பாடல் பிறந்த கதை:
பாமாலை:
எந்தன் ஆத்ம நேசரே!
ஆசிரியர்:
சார்லெஸ் வெஸ்லி
ராகம்:
சிமியோன் B. மார்ஸ்
வேதபகுதிகள்:
சங்கீதம் 36: 9
சங்கீதம் 91: 4
சங்கீதம் 107: 30
பாமாலை பாடல்:
1) என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து, இயேசுவே
திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்
2) வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்கு மேன்
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்
3) குறை யாவும் நீக்கிட
நாதா, நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்
நீர் நிறைந்த நித்தியரே
4) பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள்பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே
என்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமீ, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.
பாடல் பிறந்த கதை:
ஜான் வெஸ்லியும் சார்லஸ் வெஸ்லியும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்கள். அந்நாட்களில் கல்லூரி மாணவ சமுதாயம் ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் காட்ட வில்லையே என்று வருந்திய சகோதரர்கள் "பரிசுத்த குழு" என்ற குழுவை ஆரம்பித்தனர். இக்குழுவின் அங்கத்தினர்கள், எல்லா காரியங்களையும் ஒழுங்கு கிரமமாய் செய்வதை பார்த்து மற்ற மாணவர்கள் அவர்களை "மெத்தடிஸ்ட்கள்" என்று கேலியாக அழைத்தனர்.
படிப்பை முடித்த சார்லஸ் வெஸ்லி 1735 இல் இங்கிலாந்து திருச்சபையில் போதகராக நியமிக்கப்பட்டார்.
இவர் மெதடிஸ்ட் திருச்சபை ஸ்தாபித்த பிரபல பிரசங்கியார் ஜான் வெஸ்லியின் சகோதரர் ஆவார். இவரது தந்தை சாமுவேல் வெஸ்லி "எப்வொர்த்" திருச்சபை போதகராக பணியாற்றினார். சாமுவேல் வெஸ்லியும் அவர் மனைவி சூசன்னாளும் ஏழ்மையில் குடும்பத்தை நடத்தினாலும், தங்கள் பிள்ளைகள் நன்றாய் பாடுவதற்கு பயிற்சி அளித்து வந்தார்கள். இப்படிப்பட்ட சங்கீத சூழலில் வளர்ந்ததால் சார்லஸ் வெஸ்லி பெரியவரான பொழுது 6500 க்கும் அதிகமான பாடல்களை எழுத முடிந்தது.
1735 ம் ஆண்டு, அமெரிக்காவின் ஜார்ஜியா குடியிருப்புகளில் வாழும் மக்களின் ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு எனவும், அங்குள்ள இந்தியரிடையே நற்செய்தி பணியாற்றவும், இங்கிலாந்து திருச்சபையானது ஜான் வெஸ்லி யையும் சார்லஸ் வெஸ்லியையும் அனுப்பிவைத்தது.
இந்நிலையில் இவர்கள் கப்பலில் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தை கடந்து பயணம் கொண்டிருந்தபோது அவர்களோடு பயணம் செய்த "ஜெர்மானிய மொரோவியர்கள்" என்ற குழுவினர் மூலம் அவர்களுக்கு அனுபவம் கிடைத்தது. உற்சாகமாக எப்போதும் பாடிக் கொண்டிருந்த அந்த விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி நிலையை, எதிர்பாராத விதமாக அவர்கள் சந்தித்த கடும் புயலின் மூலம் அறிந்துகொண்டார்கள்.
