============
ஓர் குட்டிக் கதை
ஜெபத்திற்கு ஆச்சாியமான பதில்
============
ஒரு சமயம் நாத்திகன் ஒருவன் மதுபானக் கடை ஒன்றை முதலாவதாக பட்டணத்தில் திறக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற்றிருந்தான்.
அந்தக்கடை அந்த பட்டணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் இருக்கபோகிறபடியால் அந்த ஆலய விசுவாசிகள் அதை விரும்பவில்லை.
விசுவாசிகள் எல்லாரும் அந்த மதுக்கடை இல்லாமல் போகும்படி தேவனிடத்தில் விசுவாசமாய் ஜெபித்தார்கள்.
அந்த ஜெபத்தின் பயனாக அவர்கள் கண்கள் ஆச்சரியமான காரியம் நடந்ததை கண்டன. அது என்னவென்றால் அந்தக்கடை திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜெபித்தபடி மின்னல் தாக்கி அந்த கடை எரிந்து தரைமட்டமானது. விசுவாசிகள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
ஆனால் அந்த மதுபானக்கடை உரிமையாளரோ இந்த விசுவாசிகள் ஜெபித்ததின் விளைவாகத்தான் அவருடைய கடைக்கு இவ்விதம் சம்பவித்தது என்ற நம்பினான்.
ஜெபித்த கிறிஸ்தவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தார். இவர்கள் விசுவாசத்தோடு ஜெபித்ததினால் தான் என் கடை மின்னல் தாக்கி எரிந்து தரைமட்டமானது. என்று நீதிபதியினிடத்தில் வாதிட்டான்.
ஆனால் விசுவாசிகளோ, தங்களுக்கும் கடை எரிந்து சாம்பலானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்கள்.
முதல் வாய்தாவிலே நீதிபதி இரு பக்கத்தாரையும் விசாரித்துவிட்டு "இந்த நிலையில் என்னுடைய தீர்ப்பு எப்படி இருக்க போகிறது என்று எனக்கே தொியவில்லை
ஆனால் ஒரு உண்மை விளங்குகிறது. அந்த மதுக்கடை உரிமையாளனான நாத்திகன் விசுவாசிகள் ஜெபித்த ஜெபத்தை நம்புகிறான்.
ஆனால் இந்த கிறிஸ்தவர்களுக்கு தங்கள் ஜெபத்தின் வல்லமையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் தங்கள் ஜெபத்தால் கடை எாியவில்லை என்று வாதாடுகிறார்கள்" என்று கூறினார்.
என் அன்புக்குாியவா்களே,
ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதில் உண்டு.
எதற்காக ஜெபம் பண்ணுகிறீா்களோ அதற்கான பதில் தேவனிடத்திலிருந்து கிடைத்து விடும்.
மனிதன் தரும் பதிலை விட தேவன் மிக விரைவாகவும் முழுமையாகவும் பதில் தருவார். என்பது நிச்சயம்.
அப்போஸ்தலனாகிய பேதுரு சிறையிலிருந்த போது விசுவாசிகள் அவன் விடுதலைக்காக ஜெபித்தார்கள். அதன் விளைவாக தேவன் தம் தூதன் அனுப்பி பேதுருவை விடுதலை செய்தாா்.
விடுதலையாகி வந்து கதவை தட்டின போது பேதுரு நின்று கொண்டு இருந்தாா். விசுவாசிகள் இவ்வளவு சீக்கிரம் தேவன் விடுதலை செய்வாா் என்று அவர்கள் நம்பாமல் விடுதலையானதைக் கண்டு மிகுந்த ஆச்சரியப் பட்டாா்கள்.
தேவன் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறாா் என்பதை அநேகர் நம்புவது இல்லை .
ஜெபத்தினால் நோய்கள் சுகம் ஆகும், பிசாசுகள் நீங்கும், மனுஷன் எதெல்லாம் நடக்க முடியாது என்று நினைக்கிறானோ அதெல்லாம் அவன் ஆச்சாியப்படும் அளவுக்கு அற்புதங்கள் நடக்கும்.
To get daily message in whats app contact +918148663456
உங்கள் வாழ்க்கையில் ஜெபத்தின் தேவ வல்லமையை விசுவாசித்து அனுபவித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சாியப்படும்படி பொிய காரியங்கள் நடக்கும்.
மத்தேயு 18:19
அல்லாமலும், உங்களில் இரண்டு போ் தாங்கள் வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 11:24
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
என்று இயேசு கூறின வசனங்களின்படி ஜெபியுங்கள். அதினால் பதிலைப் பெற்றுக் கொண்டு ஆசீா்வாதங்களை அனுபவியுங்கள்.
==============
ஓர் குட்டிக் கதை
பேராசையால் உயிரிழந்த கொக்கு
============
வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.
அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.
ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.
ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.
“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.
“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.
‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.
"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.
மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.
“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.
"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.
இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.
ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.
“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.
கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. அந்த நண்டு கொக்கிடம் வந்து வயோதிகக் கொக்கே இந்த மீன்களையெல்லாம் எங்கு கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள்.
என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இரக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.
பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது. அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி. வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.
கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.
“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.
குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது. குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.
என் அன்பு வாசகர்களே,
மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்றபோதும், கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும்.
To get daily message in what s app contact +918148663456
இக்கதையில் மிக முக்கிய கருத்து நம்பிக்கை. மீன்கள் கொக்கின் மீது வைத்த நம்பிக்கை தான் அவைகளின் ஜீவனை நஷ்டப்படுத்தினது. இன்றும் அநேகர் தங்கள் வேலை ஸ்தலங்களில், ஊழியத்தில் தங்கள் உயர் அதிகாரிகள் மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்வது தான் சரி என்று அவர்களுக்கு இசைந்து, அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து அவர்களிடத்தில் நற்பெயரை பெற முயற்சிக்கின்றனர்.
அவர்களிடம் நற்சாட்சி பெற்றும் விடுகின்றனர். ஆனால் ஏதாகிலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது தங்களை தப்புவித்துக்கொள்ள உங்களை உபயோகிக்கின்றனர். அதுவரை நீங்கள் மிகுந்த பிரயாசப்பட்டு சேர்த்த நல்ல பெயர், நல்ல சம்பளம் என எல்லாம் போய்விடும்.
வேதத்தில் ஈசாக்கின் குமாரனாகிய ஏசா, தன் நம்பிக்கையை தேவனிடம் வைக்காமல் தன் தகப்பன்மேலும், அவர் தனக்கு கொடுக்க இருக்கிற ஆசீர்வாதத்தின் மேல் முழுவதும் வைத்து அதை பெற்றுக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை எல்லாவற்றையும் செய்தான். ஆனால் இறுதியில் அந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தன் சகோதரனாகிய யாக்கோபு பெற்றுக்கொண்டான். ஏனெனில் யாக்கோபு தன் நம்பிக்கையை தேவன் மேல் வைத்திருந்தான். அதனால் அவன் பாக்கியவானாய் இருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொண்டான். வேதம் சொல்கிறது,
எரேமியா 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எனவே நம் நம்பிக்கையை இந்த உலகத்தில் உள்ள மனிதர்களிடம் வைக்காமல், நமக்காக எல்லாவற்றையும் செய்கிற தேவனிடத்தில் நம்பிக்கையை வைப்போம் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
=============
ஓர் குட்டிக் கதை
ராஜா நல்ல ராஜா!
==============
நாட்டரசன்புரம் என்ற நாட்டை மார்த்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில் பல சிரமங்களுக்கிடையில் மிகப்பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார். பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற புற்களையும், புல்லின் நடுவே தரையில் படரும் சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.
மரங்களிலும் புதர்களிலும் உயர்ந்த சாதிப் பறவைகளையும், முயல், அணில் போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல பொன்னிற புள்ளி மான்கள் அந்தத் தோட்டத்தில் அங்குமிங்கும் துள்ளியோடின. அந்தத் தோட்டத்தைக் கண்டால் மனம் அமைதியடையும். கவலைகள் மறந்து போகும். அப்படி ஒரு அற்புதமாக அந்த தோட்டம் அமைந்து இருந்தது.
அந்தத் தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல தேசத்துத் ராஜாக்களும் சிற்றரசர்களும் வருவர்.
அவர்களை மன்னர் வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தை சென்று காண்பர்; பிரமிப்பர். இத்தனை பெரிய இடத்தை வளைத்துத் இத்தனை எழிலான ஒரு தோட்டத்தை அமைக்க முடியுமா? என்று வியப்பர்.
எனினும் அந்தத் தோட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டே வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம் சுளிப்பர். ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது. அந்தக் குடிசையின் சுற்றுச் சுவர்கள் வெறும் களிமண்ணால் பிசைந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த ஓலைக் குடிசையை சுற்றி துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்டட் ஒரு சிறு அடுப்பும், ஏழெட்டு நைந்து போன துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி நாகவாளி செடி நிறைந்து இருக்கும்.
இத்தனை அற்புதமான ஒரு தோட்டத்தின் நடுவே இத்தனை கோரமான பஞ்சக்குடிசை ஒன்று ஏன் உள்ளது என்ற யாருக்குமே புரியவில்லை. எனினும் அந்தக் காரணத்தை பேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது அந்தக் குடிசை இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறவோ யாருக்கும் துணிவே வரவில்லை.
