சேர்த்துகொள்ளுவேன் | தீமை செய்யாதே! | தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள் | வசனத்தைக் கேட்பதினால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதம் | தேவனுடைய வார்த்தை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? | நெருக்கப்படுகிற காலங்களில்
===========
சேர்த்துகொள்ளுவேன்
=============
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன் ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துகொள்ளுவேன்.
இந்தக் குறிப்பில் உன்னை சேர்த்துக் கொள்ளுவேன் என்று வாக்குதத்தமாக
சொல்லியிருக்கிறார் இதில் யார் யாரை சேர்த்துக்கொள்ளுவார் என்பதையும் அப்படி சேர்த்துகொள்ளுபவர்களை என்ன செய்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்வோம். ஆண்டவர் உங்களை தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவார்.
கர்த்தர் சேர்த்துகொண்டு என்ன செய்வார்?
==============================
கர்த்தர் சேர்த்துக் கொண்டு கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பார்.
செப்பனியா 3:20
கர்த்தர் யாரை சேர்த்துகொள்ளுவார்?
கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களை சேர்த்துக்கொள்ளுவார்
உபாகமம் 30:2,3
எதில் திரும்பவேண்டும்
1. விழுந்த நிலைமை யிலிருந்து திரும்ப வேண்டும்
வெளிப்படுத்தல் 2:5
2. அருவருப்புகளிலிருந்து திரும்பவேண்டும்
எசேக்கியேல் 14:6
3. மீறுதல்களிலிருந்து திரும்பவேண்டும்
எசேக்கியேல் 18:30
இரட்சிக்கபடுகிறவர்களை கர்த்தர் சேர்த்துக்கொள்ளுவார்
=======================
அப்போஸ்தலர் 2:47
இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?
1. இரட்சிக்கப்பட விசுவாசிக்கவேணாடும்.
அப்போஸ்தலர் 16:31
2. இரட்சிக்கப்பட அறிக்கை செய்ய வேண்டும்
ரோமர் 10:10
3. இரட்சிக்கப்பட கழுவப்படவேண்டும்
எரேமியா 4:14
4. இரட்சிக்கப்பட உத்தமமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:18
5. இரட்சிக்கப்பட ஞானமாக இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 28:26
கர்த்தரின் ஆடாக இருப்பவர்களை சேர்த்துக்கொள்ளுவார்
===============================
ஏசாயா 40:11
கர்த்தரின் ஆடு எப்படி இருக்கவேண்டும்?
1. கர்த்தரின் ஆடு செவி கொடுக்கவேண்டும்
யோவான் 10:27
2. கர்த்தரின் ஆடு விசுவாசிக்கவேண்டும்.
யோவான் 10:26
3. கர்த்தரின் ஆடு அவர் கைக்குள் இருக்க வேண்டும்.
சங்கீதம் 95:7
ஊழியம் செய்பவர்களை சேர்த்துக்கொள்ளுவார்
ஆகாய் 2:23
===================
எப்படி ஊழியம் செய்யவேண்டும்?
1. அவர் சித்தப்படி ஊழியம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 13:36
2. ஜாக்கிரதையாக ஊழியம் செய்ய வேண்டும்
எரேமியா 48:10
3. உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும்
மத்தேயு 25:21
4. உற்சாகமாக ஊழியம் செய்யவேண்டும்
1 கொரிந்தியர் 9:17
கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களை சேர்த்துக் கொள்ளுவார்
நெகேமியா 1:9
===============================
எது கற்பனை?
1. அன்பாக இருப்பது கற்பனை
யோவான் 15:12
2. அவரைப் பற்றிக் கொள்வது கற்பனை
1 தீமோத்தேயு 6:13
இந்தக் குறிப்பில் கர்த்தர் சேர்த்துக் கொள்ளுவதைக் குறித்து சிந்தித்தோம். யாரை எப்படிப்பட்டவரை சேர்த்துக் கொள்ளுவார்? சேர்த்துக்கொண்டு
என்ன செய்வரர் என்பதைக் குறித்து தெளிவாக நாம் அறிந்து கொண்டோம். நமது தேவன் யாவரையும் சேர்த்துக்கொள்ளுகிறவர், யாரையும் தள்ளிவிடுகிற தேவன்அல்ல.
