=======
QUOTES
========
ஜெபத்தின் வேகம் என்னவென்று தெரியுமா?
நம்முடைய ஜெபம்
சுனாமியை விட வேகமானது
சூறாவளியே எட்டிப்பிடிக்க முடியாத
அதிவேகம் கொண்டது
ஏன்
இவ்வுலகில் செய்யப்பட்ட அல்லது
செய்யப்பட போகிற
எந்த வாகனமும்
அதன் வேகத்துக்கு
ஈடுகொடுக்க முடியாது.
இவ்வளவு ஏன்
ஒளியின் வேகத்தை விட
பல ஆயிரம் மடங்கு
வேகம் கொண்டது
நம் ஜெபம்.
ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்
ஒரு வாகனத்தில் பிரயாணித்தால் கூட
நம் கண்ணால் காணும் சூரியனை அடையவே
பதினேழு ஆண்டுகள் ஆகும்.
நம் சூரிய குடும்பத்தை போல்
மில்லியன் கணக்கில் சூரிய குடும்பத்தைக் கொண்டது
இந்த பால்வெளி மண்டலம்
மில்லியன் கணக்கான பால்வெளி மண்டலங்களை
உள்ளடக்கியது இந்த பேரண்டம்
இவற்றையெல்லாம் தாண்டி இருப்பதே
மூன்றாவது வானம்
அதாவது பரலோகம்
நம் பேரண்டத்தின் கடைசி நட்த்திரத்தை
சென்றடைய வேண்டுமானால்
500 மில்லியன் ஒளி ஆண்டுகள்
பயணம் செய்தால்தான் சாத்தியமாகும்.
ஆனால்
நம்முடைய ஜெபமோ
ஜெபித்த மறுவிநாடியே
தேவனது செவிகளில் சென்று
சேர்ந்துவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள்
நம் ஜெபத்தின் வேகத்துக்கு
ஈடு இணை ஏதும் உண்டா?
இத்தனை மகத்துவமுள்ள ஜெபத்தை
அலட்சியம் செய்யலாமா?
சிந்திப்போம்
செயல்படுவோம்
சீர் வாழ்வு பெறுவோம்.
By Bro Durai Dainel.
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
பொய்யிலே
உண்மை பொய் என்றும்
விளையாட்டு பொய் என்றும்
வித்தியாசம் ஏதுமில்லை
நல்ல பொய் என்றும்
கெட்ட பொய் என்றும்
வேறுபாடு ஒன்றுமில்லை
எந்த பொய் சொன்னாலும்
நரகம் நிச்சயம்
பொய்யர் அனைவரும்
அக்கினி கடலிலே பங்கடைவார்கள் என்பதே
வேதத்தின் தீர்ப்பு
மருந்து வடிவில் வந்தாலும்
விஷம் விஷம்தான்
எந்த வடிவத்தில் வந்தாலும்
பொய் பொய்தான்
நன்மை விளையும் என்றால்
பொய் சொல்லிக்கொள்ளலாம் என்பது
பிசாசின் போதனை
ஏனெனில் ஆதிமுதல்
அவன் பொய்யனும்
பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes In What's App Contact +917904957814
=======
QUOTES
========
வசனம் கேட்க கிடைக்காத பஞ்ச காலம் வரும் என்ற வசனத்தை சிறுவயதிலேயே கேட்டிருக்கிறேன், அப்போது நினைத்தேன் ஒருவேளை வேத புத்தகத்தை எல்லாம் அழித்துவிடுவார்கள் போல அதனால் வசனத்தை வாசிக்க முடியாமல் கேட்க முடியாமல் போய்விடும் என்று ஆனால் அதன்பின் ஆடியோ டேப்பிலும், சீடியிலும் கடைசியில் எல்லோருடைய கைப்பேசியிலும் வேதாகமம் வந்துவிட்டது எனவே இனி வசனம் பஞ்சம் என்பது சாத்தியமே இல்லை எதோ ஒரு வடிவில் வேத வசனங்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கும் என்று நம்பினேன் ஆனால் இப்போது இந்த வைரஸின் தாக்குதலினால் சபைகளின் கதவுகள் மூடப்படுவதை பார்க்கும் போது தான் புரிகிறது உண்மையில் வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்ச காலம் துவங்கிவிட்டது.
எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் இணையத்தளத்தால் இதயங்களை தேவனோடு இணைத்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஒருவேளை ஒருநாளில் அந்த இணையத்தளமே துண்டிக்கப்பட்டால் ( இனி அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது எதுவும் நடக்கலாம்) என்னவாகும் தேவனுடைய ஊழியங்களும் தேவனோடுள்ள உறவுகளும்.
வசனம் கேட்கக் கிடைக்காத இந்த பஞ்ச காலங்களிலும் நாம் நிற்க வேண்டும் தேவனுக்காக.
நாம் நிற்க வேண்டும் தேவனோடு.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
ஊழியம் மூன்று வகைகளில் செய்யலாம்.
போகலாம்
அல்லது
அனுப்பலாம்
அல்லது
ஜெபிக்கலாம்.
அதாவது நாம் மிஷனரியாக போய் ஊழியம் செய்வது அல்லது ஐவகை ஊழியங்களில் ஏதாகிலும் ஒன்றை செய்வது.
அல்லது மிஷனரியை அனுப்புவது. அனுப்பி, ஊழியரை பொருளாலும் பணத்தாலும் தாங்குவது.
அல்லது போனவர்களுக்காக, அனுப்புகிறவர்களுக்காக மற்றும் அனைத்து ஊழியங்களுக்காக ஜெபிப்பது.
இப்போது
இந்த கொரோனா காலத்தில் நாம் செய்யக்கூடிய ஒரே ஊழியம் ஜெபிப்பது. இப்போது மட்டுமல்ல. எப்போதுமே செய்ய முடிகிற மிகச் சிறப்பான ஊழியம் ஜெபிப்பதுதான்.
எந்த ஊழியம் செய்தாலும் அதற்கேற்ற பிரதிபலனை கர்த்தர் அந்நாளிலே நமக்கு நிச்சயம் தந்து ஆசீர்வதிப்பார்.
ஆகவே ஜெப ஊழியத்தை சிறப்பாக, ஊக்கமாக செய்வோம். தேசத்தை மறுரூபப்படுத்துவோம்
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
'துயரத்தின் மனிதன்' என அழைக்கப்படும் சீனாவை சேர்ந்த மாபெரும் தேவ மனிதர் 'வாட்ச்மேன் நீ' தனது வாழ்நாளின் கடைசி 20 வருடங்களை (1952-1972) சிறையிலேயே கழித்தார். கிறிஸ்துவை மறுதலிக்கச் சொல்லி வற்புறுத்தி அவரை சிறையில் வைத்து சித்திரவதை செய்தது சீன அரசாங்கம். 8 மணி நேரம் கடுமையாக வேலை வாங்கப்பட்டார்; 8 மணி நேரம் கம்யூனிச பாடங்கள் அவருக்கு போதிக்கப்பட்டன. மீதமுள்ள 8 மணி நேரமும் அவரை சரியாக தூங்கவிடாமல் எப்போதும் கம்யூனிச கொள்கைகள் அடங்கிய பாடல்களும், பிரசங்கங்களும் அவர் காதில் சத்தமாய் விழும்படி அவரது சிறை அறையில் ஒலிபரப்பப்பட்டன. ஆனால் எதற்கும் அசரவில்லை அவர். கடைசிவரை கிறிஸ்துவை விட்டுக்கொடுக்காமல் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்து சிறையிலேயே தன் ஓட்டத்தை முடித்து தன் பரம எஜமானனின் சந்தோஷத்துக்குள் பிரவேசித்தார் அந்த தேவ மனிதர். ஒரு அரசாங்கமே தோற்றது ஒரு எளிய தேவ மனிதனிடம். அவர் எழுதிய Normal Christian Life, The Spiritual Man, etc. போன்ற பல அற்புதமான புத்தகங்கள் இன்றும் அநேகரை விசுவாச வீரர்களாகவும், வேத உபதேசகர்களாவும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன.