கப்பலில் ஆராதனையை ஆரம்பித்து சங்கீதங்களை பாடும்பொழுது, கடல் கொந்தளித்து பாய் மரத்தை உடைத்ததால் தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. உடனே ஆராதனையில் இருந்த ஆங்கிலேயர் அனைவரும் உரத்த சத்தமாய் அலறி ஓலமிட்டார்கள். ஆனால் மொராவியர்கள் புயலின் கொடூரத்தை பார்த்தும் கூட, பாடல்கள் பாடுவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். புயல் ஓய்ந்த பின் வெஸ்லி சகோதரர்கள் அவர்களிடம் உங்களுக்கு பயமாக இருக்கவில்லையா? என்று கேட்டனர் அதற்கு அவர்கள் "இல்லை" என்று பதில் கூறி ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள். இது இவர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
வெஸ்லி சகோதரர்களின் அமெரிக்க ஊழியம் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே சோர்வுற்ற அவர்கள் சீக்கிரமே இங்கிலாந்து திரும்பினார்கள். அப்பொழுது மீண்டுமாக பக்தி வைராக்கியம் மிகுந்த மொரோவியர் குழுவினரை லண்டனிலுள் ஆல்டெர்ஸ்கேட்டில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றனர். 1738 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு இவர்களுடைய இரட்சிப்பின் அனுபவத்தை இன்னும் கூர்மையாக்கியது. ஆகவே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் தினமும் 15 முதல் 18 மணி நேரத்தை ஆண்டவருடைய ஊழியத்திற்கு என்று செலவிட்டார்கள்.
இங்கிலாந்தில் மட்டும் 1739 முதல் 1756 க்குள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மைல்கள் குதிரைகளில் பயணம் செய்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நற்செய்தி கூட்டங்கள் நடத்தினார்கள். பல்வேறு எதிர்ப்புகள்பெருகின சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஊழியம் செய்தார்கள். இடைவெளியின்றி அயராது உழைத்த இந்நாட்களில் சார்லஸ் வெஸ்லி இவ்வளவு பாடல்கள் எழுதினார் என்பது அவருடைய ஊழிய வாஞ்சையை காட்டுகிறது.
சார்லஸ் வெஸ்லி தன்னுடைய வாழ்வின் ஆரம்ப கால அனுபவங்களின் அடிப்படையில் நெகிழ்ந்த உள்ளத்தின் உணர்ச்சிக் குவியலாக "என்தன் ஆத்ம நேசரே" என்ற பாடலை எழுதியுள்ளார். 1740 ஆம் ஆண்டு வெளிவந்த "பாடல்களும், புனித கவிதைகளும்" என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இது தொடர்பான அவரது ஆரம்பகால அனுபவங்களில் முக்கியமான மூன்றை நாம் பார்ப்போம்.
முதலாவதாக 1736 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கவர்னர் ஒகில்தோர்ப்பு என்பவருக்கு செயலாளராக இருந்த சார்லஸ் வெஸ்லி, அவரோடு ஒத்துப்போக முடியாத காரணத்தினால் தன் பதவியை இழந்தார். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுற்று ஜார்ஜியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில், சார்லஸ் வெஸ்லி பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியது. உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையை இழந்த சார்லஸ் தவித்துப் போனார். அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து சம்பவத்தின் அடிப்படையில் இப்பாடலின் முதல் இரண்டு சரணங்கள் அமைந்துள்ளன.
இரண்டாவதாக 21/ 5/1738 ஆம் ஆண்டு ஆல்டெர்ஸ்கேட் டில் பெற்ற ஆவிக்குரிய புத்தெழுச்சி அனுபவம், சார்லஸ் வெஸ்லி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்நாட்டில் அவர் அடிக்கடி சுகவீனம் பட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக அன்று தன் விடுதி அறையில் மிகுந்த பெலவீனத்துடன் படுத்து இருந்தார். அப்போது ஒரு தரிசனத்தின் மூலம், ஆண்டவர் அவரை தேற்றி, அற்புத சுகம் அளித்தார். அந்நேரமே அவர் புது பெலனடைந்தால் இப்பாடலின் மூன்றாம் மற்றும் நான்காம் சரணங்களாக எழுதியுள்ளார்.
கடைசியாக நியுகேட் சிறைக்கைதிகளின் மத்தியில் சார்லஸ் வெஸ்லி ஊழியம் செய்த போது, அக்கைதிகளின் அவல நிலை சார்லஸ் வெஸ்லியன் உள்ளத்தை வாட்டியது. குறிப்பாக 1738 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கிருந்த கைதிகள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களாக குன்றில் தூக்கிலிடப்பட்ட போது அவர் உள்ளம் நெகிழ்ந்தது.
