==========
கேள்விகள் (பூ)
==========
1. விடியற்காலையில் பூக்கும் பூ. என்ன பூ?
2. நம்மிடம் நெருங்காத பூ என்ன பூ?
3. நாம் நசுக்கி எறியவேண்டிய பூ என்ன பூ?
4. ஏசாவின் சந்ததியாரை நோக்கி வீசப்படும் பூ என்ன பூ?
5. அக்கிரமக்காரருக்கு எரிநரகில் காத்திருக்கும் பூ என்ன பூ?
6. இருப்பதிலேயே பெரிய பூ என்ன பூ?
7. தீயில் கருகும் பூ என்ன பூ?
8. பற்களைக் காட்டும் பூவை விட நல்ல பூ என்ன பூ?
9. கர்த்தர் இயேசு தன் விசுவாசிகளுக்குக் கொடுத்த பூ என்ன பூ?
10. ஒரு பூவால் உடலைக் கெடுக்கும் பூ என்ன பூ?
11. கிழவி மறைத்த பூ என்ன பூ?
12. நீதிமானின் ஆவியைக் காத்த பூ என்ன பூ?
13. நீதிமானை எதிர்க்கும் துன்மார்க்கனைக் கண்டால் ஆண்டவருக்கு வரும் பூ என்ன பூ?
14. இரு குழுவினரின் போதனையில் இருந்த பூ என்ன பூ?
15. தடை செய்ததை பலியிட்டால் கர்த்தருக்கு வரும் பூ என்ன பூ?
ANSWER
=========
1. விடியற்காலையில் பூக்கும் பூ. என்ன பூ?
Answer: களிப்பு
சங்கீதம் 30:5
2. நம்மிடம் நெருங்காத பூ என்ன பூ?
Answer: பொல்லாப்பு
சங்கீதம் 91:10
3. நாம் நசுக்கி எறியவேண்டிய பூ என்ன பூ?
Answer: கசப்பு
எபேசியர் 4:31
4. ஏசாவின் சந்ததியாரை நோக்கி வீசப்படும் பூ என்ன பூ?
Answer: செருப்பு
சங்கீதம் 60:8
5. அக்கிரமக்காரருக்கு எரிநரகில் காத்திருக்கும் பூ என்ன பூ?
Answer: பற்கடிப்பு
மத்தேயு 13:41,42
6. இருப்பதிலேயே பெரிய பூ என்ன பூ?
Answer: அன்பு
1 கொரிந்தியர் 13:13
7. தீயில் கருகும் பூ என்ன பூ?
Answer: கொழுப்பு
லேவியராகமம் 4:19
8. பற்களைக் காட்டும் பூவை விட நல்ல பூ என்ன பூ?
Answer: துக்கிப்பு
பிரசங்கி 7:3
9. கர்த்தர் இயேசு தன் விசுவாசிகளுக்குக் கொடுத்த பூ என்ன பூ?
Answer: இரட்சிப்பு
எபிரெயர் 9:28
10. ஒரு பூவால் உடலைக் கெடுக்கும் பூ என்ன பூ?
Answer: இளைப்பு
பிரசங்கி 12:12
11. கிழவி மறைத்த பூ என்ன பூ?
Answer: நகைப்பு
ஆதியாகமம் 18:15
12. நீதிமானின் ஆவியைக் காத்த பூ என்ன பூ?
Answer: பராமரிப்பு
யோபு 10:12
13. நீதிமானை எதிர்க்கும் துன்மார்க்கனைக் கண்டால் ஆண்டவருக்கு வரும் பூ என்ன பூ?
Answer: சிரிப்பு
சங்கீதம் 37:12,13
14. இரு குழுவினரின் போதனையில் இருந்த பூ என்ன பூ?
Answer: புளிப்பு
மத்தேயு 16:12
15. தடை செய்ததை பலியிட்டால் கர்த்தருக்கு வரும் பூ என்ன பூ?
Answer: அருவருப்பு
உபாகமம் 17:1
===================
சரியான பதில் எது?
====================
1) எதற்காக போராடுகிற யாவரும் எல்லாவற்றிலும் இச்சை அடக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்?
