பாமாலை:
காரிருளில் என் நேச தீபமே
ஆசிரியர்:
ஜான் H. நியுமன்
இசை:
ஜான் பக்கஸ்
வேதபகுதிகள்:
யாத்திராகமம் 13: 21, 22
சங்கீதம் 32: 8
பாமாலை பாடல் வரிகள்:
1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்
பாடல் பிறந்த கதை:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரசங்கியார் களில் ஒருவராக கருதப்பட்டவர் ஜான் ஹென்றி நியூமன் ஆவார். இவர் லண்டன் நகரத்தில் 1801ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் தேதி பிறந்தார்.
ஜான் ஹென்றி நியூமன் என்பது இவருடைய முழு பெயர் ஆகும். இவருடைய தந்தையின் பெயர் ஜான் நியூமன். ஜெமிமா போர்டினியர் என்பது இவருடைய தாயின் பெயர். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் மூத்தவர் ஹென்றி நியூமன் ஆவார். நியுமன் சிறியராக இருக்கும்போதே புத்திக்கூர்மை உள்ளவராக காணப்பட்டார். வேதம் வாசிப்பதில் ஊக்கம் காட்டிய பெற்றோரால் நன்கு வளர்க்கப்பட்டார்.
நியூமன் பள்ளியில் படிக்கும்போதே ஆங்கில மொழியில் கவிதை இயற்றுவதிலும் உரைநடை எழுதுவதிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்தார். இதன்னுடைய 15 ம் வயதில் 1816 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு கலாசாலையில் சேர்ந்து லத்தீன் மொழியிலும் கணிதத்திலும் முதல் வகுப்பில் தேறினார். ஆக்ஸ்போர்டு கலாசாலையின் முதல் மாணவன் என்பதற்கு அறிகுறியாக அளிக்கப்பட்ட நீல நாடாவையும் (Blue Ribbon) பெற்றார். நியுமன் தனது கல்லூரி பருவத்தில் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்று வேதாகமத்தையும், திருச்சபை தத்துவங்களையும் ஆவலோடு கற்றுக்கொண்டார்.
நியுமன் தனது 19 ம் வயதில் 1823 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் பொழுது, பேரறிஞர் டாக்டர் புஸ்ஸி (Dr. Fusey) மற்றும் கவிஞர் ஜான் கிபிள் (John Kible) ஆகியோரின் நட்பு கிடைத்தது. ஆக்ஸ்போர்டில் பட்ட படிப்பிற்கு பிறகு இதே கலாசாலையில் இரண்டு வருடங்கள் ஆசிரியராக நியுமன் பணியாற்றினார்.
அதன்பின் 1878ஆம் ஆண்டு இங்கிலாந்தில் St. Mary திருச்சபையின் குருவானவராக நியமிக்கப்பட்டார். அங்கு பணி செய்து கொண்டு இருக்கும்போது ரோமன் கத்தோலிக்க பேரறிஞரும் சிறந்த கிறிஸ்தவ பக்தமான ஹால் போர்டு அவருக்கு நண்பரானார்.
இங்கிலாந்து திருச்சபைகளில் கிறிஸ்துவின் மீது விசுவாசம் இல்லாதவர்களாக, ஆவிக்குறிய வாழ்க்கையில் உயிரற்ற வாழ்க்கையை கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருவதை குறித்து நியுமன் மனம் வருந்தினார். ஆகவே கிறிஸ்தவ சபைகள் புத்துயிர் பெற்று வளர ஆவன செய்ய வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். இதற்கு தமக்கு வழிகாட்டி, நடத்த வேண்டும் என்று கடவுளிடம் ஊக்கமாக மன்றாடி ஜெபித்து வந்தார்.
நியுமன், தன்னுடைய சிறந்த கிறிஸ்தவ பண்பினாலும், சிந்தனையினாலும், அவர் ஆற்றிய சொற்பொழிவுகளினாலும் கட்டுரைகளினாலும், தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கையை சீர்படுத்தினார். இவருடைய திறமைகளும், கம்பீரத் தோற்றமும் பலரை அவர்பால் காந்தம் போல் கவர்ந்தன.