யார்தான் அல்லது எதுதான் பிரிக்க முடியும் அவர் அன்பிலிருந்து!
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
பாவங்களை ஜெயிக்க
குறுக்கு வழி என்று எதுவுமில்லை
பாவத்தோடும் சாத்தானோடும் உள்ள தீயஉறவை
முற்றிலும் துண்டித்துப் போடு
பரிசுத்தத்தோடும் தேவனோடும் உள்ள
நல்லுறவை தொடர்ந்து பேணு
வேதக் கடலில்
மூழ்கி முத்தெடு
ஜெப வானில்
பறந்து திரியும் பறவையாகு
அப்போது
பரிசுத்தம்
உனது வித்தாகும்
பரலோகம்
உனது சொத்தாகும்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
இப்போது "அப்பா" என்ற வார்த்தையை சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து பேதமின்றி அனைவரும் உபயோகிக்கிறார்கள். சிலர் தம்மீது பாசமாய் இருப்பவர்களையும் "அப்பா" என்று அன்போடு அழைக்கிறார்கள். ஆனால் "அப்பா" என்ற வார்த்தையின் வரலாறு அற்புதமானது.
"அப்பா" என்பது பலரும் நினைப்பதுபோல் தமிழ் வார்த்தை அல்ல. அது அராமைக் மொழி வார்த்தை. அதாவது இயேசு மாம்சத்தில் வாழ்ந்தபோது பேசிய மொழியான அராமைக் மொழி வார்த்தை அது.
வேதத்தில் மாற்கு 14-ம் அதிகாரத்தில் இயேசு நமக்கு இந்த வார்த்தையை அறிமுகம் செய்துவைக்கிறார். கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது "அப்பா பிதாவே" என அழைக்கிறார். பவுலும் ரோமர் 8:15 மற்றும் கலாத்தியர் 4:6 ஆகிய வசனங்களில் "அப்பா பிதாவே" என்ற புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றோம் என்று குறிப்பிடுகிறார்.
அராமைக் மொழியில் தந்தையை குறிக்க வேறு வார்த்தைகள் இருந்தாலும் இந்த "அப்பா" என்ற வார்த்தை விசேஷமாக தன் சொந்த தந்தையை குறிக்க பயன்படுகிறது. அதாவது மிக நெருக்கமாக உணரும் தருணங்களில் தன்னைப் பெற்ற சொந்த தகப்பனை நோக்கி, பொங்கி வழியும் பாசத்தால் தன் உள்ளம் நிரம்பியிருக்கும்போது அழைக்கும் உன்னத வார்த்தைதான் "அப்பா" என்பது.
பழைய ஏற்பாட்டில் எந்த பரிசுத்தவானும் பிதாவை "அப்பா" என்று அழைத்து ஜெபித்ததில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நம் பரம தகப்பனை இயேசுவின் நாமத்தில் "அப்பா" என்று அழைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். இதற்கான அத்தனை பெருமையும் நம் இரட்சகராம் இயேசுவையே சேரும்.
எத்தனை அற்புதமான வார்த்தை
இந்த "அப்பா" என்பது.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
டி.எல்.மூடி ஒரு முறை அட்லாண்டிக் கடலில் கப்பற் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். திடீரென கப்பலில் தீப்பிடித்துக்கொண்டது. கேப்டன் உட்பட வேலையாட்கள், பயணிகள் என்று பலரும் பெரும் பதட்டத்துடன் தங்கள் கைகளில் கிடைத்த பாத்திரங்களில் தண்ணீர் மொண்டு தீயை அணைக்க பெருமுயற்சி செய்துகொண்டிருந்தனர்.
ஒரு நண்பர் டி.எல்.மூடியிடம் வந்து "வாரும். நாம் கப்பலின் மறு பக்கம் சென்று இதற்காக ஜெபிப்போம்" என்றார்.
