விவாகத்தைக் குறித்து ஏழு காரியங்கள் | வாய் மற்றும் நாவு பற்றி நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சில வசனங்கள் | நீங்கள் மேன்மையான ஒன்றை பெற, நீங்கள் ஒன்றை இழக்க வேண்டும் | தேவ பிள்ளைகள் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் | யார் எதை ஏற்றுக்கொள்ளவில்லை..!
======================
தலைப்பு: விவாகத்தைக் குறித்து ஏழு காரியங்கள்
==================
1. மனிதன் தனிமையாயிருப்பது நல்லது அல்ல என தேவன் கண்டு, விவாகத்தை முதலாவது தேவனே ஏதேன் தோட்டத்தில் வைத்து ஏற்படுத்தினார். முதலாவது திருமண தம்பதிகள்- மணமக்கள்: ஆதாம்-ஏவாள். ஆகவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருவனும் ஒருக் காலும் பிரிக்காதிருக்கக்கடவன்
ஆதியாகமம் 2:18,21-24
மத்தேயு 19:6
மாற்கு 10:9
1 கொரிந்தியர் 7:39
பிரசங்கி 4:11,12
மல்கியா 21:15,16
2. விவாகம் விபசாரத்தையும் வேசித்தனத்தையும் தடை செய்து, மனித இனம் பலுகவும் பெருகவும் செய்கிறது. ஆகவே விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது
எபிரெயர் 13:4
ஆதியாகமம் 1:28
ஆதியாகமம் 9:1,7
சங்கீதம் 127:4
1 கொரிந்தியர் 7:9
1 தீமோத்தேயு 5:4
3. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்
நீதிமொழிகள் 18:22
புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு
நீதிமொழிகள் 19:14
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது
நீதிமொழிகள் 31:10-12
ரூத் 3:11
குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்
நீதிமொழிகள் 12:4
நீதிமொழிகள் 14:1
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடியைப்போல இருப்பாள்
சங்கீதம் 128:13
4. முற்கால பக்தசிரோமணிகளில் பெரும்பாலானோர் விவா கம் பண்ணினவர்களாயிருந்தார்கள். உதா: ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு, மோசே, ஆரோன், சாமுவேல், தாவீது, யோபு, ஏசாயா, பேதுரு, ஆக்கில்லா, பிலிப்பு முதலியோர்.
5. வேதாகமத்தின் ஆரம்பத்தில் தேவன் முதலாவது விவா கத்தை ஏற்படுத்தினார். வேதாகமத்தின் மத்தியில் (புதிய ஏற்பாட்டில்) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்ட போது (இயேசு) முதலாவது கலியாண வீட்டில் அற்புதம் செய்து தமது மகிமையை வெளிப்படுத்தினார். வேதாக மத்தின் முடிவில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியா ணம் வருகிறது
யோவான் 2:1-11
வெளிப்படுத்தல் 19:9
6. விவாகத்தை விலக்குவது பிசாசுகளின் உபதேசம். மனச் சாட்சியில் சூடுண்ட பொய்யர் இதைப் பலவாறாக குழப்பி, சிலர் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகவும் செய்வார்கள்
1 தீமோத்தேயு 4:1-3
7. விவாகம் கிறிஸ்துவுக்கும் அவர் மணவாட்டியாகிய சபைக்குமுள்ள ஐக்கியத்தைக் காட்டும் சிறந்த ஒப்பனை யிருக்கிறது
எபேசியர் 5:28-33
1 பேதுரு 3:5-7
1 கொரிந்தியர் 7:3-6,39
வெளிப்படுத்தல் 19:7-9
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
===================
தலைப்பு: வாய் மற்றும் நாவு பற்றி நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சில வசனங்கள்
===================
1. கர்த்தரின் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
நீதிமொழிகள் 2:6
2. வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்று.
நீதிமொழிகள் 4:24
3. பரஸ்திரீயின் வாய் எண்ணையிலும் மிருதுவாயிருக்கும்.
நீதிமொழிகள் 5:3
4. நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;
.நீதிமொழிகள் 10:11
5. அவனவன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;
நீதிமொழிகள் 12:14
6. மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
நீதிமொழிகள் 15:2
7. துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
நீதிமொழிகள் 15:28
8. ராஜாவின் நியாயத்தில் அவன் *வாய்* தவறாது.