இந்நிலையில் 1832 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூமன், தனது நண்பரான ஹால் போர்டு உடன் சேர்ந்து இத்தாலிய நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். நியுமன் மத்திய தரைக்கடல் சுற்றியுள்ள பல இடங்களுக்கு சென்று, ஹால் போர்டு மூலமாக ரோமாபுரியை அடைந்தார்.
ரோமில் சில வாரங்கள் செலவிட்ட நிலையில் 1833 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியூமன் நோய்வாய்ப்பட்டார். இதனால் தன் தாய்நாடான இங்கிலாந்திற்கு திரும்பிவர விரும்பினார்.
இந்நிலையில் இத்தாலியில் இருந்து இங்கிலாந்து செல்ல கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் ஆரஞ்சு பழங்களை ஏற்றிக்கொண்டு பிரான்சுக்கு செல்லும் கப்பல் ஒன்றில் நியூமன் பயணப்பட்டார். இப்போது கடலில் கப்பலை செலுத்துவதற்கு போதிய காற்று இல்லாததினால் மேலும் ஒரு வாரம் தங்கி இருக்க நேரிட்டது.
இந்நிலையில் இங்கிலாந்திற்குச் சென்று, தன்னுடைய நெருங்கிய நண்பர்களை பார்க்க வேண்டும் என்றும், அங்குள்ள கிறிஸ்தவ மக்களை தட்டி எழுப்பி, அவர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், நியுமனின் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தாம் செய்யவேண்டிய பயணம் தாமதமாவதை கண்டு தவிர்த்தார். ஒரு இருள் சூழ்ந்த நிலைமையில் தான் இருப்பதாக கருதி தமக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் "காரிருளில் என் நேச தீபமே" என்று ஆரம்பிக்கும் பாடல் அவருடைய மனதில் தோன்றியது.
இப்பாடல் இஸ்ரவேல் மக்களை கடவுள் இரவில் தீபஸ்தம்பத்தை கொண்டு வழி நடத்துவதை தன் மனதில் கொண்டு, இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில், ஒரு நேச தீபமாகத் தம்மை வழி நடத்தும்படி கடவுளை வேண்டிக்கொண்ட பிரார்த்தனை பாடலாகும்.
இப்பாடலின் மூன்று சரணங்களும் ஒரே நாளில் எழுதப்பட்டன. இப்பாடலுக்கு நியூமன் அளித்த தலைப்பு "மேகஸ்தம்பம்" என்பதே. இஸ்ரவேல் ஜனங்களை மேகஸ்தம்பம் மூலம் வழிநடத்தின ஆண்டவர், தன் எதிர்கால ஊழியப் பாதையிலும் வழிநடத்த வேண்டும் என்று இறைஞ்சி இப்பாடலை எழுதினார்.
இப்பாடலின் முதல் சரணம் நியூமன் பயணம் செய்த கப்பல் முன்னேற முடியாமல் தவிக்கும் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாம் சரணம் நியூமனின் இளவயது அனுபவத்தை சித்தரிக்கிறது. இப்பாடலின் கடைசி இரண்டு வரிகள் அருமையான நண்பர்களை விட்டு தவிக்கும் அவல நிலையை குறிப்பதாக இருக்கிறது.
இந்நிலையில் பல போராட்டங்களை சந்தித்த பிறகு, 1830 ல் இங்கிலாந்து வந்தடைந்த நியூமன் மீண்டும் உற்சாகமாக ஊழியத்தை செய்ய ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவருடைய கிறிஸ்தவ தத்துவங்களின் கண்ணோட்டம் மாறியது. நாட்கள் செல்லச் செல்ல தான் ரோமன் கத்தோலிக்க திரு சபையில் சேர வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வேரூன்ற ஆரம்பித்தது. பின்னர் நண்பர்களுடன் வெகுநாட்களாக கலந்தாலோசித்து, ஜெபத்தில் அனேக நாட்களை செலவிட்டு, இறுதியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் 1847 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் நாள், தன்னுடைய பள்ளி நண்பர்கள் நால்வருடன் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் 34 ஆண்டுகளுக்குப் பின் 1879 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி போப் லியோ ஏன்பவர் நியுமனை கார்டினலாக நியமித்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பல சேவைகளில் ஈடுபட்டு 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் தனது 90வது வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார்.
