் நற்செய்தி பணியை செய்து அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார்.
சாது சுந்தர்சிங் அவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும், உவமைகளாலும் போதித்ததினால் அநேகர் இவருடைய உபதேசத்தை விரும்பி கேட்டனர். அநேகர் இயேசு கிறிஸ்துவை அவர் வாழ்க்கையின் மூலம் பார்ப்பதாக கூறினார்கள்.
சாது சுந்தர்சிங் பல புத்தகங்களை எழுதினார். அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றும் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு ஊன்றுகோலாய் அநேகருக்கு இருக்கின்றது.
சாது சுந்தர் அவர்களின் ஊழியத்தினால் 24,000 மக்களுக்கும் அதிகமானோர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே இவருடைய புகழ் 30 வயதிற்குள்ளாக அநேக தேசங்களுக்கு பரவியது. பல திருச்சபைகளில் மிஷனெரி அறைகூவல் விடுக்க கேட்டுக்கொண்டன.
ஆகவே 1918 ம் ஆண்டில் ஊழியத்தின் பாதையில் தமிழ்நாடு வந்து, நற்செய்தி பணியை அறிவித்து பின்னர் தூத்துக்குடி வழியாய் இலங்கை சென்று பின்னர் பர்மா, மலேசியா, சைனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் சென்று நற்செய்திபணியை அறிவித்தார்.
பின்னர் 1920 ம் ஆண்டில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தேசங்களுக்கு சென்று அங்கு பெயர் கிறிஸ்தவர்களாய் இருந்த மக்களுக்கு மிஷனெரி தரிசனத்தை கொடுத்து அவர்களை கிறிஸ்துவுக்குள் பலப்படுத்தினார்.
பின்னர் 1922 ம் மீண்டும் இந்தியா வந்து வட இந்தியா பகுதிமுழுவதும் நடந்தே சென்று ஊழியத்தை செய்தார். பின்னர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று நற்செய்தி அறிவித்தார். இவருடைய ஊழியத்தினால் சுந்தர்சிங் தகப்பனார் மற்றும் சகோதரர்கள் யாவரும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இந்நிலையில் 1928 ம் ஆண்டு நேப்பாளம் தேசத்திற்கு நற்செய்திமணி செய்ய விரும்பி அங்கு பயணம் மேற்கொண்டார்.
சாது சுந்தர்சிங் அவர்கள் வேயிலிலும், பனியிலும், குளிரிலும் நடந்து சென்றே நற்செய்தியை பறப்பினதால் அவருடைய சரீரம் மிகவும் பலவீனப்பட்டது.
மேலும் நேப்பாளத்தில் சுவிசேஷம் அறிவிக்க தடை இருந்தும், கிறிஸ்துவின் நற்செய்தியை சுந்தர்சிங் அறிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். இதை பயன்படுத்திக் கொண்ட சாது சுந்தர்சிங் அங்கு அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறை கைதிகளுக்கு இயேசுவை பற்றி அறிவித்தார். ஆகவே அங்குள்ள தனி அறையில் கை,கால்களை கட்டி வைத்து அவர்மீது இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் விடப்பட்டது. இவைகள் சுந்தர்சிங்கின் இரத்தத்தை உறிஞ்சி அவரை பலவீனப்படுத்தியது. சில வாரங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் சாது சுந்தர்சிங் 1928 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய பலவீனமான சூழ்நிலையிலும் பனி நிறைந்த திபெத் தேசத்திற்கு சென்று இயேசுவைப்பற்றி அறிவிக்க திபெத் சென்றார்.
மலைகளும் பனியும் நிறைந்த திபெத் நாட்டிற்கு சென்ற சாது சுந்தர்சிங் அவர் திபெத் செல்லும் முன்னர் தன்னுடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் 1928 ம் ஆண்டு ஜீன் மாதத்திற்குள் இந்தியா திரும்பிவிடுவதாக எழுதி இருந்தார். பின்னர் திபெத் பகுதிக்கு நற்செய்திபணி அறிவிக்க பல மைல்கள் கடந்து நடந்தே சென்றார்.
சாது சுந்தர்சிங் சொன்ன ஜீன் மாதமும் வந்தது. ஆனால் அவர் மட்டும் திரும்பி வரவில்லை. அவரைப்பற்றி எந்த தகவலும் அதற்குப்பின் கிடைக்கவில்லை.
