==========
மாற்கு 1-3 (கேள்விகள்)
=========
1. சீமோனின் தொழில் என்ன?
2. அசுத்த ஆவியுள்ள மனுஷன் தேவாலயத்தில் இருந்தான்.சரியா/தவறா?
3. இயேசு எதை அதட்டினார்?
4. இயேசு பிரவேசித்த வீடு யாருடையது?
5. காய்ச்சல் என்பதன் மறுபெயர் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது அது என்ன?
6. மனுஷகுமாரன் ____க்கும் ஆண்டவராய் இருக்கிறார்.
7. _____ துருத்திகளைக் கிழித்துப் போடும்.
8. நான்கெழுத்து பெயருடையவன் நான். முதல் 2 எழுத்துகள் இரவை குறிக்கும். 3-வது எழுத்து செலுத்து என்பதை குறிக்கும். 4வது எழுத்து நீ என்பதை குறிக்கும். நான் யார்?
9. பூமியிலே பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
10. மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்படடது- யார் யாரிடம் கூறியது?
11. ஐந்து எழுத்து பெயருடையவன். முதல் 3 எழுத்துகள் சாயங்காலத்தை குறிக்கும் . 4வது எழுத்து கதிரின் ஆங்கிலம், 5வது எழுத்து ஆம் என்பதை குறிக்கும். நான் யார்?
12. எதை ஆயத்தம் பண்ண சீஷர்களிடம் கூறினார்?
13. பொருத்துக
அ) கானானியன்- யாக்கோபு, யோவான்
ஆ) பொவனெர்கேஸ்-சீமோன்
இ) லேவி- பிரதான ஆசாரியன்
ஈ) அபியத்தார்-ஆயத்துறை
14. யார் யாரிடம் கூறியது- இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
15. இயேசு சீமோனுக்கு என்ன பெயரிட்டார்?
==========
கேள்விகள் பதில்கள்
வேத பகுதி: மாற்கு 1-3
===========
1. சீமோனின் தொழில் என்ன?
Answer: மீன்பிடிக்கிறவர்
மாற்கு 1:16
2. அசுத்த ஆவியுள்ள மனுஷன் தேவாலயத்தில் இருந்தான்.சரியா/தவறா
Answer: தவறு
மாற்கு 1:23
3. இயேசு எதை அதட்டினார்?
Answer: அசுத்த ஆவியை
மாற்கு 1:23-26
4. இயேசு பிரவேசித்த வீடு யாருடையது?
Answer: சீமோன், அந்திரேயா என்பவர்களுடையது
மாற்கு 1:29
5. காய்ச்சல் என்பதன் மறுபெயர் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது அது என்ன?
Answer: ஜீரம்
மாற்கு 1:31
6. மனுஷகுமாரன் ____க்கும் ஆண்டவராய் இருக்கிறார்.
Answer: ஓய்வுநாளு
மாற்கு 2:28
7. _____ துருத்திகளைக் கிழித்துப் போடும்.
Answer: புதுரசம்
மாற்கு 2:22
8. நான்கெழுத்து பெயருடையவன் நான். முதல் 2 எழுத்துகள் இரவை குறிக்கும். 3-வது எழுத்து செலுத்து என்பதை குறிக்கும். 4வது எழுத்து நீ என்பதை குறிக்கும். நான் யார்?
Answer: அல்பேயு
மாற்கு 2:14
9. பூமியிலே பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
Answer: மனுஷகுமாரனுக்கு
மாற்கு 2:10
10. மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்படடது- யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு, திமிர்வாதக்காரனிடம்
மாற்கு 2:5
11. ஐந்து எழுத்து பெயருடையவன். முதல் 3 எழுத்துகள் சாயங்காலத்தை குறிக்கும். 4வது எழுத்து கதிரின் ஆங்கிலம், 5வது எழுத்து ஆம் என்பதை குறிக்கும்.நான் யார்?
Answer: அந்திரேயா
மாற்கு 3:18
12. எதை ஆயத்தம்பண்ண சீஷர்களிடம் கூறினார்?
Answer: ஒரு படவை
மாற்கு 3:10
13. பொருத்துக
அ) கானானியன்- அ) சீமோன்
மாற்கு 3:18
ஆ) பொவனெர்கேஸ் - ஆ) யாக்கோபு, யோவான்
மாற்கு 3:17
இ) லேவி - இ)ஆயத்துறை
மாற்கு 2:14
ஈ) அபியத்தார் - ஈ) பிரதான ஆசாரியன்
மாற்கு 2:26
14. யார் யாரிடம் கூறியது- இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
Answer: இயேசு,தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களை நோக்கி
மாற்கு 3:34
15. இயேசு சீமோனுக்கு என்ன பெயரிட்டார்?