1) பாவத்திற்காக
2) பந்தயத்திற்காக
3) நீதிக்காக
4) சத்தியத்திற்காக
2) எதின்படி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் ?
1) சத்தியத்தின்படி
2) வசனத்தின் படி
3) ஆவிக்கேற்றபடி
4) வார்த்தையின்படி
3) யாருடைய ஆகாரத்தை புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே ?
1) மதிகேடனுடைய
2) துன்மார்க்கனுடைய
3) பாவிகளுடைய
4) வன்கண்ணனுடைய
4) இது மகாராஜாவின் நகரம் ?
1) பாசான் பர்வதம்
2) சீயோன் பர்வதம்
3) கர்த்தரின் பர்வதம்
4) தேவ பர்வதம்
5) என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று அழுதது யார் ?
1) யாக்கோபு
2) ஏசா
3) இஸ்மவேல்
4) ஈசாக்கு
6) உன் மேல் வரும் சாபம் என் மேல் வரட்டும் என்றது யார்?
1) யாக்கோபு
2) ஈசாக்கு
3) சாராள்
4) ரெபேக்காள்
7) யாருடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம் போலிருக்கும் ?
1) கர்த்தருடைய
2) மனுஷனுடைய
3) துன்மார்க்கனுடைய
4) பாவிகளுடைய
8) நீ ஒரு ___________போஜனம் பண்ண உட்கார்ந்தால் உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய் கவனித்து பார்.
1) ஏழையுடன்
2) ராஜாவுடன்
3) அதிபதியோடே
4) வேலைக்காரனுடன்
9) என் சஞ்சலம் நிறுக்கபட்டு என் நிர்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாய் இருக்கும் என்று கூறியது யார்?
1) சாலமோன்
2) தாவீது
3) பவுல்
4) யோபு
10) யார் யுத்தத்தில் வல்லவர்?
1) தாவீது
2) கர்த்தர்
3) சாலமோன்
4) சிம்சோன்
சரியான பதில்
===============
1) எதற்காக போராடுகிற யாவரும் எல்லாவற்றிலும் இச்சை அடக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்?
Answer: 2) பந்தயத்திற்காக
1 கொரிந்தியர் 9:25
2) எதின்படி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் ?
Answer: 3) ஆவிக்கேற்றபடி
கலாத்தியர் 5:16
3) யாருடைய ஆகாரத்தை புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே?
Answer: 4) வன்கண்ணனுடைய
நீதிமொழிகள் 23:6
4) இது மகாராஜாவின் நகரம்?
Answer: 2) சீயோன் பர்வதம்
சங்கீதம் 48:2
5) என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று அழுதது யார் ?
Answer: 2) ஏசா
ஆதியாகமம் 27:34
6) உன் மேல் வரும் சாபம் என் மேல் வரட்டும் என்றது யார்?
Answer: 4) ரெபேக்காள்
ஆதியாகமம் 27:13
7) யாருடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம் போலிருக்கும் ?
Answer: 2) மனுஷனுடைய
நீதிமொழிகள் 18:4
8) நீ ஒரு ___________போஜனம் பண்ண உட்கார்ந்தால் உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய் கவனித்து பார்.
Answer: 3) அதிபதியோடே
நீதிமொழிகள் 23:1
9) என் சஞ்சலம் நிறுக்கபட்டு என் நிர்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாய் இருக்கும் என்று கூறியது யார்?
Answer: 4) யோபு
யோபு 6:2
10) யார் யுத்தத்தில் வல்லவர்?
Answer: 2) கர்த்தர்
யாத்திராகமம் 15:3
சரியான பதில் எது?
