===========
ஜீவ ஊற்று
===========
சங்கீதம் 36:9
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது. உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
இந்தக் குறிப்பில் ஜீவ ஊற்று என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம். ஜீவ ஊற்று or ஜீவ தண்ணீர் இவற்றை யாவரும் பெற்றுக் கொள்ளவேண்டும். யாருக்குள் ஜீவ ஊற்று, ஜீவ நதி புறப்பட்டு வரும் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. கர்த்தருக்கு பயப்படுபவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 14:27
2. எல்லா காவலோடும் காத்துக் கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 4:23
3. கர்த்தரிடத்தில் கேட்பவர்களுக்கு ஜீவ ஊற்று
யோவான் 4:10
4. விசுவாசிப்பவர் களுக்கு ஜீவ ஊற்று
யோவான் 7:38
5. சபைக்குச் செல்பவர்களுக்கு ஜீவ ஊற்று
யோவேல் 3:18
6. புத்தியை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 16:22
7. நீதிமானாக இருப்பவர்களுக்கு ஜீவ ஊற்று
நீதிமொழிகள் 10:11
இந்தக் குறிப்பில் ஜீவ ஊற்று பறப்பட்டுவர நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
======================
ஊழியக்காரராகிய இயேசு
=====================
1 பேதுரு 5:4
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கீரிடத்தை அறிவீர்கள்
இயேசு யாவரும் பிரம்மிக்கும்படி தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றினார். இயேசு ஊழியம் செய்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்களை நாம் இதில் சிந்திக்கலாம். இயேசு செய்த ஊழியங்களுக்கு இவைகள் அடையாளாமாயிருக்கிறது.
இயேசு ஊழியத்தில்
1. இயேசு நல்ல போதகர்
மத்தேயு 19:16
யோவான் 3:2
யோவான் 7:46
2. இயேசு நல்ல மேய்ப்பார்
யோவான் 10:12
எபிரெயர் 13:20
3. இயேசு மகா பிரதான அப்போஸ்தலர்
எபிரெயர் 3:1
2 கொரிந்தியர் 11:5
4. இயேசு மகா பிரதான ஆசாரியர்
எபிரெயர் 4:14
எபிரெயர் 9:11,12
எபிரெயர் 10:10-14,21
5. இயேசு மகா பெரிய தீர்க்கதரிசி
லூக்கா 7:16
மத்தேயு 21:11
யோவான் 4:19
யோவான் 7:40
6. இயேசு அருமையான சுவிசேஷகர்
லூக்கா 4:18
லூக்கா 20:1
அப்போஸ்தலர் 10:36
மத்தேயு 9:35
7. இயேசு நீதியுள்ள நியாயபதி
2 தீமோத்தேயு 4:8
அப்போஸ்தலர் 10:32
இந்தக் குறிப்பில் இயேசு நிறைவேற்றின ஊழியத்தின் அடையாளத்தை நாம் சிந்தித்தோம்.
ஆமென்
==========
மெய்யான
=========
எரேமியா 10:10
கர்த்தரே மெய்யான தெய்வம், அவர் ஜீவனுள்ள தேவன் நித்திய ராஜா, அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள்.
இந்தக் குறிப்பில் மெய்யான என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எவைகள் எல்லாம் மெய்யானது என்பதைக் குறித்து சிந்திக்கலாம். நமது ஆண்டவர் ஒருவரே மெய்யான தெய்வம்.
1. மெய்யான ஒளி
யோவான் 1:9
2. மெய்யான திராட்சை செடி
யோவான் 15:1
3. மெய்யான அப்பம்
யோவான் 6:32
4. மெய்யான கூடாரம்
எபிரெயர் 8:2
5. மெய்யான ஆசாரியன்
எபிரெயர் 7:16-24
6. மெய்யான பலி
எபிரெயர் 10:10-12
7. மெய்யான தேவன்
1 யோவான் 5:20
ரோமர் 9:25
இந்தக் குறிப்பில் மெய்யான என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி எவைகளெல்லாம் மெய்யானவை என்பதை சிந்தித்தோம்.
ஆமென் !
========
குமாரன்
========
1 யோவான் 5:12
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று வேதம் சொல்வதைப்போல நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் யார் யார் என்பதை சிந்திக்கலாம்.
1. மரியாளின் குமாரன்
லூக்கா 1:31
லூக்கா 2:51
மாற்கு 6:3
2. தாவீதின் குமாரனே
மத்தேயு 22:42
3. ஆபிரகாமின் குமாரனே
மத்தேயு 1:1
4. மனுஷ குமாரனே
லூக்கா 19:10
5. தேவனுடைய குமாரனே
யோவான் 1:34
யோவான் 3:17
6. யோசேப்பின் குமாரனே
லூக்கா 4:22
7. ஒரேபேறான குமாரன்
யோவான் 3:16
8. பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரன்
யோவான் 1:18
நமக்கு கொடுக்கப்பட்ட குமாரனை குறித்தும் எப்படிப்பட்ட குமாரன் நமக்கு கொடுக்கபட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டோம்.
