பாமாலை:
நல்மீட்பர் பட்சம் நில்லும் ரட்சண்ய வீரரே
ஆசிரியர்:
போதகர் டஃபீல்டு
இசை:
ஜார்ஜ் வேப்
வேதவசனங்கள்:
யாத்திராகமம் 10: 11,
எபேசியர் 6: 11-18
பாமாலை பாடல் வரிகள்
1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.
2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.
4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.
பாடல் பிறந்த கதை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்பினத்தவருக்கு எதிராக அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவில் பெரிய பண்ணைகளை நிறுவி, அதில் வேலை செய்வதற்காக, அடிமைகளை வியாபாரம் செய்யும் வியாபாரிகள், ஆப்பிரிக்க நாடுகளில் நீக்ரோ இனத்தவர்களை மிருகங்களை வேட்டையாடுவது போல பிடித்து, அமெரிக்க பண்ணை முதலாளிகளுக்கு விற்று, மிகுந்த பணம் சம்பாதித்து வந்தார்கள்.
அந்நாட்களில் பிலடெல்பியா நகரில் இருந்த புகழ்பெற்ற ஆலயத்தில் 29 வயதான இளம் போதகர் டட்லி A. டிங் என்பவர் ஊழியம் செய்து வந்தார்.
இவருடைய திருச்சபையில் பல அமெரிக்க பண்ணை முதலாளிகளும், அடிமைகளை வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் அங்கத்தினர்களாக இருந்தார்கள். சுவிசேஷ வாஞ்சையும், உயர்ந்த பண்புகளும், நிறைந்த போதகர் டிங், அடிமைகளின் அவல வாழ்வை கண்டு கொதித்தெழுந்தார். ஆகவே மனிதர்களை அடிமைபடுத்துவது கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றும் சகல மனிதர்களை மிருகங்களைப்போல அடிமையாக்குவது கொடும் பாவச்செயல் என்று பிரசங்க பீடத்தில் பகிரங்கமாக போதிக்க ஆரம்பித்தார்.
போதகர் டிங் அவர்களின் போதனையால் அதிர்ச்சியுற்ற அமெரிக்க பண்ணை முதலாளிகளும், அடிமைகளை விபாபாரம் செய்யும் வியாபாரிகளும் அவரிடம் சென்று இவ்வாறு போதிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டதோடு, பயமுறுத்தியும் பார்த்தார்கள். ஆனால் போதகர் டிங் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டார். இதனால் கொதித்தெழுந்த செல்வாக்கு மிக்க, பணவசதி படைத்த முதலாளிமார்கள், தங்களின் பணபலத்தினால், போதகர் டிங் அவர்களை அந்த திருச்சபையின் பொறுப்பிலிருந்து வெளியேற்றினார்கள்.
நேர்மையான போதகரை திருச்சபையிலிருந்து வெளியேற்றியதற்க்கு கண்டனம் தெரிவித்து, பலர் அந்த திருச்சபையில் இருந்து விலகினார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து வங்கியின் YMCA உதவியுடன் 5000 பேர் அமரக்கூடிய ஜேய்ன் அரங்கத்தில் 1857ஆம் ஆண்டு முதல் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு ஆரம்பமான திருச்சபையில் போதகர் டாக்டர் டஃபீல்ட் போன்ற பல போதகர்களும் சேர்ந்தார்கள். இதனால் புத்தெழுச்சி பெற்ற இந்த திருச்சபையானது நாளுக்கு நாள் வளர்ந்து பெருகியது.
30/3/1858 அன்று திருச்சபையில் திரளாக கூடியிருந்த வாலிபர்கள் மத்தியில் போதகர் டிங் அவர்கள் யாத்திராகமம் 10: 11 வசனத்தின்படி "புருஷர் ஆகிய நீங்கள் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்" என்ற வசனத்தை மையமாகக்கொண்டு, இளைஞர்களை கர்த்தருக்கு ஊழியம் செய்ய அறைகூவல் விடுத்தார். அந்த ஆராதனை முடிவில் சுமார் ஆயிரம் வாலிபர்கள் தேவனுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உறுதி மொழிந்தார்கள்.
