==============
தலைப்பு: இன்பம்
==============
1) எது ஆத்துமாவுக்கு இன்பம்?
2) இன்பமாக சங்கீதத்தை பாடியது யார்?
3) யாருடைய வார்த்தை இன்பம்?
4) கர்த்தருக்கு இன்பம் கொடுப்பதில்லை எது?
5) இன்பமாய் வசனம் வசனிப்பது யார்?
6) வாயின் பேச்சு இன்பம் இருதயம் பின்பற்றுவது என்ன?
7) பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் யாருக்கு இன்பம்?
8) தேவன் இன்பம் அளிப்பது யாருக்கு?
9) பிரியமும் இன்பமாய் இருந்தது யார் யார்?
10) வெகு இன்பமும் ஆச்சரியமான சிநேகமுமாயிருந்தது யார் யார்?
11) எதனால் படுத்துக் கொள்ளும் போது நித்திரை இன்பமாயிருக்கும்?
பதில் தலைப்பு: இன்பம்
===============
1) எது ஆத்துமாவுக்கு இன்பம்?
Answer: ஞானத்தை அறிந்து கொள்வது
நீதிமொழிகள் 24:14
2) இன்பமாக சங்கீதத்தை பாடியது யார்?
Answer: தாவீது
2 சாமுவேல் 23:1
3) யாருடைய வார்த்தை இன்பம்?
Answer: சுத்தவான்களுடைய
நீதிமொழிகள் 15:26
4) எது கர்த்தருக்கு இன்பம் கொடுப்பதில்லை?
Answer: கர்த்தர் வார்த்தைகளைக் கேளாமல் இருந்து நியாயப்பிரமாணத்துக்கு செவி கொடாமல் வெறுத்து விடுகிறவரின் பலிகள்
எரேமியா 6:19,20
5) இன்பமாய் வசனம் வசனிப்பது யார்?
Answer: நப்தலி
ஆதியாகமம் 49:31
6) வாயின் பேச்சு இன்பம் இருதயம் பின்பற்றுவது என்ன?
Answer: பொருளாசை
எசேக்கியேல் 33:31
7) பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் யாருக்கு இன்பம்?
Answer: துன்மார்க்கனுக்கு
யோபு 21:30,33
8) தேவன் இன்பம் அளிப்பது யாருக்கு?
Answer: தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு
பிரசங்கி 2:26
9) பிரியமும் இன்பமாய் இருந்தது யார் யார்?
Answer: சவுல் -யோனத்தான்
2 சாமுவேல் 1:23
10) வெகு இன்பமும் ஆச்சரியமான சிநேகமுமாயிருந்தது யார் யார்?
Answer: தாவீது - யோனத்தான்
2 சாமுவேல் 1:26
11) எதனால் படுத்துக் கொள்ளும் போது நித்திரை இன்பமாயிருக்கும்?
Answer: மெய் ஞானத்தையும் நல்லாலோசனையும் காத்துக் கொள்வதால்
நீதிமொழிகள் 3:21-24
===========
பதில் கண்டு பிடியுங்கள்
============
1. சிப்போரின் குமாரன் யார்?
2. யோய்தா மரணமடைந்த போது அவனுக்கு என்ன வயது?
3. இக்கபோத்தின் தகப்பன் யார்?
4. ராகேலின் வேலைக்காரி யார்?
5. தேவனுடைய பெட்டியின் நிமித்தம் யார் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித் தார்?
6. நிலத்துக்கு எருவாய்ப்போன இருவர் யார்?
7. தாய் யூதஸ்திரீ, தகப்பன் கிரேக்கன், மகன் யார்?
8. கடுங்கோபமூண்டது எந்த ராஜாவுக்கு?
9. நோவா பெயரின் அர்த்தம் என்ன?
10. எக்லோன் ராஜாவின் பெயர் என்ன?
பதில்
======
1. சிப்போரின் குமாரன் யார்?
Answer: பாலாக்
எண்ணாகமம் 22:16
2. யோய்தா மரணமடைந்த போது அவனுக்கு என்ன வயது?
Answer: நூற்று முப்பது
2 நாளாகமம் 24:15
3. இக்கபோத்தின் தகப்பன் யார்?
Answer: பினெகாஸ்
1 சாமுவேல் 4:21
4. ராகேலின் வேலைக்காரி யார்?
Answer: பில்காள்
ஆதியாகமம் 29:29
5. தேவனுடைய பெட்டியின் நிமித்தம் யார் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார்?
Answer: ஓபேத் ஏதோம்
2 சாமுவேல் 6:12
6. நிலத்துக்கு எருவாய்ப்போன இருவர் யார்?
Answer: சிசெரா, யாபீன்
சங்கீதம் 83:10
7. தாய் யூதஸ்திரீ, தகப்பன் கிரேக்கன், மகன் யார்?
Answer: தீமோத்தேயு
அப்போஸ்தலர் 16:1
8. கடுங்கோபமூண்டது எந்த ராஜாவுக்கு?
Answer: நேபுகாத்நேச்சார்
தானியேல் 3:19
9. நோவா பெயரின் அர்த்தம் என்ன?
Answer: தேற்றுவான்
ஆதியாகமம் 5:29
10. எக்லோன் ராஜாவின் பெயர் என்ன?
Answer: தெபீர்
யோசுவா 10:3
===========
தலைப்பு- கனம்
==============
1. யாருடைய முகத்தை கனம் பண்ண வேண்டும்?
2. யார் கர்த்தரை கனம் பண்ணுகிறான்?
3. யாருடைய பேர் மிகவும் கனம் பெற்றது?
4. எதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்?
5. தன் சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தது யார்?
6.கனம் பொருந்திய ஆலோசனைக்காரன்?