இறுதியாய் சாது சுந்தர்சிங் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. அவர் மலைகளை தாண்டி செல்லும் வழியில் மரித்துப்போனாரா? அல்லது சுவிஷேசத்தினிமித்தம் திபெத்தில் கொல்லப்பட்டாரா? அல்லது காட்டு மிருகங்கள் அவரை பட்சித்துப்போட்டதா? அல்லது எலியாவைப்போல உயிரோடு கர்த்தர் எடுத்துக்கொண்டாரா? என்று இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.
எப்படி இருந்தாலும் சரி, சுந்தர்சிங் அவர்களை இந்தியாவின் அப்போஸ்தலர் என்றும் இரத்தம் சிந்தும் பாதங்களையுடைய அப்போஸ்தலன் என்றும் திருச்சபைகளில் அழைக்கப்படுகின்றார். இந்திய திருச்சபைகள் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 3 அன்று அவருடைய நற்செய்திபணியை நன்றியோடு நினைவுகூர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றது.
சாது சுந்தர்சிங் அவர்கள் தன்னுடைய இறுதிகாலம் வரைக்கும் இந்திய மக்களுக்கு இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் நற்செய்திபணியை அறிவித்து அநேகரை கிறிஸ்துவின் சீஷர்களாக வழிநடத்தினார்கள்.
சாது சுந்தர்சிங் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிப்பது எளிது; ஆனால் சாட்சியாக வாழ்வதுதான் சவால் நிறைந்தது என்பதுதான். ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் இயேசுவை கானவேண்டும் என்பதே அவர் வாஞ்சையாக இருந்தது.
இன்றைக்கு நம்முடைய தேசத்தில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திபணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் இன்று அரசாங்க புள்ளி விபரத்தின்படி இந்தியாவில் கிறிஸ்துவின் சீஷர்கள் 2.8% மாத்திரம். நாம் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு நற்செய்திபணியை அறிவித்தால் இந்திய தேசம் நம்முடைய தலைமுறையில், வெகுவிரைவில் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமாகும். நம்முடைய தேசத்திற்கு ஆண்டவர் கொடுத்த அப்போஸ்தலருக்காக நன்றி செலுத்துவோம்.
இதை வாசிக்கின்ற அன்பு தம்பி மற்றும் தங்கையே இன்று நீ கல்வியிலும், சமுதாய அந்தஸ்திலும் உயர்ந்து இருப்பதற்கு, உனக்காக மற்றும் உன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தன்னுடைய வாழ்க்கை, குடும்ப உறவுகள், சொத்து சுகங்கள் யாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய கிராமத்திற்கு வந்து, நற்செய்திபணியையும், சமுதாய நற்பணிகளையும் செய்த பல மிஷனெரிகளை அனுப்பி வைத்த அந்த ஆண்டவருக்கு நீ என்ன செய்ய போகின்றாய்?...நீ வா...நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய தலைமுறையில் இந்திய தேசத்தை ஆண்டவருக்கு சொந்தமாக்குவோம்.
இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற அன்பு தாய்மார்களே! தகப்பன்மார்களே! உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
கிறிஸ்துவில் அன்பானவர்களே!...இந்த மிஷனெரிகள் சரித்திர குழுவின் இனைப்பை உங்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் அனுப்பு வைக்கும்போது, அவர்களும் உங்களைப்போல மிஷனெரி தரிசனத்தை பெற்றுக்கொள்வார்கள். நன்றி
The Gospel Pioneers:
Sadhu Sunde Singh (1889-1929)
Sadhu Sunder Singh was born in 1889 at Rampur in Punjab, and his family was very religious in Sikhism. At the age of seven, he had memorized the Bhagavad-Gita and by the age of 13 he had mastered the Vedas, Puranas and Upanishads. Growing up Sunder attended by the Christian mission school where the New Testament was read daily during devotions, but he was not attentive in it.
He took out his anger on the missionaries, persecuted Christian converts, and ridiculed their faith. In his anger, he burned a copy of one of the Gospels in public. When he was at the age of 14, suddenly his mother passed away so he was undergoing a major faith crisis in his life. His mother was a loving saintly woman and they were very close. Within three days he could bear his misery no longer. He felt that his religious pursuits in Sikhism and the questioning of Christian and Hindu priests left him without ultimate meaning.
It was a cold night of December in 1903 when he decided that he would throw himself under the train, when the train Ludhiana Express passes by his home. That night he prayed several hours. He said, “O God, if there is a God, reveal yourself to me tonight.” The train was about to come early the morning at five o’ clock. Suddenly the room filled with a glow. It was not dawn yet and Sunder opened the room and peeped outside. It was sheer darkness. He closed the door and the light grew brighter.