இதைத் தொடர்ந்து புதன்கிழமையில் போதகர் டிங் தன் தியான அறையில் இருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வெளியே வந்தார். அப்போது அருகில் இருந்த சோளத்தை பதறடிக்கும் களத்தில், சோளத்தை பிரித்து எடுக்கும் எந்திரத்தில் வேலை செய்த மட்ட குதிரையிடம் சென்று அதின் கழுத்தை அன்போடு தடவி கொடுத்தார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் அறியாமல் அவர் அணிந்திருந்த நீளமான அங்கியானது, அந்த இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு போதகர் டிங் அவர்களையும் இழுத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் போதகரின் கை முழுவதும் துண்டிக்கப்பட்டதோடு, படுகாயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அந்த அறையில் மயான அமைதி நிலவியது. அதின் நடுவில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த போதகர் டிங் அவர்களை சுற்றி சோகமே உருவாக அமர்ந்திருந்த உடன் ஊழியர்களில் ஒருவரான போதகர் டஃபீல்டு, உடன் ஊழியர்களுக்கும், மற்ற சபை மக்களுக்கும் நீங்கள் கூற விரும்பும் கடைசி செய்தி என்ன என்று போதகர் டிங் அவர்களிடம் கேட்டார்.
அப்போது மரணத்தை தழுவும் நிலையிலும், ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்டும் உறுதியோடு, வார்த்தைகள் பளிச்சிடும் வண்ணம் *அனைவரும் நல் மீட்பர் பட்சம் உறுதியாய் தரித்து நிற்க வேண்டும்* என்று கேட்டுக்கொண்டார். போதகர் டிங் அவர்களின் மரணப்படுக்கை அருகே இருந்து, அவரின் பிரியாவிடை செய்தியை போதகர் டஃபீல்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
இவ்வாறு சாத்தானின் செயல்களுக்கு எதிராய், போர் முரசு எழுப்பிய வண்ணம் தனது உலக வாழ்க்கையை வெற்றி துணியுடன் முடித்துக்கொண்டார் போதகர் டாக்டர் டிங்.
இவருடைய கடைசி அறைகூவலின் எதிரொலிதான் *நல் மீட்பர் பட்சம் நில்லும்* என்ற அழகிய பாடலாக போதகர் டஃபீல்டு பேனாவிலிருந்து உருவெடுத்தது.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை, காலம்சென்ற போதகர் டாக்டர் டட்லி A. டிங் அவர்களில் நினைவு ஸ்தோத்திர ஆராதனையில் எபேசியர் 6: 16 ஐ மையமாகக்கொண்டு "தரித்து நில்லுங்கள்" என்ற தலைப்பில் வல்லமை நிறைந்த தேவ செய்தியை போதகர் டஃபீல்டு பகிர்ந்துகொண்டார். அச்செய்தியின் நிறைவாக தான் இயற்றிய இப்பாடலைலை வாசித்துக் கான்பித்தார்.
பின்னர் இப்பாடலின் பிரதியை, ஆலயே ஞாயிறு பள்ளி கண்காணிப்பாளரிடம் போதகர் டஃபீல்டு கொடுத்தார். அவர் அதை அச்சிட்டு, ஞாயிறு பள்ளியில் பாடவைத்தார்.
துரிதமாக இப்பாடல் பிரபலமானது. அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர்களின் விருப்ப பாடலாகவும், பின்னர் அமெரிக்கா முழுவதும் பாடப்படும் சிறப்பு பாடலாகவும் பெயர் பெற்றது. இப்பாடலுக்கு 1867ல் ஜார்ஜ் J. வெப் என்பவர் ராகம் அமைத்தார். ரோம போர் வீரனைக் கருத்தில்கொண்டு, பவுல் எழுதிய ஆவிக்குரிய போராட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இப்பாடல், இப்பொழுது கிறிஸ்தவ பாடல்களில் மிக முக்கிய இடம் பெற்று உலகமெங்கும் பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.
அன்பானவர்களே இந்த பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகளை அதன் பொருளை உணர்ந்து நாம் பாடும்போது நம்முடைய இதயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு உள்ளம் உருகுகிறது, பக்தி உணர்வு பெருகி ஆழ்ந்த இறை உணர்வு பெறுவதற்கும் துணை செய்கிறது. இந்த பாடல்கள் நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்த குழுவின் இணைப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் திருச்சபை மக்களுக்கும் அனுப்பி வையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
The Story behind the Hymns:
Hymn:
Stand up,stand up for Jesus!