ஆமென் !
=================
இயேசு பெரியவர்
=================
1 யோவான் 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாவிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்.
இந்தக் குறிப்பில் இயேசு பெரியவர் என்றும், இயேசு எப்படியெல்லாம் பெரியவர் என்பதை இதில் சிந்திக்கலாம்.
1. இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
யோவான் 8:53-59
2. இயேசு யாக்கோபை பார்க்கிலும் பெரியவர்
யோவான் 4:12-19
3. இயேசு சாலொமோனிலும் பெரியவர்
லூக்கா 11:31
மத்தேயு 12:42
4. இயேசு யோனாவிலும் பெரியவர்
மத்தேயு 12:41
லூக்கா 11:32
5. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்
மத்தேயு 12:6-8
6. நம்முடைய இருதயத்திலும் பெரியவர்
1 யோவான் 3:20
1 யோவான் 4:4
7. இயேசு எல்லாரிலும் பெரியவர்
எபிரெயர் 7:26
எபிரெயர் 1:4
இந்தக் குறிப்பில் இயேசுவை பெரியவராக சிந்தித்து, எப்படி எல்லாம் யாருக்கெல்லாம் பெரியவர் என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
================
உறுதியாக இருங்கள்
================
2 பேதுரு 3:17
அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து
இந்தக் குறிப்பில் உறுதி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி எவற்றிலெல்லாம் உறுதியாக இருக்க வேண்டுமென்பதை இதில் சிந்திக்கலாம்.
1. சத்தியத்தில் உறுதியாயிருங்கள்
2 பேதுரு 1:12
2. உத்தமத்தில் உறுதியாயிருங்கள்
யோபு 2:3
3. கற்பனைகளை கைக்கொள்வதில் உறுதியாயிருங்கள்
1 நாளாகமம் 28:7
4. ஜெபத்தில் உறுதியாயிருங்கள்
ரோமர் 12:12
5. ஒருமனதில் உறுதியாயிருங்கள்
பிலிப்பியர் 1:27
6. புத்திமதியில் உறுதியாயிருங்கள்
நீதிமொழிகள் 4:13
7. உடன்படிக்கையில் உறுதியாயிருங்கள்
நெகேமியா 9:38
இந்தக் குறிப்பில் நாம் உறுதியாயிருப்பதைக் குறித்து சிந்தித்தோம். எவைகளில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை கவனித்தோம் நீங்களும் சியோன் பர்வதத்தைப் போல அசைக்கபடாமல் உறுதியாக இருக்கவேண்டும்
ஆமென் !
===================
கன்மலையிலிருந்து
===================
சங்கீதம் 78:16
கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
இந்தக் குறிப்பில் கன்மலையிலிருந்து நாம் பெற்றுகொள்ளும் ஆசீர்வாதத்தை நாம் சிநதிக்கலாம்.
1. கன்மலையிலிருந்து இரட்சிப்பு
சங்கீத் 95:1,2
2. கன்மலையிலிருந்து தண்ணீர்
யாத்திராகமம் 17:6
3. கன்மலையிலிருந்து அக்கினி
நியாயாதிபதிகள் 6:21
4. கன்மலையிலிருந்து எண்ணெய்
யோபு 29:6
5. கன்மலையிலிருந்து தேன்
சங்கீதம் 81:16
6. கன்மலையிலிருந்து அடைக்கலம்
உன்னதப்பாட்டு 2:14
7. கன்மலையிலிருந்து இளைப்பாறுதல்
சங்கீதம் 40:2,3
இந்தக் குறிப்பில் கன்மலயாயிருக்கிற இயேசுவினடத்தில் நாம் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தைக் குறித்து சிந்தித்தோம்.
ஆமென் !
=======================
ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை?
=======================
புலம்பல் 3:44,8
ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக் கொண்டார்.
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும் என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
இந்தக் குறிப்பில் ஜெபம் கேட்கப்படாமல் போனதிற்கு காரணத்தைக் குறித்து இதில் சிந்திக்கலாம். நமது தேவன் ஜெபத்தைக் கேட்கிறாவர் ஏன் ஜெபம் கேட்கவில்லை?
1. பாவத்தினால் ஜெபம் கேட்கப்படவில்லை
யோவான் 9:31
2. அவிசுவாசத்தால் ஜெபம் கேட்கப்படவில்லை.