1881ஆம் ஆண்டு ஒரு சுற்றுலா குழு வட அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து போட்டோமாக் நதியில் பயணம் செய்துகொண்டிருந்தது. அழகான இயற்கை காட்சிகளை ரசித்தவண்ணம் அக்குழுவில் இருந்த ஒருவர் இப்பாடலை பாட ஆரம்பித்தார். இரண்டு சரணங்களை பாடி முடிக்கும் முன், படகில் இருந்த அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர் அவரிடம் வந்து *மன்னிக்கவும், கடந்த யுத்தத்தில் நீங்கள் பணி புரிந்தீர்களா?* என்று கேட்டார். பாடியவர் *ஆம்* ஜெனரல் கிரான்ட் தலைமையில் பணிபுரிந்தேன் என்றார்.
அப்பொழுது அந்த மனிதர் நான் தென் ராணுவத்தில் பணி செய்தேன். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன், இதே மாதம், ஒரு நாள் இரவில், நல்ல நிலா வெளிச்சத்தில், உங்களுக்கு வெகு அருகில் மறைந்து இருந்தேன். அன்று இரவு நீங்கள் காவல் பொறுப்பிலிருந்தீர்கள். நான் என் கையில் இருந்த துப்பாக்கியுடன் உங்களை நெருங்கினேன். நீங்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு இப்பாடலை பாடி கொண்டிருந்தீர்கள். நான் என் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்த பொழுது, அச்சமயம் நீங்கள் இந்த பாடலில் உள்ள *ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர்* என்ற வரியை பாடிக்கொண்டு இருந்தீர்கள். அதைக்கேட்ட என்னால், உங்களை சுட முடியவில்லை. உங்கள் முகாமைத் தாக்காமல் நாங்கள் விட்டுச் சென்றோம் என்றார்.
இதைக் கேட்ட பாடகரான இராணுவ அதிகாரி, அவர் கையை குலுக்கி, அந்த இரவை நான் நன்கு அறிவேன். இரவு காவல் வேலைக்குச் செல்லும் பொழுது, நான் மிகவும் சோர்வுற்று இருந்தேன். அந்த இடம் மிகவும் அபாயகரமானது என அறிந்திருந்தேன். எனவே உலாவிக் கொண்டிருந்த அவ்வேளையில், என் மனக்கண் முன் என் குடும்பமும், என் நண்பர்களும் தோன்றினார்கள். அத்துடன் கர்த்தரின் பாதுகாப்பையும் எண்ணினேன். உடனே இப்பாடலைப் பாடினேன். இப்பொழுது உங்களை சந்திக்கும் வரை, என் ஜெபத்திற்கு ஆண்டவர் இவ்வாறு பதிலளித்தார் என்று எனக்கு தெரியாது என்று கூறினார்.
உலகமெங்கும் பிரபலமான இப்பாடல், சார்லஸ் வெஸ்லி எழுதின பாடல்கள் அனைத்திலுமே முதன்மையானதாக சிறந்து விளங்குகிறது. டாக்டர் போடைன் இப்பாடலை "ஆங்கில மொழியில் இதயகீதம்" என்று கூறுகிறார். இப்பாடல் எண்ணற்ற மக்களுக்கு ஆறுதலையும், ஆவியில் உற்சாகத்தையும் அளித்துள்ளது. மரணத்தருவாயில் இருந்த பல இப்பாடலைப் பாடியபடியே, நிறைவான சமாதானத்துடன் இவ்வுலகை கடந்து சென்றுள்ளனர்.
எளிமையான, முழுமையான, கருத்து நிறைந்த, உயிர் ஊட்டும் பாடலாக, இது விளங்குகிறது.
நித்திய தேவனை அண்டி வாழவேண்டும் என்ற மனிதனின் உள்ளக் கிளர்ச்சியை, இப்பாடல் தெளிவாக காட்டுகிறது. சிமியோன் B. மார்ஸ் என்பவர் அமைத்த "மார்ட்டின்" என்ற ராகத்தை தாமஸ் ஹேஸ்டிங்ஸ் என்பவர் இப்பாடல் உடன் இணைத்தார். இப்பாடல் உலகமுழுவதும் இன்றும் பாடப்பட்டு வருகிறது.