While he was watching this he suddenly saw a figure appeared before him and he heard a voice say, “How long will you deny me? I died for you; I have given my life for you”. He saw the man’s hands, pierced by nails. The vision disappeared but the joy and peace lingered in his heart. He was now changed forever. He experienced amazing peace and joy in his heart which he has never experienced before.
On that day, Sundar announced to his father, that henceforth he would follow Christ. His father denounced him, and his brother attempted to poison him. He was not poisoned just once but a number of times.
Now every effort was made to woo or coerce Sundar Singh back to his ancestral faith. Despite his family's pleas, bribes, and threats, he wanted to be baptized in the Christian faith. After his father spoke words of official rejection over him, he became an outcast from his people. Against great opposition, he was baptized at the age of 16, on his birthday in 1905. His family ostracized him. In October 1906, he set out on his journey as a new Christian.
In 1908 he went to Bombay, hoping to board a ship to visit Palestine and re-live some of the experiences in Jesus’ life, but was refused a permit, and had to return to the north India. On this trip he recognised a basic dilemma of the Christian mission to India. A Hindu Brahmin had collapsed in a hot, crowded railway carriage and was offered water by the Anglo-Indian stationmaster. The Brahmin could only accept it in his own drinking vessel. Indeed, he felt that a key reason the gospel was not accepted in India was because it came in a garb foreign to Indians.
He was convinced that this was the best way to introduce the Gospel to his people since it was the only way which his people were accustomed to.
Sundar Singh realised that India would not readily convert to Western-style Christianity, although people had responded to his sadhu's robe. So, he decided to become a Christian Sadhu, so that he could dedicate himself to the Lord. As a Sadhu, he wore a yellow robe, lived on the charity of others, abandoned all possessions and maintained celibacy.
Sunder had felt called to Tibet, and in 1908, at the age of nineteen, he crossed its frontiers for the first time. He carried no money or other possessions, only a New Testament. He encountered poverty, and unsanitary conditions far worse than his native home. In December 1909 Singh began training for the Christian ministry in one of Bible College in Lahore.
In the Seminary, he had been told that he must discard his sadhu’s(Saffron) robe and wear European model of clerical dresses(white), worship pattern, and singing English hymns only. His inability to adapt to European life hindered him from fitting in with the routines of academic study. In addition, he also wanted to be free to devote himself to the Lord. So after eight months in the college, Singh left in July 1910.
He was quite independent of outward Church authority in all his religious life, thought, and work. During his twenties, Sundar Singh's ministry widened greatly, and long before he was thirty, his name and picture were familiar all over the Christian world.
In 1918 he made a long tour of South India and Ceylon, and the following year he was invited to Burma, Malaya, China and Japan in 1919. He also went to Western Europe, Australia and Israel in between 1920-1922. He preached in many cities such as Jerusalem, Lima, Berlin and Amsterdam among others. Once back in India, he continued his ministry, though his health began to fail.
In 1923, Sunder Singh made the last of his regular summer visits to Tibet and came back exhausted. Towards the end of his life, he had many health issues due to excessive traveling. He wrote many books during these times. He focused his mission on reaching Indian and Tibet people with the life example and message of Jesus Christ. In 1929, he determined to make one last journey to Tibet with some other traders.
He had walked several miles beyond Badrinath on the snowy mountains. The road to Tibet is very steep and difficult mountainous trail. He was on this road and he never returned back but where he went after that remains unknown. Whether he died of exhaustion or reached the mountains remains a mystery. Nobody knows exactly what happened to him.
Sadhu Sunder Singh was referred to as "the apostle with the bleeding feet" by the Christian communities of the north India. He made it clear that Christianity constitute not an imported, alien, foreign religion but is indigenous to Indian needs, aspirations, and faith. He represented Christ and Christianity in an Indian form. He had done more than any man in the first half of the 20th century to establish that “Jesus belongs to India”. He remains one of the permanently significant figures on Indian Christianity.
🛐.Dear brothers and sisters, today you have received good education, health and better life styles, it is because of many Christian missionaries who sacrificed their life for you in the past. Have you ever thought of the guiding hands behind it? Yes, it is none other than God himself who prepared missionaries and send to your village and gave the burden to uplift your life. In return, what shall you offer to God as thanksgiving? Think about it.
☸. My dear parents will you encourage and dedicate your children to do God's work as educational missionary or medical missionary or Cross Cultural missionary for our Nation?