ஆமென் !
==============
தீமை செய்யாதே!
=============
1 பேதுரு 3:9தீமைக்கு தீமையையும் உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிகட்டாமல் அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்.
நாம் எவருக்கும் தீமை செய்யக்கூடாது. நாம் நன்மை செய்ய வேண்டும், நன்மை செய்தால் உனக்கு மேன்மை என்று வேதம் சொல்கிறது. தீமைக்கு தீமை செய்கிறவர்கள் அவர்கள் தேவனுக்குரியவர்கள் அல்ல. நன்மையும் நற்கிரியை செய்யவுமே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இயேசு நன்மை செய்கிறாராய் சுற்றிதிரிந்தார். ஏன் தீமை செய்ய கூடாது என்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
1. இது தேவனுடைய கட்டளை. தீமையை விட்டு விலகி நன்மை செய். ஆதலால் தீமை செய்யகூடாது.
சங்கீதம் 34:14
2. தீமை செய்கிறவர்களுக்கு கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
சங்கீதம் 34:16
3. தீமை துன்மார்க்கனை கொல்லும்.
சங்கீதம் 97:10
4. கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 16:16
5. தீமை செய்கிறவன் மரணத்துக்கு ஏதுவாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 11:19
6. நாம் செய்கிற காரியம் தீமையானால் தேவன் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.
பிரசங்கி 12:14
நாம் ஏன் தீமை செய்ய கூடாதென்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென்!
===================
தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்
================
ரோமர் 12:17ஒருவனுக்கும் தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் எல்லா மனுஷனுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12:21
நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு.
தீமைக்கு தீமை செய்யாமல் அவர்களுக்கு நன்மை செய் என்று வேதம் சொல்கிறது. அப்படி தீமைக்கு பதில் நன்மை செய்தவர்கள் யார் யாரென்று நாம் கவனிக்கலாம். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
1. தீமைக்கு பதில் நன்மை செய்த "யோசேப்பு".
அதியாகமம் 45:15
2. தீமைக்கு பதில் நன்மை செய்த "மோசே".
எண்ணாகமம் 12:13
3. தீமைக்கு பதில் நன்மை செய்த "தாவீது".
1 சாமுவேல் 24:1-7
4. தீமைக்கு பதில் நன்மை செய்த "இஸ்ரவேலின் ராஜா".
2 இராஜாக்கள் 6:22,23
5. தீமைக்கு பதில் நன்மை செய்த "ஸ்தேவான்".
அப்போஸ்தலர் 7:54-60
6. தீமைக்கு பதில் நன்மை செய்த "இயேசு கிறிஸ்து".
லூக்கா 22:50,51
இயேசு எங்கும் எப்போதும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். தீமைக்கு தீமை செய்யாமல் நன்மை செய்ய வேண்டும், அப்படி தீமைக்கு பதில் நன்மை செய்தவர்களுடைய தேவ மனிதர்களையும் இயேசு கிறிஸ்துவையையும் அறிந்துக் கொண்டோம். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும் என்பதே சத்தியமாயிருக்கிறது. நாமும் இயேசு கிறிஸ்துவையும் மற்றும் இந்த தேவ மனிதர்களையும் நாமும் பின்பற்றி தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.
ஆமென்!
===================
வசனத்தைக் கேட்பதினால் நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதம்
=====================
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
லூக்கா 15: 1யாக்கோபு 1: 19
மத்தேயு 13: 9
இந்த குறிப்பில் வேத வசனத்தை கேட்பதினால் நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை கவனிக்கலாம். ஆகையால் தான் போதிக்கிறவர்கள் வேத வாக்கியத்தின்படி போதிக்கவேண்டும்.