எபிரெயர் 11:6
3. மன்னியாமையால் ஜெபம் கேட்கப்படவில்லை.
மாற்கு 11:25
4. கனியற்ற வாழ்வினால் ஜெபம் கேட்கப்படவில்லை.
யோவான் 15:16
5. பிரியமற்ற வாழ்வினால் ஜெபம் கேட்கப்படவில்லை
யோபு 33:26
6. வசனத்திற்கு கீழ்படியாமையால் ஜெபம் கேட்கவில்லை
நீதிமொழிகள் 28:9
7. பயனற்ற பக்தியால் ஜெபம் கேட்கவில்லை
யோவான் 9:31
8. சோர்வினால் ஜெபம் கேட்கவில்லை
லூக்கா 18:1
9. தேவசித்தத்திற்கு உட்படாததால் ஜெபம் கேட்கவில்லை
1 யோவான் 5:14
10 ஒருமனமின்மை ஜெபம்கேட்கவில்லை
மத்தேயு 18:19
11 கவலையினால் ஜெபம்கேட்கவில்லை
பிலிப்பியர் 4:6
12 வாக்குத்தத்தமில்லா ஜெபத்தினால் ஜெபம் கேட்கவில்லை
அப்போஸ்தலர் 1:5
எபிரெயர் 10:23
13 மாம்ச சிந்தனையால் ஜெபம்கேட்கவில்லை
சங்கீதம் 66:18
14 அதிக வசனிப்பால் ஜெபம்கேட்கவில்லை
மத்தேயு 6:7,8
15 சுயமகிமையைத் தேடும் ஜெபம் கேட்கபடாது
யோவான் 12:28
நம்முடைய வாழ்வில் ஜெபம் கேட்கப்படாமல் இருக்க என்னென்ன காரணம் என்பதை இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
==================
விசுவாசத்தின் பலன்
===================
1 கொரிந்தியர் 2:4,5
உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பலத்தில் நிற்கும்படி ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதி படுத்தபட்டதாயிருந்தது.
இந்தக் குறிப்பில் விசுவாசத்தின் பலன்களைக் குறித்து நாம் சிந்திக்கலாம். நாம் விசுவாசத்தால் பெற்று கொள்ளும் பலன்களை இதில் கவனித்து நமது விசுவாசத்தைப் பெலப்படுத்திக்கொள்வோம்.
1. விசுவாசத்தின் பலன் பாவமன்னிப்பு
அப்போஸ்தலர் 10:43
2. விசுவாசத்தின் பலன் இரட்சிப்பு
1 பேதுரு 1:9
3. விசுவாசத்தின் பலன் நீதி
ரோமர் 10:10
4. விசுவாசத்தின் பலன் வெட்கத்தை நீக்கும்
ரோமர் 10:11
5. விசுவாசத்தின் பலன் சமாதானம்
ரோமர் 5:1
6. விசுவாசத்தின் பலன் தேவனுடைய புத்திரர்
கலாத்தியர் 3:26
7. விசுவாசத்தின் பலன் ஆசீர்வாதம்
கலாத்தியர் 3:9
8. விசுவாசத்தின் பலன் நித்திய ஜீவன்
யோவான் 11:25,26
9. விசுவாசத்தின் பலன் ஜீவகிரிடம்
2 தீமோதேயு 4:7,8
10 விசுவாசத்தின் பலன் பொறுமை
ஏசாயா 28:16
ஏசாயா 30:15
இந்தக் குறிப்பில் விசுவாசம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி விசுவாசத்தின் பலன் என்னென்ன என்பதை இதில் கவனித்தோம்.
ஆமென் !
==============
கிறிஸ்துவாகிய கல்
==============
வெளிப்படுத்தல் 4:3
வீற்றிருந்தவர் பார்வைக்கு வச்சிரகல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார், அந்த சிங்காசனத்தை சுற்றி ஒரு வானவில்லிருந்து அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவாகிய கல்லை குறித்து அறிந்துக் கொள்வோம். கிறிஸ்து வேதத்திலே எப்படிப்பட்ட கல் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்.
1. இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள கல்
1 பேதுரு 2:4,5
2. இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட கல்
1 கொரிந்தியர் 10:4
3. இயேசு கிறிஸ்து இடறுகிறதற்கான கல்
ரோமர் 9:32,33
1 பேதுரு 2:7,8
4. இயேசு கிறிஸ்து நசுக்கிபோடும் கல்
மத்தேயு 21:44
லூக்கா 20:18
5. இயேசு கிறிஸ்து விலையேறப்பெற்ற மூலைக்கல்
1 பேதுரு 2:6,7
எபேசியர் 2:20
6. இயேசு கிறிஸ்து சித்திர வேலை செய்யப்பட்ட கல்
சகரியா 3:9
சகரியா 4:10
7. இயேசு கிறிஸ்து கைகளால் பெயர்க்கப்படாத கல்
தானியேல் 2:34,35
ஆதியாகமம் 49:24
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவாகிய கல்லைக் குறித்தும், இயேசு எப்படிப்பட்டக் கல் என்பதையும் அறிந்துக்கொண்டோம்.
