===============
சுகமாயிருங்கள்
===============
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
நாம் சுகமாய் இருக்கும்படி தேவன் விரும்புகிறார். சுகமாய் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
எப்படியிருந்தால் சுகமாயிருக்க முடியும்?
1. கர்த்தருக்குபிரியமாக இருந்தால்
உபாகமம் 33:12
==================
எது அவருக்கு பிரியம்
A. ஸ்தோத்திரித்து பாடுவது
சங்கீதம் 69:30,31
B. உண்மையாய் நடப்பது
நீதிமொழிகள் 12:22
C. உத்தமமான வாழ்வது
நீதிமொழிகள் 11:20
D. அவருக்கு ஊழியம் செய்வது
ரோமர் 14:18
E. அவரைக் குறித்து மேன்மை பாராட்டுதல்
எரேமியா 9:23,24
F. எல்லாருக்காகவும் ஜெபிப்பது
1 தீமோத்தேயு 2:1-3
2. நீதிமானாக இருந்தால்
நீதிமொழிகள் 18:10
====================
எப்படி நீதிமான்களாக மாறுவது?
A. அவர் இரத்தத்தால் கழுவப்படும்போது
ரோமர் 5:9
B. அவரால் அழைக்கப்படும்போது
ரோமர் 8:30
C. நம்மை தாழ்த்தும் போது
லூக்கா 18:12-14
D. அவரை விசுவாசிக்கும் போது
ரோமர் 5:1
3. கர்த்தரின் கற்பனைகளை கைக்கொண்டால்
லேவியராகமம் 2:18
=====================
எது அவரது கட்டளை அன்பாக இருப்பது
யோவான் 13:34
எப்படி அன்பாக இருக்க முடியும்?
A. ஊக்கமாக அன்பு கூறவேண்டும்
1 பேதுரு 4:8
B. சுத்த இருதயத்தோடு அன்பு கூறவேண்டும்
1 பேதுரு 1:22
C. மாய மற்ற அன்பு கூறவேண்டும்
ரோமர் 12:9
D. மிகுதியாக அன்பு கூறவேண்டும்
2 கொரிந்தியர் 2:4
4. பிணைப்பு தலை வெறுக்கும்போது
நீதிமொழிகள் 11:15
=====================
எதில் பிணைப்பட கூடாது?
A. அவிசுவாசியுடன் பிணைப்பு கூடாது
2 கொரிந்தியர் 6:14
B. அந்நியனுக்காகப் பிணைப்படகூடாது
நீதிமொழிகள் 12:15
C. சிநேகிதனுக்காக பிணைப்படக்கூடாது
நீதிமொழிகள் 6:1
கடனுக்காக பிணைப்படகூடாது
நீதிமொழிகள் 22:26
நாம் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி அப்போஸ்தலன் வேண்டிக்கொள்வதைப் பார்க்கிறோம். சுகமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த குறிப்பில் சிந்தித்தோம். அப்படியே யாவரும் நலமோடும், சுகமோடும் , ஆரோக்கியத்தோடும் வாழவேண்டுமென்று நாங்களும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்
ஆமென்!
===============
தெரிந்துகொண்டேன்
=================
யோவா 15:16
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன்..
இந்தக் குறிப்பில் உங்களை தெரிந்து கொண்டேன் என்று இயேசு சொன்னார். இதில் இயேசு யாரை எல்லாம் தெரிந்துக் கொண்டார் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
யாரை தெரிந்துக் கொள்ளுகிறார்?
=================
பக்தியுள்ளவர்களை தெரிந்துக்கொண்டார்
சங்கீதம் 4:3
யார் பக்தியுள்ளவர்கள்?
1. மற்றவர்களை விசாரிப்பவர்கள் பக்தியுள்ளவர்கள்
யாக்கோபு 1:27
2. உலகத்தால் கறைபடாதவர்கள் பக்தியுள்ளவர்கள்
யாக்கோபு 1:27
3. தன் நாவை அடக்குபவர்கள் பக்தியுள்ளவர்கள்
யாக்கோபு 1:26
இரட்சிப்படையும்படிக்கு தெரிந்துக்கொண்டார்
2 தெசலோனிக்கேயர் 2:13
========================
எப்படி இரட்சிக்க முடியும்
1. கிருபையினால் இரட்சிக்க முடியும்
எபேசியர் 2:5
2. விசுவாசத்தினால் இரட்சிக்க முடியும்
எபேசியர் 2:8
3. பரிசுத்த ஆவியால் இரட்சிக்க முடியும்
தீத்து 3:5
4. அறிக்கையினால் இரட்சிக்க முடியும்
ரோமர் 10:10
அவர் புண்ணியங்களை அறிவிக்க தெரிந்துக் கொண்டார்.
1 பேதுரு 2:9
===============
எப்படி அறிவிக்க வேண்டும்?
1. அற்புத அடையாளங்களுடன் அறிவிக்க வேண்டும்
மாற்கு 3:14,15
2. எல்லா நிலையிலும் அறிவிக்கவேண்டும்
2 தீமோத்தேயு 4:2
3. உற்சாகமாய் அறிவிக்கவேண்டும்
1 கொரிந்தியர் 9:7
பரிசுத்தமுள்ளவர்களாக இருப்பதற்கு தெரிந்துக் கொண்டார்
எபேசியர் 1:4
=======================
எப்படிப்பட்ட பரிசுத்தம்?
1. பிழையற்ற பரிசுத்தம்
1 தெசலோனிக்கேயர் 3:13
2. நடக்கையில் பரிசுத்தம்
1 பேதுரு 1:15
3. முற்றிலும் பரிசுத்தம்
1 தெசலோனிக்கேயர் 5:23
4. இருதயத்தில் பரிசுத்தம்
யாக்கோபு 4:8
குற்றமற்றவர்களாக இருப்பதற்கு தெரிந்துக் கொண்டார்.
எபேசியர் 1:4
===================
யார் நம்மைக் குற்றப்படுத்துவார்கள்?
1. பிசாசு நம்மைக் குற்றப்படுத்துவான்
வெளிப்படுத்தல் 12:10
2. நம் இருதயம் நம்மை குற்றப்படுத்தும்
1 யோவான் 3:21
3. மற்ற மக்கள் நம்மை குற்றப்படுத்துவார்கள்
மத்தேயு 12:41
அவர் இராஜ்ஜியத்தை சுதந்திரப்பதற்கு தெரிந்துக்கொண்டார்
யாக்கோபு 2:5
================
அவர் இராஜ்ஜியம் எப்படிப்பட்டது?
1. அவர் இராஜ்ஜியம் அழியாது
தானியேல் 7:14
2. அவர் இராஜ்ஜியம் சதாகாலமுள்ளது
சங்கீதம் 145:13
3. அவர் இராஜ்ஜியம் கண்ணீரில்லாதது
வெளிப்படுத்தல் 21:4
4. அவர் இராஜ்ஜியம் பசிதாகமில்லாதது
வெளிப்படுத்தல் 7:16
நான் உங்களை தெரிந்துக்கொண்டேன் என்றார். நீங்களும் நானும் தேவனுடைய பார்வையில் தெரிந்துக்கொண்ட பாத்திரமாக இருக்கவேண்டுமானால் நாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம்.
ஆமென்!