1. தேவ வசனத்தை கேட்பதினால் நம்முடைய தேவைகள் சந்திக்கப்படும்.
மாற்கு 6 :33-35
2. தேவ வசனத்தை கேட்பதினால் வாழ்க்கையில் திருப்தி அதாவது மனநிறைவு உண்டாகும்.
மாற்கு 8:2 -4
3 நாள் வனாந்திரம்
3. தேவ வசனத்தை கேட்கிறதினால் நாம் ஒவ்வொரு நாளும் அற்புதங்களை காண்போம்.
அப்போஸ்தலர் 19:10,11
4. தேவ வசனத்தை கேட்ப்பதால் ஆவியானவர் நம்மீது வல்லமையாக இறங்குவார்.
அப்போஸ்தலர் 10:44
5. தேவ வசனத்தைக் கேட்கிறதினால் நல்ல பங்கு நமக்கு கிடைக்கும்.
லூக்கா 10:39-42
நாம் இயேசுவுக்கு நல்ல பங்காக இருப்போம். தேவனுடைய வசனத்தைக் கேட்ப்பதால் நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை நாம் சிந்தித்தோம். தொடர்ந்து வசனத்தை கேளுங்கள், வசனத்தை தியானியுங்கள். வசனமே சத்தியம். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
ஆமென்!
3. தேவ வசனத்தை கேட்கிறதினால் நாம் ஒவ்வொரு நாளும் அற்புதங்களை காண்போம்.
அப்போஸ்தலர் 19:10,11
4. தேவ வசனத்தை கேட்ப்பதால் ஆவியானவர் நம்மீது வல்லமையாக இறங்குவார்.
அப்போஸ்தலர் 10:44
5. தேவ வசனத்தைக் கேட்கிறதினால் நல்ல பங்கு நமக்கு கிடைக்கும்.
லூக்கா 10:39-42
நாம் இயேசுவுக்கு நல்ல பங்காக இருப்போம். தேவனுடைய வசனத்தைக் கேட்ப்பதால் நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை நாம் சிந்தித்தோம். தொடர்ந்து வசனத்தை கேளுங்கள், வசனத்தை தியானியுங்கள். வசனமே சத்தியம். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
ஆமென்!
===================
தேவனுடைய வார்த்தை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
======================
லூக்கா 11:28
அதற்கு அவர் : அப்படியானாலும் தேவனுடைய வார்த்தைக் கேட்டு அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.இந்த குறிப்பில் தேவனுடைய வார்த்தையைக் குறித்தும் தேவனுடைய வார்த்தை நம்மிடத்தில் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் இதில் கவனிக்கலாம். தேவனுடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறவனே பாக்கியவான். தேவனுடைய வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
1. தேவ வார்த்தையை ஆவலுடன் கேட்க வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
அப்போஸ்தலர் 17:11
2. தேவ வார்த்தையை புரிந்து கொள்ள விரும்ப வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
மத்தேயு 13:23
3. தேவ வார்த்தையை புகழ வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர் பார்க்கிறது.
சங்கீதம் 56:4,10
4. தேவ வார்த்தையை நேசிக்க வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
சங்கீதம் 119:113
5. தேவ வார்த்தையை மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் கொள்ள வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
சங்கீதம் 119:16,47
6. தேவ வசனத்தை இருதயத்தில் எழுத வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
சங்கீதம் 119:111
7. வேத வசனத்தின் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
சங்கீதம் 62:5
8. எல்லாவற்றிக்கும் மேல் வேத வசனத்திற்கு கீழ்படிய வேண்டும் மற்றும் அதன்படி நடக்க வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
சங்கீதம் 119:17,67
9. தேவ வசனத்தை போதிப்பவர்கள் உண்மையோடும் வசனத்தை சரியாக அதை கையாள வேண்டும் என்று தேவ வார்த்தை எதிர்பார்க்கிறது.