Author:
George Duffield
Mysic:
George James Webb
Scriptures:
Exodus 10:11
Ephesians 6: 11 - 18
The Hymn
1).Stand up, stand up for Jesus! Ye soldiers of the cross;
Lift high His royal banner, it must not suffer loss:
From vict’ry unto vict’ry, His army shall He lead,
Till every foe is vanquished, and Christ is Lord indeed.
2).Stand up, stand up for Jesus! The trumpet call obey:
Forth to the mighty conflict, in this His glorious day;
Ye that are men now serve Him against unnumbered foes;
Let courage rise with danger, and strength to strength oppose.
3).Stand up, stand up for Jesus! Stand in His strength alone,
The arm of flesh will fail you, ye dare not trust your own;
Put on the gospel armor, and watching unto prayer,
Where calls the voice of duty, be never wanting there.
4).Stand up, stand up for Jesus! the strife will not be long;
This day the noise of battle, the next the victor’s song;
To him that overcometh a crown of life shall be;
He with the King of glory shall reign eternally.
*The Story behind the Hymn*
Dudley Tyng (1825-1858), an inspiring Episcopalian preacher, was one of the several ministers participating in a great citywide revival that swept Philadelphia in 1858. Tyng was known and loved for his zeal for the work of God. His strong doctrinal preaching and his anti-slavery rhetorics were popular for some and angered others, resulting in his resignation from an Episcopal congregation that he pastored following the retirement of his father.
In addition to serving the newly organized Church of the Covenant, his midday services at the YMCA attracted crowds as large as 5,000. On one occasion, March 30, 1858, 1000 men responded to the message by committing their lives to Christ.
During this sermon, Tyng is said to have declared, "I would rather that this right arm were amputated at the trunk than that I should come short of my duty to you in delivering God's message."
A few days later at “Brookfield,” not far from Conshohocken, Pennsylvania, he left his study for a moment and went out to the barn, where a mule was working, harnessed to a machine, shelling corn. When he patted the mule on the head, his sleeve caught in the cogs of the wheel and his arm was frightfully torn and severely lacerated resulting in a great loss of blood and an infection that took his life a few days later.
He lived only a few days after the accident. Before he died, however, he was asked by friends if there were any messages he would have them give to those who had participated with him in the revival work. Tyng responded briefly, beginning with the words, “Tell them, ‘Let us all stand up for Jesus”. Dr. George Duffield, was touched by the words and wrote the hymn Stand Up, Stand Up for Jesus
George Duffield Jr., a young pastor, was educated at Yale University and Union Theological Seminary Duffield, assisted Tyng in supporting a revival of evangelicalism in Pennsylvania.[ He used his independent wealth to establish small congregations and to support evangelistic endeavors."
Duffield was inspired by the funeral service for Tyng to preach on Ephesians 6:14 in his sermon the following Sunday, exhorting his congregation to stand firm for Jesus Christ. His text was from Ephesians 6:14, “Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness.”
At the close of the sermon he read a poem he had written: Stand up, Stand up for Jesus, Ye soldiers of the Cross. Duffield's Sunday school superintendent was so impressed by the hymn that he shared it throughout the church's Sunday school classes. One of these leaflets ended up being published in a Baptist newspaper, and "Stand Up, Stand Up for Jesus" was published in The Church Psalmist in 1859.
The traditional tune "Webb" was composed by George James Webb. The poem Stand Up, Stand Up for Jesus, has since become one of the most recognized hymns in all English-speaking Christendom.
After first publication, the hymn was popular and was sung by both the Union and Confederate soldiers in the American Civil War. The hymn also became popular among British revivalists, and within public schools in England.
While hymns like "Stand up, stand up for Jesus" may have inspired revival and mission efforts in the mid-nineteenth and early twentieth centuries, our rhetoric today needs to match the gospel of compassion and love that we seek to share in the twenty-first century. Let us claim the call to the spiritual warfare in Ephesians 6 and balance this with the God who came in Christ to love a lost and suffering world.
As we noted with that hymn, the connection to worldly battles was not the author’s intent; Christians have often sung soldier-songs, because, as God tells us in Ephesians 6 and elsewhere, that our lives in Christ are a fight for faith in the midst of spiritual enemies. We are called to stand in the strength he supplies.