======================
எப்படிபட்ட வார்த்தைகளை பேச வேண்டும்
=======================
1) நாம் பேசும் வார்த்தைகள் சுருக்கமாக இருக்க வேண்டும் (வள வள என்று பேச கூடாது)
பிரசங்கி 5:2
2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும்
யோபு 4:4
3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும்
எபேசியர் 4:29
4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும்
எபேசியர் 4:29
5) ஜிவ வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை)
நீதிமொழிகள் 10:11
6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை)
ஆதியாகமம் 49:21
7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும்
கொலோசெயர் 4:6
8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும்
கொலோசெயர் 4:6
9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும்
நீதிமொழிகள் 15:2
10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும்
எபேசியர் 4:29
11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும்
யோபு 16:5
12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற) வார்த்தைகளை பேச வேண்டும்
யோபு 16:5
14) ஞானத்தை பேச வேண்டும்
நீதிமொழிகள் 10:31
14) நற்செய்தியை பேச வேண்டும்
நீதிமொழிகள் 15:30
15) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும்
யோபு 6:25
16) நியாய பிரமாணத்தை (வேத வசனத்தை) பேச வேண்டும்
யோசுவா 1:8
17) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும்
சங்கீதம் 19:14
18) நலமானதை பேச வேண்டும்
மத்தேயு 12:34
19) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும்
நீதிமொழிகள் 15:14
20) உத்தம காரியங்களை பேச வேண்டும்
நீதிமொழிகள் 8:6
21) உண்மையுள்ள வார்த்தைகளை பேச வேண்டும்
மத்தேயு 5:37
22) நன்மையே பேச வேண்டும்
ஆதியாகமம் 31:24
23) மெதுவான பதில்
நீதிமொழிகள் 15:1
24) இனி வரும் உலகத்தை (புதிய வானம், பூமி) பேச வேண்டும்
எபிரெயர் 2:5
===============
இயேசு கூறிய சில வார்த்தைகள்
================
1) என்னை நோக்கி பாருங்கள்
ஏசாயா 45:22
2) என்னிடத்தில் வாருங்கள்
மத்தேயு 11:28
3) என்னை பின்பற்றி வா
யோவான் 21:22
4) என்னில் நிலைத்திருங்கள்
யோவான் 15:4
==============
ரெபேக்காள் - நல்ல குணங்கள்
================
1) கடின உழைப்பாளி - 10 ஒட்டகங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணிர் வார்த்து அவைகளின் தாகத்தை தீர்த்தாள் (ஒரு ஒட்டகம் ஒரே நேரத்தில் 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும்)
ஆதியாகமம் 24:46
2) கொடுப்பதில், தியாகத்தில் சிறந்தவள்
ஆதியாகமம் 24:20
3) மணவாளனை கனம் பண்ணுகிறவள்
ஆதியாகமம் 24:65
4) ஜெபிக்கிறவள்
ஆதியாகமம் 25:22,33
5) மற்றவர்களை கனம் பண்ண அறிந்தவள்
ஆதியாகமம் 24:18
6) மனரம்மியமாக வாழ அறிந்தவள்
ஆதியாகமம் 24:25
7) அந்நியரை உபசரிக்கிறவள்
எபிரெயர் 13:2
ஆதியாகமம் 24:25
8) கணவனுடைய (ஈசாக்கு) துக்கத்தை நீக்கி அவனுக்கு ஆறுதல் கொடுத்தவள்
ஆதியாகமம் 27:67
9) ருசியாக சமையல் செய்பவள்
ஆதியாகமம் 27:9,31
==============
பாட வேண்டும் - எப்போது
=============
1) மகிழ்ச்சியாக இருக்கும் போது
யாக்கோபு 5:13
2) பாடுகளில், உபத்திரவங்களில்
அப்போஸ்தலர் 16:25
3) மற்றவர்கள் நமக்கு விரோதமாக எழும்பும் போது
2 நாளாகமம் 20:1-21
4) இரவில்
யோபு 35:11
5) உயிரோடு இருக்கும் வரை
சங்கீதம் 104:33
=========
கர்த்தரை துதிப்பது
========
1) இன்பமானது
சங்கீதம் 147:1
2) நல்லது
சங்கீதம் 147:1
3) ஏற்றது
சங்கீதம் 147:1
4) நலமானது
சங்கீதம் 92:1,3
5) தகும்
சங்கீதம் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது
சங்கீதம் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார்
சங்கீதம் 50:23
============
தேவனுடைய பிள்ளைகளகளுக்கு உதவி செய்து ஆசிர்வாதத்தை பெற்றவர்கள்
===============
மாற்கு 9:41
ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை அடையாமல் போகான்1) ஆபிரகாம் தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு உபசரித்தார்
ஆதியாகமம் 18:1-10
வயதான காலத்தில் தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தான். கர்த்தருடைய பிள்ளைகளை உங்களால் ஆனமட்டும் தாங்குங்கள், உபசரியுங்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பேசாதிருங்கள். தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தன் மூலம் கர்த்தர் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையை கட்டளையிட்டார்.
2) லோத்து தூதர்களுக்கு அப்பங்களை சுட்டு விருந்து பண்ணினான்
ஆதியாகமம் 19:1-16
அதனால் பொல்லாத மனுஷர் கைகளில் இருந்து தப்புவிக்கபட்டான். அதுமட்டுமல்ல தனது குடும்பத்தை அழிவில் இருந்து காத்தான்.