2 தீமோத்தேயு 4:2
2 தீமோத்தேயு2:15
தேவ வார்த்தை நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கிறதென்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். தேவ வார்த்தையை போதிக்கிறவர்கள் உண்மையோடும் சரியான முறையில் போதிக்க வேண்டும். பிரசங்கத்தில் தேவ வார்த்தை மாத்திரம் போதிக்க வேண்டும். கட்டுகதைகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது. போதிக்கிறவர்கள் கர்த்தருடைய வார்த்தையை போதிக்க வேண்டும் என்று பேதுரு சொல்லியிருப்பதை கவனியுங்கள்.
ஆமென்!
தேவ வார்த்தை நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கிறதென்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். தேவ வார்த்தையை போதிக்கிறவர்கள் உண்மையோடும் சரியான முறையில் போதிக்க வேண்டும். பிரசங்கத்தில் தேவ வார்த்தை மாத்திரம் போதிக்க வேண்டும். கட்டுகதைகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது. போதிக்கிறவர்கள் கர்த்தருடைய வார்த்தையை போதிக்க வேண்டும் என்று பேதுரு சொல்லியிருப்பதை கவனியுங்கள்.
ஆமென்!
===========================
நெருக்கப்படுகிற காலங்களில்
=============================
சங்கீதம் 9: 9நெருக்கம்படுகிற வேலைகளில் வேதம் நமக்கு கற்றுக் கொடுப்பதைக் குறித்து நாம் இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நெருக்கம் பலவிதமான சூழ்நிலைகளில் நம்மை நெருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம்மை நாமே நாம் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் இதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. தேவன் நம்மை நெருக்கும்போது சீந்தித்து சீர்பட வேண்டும்.
எரேமியா 10:18
2. தோல்விகள் நெருக்கும்போது மனம் வருந்தி மன்னிப்படைகிறோம்.
நியாயாதிபதிகள் 10:10
3. இழப்புகள் நெருக்கும் போது கர்த்தருக்குள் திடப்படுகிறோம்
1 சாமுவேல் 30:6
4. சூழ்நிலைகள் நெருக்கும் போது ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி பார்க்கிறோ ம்.
2 சாமுவேல் 22:7
5. எப்பக்கமும் நெருக்கப்படும்போது ஒடுங்கி விடாது ஓடுகிறோம்.
2 கொரிந்தியர் 4:8
6. கிறிஸ்துவினிமித்தம் நெருக்கப்படும்போது பிரியத்துடன் சகிக்கிறோம்.
2 கொரிந்தியர் 12:10
7. நெருக்கங்கள் நீடிப்பதில்லை அவை தேவனால் நீக்கப் படும்போது நம் நெஞ்சம் நிறைந்து தேவனை மகிமைப் படுத்த வழி செய்கின்றன.
சங்கீதம் 18:6-20
எரேமியா 10:18
2. தோல்விகள் நெருக்கும்போது மனம் வருந்தி மன்னிப்படைகிறோம்.
நியாயாதிபதிகள் 10:10
3. இழப்புகள் நெருக்கும் போது கர்த்தருக்குள் திடப்படுகிறோம்
1 சாமுவேல் 30:6
4. சூழ்நிலைகள் நெருக்கும் போது ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி பார்க்கிறோ ம்.
2 சாமுவேல் 22:7
5. எப்பக்கமும் நெருக்கப்படும்போது ஒடுங்கி விடாது ஓடுகிறோம்.
2 கொரிந்தியர் 4:8
6. கிறிஸ்துவினிமித்தம் நெருக்கப்படும்போது பிரியத்துடன் சகிக்கிறோம்.
2 கொரிந்தியர் 12:10
7. நெருக்கங்கள் நீடிப்பதில்லை அவை தேவனால் நீக்கப் படும்போது நம் நெஞ்சம் நிறைந்து தேவனை மகிமைப் படுத்த வழி செய்கின்றன.
சங்கீதம் 18:6-20
நெருக்கப்படுகிற காலங்களில் நம் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். நெருக்கங்களை கர்த்தர் மாற்றுவார்.
ஆமென்!
ஆமென்!