நீதிமொழிகள் 16:10
9. புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உரைக்கும்.
நீதிமொழிகள் 17:10
10. துன்மார்க்கரின் வாய் அடிகளை வரவழைக்கும்.
நீதிமொழிகள் 18:6
11. துன்மார்க்கருடைய வாய்* அக்கிரமத்தை விழுங்கும்;
நீதிமொழிகள் 19:28
12. குணசாலியான ஸ்திரீ தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின் மேல் இருக்கிறது.
நீதிமொழிகள் 31:26
13. நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;
நீதிமொழிகள் 10:20
14. ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஓளஷதம்.
நீதிமொழிகள் 12:18
15. பொய் நாவோ ஒரு நிமிஷம் மாத்திரம் இருக்கும்.
நீதிமொழிகள் 12:19
16. ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;
நீதிமொழிகள் 15:2
17. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவ விருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
நீதிமொழிகள் 15:4
18. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள் 16:1
19. துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவி கொடுக்கிறான்.
நீதிமொழிகள் 17:4
20. புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
நீதிமொழிகள் 17:20
21. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;
நீதிமொழிகள் 18:21
22. இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
நீதிமொழிகள் 25:15
23. புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
நீதிமொழிகள் 25:23
24. கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்.
நீதிமொழிகள் 26:28
25. தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பார்க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
நீதிமொழிகள் 28:23
(உங்கள் வாயும் உங்கள் நாவும் எப்படிப்பட்டது நீங்களே நிதானித்து பாருங்கள்..!!)
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
=====================
தலைப்பு: நீங்கள் மேன்மையான ஒன்றை பெற, நீங்கள் ஒன்றை இழக்க வேண்டும்
=====================
1. உங்களுக்கென உள்ள செல்வத்தை இழந்தால் நித்திய ஜீவன் பெறலாம்.
மத்தேயு 19:21
2. கிறிஸ்துவின் நாமத்திற்காக எதை இழந்தாலும் அதை நூறந்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் பெறலாம்
மத்தேயு 19:29
3. ஜீவனை இழந்தால் ஜீவனை பெற முடியும்
மாற்கு 8:35
4. முதல்வனாயிருக்க விரும்பினால் ஊழியக்காரனாக இரு
மாற்கு 9:35
5. நீ கோதுமை மணியின் பலன் வேண்டும் என்றால் கோதுமை மணி சாக வேண்டும்.
யோவான் 12:24
6. சமாதானம் வேண்டுமா கவலையை தேவனுக்கு சொல்லுங்கள்.
பிலிப்பியர் 4:6~7
7. தேவனிடத்திலிருந்து கிருபை வேண்டுமா பெருமையை விடுங்கள்.
யாக்கோபு 4:6
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
===================
தலைப்பு: தேவ பிள்ளைகள் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்
======================
நாம் வாழ்கின்ற இந்த உலகம் பொல்லாங்கானது. நாம் எவ்வளவு நன்மை செய்தாலும், நன்மைக்கு பதிலாக நமக்கு தீங்கு செய்கின்ற உலகம். நாம் நன்றாக வாழ்வதை பார்க்க சகிக்காத உலகம். நாம் எத்தனை உண்மையும் உத்தமுமாக தேவனுக்கு முன்பாக வாழ்ந்தாலும் நம்மை தூற்றித் திரிகின்ற உலகம். இப்படிப்பட்ட கோணலும் மாறுபடுமான சந்ததியின் நடுவில் நாம் குற்றம் அற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசில்லாத பிள்ளைகளாகயிருந்து நாம் வாழ தேவன் விரும்புவது போல (பிலிப்பியர் 2:15) நாமும் வாழ வேண்டும்
1) நாம் இந்த உலகத்தில் அன்புள்ள மக்களாக வாழ வேண்டும்
நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள் (யோவான் 13:34) அன்பு தேவனால் உண்டாகிறது அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான் அன்பில்லாதவன் தேவனை அறியான் (1 யோவான் 4:7,8) என்ற தேவ வார்த்தைகளின்படி நாம் இந்த உலகத்தில் அன்புள்ள மக்களாக வாழ வேண்டும். குடும்பத்தில் அன்பு உண்டா? பிள்ளைகளிடம் அன்பு உண்டா?