இப்பாடலுக்கு டாக்டர் ஜான் பக்கஸ் டைக்ஸ் என்ற இங்கிலாந்து திருச்சபை போதகர் 1867 ஆம் ஆண்டு "லக்ஸ் பெனிக்கா" என்ற ராகத்தை அமைத்தார். இசையில் டாக்டர் பட்டம் பெற்ற இப்பண்டிதர் தனது பத்தாவது வயதிலிருந்து ஆலயத்தில் ஆர்கன் வாசித்த இசை வல்லுநர் ஆவார்.
1885 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகாகோ என்னும் நகரில் அகில உலக சமய மகாநாடு ஒன்று கூடியது. இம்மாநாடு ஆரம்பிப்பதற்கு முன் கடவுளின் வழிநடத்துதலுக்காக கூடியிருந்த அனைவரும் சேர்ந்து பாடக்கூடிய பாடல் எதுவென்று அவர்கள் ஆராய்ந்த பொழுது *காரிருளில் என் நேச தீபமே* என்ற பாடலையே தெரிந்தெடுத்து பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் சிறந்த பாடலாக இருந்து வருகிறது. இந்த பாடலை தன்னுடைய அடக்க ஆராதனையிலும் பாடும்படி இங்கிலாந்து ராணி விக்டோரியா கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்த பாடலானது நம்முடைய தேசபிதா மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல். எபடியெனில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான தத்துவம் இந்த பாடலில் இருப்பதாக கருதினார். எப்படியெனில் இதில் கடவுளிடம் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்வ வேண்டுவதாக பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை தன்னுடைய அடக்க ஆராதனையிலும் பாடும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 2 மற்றும் குடியரசு தினத்திலும் இந்த பாடல் பாடப்பட்டு வருகிறது.
இந்த பாடலின் கருத்தை உணர்ந்தவர்களாக பாடும்போது நமக்கு ஆறுதலையும், சமாதானத்தையும், கர்த்தரின்மீது விசுவாசத்தையும் பலப்படுத்துகிறது. இந்த பாடல் எல்லா அடக்க ஆராதனைகளிலும் பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் ஒருமுறை பாடித்தான் பாருங்களேன்.
இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
The Story behind the Hymns:
Hymn: Lead, Lindly Light
Author:
John Henry Newman (1801-1890)
Music:
John B. Dykes (1823-1876)
Scripture:
Exodus 13: 21, 22
Psalm 32: 8
The Hymn
1. Lead, kindly Light, amid th’encircling gloom;
Lead thou me on!
The night is dark, and I am far from home;
Lead thou me on!
Keep thou my feet; I do not ask to see
The distant scene—one step enough for me.
2. I was not ever thus, nor pray’d that thou
Shouldst lead me on.
I loved to choose and see my path; but now,
Lead thou me on!
I loved the garish day, and, spite of fears,
Pride ruled my will. Remember not past years.
3. So long thy pow’r hath blest me, sure it still
Will lead me on
O’er moor and fen, o’er crag and torrent, till
The night is gone.
And with the morn those angel faces smile,
Which I have loved long since, and lost awhile!
The History behind the Hymn
John Henry Newman was born in London, England, the 21st of February 1801. At the age of 7, Newman was sent to a private school. Newman was diligent and obedient, but also shy and aloof. He took no part in school games. He took great delight in reading the Bible and also the novels of Walter Scott, which were then in course of publication.
At the age of 15, during his last year at school, he was converted—an incident of which he wrote in his Apologia that it was “more certain than that I have hands or feet.” Apart from his academic studies, in which he excelled, he acted in Latin plays, played the violin, won prizes for speeches and edited periodicals, for which he also wrote articles.
In the autumn of 1816 that he underwent a religious conversion under the influence of one of the schoolmasters, Rev. Walter Mayers, who had himself shortly before been converted to a Calvinistic form of evangelicalism.
Newman had a conventional upbringing in an ordinary Church of England home where the emphasis was on the Bible, rather than dogmas and sacraments, and where any sort of evangelical enthusiasm would have been frowned upon. He went into residence at Trinity College, Oxford in June 1817. On Trinity Sunday, the 13th of June 1824, Newman was ordained as an Anglican minister of St. Mary’s Protestant Episcopal Church, Oxford.
He was a popular, forceful preacher, with fluent speech, perfect diction, and a splendid fund of illustration which he always used with telling effect. He was deeply interested in the heart-life of men, and was ever ready to encourage them to speak to him freely of their experiences and temptations. He exercised a strong influence over the students who thronged in his church.