நீங்களும் ஒருமுறை பாடித்தான் பாருங்களேன்...
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல கிறிஸ்தவ பாமாலைகளும், கீர்த்தனைகளும் முக்கியத்துவம் பெற்று, திருச்சபையின் இதயதுடிப்பாக இருந்துகொண்டு இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மானியம் போன்ற மொழிகளில் மேல் நாட்டவரால் எழுதப்பட்டு, மேல்நாட்டு இசையுடன் திருச்சபையில் பாடி வந்த பக்தி பாடல்களை தமிழில் மொழிபெயர்த்து, "பாமாலைகள்" என்றும் கர்நாடக இராகம், தாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழில் இயற்றப்பட்ட பக்தி பாடல்கள் "கீர்த்தனைகள்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
The story behind the Hymn
Hymn:
Jesus, lover of my Soul
Author: Charles Wesley
Music:
Joseph Parry
Scriptures:
Psalms 36:9
Psalms 91: 4
Psalms 107: 30
The Hymn:
Jesus, lover of my Soul*
1) Jesus, lover of my soul,
let me to thy bosom fly,
while the nearer waters roll,
while the tempest still is high.
Hide me, O my Savior, hide,
till the storm of life is past;
safe into the haven guide;
O receive my soul at last.
2) Other refuge have I none,
hangs my helpless soul on thee;
leave, ah! leave me not alone,
still support and comfort me.
All my trust on thee is stayed,
all my help from thee I bring;
cover my defenseless head
with the shadow of thy wing.
3) Wilt Thou not regard my call?
Wilt Thou not accept my prayer?
Lo! I sink, I faint, I fall-
Lo! on Thee I cast my care;
Reach me out Thy gracious hand!
While I of Thy strength receive,
Hoping against hope I stand,
dying, and behold, I live.
4) Thou, O Christ, art all I want,
more than all in thee I find;
raise the fallen, cheer the faint,
heal the sick, and lead the blind.
Just and holy is thy name,
I am all unrighteousness;
false and full of sin I am;
thou art full of truth and grace.
5) Plenteous grace with thee is found,
grace to cover all my sin;
let the healing streams abound,
make and keep me pure within.
Thou of life the fountain art,
freely let me take of thee;
spring thou up within my heart;
rise to all eternity.
The Story behind the Hymn
Both Charles and his brother John–two of Susanna Wesley’s 19 children–were zealous for ministry when they finished their studies at Oxford University. Both were soon ordained as clergymen in the Church of England; and in 1735, both sailed to the new colony of Georgia, John as a missionary and Charles as a secretary to General Oglethorpe, who was then governor of the colony.
On that trip they encountered a group of Christians from Germany called Moravians, whose constant singing awakened in John an appreciation for what spiritual songs can do for the Christian life.
It wasn’t until 1738, however, after returning to England, that both brothers were truly born again, at which point their ministry took on a whole new character and energy. John and Charles became itinerant preachers and began organizing meetings that would be called “Methodist societies” (and which would eventually become the Methodist Church). Charles Wesley and his brother John, were the founders of the Methodist church. It was a time of great change within the Christian church, and emotional responses to the new thing God was doing ran deep. It was not unusual for violence to result.
At the start, John would occasionally write hymns, but preaching and leading the new movement eventually took all of his time. Charles, on the other hand, almost immediately discovered a love and ability for writing verse which he would continue for the rest of his life. He was naturally a poet, and now the writing of religious verse became to him nothing less than a passion.
*Jesus, lover of my soul* is perhaps one of the most personal hymns penned by Charles Wesley an English hymn writer, poet, and preacher who lived from 1707 to 1788. However, it does bear the marks of three tremendous experiences in his early life–the near sinking of his ship during a great storm on the Atlantic when returning from Georgia to England in 1736.