3) சுனேமியாள் எலிசா தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்டு சகல பணிவிடைகளை செய்தாள். வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஆகாரம் கொடுதது போஷித்தாள். அதுமட்டுமல்ல தங்கி செல்ல ஒரு அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். (2 இராஜாக்கள் 4:8-17) இதனால் பிள்ளை இல்லாத சுனேமியாளுக்கு குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மரணம் அடைந்த குழந்தைக்கு உயிர் வந்தது. தேசத்தில் பஞ்சம் உண்டாவதற்கு முன் அறிவிக்கபட்டு காப்பாற்ற படுகிறாள்.
4) சாரிபாத் விதவை எலியா தீர்க்கதரிசிக்கு ஆகாரம் (அடை) கொடுத்ததினால் அவளது வறுமை நீங்கியது (1 இராஜாக்கள் 17:10-15) சாப்பிட்டு செத்து போக வேண்டியவள் அநேக நாள் சாப்பிட்டாள். காப்பாற்றபட்டாள்.
5) ரெபேக்காள் ஆபிரகாம் ஊழியக்காரர்க்கும், 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். ஒட்டகங்கம் தண்ணீர் அதிகம் குடிக்கும். இதனால் ஈசாக்கை மணவாளனாக பெற்றாள்.
6) மார்த்தாள், மரியாள் இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள் (லூக்கா 10-38) இதனால் லாசரு உயிரோடு எழுப்பபட்டான்.
7) பேதுரு தனது படகை ஆண்டவருக்கு கொடுத்தபடியால் (பிரசங்கம் பண்ண) (லூக்கா 5-3) 2 படகு நிறைய மீன்கள் கிடைத்தது (இரவு முழுவதும் ஒன்றும் கிடைக்கவில்லை)
========
தனி ஒருவன்
========
1) மாம்ச மலையான கோலியாத்தை எதிர்க்க ஒருவரும் முன் வராத போதும் ஒற்றை கல்லை வைத்து வீழ்த்திய தாவீது தனி ஒருவன் தான்
1 சாமுவேல் 17
2) ஊரெல்லாம் 30 நாட்கள் தரியு ராஜாவை வணங்க கட்டளை பிறப்பித்த போது முதிர் வயதிலும் மூன்று வேளை முழங்கால் படியிட்டு தேவனை தொழுகை செய்து சிங்கத்தை வீழ்த்திய தானியேல் தனி ஒருவன் தான்.
தானியேல் 6
3) இரண்டு தூண்களையும் சாய்த்து தேவனுக்கு விரோதமான 3000 பெலிஸ்தியர்களை வீழ்த்திய சிம்சோன் தனி ஒருவன் தான்
நியாயாதிபதிகள் 16
4) ஆமான் என்பவன் யூத இனத்தையே அழிக்க நினைத்த போது தன் இனத்தைக் காக்க மூன்று நாள் உபவாசம் இருந்து ராஜா முன் நின்ற எஸ்தர் தனி ஒருவள்தான்.
எஸ்தர் 3,5
5) 450 பாகல் தீர்க்கதரிசியின் முன் வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே உண்மையான தேவன் என்று நிருபித்த எலியா தீர்க்கதரிசி தனி ஒருவன் தான்
1 இராஜாக்கள் 18
6) எல்லோரும் பாவம் செய்து சாத்தானால் தோல்வி அடைந்தபோது எந்த பாவம் செய்யாமல் சாத்தானை ஜெயித்த இயேசு கிறிஸ்து தனி ஒருவர் தான்.
நாமும் இவர்களைப் போல தனி ஒருவனாய் தனித்துவமாய் நிற்போம். ஆமேன்.
===============
யாக்கோபிடம் காணபட்ட நல்ல குணங்கள்
===============
1) பெற்றோர்க்கு கீழ்படிந்தவன்
ஆதியாகமம் 28:7
2) தேவ தரிசனம் கண்டவன்
ஆதியாகமம்28:12-16
3) பொருத்தனை செய்தவன்
ஆதியாகமம் 28:22
4) மற்றவர்கள் நலத்தை விசாரித்தான்
ஆதியாகமம் 29:6
5) இவன் நிமித்தம் மற்றவர்கள் ஆசிர்வதிக்க பட்டார்கள்
ஆதியாகமம் 30:27
6) குணசாலி
ஆதியாகமம் 25:27
7) தேவன் யாக்கோபுடன் இருந்தார்
ஆதியாகமம் 31:42,5
8) பொறுமை உள்ளவன் (லாபனால் ஏமாற்றபட்ட போது)
ஆதியாகமம் 30:31
9) எத்தன் என்று ஒத்து கொள்ளுகிறான் (ஜெபத்தில் தன் தவறை ஒத்து கொள்ளுகிறான்)
ஆதியாகமம் 32:27
10) கர்த்தரிடம் இருந்து கட்டளை (வசனம்) பெற்றான்
சங்கீதம் 147:19,20
11) கர்த்தரை நேசித்தான், கர்த்தரும் யாக்கோபை நேசித்தார்
ஏசாயா 41:8
12) அனைவருடனும் சமாதானமாக இருக்க விரும்பினான்
ஆதியாகமம் 33:4