7. எசேக்கியா மரித்த போது அவனை கனம் பண்ணியவர்கள் யார்?
8. கனம் பொருந்திய தேசாதிபதி யார்?
9. எவைகளால் கர்த்தரை கனம் பண்ண வேண்டும்?
10. எப்படிப்பட்ட விதவைகளை கனம் பண்ண வேண்டும்?
பதில் தலைப்பு கனம்
=============
1. யாருடைய முகத்தை கனம் பண்ண வேண்டும்?
Answer: முதிர் வயதுள்ளவன் முகத்தை
லேவியராகமம் 19:32
2. யார் கர்த்தரை கனம் பண்ணுகிறான்?
Answer: தரித்திரனுக்கு தயை செய்கிறவன்
நீதிமொழிகள் 14:31
3. யாருடைய பேர் மிகவும் கனம் பெற்றது?
Answer: தாவீது
1 சாமுவேல் 18:30
4. எதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்?
Answer: கனம் பண்ணுகிறதிலே
ரோமர் 12:10
5. தன் சகோதரரை பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தது யார்?
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
6. கனம் பொருந்திய ஆலோசனைக்காரன்?
Answer: யோசேப்பு
மாற்கு15:43
7. எசேக்கியா மரித்த போது அவனை கனம் பண்ணியவர்கள் யார்?
Answer: யூதா அனைத்தும் எருசலேமின் குடிகளும்
2 நாளாகமம் 32:33
8. கனம் பொருந்திய தேசாதிபதி யார்?
Answer: பேலிக்ஸ்.
அப்போஸ்தலர் 23:26
9. எவைகளால் கர்த்தரை கனம் பண்ண வேண்டும்?
Answer: உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும்.
நீதிமொழிகள் 3:9
10. எப்படிப்பட்ட விதவைகளை கனம் பண்ண வேண்டும்?
Answer: உத்தம விதவைகளாகிய விதவைகளை
1 தீமோத்தேயு5:3
================
கீழ்கண்ட வேதாகம வினாக்களுக்கு பதில் அளிக்கவும்
================
1. "அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற் போனான்" அவன் யார்?
2. லாகீசுக்கு உதவி செய்ய வந்த ராஜா யார்?
3. வெட்டின கற்களால் செய்யப்பட்டது எது?
4. கர்த்தர் ஜெயங் கொட்டிருப்பது எதற்காக?
5. இயேசுவின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?
6. இரைச்சல், கூச்சல், எக்காள சத்தத்தோடு மரிப்பவர்கள் யார்?
7. எழும்ப முடியாமல் வீழ்பவர்கள் எதின் மேல் சத்தியம் பண்ணுவார்கள்?
8. நியாயப்பிரமாணம் வைத்திருப்பது என்னென்ன?
9. ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை பெற்ற ஆட்டுக் கூட்டத்திற்கு இனணயானது எது?
10. எவர்கள் பாவத்தில் மரிப்பதை கர்த்தர் சித்தங் கொள்ளவில்லை ?
11. தான் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்று காத்திருந்த தீர்க்கன் யார்?
12. எதைத் தடுத்தாலும் பிரச்சனை, தடுக்காவிட்டாலும் பிரச்சனை என்று எதைப் பற்றி வேதம் கூறுகிறது?
கீழ்கண்ட வேதாகம வினாக்களுக்கு பதில்
==================
1. "அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற் போனான்" அவன் யார்?
Answer: துன்மார்க்கன்
சங்கீதம் 109:17
2. லாகீசுக்கு உதவி செய்ய வந்த ராஜா யார்?
Answer: கேசரின் ராஜா ஓராம்
யோசுவா 10:33
3. வெட்டின கற்களால் செய்யப்பட்டது எது?
Answer: தகனப்பலிக்குரிய 4 பீடங்கள்
எசேக்கியேல் 40:42
Answer: ஆலயத்தின் உட்பிரகாரம்
1 இராஜாக்கள் 6:33,36
4. கர்த்தர் ஜெயங் கொட்டிருப்பது எதற்காக?
Answer: புஸ்தகத்தை திறக்கவும், அதின் 7 முத்திரைகள் உடைக்கவும்
வெளிப்படுத்தல் 5:5
5. இயேசுவின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?
Answer: சத்தியத்தின்படி
யோவான் 8:16
6. இரைச்சல், கூச்சல், எக்காளச் த்தத்தோடு மரிப்பவர்கள் யார்?
Answer: மோவாப்பியர்
ஆமோஸ் 2:2
7. எழும்ப முடியாமல் வீழ்பவர்கள் எதின் மேல் சத்தியம் பண்ணுவார்கள்?
Answer: சமாரியாவின் தோஷத்தில்
ஆமோஸ் 8:14
8. நியாயப்பிரமாணம் வைத்திருப்பது என்னென்ன?
Answer: கட்டளைகள், நியாயங்கள்
மல்கியா 4:4
9. ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை பெற்ற ஆட்டுக் கூட்டத்திற்கு இனணயானது எது?
Answer: சூலமித்தியின் பற்கள்
உன்னதப்பாட்டு 6:6
10. எவர்கள் பாவத்தில் மரிப்பதை கர்த்தர் சித்தங் கொள்ளவில்லை?
Answer: துன்மார்க்கன்
எசேக்கியேல் 33:11
11. தான் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறுமா, நிறைவேறாதா என்று காத்திருந்த தீர்க்கன் யார்?
Answer: யோனா
யோனா 3:4:4:1-5
12. எதைத் தடுத்தாலும் பிரச்சனை, தடுக்காவிட்டாலும் பிரச்சனை என்று எதைப் பற்றி வேதம் கூறுகிறது?
Answer: தண்ணீர்
யோபு 12:15