ஆமென்!
===============
இரட்சண்ணியம்
===============
லூக்கா 2:31,32
தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயுத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்ணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இயேசு இரட்சண்ணிய மானவர் மற்றும் இரட்சிப்பின் அதிபதி. இயேசு எப்படியெல்லாம் இரட்சிப்பானவர் என்பதை சிந்திக்கலாம்
1. இயேசு இரட்சணிய கன்மலை
உபாகமம் 32:5
சங்கீதம் 95:1
2. இயேசு இரட்சணியக் கொம்பு
சங்கீதம் 18:2
3. இயேச இரட்சிப்பின் தலைச்சீரா
ஏசாயா 59:17
எபேசியர் 6:17
4. இயேசு இரட்சிப்பின் கேடகம்
2 சாமுவேல் 22:36
சங்கீதம் 18:35
5. இயேசு இரட்சிப்பின் பாத்திரம்
சங்கீதம் 116:3
6. இயேசு இரட்சிப்பின் வஸ்திரம்
2 நாளாகமம் 6:41
ஏசாயா 61:40
சங்கீதம் 132:16
சங்கீதம் 149:14
7. இயேசு இரட்சிப்பின் மதில்
ஏசாயா 26:1
ஏசாயா 60:18
8. இயேசு இரட்சிப்பின் இரதம்
ஆபகூக் 3:8
9. இயேசு இரட்சிப்பின் ஊற்று
ஏசாயா 2:3
இயேசு இரட்சணியமும் இரட்சிப்புமானவர். இயேசு எப்படியெல்லாம் இரட்சிப்பின் மேன்மையாயிருந்தார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இயேசு என்ற இரட்சண்ணியத்தை என் கண்கள் கண்டதே என்று சிமியோன் சொன்னான்.
ஆமென் !
==============
ஆலோசனைகள்
==============
நீதிமொழிகள் 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
இந்தக் குறிப்பில் ஆவியானவர் சபைக்கு சொல்லும் ஆலோசனைகளைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
1. தேவனுக்கு பயந்திருங்கள்
அப்போஸ்தலர் 4:19
2. இயேசுவுக்கு உகந்த சாட்சியாயிருங்கள்
மத்தேயு 22:37
உபாகமம் 5:5
அப்போஸ்தலர் 2:32
3. பரிசுத்த ஆவியால் நிறைந்து தைரியமாய் தேவ வார்த்தையை பேசுங்கள்.
அப்போஸ்தலர் 4:8-31
4. பிறருடையதை உரிமைபாராட்டாதீர்
யாத்திராகமம் 20:17
5. இருப்பதில் திருப்தியடையுங்கள்
1 தீமோத்தேயு 6:6
6. தேவ வார்த்தையை மகிழ்வாய் ஏற்று கீழ்படியுங்கள்
அப்போஸ்தலர் 2:41
அப்போஸ்தலர் 3:12-16
7. கபடமில்லாத மனதுடன் வாழுங்கள்
அப்போஸ்தலர் 2:46
8. தேவ மகிமையை உங்களுக்கென்று ஏற்றுக்கொள்ளுங்கள்
அப்போஸ்தலர் 3:12-16
9. பிறர் செய்த தீமையை மன்னியுங்கள்
அப்போஸ்தலர் 7:60
இந்தக் குறிப்பில் ஆவியானவர் சபைக்கு சொன்ன ஆலோசனைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
============
பெருகுவாய்
============
ஏசாயா 54:3
நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்.
இந்தக் குறிப்பில் நாம் பெறுகவேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். நாம் எந்தெந்த காரியத்தில் பெருகவேண்டும் என்பதைக் குறித்து அறிந்துக்கொள்வோம்.
1. சம்பத்து பெருகும்
யோபு 1:10
2. மகிழ்ச்சி பெருகும்
ஏசாயா 9:3
3. ஆயுசு நாட்கள் பெருகும்
நீதிமொழிகள் 10:27
நீதிமொழிகள் 9:11
4. கிருபையும் சமாதனமும் பெருகும்
2 பேதுரு 1:2
5. மேன்மை பெருகும்
சங்கீதம் 71:21
1 நாளாகமம் 29:12
இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் பெருகவேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்தோம். நீங்கள் வலது புறத்திலும் இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகச் செய்வார்.
ஆமென் !