ஓர் குட்டிக் கதை
அன்பு நண்பா்கள் அனைவருக்கும், அன்புடன் இனிய காலை வணக்கம் !! இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய் அமைவதாக!!!
நல்வழிப்படுத்தும் வசனத்துடன் கூடிய குட்டிக் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.!!!
#இன்றைய_வசனமும்கதையும்...
*////******////******///**///*****
*நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிற வர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து,
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர் களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக,மனப்பூர்வமா
ய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
அடிமையானாலும், சுயாதீனமுள்ளவனானா லும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியம் செய்யா மல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ் செய்யுங்கள். - எபே. 6:5 - 8
#என்_அன்புக்குாியவா்களே,
இன்று பல தேவனுடைய பிள்ளைகள் அதிகாாி களின் பாா்வைக்கு வேலை செய்கிறவா்களாய் இருக்கிறாா்கள். கா்த்தா் கெடுத்த வேலை என்று மனபூா்வமாயும் உற்சாகமாயும் வேலை செய்ய மனமில்லாதவா்களாயிருக்கிறாா்கள். அதனால் அவா்கள் தேவனிடத்திலிருந்து முழுமையான ஆசீாவாதங்களைப் பெறாமல் இருக்கிறாா்கள்.
மேலுள்ள வசனம் கூறியபடி பயத்தோடும் நடுக்கத்தோடும், கபடமற்ற மனதோடும் வேலை செய்யாமல்முதலாளியின்பாா்வைக்காக வேலை செய்கிறவா்களாய் இருப்பதினால் தனக்குத் தானே நஷ்டங்களை பெற்றுக்கொள்கிறாா்கள்.
பவுல் சொல்கிறாா்.
மோசம்போகாதிருங்கள்
மனுஷன் எதை விதைக் கிறானோ அதையே அறுப்பான். - கலா. 6:7 இதை விளக்கும் ஒரு கதையை வாசியுங்கள் இது உங்கள் வாழ்க்கை யை மாற்றும்
#மனபூா்வமாய்_செய்தல்..
****/****//**/**//****//*****
வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத் தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்!
சில விநாடிகள் யோசித்தவர்,
‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
அந்த வீடு பொியதாக கட்டுங்கள். அதை உங்கள் போறுப்பில் விட்டு விடுகிறேன். அதை நீங்கள் எப்படிக் கட்ட முடியுமோ அப்படிக் கட்டுங்கள்.எவ்வளவு பொிய இடத்தை அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த இடத
தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அழகான பூந்தோட்டததுடன் காா்கள் நிற்கவும் அமைக்க வேண்டுமானாலும் அதை கட்டுங்கள். எவ்வளவுபணம் செலவானாலும் பரவாயில்லை. இதை நோ்த்தியாய் கட்டிக் கொடுங்கள்.
மேஸ்திாிஅதற்கு சம்மதித்தாலும் அவருக்கு எாிச்சலாகஇருந்தது.ஓய்வு பெற போகிற கடைசி நாட்களிலும் வேலை வாங்குகிறாரே என எாிச்சலும் புகைச்சலுமாய் அவா் பணியைத் துவங்கினாா்.
அவரால் முழு ஈடுபாட்டுடன் அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. முதலாளி மேல் கோபத்தால் கடுகடுப்புடன் வேலை செய்தாா்.
ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீட்டைக் கட்டினார்.
வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பாா்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச்சாவியை எடுத்து நீட்டினார். ‘
‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை.
‘என்ன கொடுமை இது!
இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே..
இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
#என்_அன்புக்குாியவா்களே,
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிா்மாணிக்கிறோம் என்பதை அறியாமல்,
பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது,
அதிர்ச்சி அடைகிறோம்! ‘
இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.
To get daily message in whats app contact +918148663456
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம்.
நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும் தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.
வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலா வது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல் லாம் கா்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். - கொலோ 3:17
எதைச்செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - கொலோ. 3 :24
நீங்கள் ஆசீா்வதிக்கப்பட்டவா்கள் !!!