In the late fall of 1736 on his way back from a brief sojourn in the United States; the ship that Charles was on got caught in a terrible storm. He and the rest of the passengers must have endured a horrible trial of sheer terror and uncertainty. Its lyrics speak to the security and refuge that we find in Jesus. Even in the midst of tempests and storms, He is our safe haven. In Him we find all that we need: “Thou, O Christ, art all I want, more than all in Thee I find.” He wrote his first within a day or two of his conversion. He dictated his last to his wife from his deathbed, “in age and feebleness extreme.” This is a testimony to Charles Wesley’s ability to use Biblical language and metaphor to touch a person’s hearts with truth and also express their desires to God.
The understanding that Jesus as a “lover” seems to have made many squeamish at the very idea, especially an idea that should be expressed in public worship. According to hymnologist Kenneth W. Osbeck, this hymn is considered to be among Wesley’s greatest hymns. It demonstrates, among many other things, Charles Wesley’s vast knowledge of biblical texts, classic literature, and other intellectual sources of his era.
Every experience of his own, every scene and occasion of the Methodist revival, became the inspiration of a new hymn. Written in 1738, within months of being converted, Charles Wesley titled this piece "In Temptation." Within a few decades, the hymn was to become one of the most popular and influential hymns sung in churches of all denominations. One of the greatest hymn writers of the Christian tradition, Charles Wesley penned over 6500 hymns.
8. “Jesus, Lover of My Soul” has long been one of America’s Favorite Hymns. It is treasured as his finest hymn and has been translated into almost every known language. Over the years, several musical scores have been written to accompany this hymn. The most popular has been a melody and arrangement by Joseph Parry (1841-1903), in 1879.
In the early American Civil war in the 19th Century, at a gathering of veterans from both sides of the Civil War, an elderly Confederate recalled that late one evening before the war had ended; he was on patrol and happened upon the sentry from the opposing side. His gun aimed with a clear line of vision, he was ready to pull the trigger when the sentry broke into song, "Jesus, lover of my soul, let me to Thy bosom fly....” The gunman paused and listened. As the Union guard continued to sing, "Cover my defenseless head with the shadow of Thy wing," the soldier put his gun down and crept away. "I couldn't kill that man though he was 10 times my enemy," he recalled. A Union veteran spoke up, "Was that in the Battle of Atlanta in '64?" Indeed, it was. "I was that sentry!" the Union veteran exclaimed. He spoke of his fear of battle, the sense of hopelessness he felt that night on patrol, and the peace and comfort brought by singing the hymn.
The renowned American evangrlist Charles Spurgeon, while holding meetings at Exeter Hall in London, opened the service with "Jesus, Lover of My Soul." Upon hearing the words, a stranger who had happened upon the meeting was so moved by the hymn that he stated, "Does Jesus love me? Then why should I live at enmity with Him?" and was converted that very evening.
The great American preacher Henry Ward Beecher stated: "I would rather have written that hymn of Wesley's ... than to have the fame of all the kings that ever sat on earth. It is more glorious. It has more power in it. ... But that hymn will go on singing until the last trump brings forth the angel band; and then, I think, it will mount up on some lip to the very presence of God."
Charles Finney, the revivalist associated with the Great Awakening, sang this hymn on his deathbed in 1875.
A quarter century later in Northfield, Massachusetts, mourners at the graveside of D.L. Moody joined their voices in this hymn of hope and protection as the evangelist's body was lowered into the grave. Its words remind us that whenever the storms of life seem to become overwhelming, we can fly for refuge to "Jesus, Lover of My Soul."
After more than 250 years, the hymn remains deeply loved and widely sung. This hymn was a favorite of many great leaders and continues to speak to hearts today.
Dear beloved in Christ, Christian hymns are as important in the heart of the Church as the Holy Bible is in the lives of Christians. The apostle Paul wrote of singing psalms, hymns, and spiritual songs, thus recognizing that followers of Jesus can worship God with various musical tastes. These hymns will no doubt have a profound effect on our spiritual lives.
Dear beloved in Christ, Gamaliel Bible College publishes the stories behind the Hymns to learn and act as Ambassador of Christ. In addition, the college has been teaching the biographies of missionaries in Tamil and English, and theological studies in Tamil and English, through the whatsapp by the best Bible scholars, since 2018 onwards without charging money.