===================
கேள்விகள் (நீதிமொழிகள் 1 - 3)
===================
1. புத்திமான் இவைகளைக் கேட்டு, எதில் தேறுவான்?
2. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், எதை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக?
3. கையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, எந்தக் காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்?
4. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, எதற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்?
5. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று என்னென்ன வரும்?
6. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, யாருடைய பாதைகளைக் காத்துக்கொள்வாயாக?
7. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் எவைகளைச் செவ்வைப்படுத்துவார்?
8. கர்த்தர் எதினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி? எதினாலே வானங்களை ஸ்தாபித்தார்?
9. எதை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே?
10. இகழ்வோரை அவர் இகழுகிறார்; யாருக்கு கிருபையளிக்கிறார்?

============================
வேத தியான கேள்விகள் (நீதிமொழிகள் 13 - 15)
==============================
1. யாருடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது?
2. எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்?
3. பிரம்பைக் கையாடாதவன் யாரைப் பகைக்கிறான்? அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
4. யார் பொய்சொல்லான்? யார் பொய்களை ஊதுகிறான்?
5. யார் பயந்து தீமைக்கு விலகுகிறான்? மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
6. கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் என்ன உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்?
7. எது ஜனத்தை உயர்த்தும்? பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
8. கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, யார் யாரை நோக்கிப்பார்க்கிறது?
9. சோம்பேறியின் வழி எதற்குச் சமானம்? நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
10. எதைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்? கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
நீதிமொழிகள் 15:32
=============================
வேத தியான கேள்விகள் நீதிமொழிகள் 22 - 34
============================
1. யார் ஆசீர்வதிக்கப்படுவான்? அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
2. எவை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்?
3. தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், யாருக்கு முன்பாக நிற்பான்?
4. பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; யாருடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே?
5. உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் யாரைப் பற்றும் பயத்தோடிரு?
6. எது இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்?
7. யார்மேல் பொறாமை கொள்ளாதே? அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
8. எதற்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி?
9. என் மகனே, நீ யார் யாருக்கு பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே?
10. எது வழிப்போக்கனைப்போலும் எது ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்?
============
சரீர உறுப்புகள் (நீதிமொழிகள்)
============
1. துன்மார்க்கருடைய எந்த உறுப்பு அக்கிரமத்தை விழுங்கும்?
அ. நாவு
ஆ. இருதயம்
இ. வாய்
2. மூடனுடைய எந்த உறுப்பு விவாதத்தில் நுழையும்?
அ. நாவு
ஆ. உதடு
இ. வாய்
3. ஞானன்களின் எந்த உறுப்புகள் அவர்களைக் காப்பாற்றும்
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
4. பொல்லாத மனுஷர்களின் எந்த உறுப்பு கொடுமையை யோசிக்கும?
அ. இருதயம்
ஆ. செவி
இ. வாய்
5. எந்த உறுப்பின் தாறுமாறுகளை உன்னை விட்டு அகற்ற வேண்டும?
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
6. பேளியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எந்த உறுப்பினால் சைகை காட்டுகிறான்
அ. கண்
ஆ. கை
இ. கால்
7. பிறனுடைய முகஸ்துதி செய்கிறவன் அவன் எந்த உறுப்புகளுக்கு வலையை விரிக்கிறான்?
அ. கை
ஆ. இருதயம்
இ. கால்
8. பரஸ்திரி தன் எந்த உறுப்புகளினால் உன்னை பிடிக்கவிடாதே
அ. கண்
ஆ. கண்மணி
இ. கண்ணிமை
9. எந்த உறுப்புகளின் பேச்சோ வருமையை மாத்திரம் தரும்?
அ. நாவு
ஆ. உதடு
இ. வாய்
10. நீதிமானுடைய எந்த உறுப்புகள் அநேகரைப் போஷிக்கும்?
அ. இருதயம்
ஆ. உதடு
இ. வாய்
11. என் __________தீர்க்காயுசும் அதின் ____________ செல்வமும் கனமும் இருக்கிறது.
12. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்?
அ. வாய்
ஆ. உதடு
இ. நாவு
13. ஆபத்துக் காலத்தில் துரோகியை நம்புவது__________ மொழி புரண்ட _________ சமானம்
சரீர உறுப்புகள் (பதில் - நீதிமொழிகள்)
=================
1. துன்மார்க்கருடைய எந்த உறுப்பு அக்கிரமத்தை விழுங்கும்?
Answer: இ. வாய்
நீதிமொழிகள் 19:28
2. மூடனுடைய எந்த உறுப்பு விவாத்தில் நுழையும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 18:6
3. ஞானவான்களின் எந்த உறுப்புகள் அவர்களைக் காப்பாற்றும்
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 14:3
4. பொல்லாத மனுஷர்களின் எந்த உறுப்பு கொடுமையை யோசிக்கும்?
Answer: அ. இருதயம்
நீதிமொழிகள் 24:2
5. எந்த உறுப்பின் தாறுமாறுகளை உன்னை விட்டு அகற்ற வேண்டும?
Answer: இ. வாய்
நீதிமொழிகள் 4:24
6. பேளியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எந்த உறுப்பினால் சைகை காட்டுகிறான்
Answer: அ. கண்
நீதிமொழிகள் 6:13
7. பிறனுடைய முகஸ்துதி செய்கிறவன் அவன் எந்த உறுப்புகளுக்கு வலையை விரிக்கிறான்?
Answer: இ. கால்
நீதிமொழிகள் 29:5
8. பரஸ்திரி தன் எந்த உறுப்புகளினால் உன்னை பிடிக்கவிடாதே
Answer: இ. கண்ணிமை
நீதிமொழிகள் 6:25
9. எந்த உறுப்புகளின் பேச்சோ வருமையை மாத்திரம் தரும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 14:23
10. நீதிமானுடைய எந்த உறுப்புகள் அநேகரைப் போஷிக்கும்?
Answer: ஆ. உதடு
நீதிமொழிகள் 10:21
11. என் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது
நீதிமொழிகள் 3:16
12. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்?
இ. நாவு
நீதிமொழிகள் 18:21
13. ஆபத்துக் காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம்
நீதிமொழிகள் 25:19