2) கபடற்ற மக்களாய் வாழ வேண்டும்
புறாக்களை போல கபடற்றவர்களாயிருங்கள் (மத்தேயு 10:16) என்ற வார்த்தையின் படி நாமும் கபடம், சூது, மாய்மாலம், தந்திரம் போன்ற தீய குணங்கள் காணப்படாதபடி கபடற்ற மக்களாய் வாழ வேண்டும்.
3) மாந்தர் மேல் மனதுருக்கம் கொண்டு வாழ வேண்டும்
அன்பின் ஆண்டவரை போல நாமும் மாந்தர் மேல் மனதுருக்கம் கொண்டு வாழ வேண்டும் (மாற்கு 6:34). நாம் உண்டு நமது காரியங்கள் உண்டு என்ற சுயநலம் கொண்ட வாழ்க்கை வாழாமல் மற்ற மக்களுடைய நலனுக்கான காரியங்களில் அக்கறை கொண்டு நாம் வாழ வேண்டும். "அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவனாக" (பிலிப்பியர் 2:4) என்ற தேவ வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். "நீ சந்தோசமாக இருக்க விரும்பினால் மற்றவர்களை சந்தோஷப்படுத்து" என்றதோர் முதுமொழி உண்டு. "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னை காத்துக் கொள்கிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது" (யாக்கோபு 1:27) என்ற ஆண்டவருடைய கட்டளையின்படி நாமும் ஏழை எளிய மக்களுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் நம்மால் முடிந்த உதவி ஒத்தாசைகளை செய்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அந்த விதமாக நாம் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை போல உலகில் வேறு எந்த மகிழ்ச்சியுமே கிடையாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே அதை சோதித்துப் பார்க்கலாம்.
4) மனத்தாழ்மையோடு வாழ வேண்டும்
அன்பின் ஆண்டவர் நம்மில் எதிர்பார்க்கும் மிக முக்கியமானதொரு பரிசுத்த பண்பு மனத்தாழ்மையாகும். நம்மில் பலரும் பெருமைக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றோம். உத்தியோகப் பெருமை, பணப் பெருமை, ஜாதி பெருமை, அழகு பெருமை, நமக்குள்ள பல்வேறு திறமைகளை குறித்த பெருமை, இப்படி பலதரப்பட்ட பெருமைகளுக்கு நாம் அடிமைப்பட்டு உள்ளோம். தேவ மக்கள் தங்கள் ஆவிக்குரிய தாலந்துகள், வரங்களை குறித்து பெருமை கொண்டு தாங்கள் மற்றவர்களை விட சிறந்த பரிசுத்த பக்தர்கள் என்று தங்களுக்குள் எண்ணி மற்ற தேவ மக்களை இழிவாக நடத்துகின்றனர். மேட்டிமை கண்களோடு அவர்களை அற்பமாக பார்க்கின்றனர். இது எத்தனை ஆபத்தான காரியம் என்பதை அவர்கள் அறியார்கள். பெருமையை தேவன் வெறுத்து தள்ளுவதை போல அவர் வேறெந்த பாவத்தையும் வெறுப்பதில்லை. பெருமைக்காருக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் (யாக் 4:6)
5) பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்
"நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" (லேவியராகமம் 20:26) எந்த ஆண்டவருடைய வார்த்தையின்படி நாமும் பரிசுத்தமுள்ள மக்களாக இந்த உலகத்தில் வாழ வேண்டும். நமது பார்வை, நமது பேச்சு, நமது நினைவுகள் அனைத்தும் பரிசுத்தமுடையதாக காணப்பட வேண்டும். "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்" (1 பேதுரு 1:15) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது.
6) இருதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
இருதயத்தின் சிந்தனை, யோசனை பரிசுத்தமாக இருக்க வேண்டும். உனது இருதயம் குப்பைத் தொட்டியாக இருக்க கூடாது. கண்டதை போட்டு குழப்பி கொண்டு இருக்க கூடாது. உனது பேச்சு உனது இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்தும் (லூக்கா 6:40). இருதயத்தில் இருந்து புறப்படுவதே மனுஷனை தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:23) இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது (எரேமியா 17:9)
எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்ள (நீதிமொழிகள் 4:23). நமது இருதயத்தை கறைபடுத்தக் கூடிய பார்வைகள், எண்ணங்கள், சம்பாஷணைகள், பழக்கவழக்கங்கள், mobile ல் பார்க்கும் காரியங்களை குறித்து சர்வ ஜாக்கிரதையாக நாம் இருத்தல் வேண்டும். வேத வசனங்களால் இருதயம் நிரம்பி இருக்க வேண்டும் (சங்கீதம் 119:11) தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் (சங்கீதம் 51:10) என்று தாவீதை போல அனுதினமும் ஜெபி.
7) யார் மேலும் கசப்பு இருக்க கூடாது (எபேசியர் 4:31)
மக்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு தீங்கிழைத்த மக்களை குறித்து கசப்பான எண்ணத்தை மனதில் கொண்டு அதை மன்னிக்கவும் மறக்கவும் மனதில்லாமல் வாழ்வதை பார்க்கிறோம். சில மக்கள் நமக்கு செய்யும் நீசத்தனமான பாதக செயல்கள் நமது இருதயத்தை உடைத்து சுக்கு நூறாக நொறுங்கி விடுகின்றது. எனது வேலை ஸ்தலத்தில் ஒரு சகோதரன் எனக்கு அதிகம் தீங்கு இழைத்தார்கள். அதின் நிமித்தம் எனது ஆத்மா அதிக வேதனை அடைந்தது. ஆனாலும் நான் அந்த சகோதரன் மேல் மனக்கசப்பு கொள்ளாமல் அவரோடு அன்பாக பழககூடிய ஒரு இருதயத்தை கர்த்தர் எனக்கு கொடுத்தார்.
தனது வாழ்வையே முடித்து கட்ட தீர்மானித்து, தன்னை தண்ணீரற்ற பாழ் குழியில் போட்ட தனது கொலைபாதக பொல்லாத சகோதரர்கள் மேல் எந்த ஒரு மனக்கசப்பையும் கொள்ளாமல், அவர்களை மனப்பூர்வமாக மன்னித்து அவர்களை மேலான நிலைக்கு உயர்த்திய யோசேப்பு தேவபக்தன் நமக்கு சிறந்த உதாரணமாக விளங்குகின்றார்.
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501
=====================
தலைப்பு: யார் எதை ஏற்றுக்கொள்ளவில்லை..!
=====================
1. ஆபிரகாம் சோதோமின் ராஜா கொடுத்த வெகுமதியை ஏற்கவில்லை. ~ ஆதியாகமம் 14:22
2. தீர்க்கதரிசி எலிசா நாகமான் கொடுத்த காணிக்கையை வாங்க மறுத்தார்
2 இராஜாக்கள் 5:16
3. யோபு தன் மனைவி கூறிய தீய ஆலோசனையை கேட்கவில்லை
யோபு 2:9~10
4. ரேகாப் குடும்பத்தை சேர்ந்தவர்களும், தானியேலும் மதுவைத் குடிக்காமல் தங்களைக் காத்துக் கொண்டனர்.
எரேமியா 35:5~6
தானியேல் 1:8
5. வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை கிறிஸ்து இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை.
மாற்கு 15:23
6. எருசலேம் ஊரார் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.
லூக்கா 9:52~53
7. கிறிஸ்துவை சொந்த ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
8. பிதாவின் நாமத்தினாலே வந்திருந்த கிறிஸ்துவை ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
யோவான் 5:43
9. யெஷுஆ ( கர்த்தர் இயேசு கிறிஸ்து ) தான் ராஜாவாக மறுத்தார்
யோவான் 6:15
10. பேதுரு மாயவித்தைக்காரனின் கையூட்டை ஏற்கவில்லை
அப்போஸ்தலர் 8:9~20
11. அப்போஸ்தலர் பவுலும் பார்னபாவும் ஜனங்கள் தங்களுக்கு பலியிட வந்ததை ஏற்கவில்லை
அப்போஸ்தலர் 14:11~15
12. தியோத்திரேப்பு யோவானை ஏற்றுக்கொள்ளவில்லை
3 யோவான் 1:9
Bro. Jeyaseelan (Mumbai)
Cell: 9820532501