டி.எல்.மூடியோ இவ்வாறு பதில் சொன்னார்
" அப்படியல்ல நண்பரே. எல்லாரும் ஆபத்தில் இருக்கும்போது நாம் ஒதுங்குவது நல்லதல்ல. நாம் ஜெபித்துக்கொண்டே தீயை அணைக்கவும் உதவி செய்வோம் ".
அப்படியே இருவரும் ஜெபத்துடன் உதவி செய்தனர். கப்பலும் காப்பாற்றப்பட்டது.
கிரியையும் ஜெபமும் இணைந்தால்தான் வெற்றி.
//கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கிறது. (யாக்கோபு 2:26)//
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
பெற்றோரை சார்ந்திருக்கும் வரை பிள்ளைகள் எதற்கும் கவலைப்படுவதில்லை. உணவு, உடை, இருப்பிடம் உட்பட சின்ன சின்ன தேவைகளுக்காகவும் கூட அவர்கள் கவலைப்படாமல் உற்சாகமாய் துள்ளிக் குதித்து ஆடிப் பாடி வாழ்கிறார்கள். ஆனால் வளர்ந்த பின்னர் தன் காலில் நிற்கத் தொடங்கியதும் அவர்கள் உற்சாகம் கரைய ஆரம்பித்துவிடுகிறது. பொறுப்புகள் அதிகரித்து அதிகரித்து கடைசியில் வேதனையில் உழன்றே வாழத்தொடங்கிவிடுகிறார்கள்.
அதுபோல்தான் நாமும். ஆண்டவரை முழுவதும் சார்ந்திருக்கும் வரை நமக்கு கவலை இல்லை. ஆனால் சுயசித்தம் செய்ய ஆரம்பித்து, தேவ ராஜ்யத்தை கட்டுவதை நிறுத்திவிட்டு, நம் சுய ராஜ்யத்தை எப்போது கட்ட ஆரம்பிக்கிறோமோ அப்போதே வேதனைகளும், பொல்லாத சோதனைகளும் நம்மை சூழ்ந்துகொள்கிறது. முடிவோ பயங்கரம்.
ஆகையால் சிந்தித்து பார்த்து, சீர் தூக்கி பார்த்து மனம் திரும்புவோம்.
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814
=======
QUOTES
========
ஜெபிக்க வேண்டியது
நம் கடமை
பதில் தரவேண்டியது
தேவனது உரிமை
சில நேரங்களில்
பதில் வர தாமதம் ஆகும்போது
பொறுமையிழக்காமல்
அவசரப்படாமல்
கவனமாய் இருப்பதும்
தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருப்பதும் நல்லது.
பெலிஸ்தர்
தேசத்தை முற்றுகையிட்டு
பயமுறுத்திக்கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில்
சாமுவேல்
குறித்த நேரத்தில் வர
தாமதம் செய்தபோது
சவுல் ராஜா பொறுமையிழந்து
அவசரப்பட்டு
துணிகரமாக
சர்வாங்க தகன பலியை
செலுத்திவிட்டார்.
ஒரு ஆசாரியன் செய்ய வேண்டிய பணியை
ஒரு அரசன் செய்யக்கூடாது என்ற
தேவ கட்டளையை மீறியதால்
தேவ கோபத்திற்குள்ளாகி
தன் அரச பதவியையே
துறக்க வேண்டியதாயிற்று
அவர் முடிவு மிக பரிதாபம்.
தாமதமானது நம்
கட்டுப்பாட்டுக்கும்
பொறுமைக்கும்
கீழ்ப்படிதலுக்கும்
ஒரு மிகப்பெரிய சவால்.
அந்த சவாலை ஜெயிக்க
பொறுமை மிக அவசியம்.
அவசரம் ஒரு மோசமான ஆயுதம்
அதை கையில் எடுத்தால்
வாழ்க்கை அதோ கதிதான்.
(ஆதாரம்: 1 சாமுவேல் 13-ம் அதிகாரம்).
By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814