Newman became increasingly uncomfortable in his various church and academic positions and so, in December 1832, he went with a colleague on account of the latter’s health for a tour in South Europe. It was during the course of this tour that he wrote most of the short poems.
From Rome, instead of accompanying his colleague home in April 1833, Newman returned to Sicily alone and fell dangerously ill with gastric or typhoid fever, of which many were dying at Leonforte. He recovered from it with the conviction that God still had work for him to do in England.
The young Anglican priest was coming to the end of a holiday from hell in Italy. In June 1833, he left Palermo for Marseille in an orange boat, which was becalmed in the Strait of Bonifacio. The journey home involved a sea crossing from Palermo to Marseilles. During the three-week wait for a boat his servant found him sitting, ill and in tears, on his bed. Newman told him he ached to be back in England. When the boat finally left it ran into difficulty in the treacherous Strait of Bonifacio, between Corsica and Sardinia. Newman was struck down by a fever that nearly killed him and there he wrote the verses “Lead, Kindly Light,” The poem titled "the Pillar of the Cloud", which was first published in the British Magazine in 1834.
In the first stanza, Newman calls on the Kindly light, the Holy Spirit – to rescue him from his triple gloom … of homesickness, of apprehension in the face of his mission in the Anglican Church, and of his desire to reach his true home, heaven. He expresses his unquestioning dependence on God, to whom he gives his “feet” – his very path forward … he follows without question.
In this second stanza, Newman recalls with a sadness and remorse times from his past, when he had been proud and willful. While lying on his sickbed, Newman had much time to think about his earlier ways, and with the true possibility of death in his mind, it is small wonder that he’d be given to sorrow over past sins.
In this final, glorious and triumphant last stanza, we see Newman’s faith and hope vanquish the gloom. He throws his cares to Christ, remembering that ever has he been blest. And though he knows there might still be rough spots in the path ahead, crags and torrents … nevertheless, the night is gone. And the heart’s thrill of hope in the reality of the heavenly homecoming, at once gives meaning to all the homecomings – and the angel smiles serve to represent as well, both earthly and heavenly consolation – which Newman recalls with renewed happiness, and though he lost sight for a time, his eyes are again, surely and firmly, gazing upward.
Within a week of his return to England together with John Keble and a few other friends he was led by God’s light to begin the Oxford movement, a renewal movement in the Anglican Church. The spiritual unrest, kindled by the “Oxford Movement,” which finally led him to unite with the Roman Catholic Church, in 1845, was already upon him; he sought eagerly and conscientiously for divine guidance in solving the great doctrinal problems that vexed his soul.
God led him through one difficulty after another until at last, he was led to the Roman Catholic Church. He was born in 1801 but Seventy-eight years later became a Cardinal of the Roman Catholic Church. As a cardinal he was entitled to live in Rome but he insisted on remaining a parish priest in blighted Birmingham. When Benedict XVI beatifies Newman on 19 September he is not simply proclaiming that the cardinal was a holy man - He is saying that Newman's life and teaching are of universal significance.
By the end of the 19th century "Lead, kindly Light" was one of the most popular hymns in the English language. Newman modestly attributed this to the composer John Bacchus Dykes, who set the words to the melody "Lux Benigna" in 1865.
More surprisingly Lead Kindly Light became the favorite hymn of Mahatma Gandhi. When Gandhi returned to India, after two turbulent decades in South Africa, he decided that "Lead, Kindly Light" would be the motto of the Independence Movement. With its primordial imagery of dark and light the hymn speaks to anyone who is struggling, amid the gloom, to take the next step towards truth. Gandhi had asked this hymn to be played before he rested in his bruised body. In remembrance of Mahatma Gandhi, this hymn is being sung during Republic day and Gandhi Jayanthi in India.
The poem, of course, became one of the most popular hymns in the English language, often sung in times of struggle, or at funerals. Newman’s words embodied the spirit of an age of uncertainty seeking even in fear and doubt to hold fast to God. It is recorded that Queen Victoria asked it to be read to her as she lay dying.
Lead, Kindly Light is a prayer in the form of a hymn that seeks comfort and guidance from God. The lyrics are full of simple melody, steady rhythms, and reassuring harmonies create a sense of security and warmth.