=====================
1) தங்கள் மனைவிகளை சகோதரி என்று சொன்ன இருவர்
1) ஆரோன்,ரூபன்
2) யோசேப்பு, யாக்கோபு
3) ஆபிரகாம், ஈசாக்கு
2) குழியில் தூக்கிப் போடப்பட்ட இருவர்
1) யோசேப்பு, அப்சலோம்
2) யோனா, யோசேப்பு
3) அனனியா, யோசேப்பு
4) மிசாவேல், அசரியா
3) மகா ருபவதியான இருவர்
1) மரியாள்,ரெபேக்காள்
2) ராகேல், மரியாள்
3) ரெபேக்காள், வஸ்தி
4) சாராள், லேயாள்
4) தாகமாய் இருக்கிறேன் என்ற இருவர்
1) ஆகார், இயேசு
2) இஸ்ரவேல் ஜனங்கள், இயேசு
3) இயேசு,ஊழியக்காரன்
4) சிசெரா, இயேசு
5) உப்பரிகையின் மேல் நன்ற இருவர்
1) இயேசு, சவுல்
2) தாவீது, இயேசு
3) மோசே, இயேசு
4) ஆரோன், இயேசு
6) ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இருவர்
1) யாகேல்,மரியாள்
2) சாராள், மரியாள்
3) மார்த்தாள், மரியாள்
4) ரெபேக்காள், மரியாள்
7) கழுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமும் உள்ள இருவர்
1) சாமுவேல், யோனத்தான்
2) சவுல், யோனத்தான்
3) தாவீது, இஸ்ரவேல் மக்கள்
4) தாவீது, சவுல்
8) வேதத்தில் சிவந்த மேனி (நிறம்) என குறிப்பிடப்படும் இருவர்
1) ஏசா, தாவீது
2) இயேசு, சாலமோன்
3) ஈசாக்கு, யாக்கோபு
4) சவுல், அதோனியா
9) இஸ்ரவேலின் வீட்டைக் கட்டுவித்த இரண்டு ஸ்திரிகள் யார்
1) ருத், நகோமி
2) சில்பாள், பில்காள்
3) ராகேல், லேயாள்
10) முகம் சூரியனைப் போல இருந்த (பிரகாசித்த) இருவர்
1) இயேசு,தாவீது
2) இயேசு,பலமுள்ள தூதன்
3) சாமுவேல்,சாலமோன்
4) ஆபிரகாம்,மோசே
பதில்கள்
==========
1) தங்கள் மனைவிகளை சகோதரி என்று சொன்ன இருவர்
Answer: ஆபிரகாம், ஈசாக்கு
ஆதியாகமம் 12:13
ஆதியாகமம் 20:2
ஆதியாகமம் 26:7
2) குழியில் தூக்கிப் போடப்பட்ட இருவர்
Answer: 1) யோசேப்பு, அப்சலோம்
ஆதியாகமம் 37:24
2 சாமுவேல் 18:17
3) மகா ருபவதியான இருவர்
Answer: 3) ரெபேக்காள், வஸ்தி
ஆதியாகமம் 24:16
எஸ்தர் 1:10
4) தாகமாய் இருக்கிறேன் என்ற இருவர்
Answer: 4) சிசெரா, இயேசு
நியாயாதிபதிகள் 4:18-19
யோவான் 19:28
5) உப்பரிகையின் மேல் நன்ற இருவர்
Answer: 2) தாவீது, இயேசு
2 சாமுவேல் 11:2
மத்தேயு 4:5
6) ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இருவர்
Answer: 1) யாகேல்,மரியாள்
நியாயாதிபதிகள் 5:24
லூக்கா 1:28
7) கழுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமும் உள்ள இருவர்
Answer: 2) சவுல், யோனத்தான்
2 சாமுவேல் 1:23
8) வேதத்தில் சிவந்த மேனி (நிறம்) என குறிப்பிடப்படும் இருவர்
Answer: 1) ஏசா, தாவீது
ஆதியாகமம் 25:25
1 சாமுவேல் 16:12
9) இஸ்ரவேலின் வீட்டைக் கட்டுவித்த இரண்டு ஸ்திரிகள் யார்
Answer: 3) ராகேல், லேயாள்
ரூத் 4:11
10) முகம் சூரியனைப் போல இருந்த (பிரகாசித்த) இருவர்
Answer: 2) இயேசு,பலமுள்ள தூதன்
மத்தேயு 17:2
வெளிப்படுத்தல் 10:1