நாட்கள் சென்றன. மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்த தோட்டத்தைக் காண வந்தான். வழக்கம் போல மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடி வந்தான். திடீரென அவன் கண்கள் குடிசையைக் கண்டது. உடனே முகம் வாடினான். அத்தனை எழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மை
தோற்றமுடன் கூடிய குடிசை ஒன்று இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
உடனே அரசரிடம், “மன்னா இந்த எழிலான தோட்டத்தில் இப்படியொரு எளிய குடிசை இருப்பதன் காரணம் என்ன?'' என்று கேட்டான். உடனே மன்னன், “மகிபாலா! இந்த குடிசை உன்னைப் போன்ற ஒரு தைரியசாலியின் குடிசை . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு பெரிய பரப்பளவுடன் கூடிய இடம் எனக்கு மிகவும் அவசியமாகியது. நாடு முழுக்க அமைச்சர் அந்த மாதிரி ஒரு இடத்தைத் தேடிய போது இந்த இடம் அகப்பட்டடது.
ஆனால், பெரிய இடத்திற்கு நடுவே இந்த குடிசையும் இருந்தது. “இதில் இருந்த ஏழைக் கிழவியிடம், நீ இந்தக் குடிசை யை காலி செய்ய வேண்டும். இங்கு மன்னர் மிகப் பெரிய பூந்தோட்டம் அமைக்க இருக்கிறார்,'' என்று கூறியபோது கிழவி மறுத்திருக்கிறாள். விபரமறிந்த நான் நேரில் வந்து, “இடத்தை காலி செய்,'' என்று கூறினேன். ஆனால் அந்த பெண்ணோ, “மன்னா! இது என்பாட்டன் பூட்டன் காலத்துத் குடிசை . இதை தாங்கள் அழிப்பதை நான் விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதனை இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான் மனதார ஒப்புக் கொள்ள மாட்டேன். படைபலம்
நிறைந்த நீங்கள் நினைத்தால் என்னை ஒரே நிமிடத்தில் கொன்றுவிடலாம்.
To Get Daily Story In What's app Contact +917904957814
“நான் இறந்த பின்பு இந்த இடத்தை நீங்கள் இடித்துத் , சிதைத்து உமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், நான் இறந்தாலும்
எனது பூர்வீகக் குடிசையை அழித்து என் மனதில் வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன் நிச்சயசம் தண்டனையைத் தந்தே தீருவார்,'' என்று கூறி அழுதார். “அவள் கண்ணீரில் இருந்த நியாயமும் பூர்வீக நினைவுச் சின்னத்தை காப்பாற்றிக் கொள்ளும் மனோதைரியத்தால் என்னை எதிர்த்துத் அவள் பேசிய வீரமும் என் மனதை நெகிழ வைத்தது.
அவள் மன உணர்வை மதித்து, நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டம் உருவாக்கிய நான்கு, ஐந்து ஆண்டுகளில் அந்தக் கிழவி இறந்துவிட்டாட் ள். “அவளுக்குப் பின் இந்தக் குடிசையை ஆள யாரும் சந்ததிகள் இல்லை. என்றாலும் அந்தக் கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு மதிப்பு தர எண்ணி இந்தக் குடிசையை அகற்றவில்லை,'' என்றார். பேரரசரின் பெருந்தன்மையையும், நல்ல பண்பையும் மகிபாலன் வியந்து பாராட்டினான்.
என் அன்பு வாசகர்களே,
இன்றைய கதையை ஆவிக்குரிய ரீதியில் சிந்தித்தால், அந்த தோட்டம் நம் இருதயம். அதில் பலவித நன்மைகளை தரக்கூடிய அநேக நல்ல குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.அதே வேளையில் ஒன்றிக்கும் உதவாத ஓலைக் குடிசையும் அந்த தோட்டத்தை ராஜா உருவாக்கிய போது இருந்தது.
அந்த ஓலைக் குடிசை வேறொன்றும் அல்ல. நம் பிறவிகுணம் தான். என்னத்தான் நல்ல நல்ல குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும், இந்த பிறவிகுணம் மட்டும் மாறுவதே இல்லை. ஏதாகிலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, நான் யார் தெரியுமா?? நான் மட்டும் பழைய நபராக இருந்திருந்தால் நடப்பதே வேறு என்று மார்தட்டிக் கொண்டிருப்பர்.
வேதம் சொல்கிறது,
2 கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாகிய நாம், நம்மிடம் உள்ள எல்லா பழைய, தீமையான காரியங்களை ஒழித்துவிட்டு, புதிய காரியங்களாகிய ஆவியின் கனிகளை பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உபயோகமுள்ள பாத்திரங்களாய் வாழ வேண்டும்.
கலாத்தியர் 5:22,23
22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
எபேசியர் 5:9
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!