Answer: பேதுரு
மாற்கு 3:16
===========
கேள்விகள்
வேத பகுதி: மாற்கு 4 - 6
==============
1. யார் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்?
2. புறம்பே இருக்கிற வர்களுக்கு இவைகளெல்லாம் எப்படி சொல்லப்படுகிறது?
3. பரலோக ராஜ்ஜிய த்திற்கு ஒப்பிடப்பட்ட உவமை களில் மிகவும் சிறியது எது?
4. அநேகராய் இருக்கிறவர்கள் யார்?
5. எந்த நாட்டில் ஏரோது விருந்து பண்ணினான்?
6. (அ)வெளியரங்கமாகாதது எது?
(ஆ) வெளிக்கு வராதது எது?
7. அப்பங்களைக்குறித்து சீஷர்கள் உணராதது ஏன்?
8. யாருடைய குடியிருப்பு கல்லறைகளில் இருந்தது?
9. கொஞ்சக் காலம் மாத்திரம் நிலைத்திருக்கிறவர்கள் யார்?
10. (அ)படவு எங்கே இருந்தது?
(ஆ) இயேசு எங்கே எப்படி இருந்தார்?
11. இன்றைய வேத பகுதியில் அநேக என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
12. இன்றைய வேத பகுதியில் பன்னிரண்டு என்கிற எண்களில் உள்ள சம்பவங்கள் என்ன? (சுருக்கமாக, வேத ஆதாரத்துடன்)
===========
பதில்கள்
வேத பகுதி: மாற்கு 4 - 6
============
1. யார் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்?
Answer: தீர்க்கதரிசி ஒருவன்
மாற்கு 6:4
2. புறம்பே இருக்கிறவர்களுக்கு இவைகளெல்லாம் எப்படி சொல்லப்படுகிறது?
Answer: உவமைகளாய்
மாற்கு 4:11
3. பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒப்பிடப்பட்ட உவமை களில் மிகவும் சிறியது எது?
Answer: கடுகு
மாற்கு 4:31
4. அநேகராய் இருக்கிறவர்கள் யார்?
Answer: லேகியோன்
மாற்கு 5:9
5. எந்த நாட்டில் ஏரோது விருந்து பண்ணினான்?
Answer: கலிலேயா
மாற்கு 6:21
6. (அ) வெளியரங்கமாகாதது எது?
Answer: அந்தரங்கம்
(ஆ) வெளிக்கு வராதது எது?
Answer: மறைபொருள்
மாற்கு 4:22
7. அப்பங்களைக்குறித்து சீஷர்கள் உணராதது ஏன்?
Answer: இருதயம் கடினம்
மாற்கு 6:52
8. யாருடைய குடியிருப்பு கல்லறைகளில் இருந்தது?
Answer: அசுத்த ஆவியுள்ளவன்
மாற்கு 5:23
9. கொஞ்சக் காலம் மாத்திரம் நிலைத்திருக்கிறவர்கள் யார்?
Answer: கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்
மாற்கு 4:17
10. (அ)படவு எங்கே இருந்தது?
Answer: நடு கடலில்
(ஆ) இயேசு எங்கே எப்படி இருந்தார்?
Answer: கரையில் தனிமையாயிருந்தார்
மாற்கு 6:47
11) இன்றைய வேத பகுதியில் அநேக என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
Answer: பதினான்கு முறை
12. இன்றைய வேத பகுதியில் பன்னிரண்டு என்கிற எண்களில் உள்ள சம்பவங்கள் என்ன? (சுருக்கமாக, வேத ஆதாரத்துடன்)
Answer: பெரும்பாடுள்ள ஸ்திரீ, பன்னிரண்டு வருஷம்
மாற்கு 5:25
Answer: சிறு பெண் வயது பன்னிரண்டு
மாற்கு 5:42
Answer: பன்னிரணடு சீஷர்களுக்கு அதிகாரம் கொடுத்தல்
மாற்கு 6:7
Answer: பன்னிரண்டு கூடைநிறைய
மாற்கு 6:43
==============
கேள்வி & பதில் (மாற்கு 7-9)
==============
1) எது மனுஷனை தீட்டும் படுத்தும்?
2) தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் _____________
3) பொல்லாத சிந்தனை எங்கிருந்து வருகிறது?
4) 5 அப்பங்கள் எத்தனை பேருக்கு பங்கிடப்பட்டது?
5) எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இயேசு சொன்னார்?
6) உன் கை உனக்கு ________ உண்டாக்கினால் அதை தறித்து போடு.
7) ஒருவரோடொருவர் _______________ இருங்கள்.
8) விசுவாசிக்கிறவனுக்கு ________ கூடும்.
9) மனுஷன் தன் __________ ஈடாக என்னத்தை கொடுப்பான்.
10) தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் _____________ .
11) படகில் இருந்த சீஷர்களிடம் எத்தனை அப்பம் இருந்தது.
12) இயேசுவிடம் குணமாக்கப்பட வந்த குருடன் எந்த ஊரை சேர்ந்தவன்?
13) எப்பத்தா என்ன அர்த்தம்?
14) பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிக்கு போடுவது நல்லதல்ல - யார் யாரிடம் கூறியது?
15) ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன் - யார் யாரிடம் கூறியது?
===========
கேள்வி & பதில் (மாற்கு 7-9)
============
1) எது மனுஷனை தீட்டும் படுத்தும்?
Answer: மனுஷனுக்குள் இருந்து புறப்படுகிறது
மாற்கு 7:20
2) தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் _____________ .
Answer: கொல்லப்பட வேண்டும்)
மாற்கு 7:10
3) பொல்லாத சிந்தனை எங்கிருந்து வருகிறது?
Answer: மனுஷனுடைய இருதயத்தில் இருந்து
மாற்கு 7:21
4) 5 அப்பங்கள் எத்தனை பேருக்கு பங்கிடப்பட்டது?
Answer: 5000 பேருக்கு
மாற்கு 8:19
5) எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இயேசு சொன்னார்?
Answer: பரிசேயரின் புளித்த மாவை குறித்தும்
ஏரோதின் புளித்த மாவை குறித்தும்
மாற்கு 8:15
6) உன் கை உனக்கு ________ உண்டாக்கினால் அதை தறித்து போடு.
Answer: இடறல்
மாற்கு 9:43
7) ஒருவரோடொருவர் _______________ இருங்கள்.
Answer: சமாதானமுள்ளவர்களாய்
மாற்கு 9:50
8) விசுவாசிக்கிறவனுக்கு ________ கூடும்.
Answer: எல்லாம்
மாற்கு 9:23
9) மனுஷன் தன் __________ ஈடாக என்னத்தை கொடுப்பான்.
Answer: ஜீவனுக்கு
மாற்கு 8:37
10) தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் _____________
Answer: கொல்லப்பட வேண்டும்
மாற்கு 7:10
11) படகில் இருந்த சீஷர்களிடம் எத்தனை அப்பம் இருந்தது
Answer: ஒரு அப்பம்
மாற்கு 8:14
12) இயேசுவிடம் குணமாக்கப்பட வந்த குருடன் எந்த ஊரை சேர்ந்தவன்?
Answer: பெத்சாயிதா
மாற்கு 8:22
13) எப்பத்தா என்ன அர்த்தம்?
Answer: திறக்கப்படுவாயாக
மாற்கு 7:34
14) பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிக்கு போடுவது நல்லதல்ல - யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு அசுத்த ஆவி பிடித்த பெண்ணின் தாயிடம்
மாற்கு 7:27
15) ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன் - யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு சிஷர்களிடம்
மாற்கு 3:2
============
வேத பகுதி மாற்கு 10-12 அதிகாரங்கள்
கேள்விகள்
==========
1) யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது? ஏன்?
2) தேவனுக்கு எதிர்மறையாய் என்ன செய்ய வேண்டாம் என்று இயேசு சொன்னார்?
3) வேத பகுதியில் " பெரியவன் " என்ற சொல்லுக்கு உபயோகப்படுத்தப்பட்ட எதிர்சொல் என்ன?
4) இயேசுவால் சபிக்கப்பட்டது எது?
5) கர்த்தரால் ஆனாது என்ன?
6) மேல் உடையை அகற்றி இயேசுவிடம் வந்ததது யார்?
7) எங்கள் இருவர் மேல் மற்றவர்களுக்கு எரிச்சல் நாங்கள் யார்? மற்றவர்கள் எத்தனை பேர்?
8) யாருக்கு எதினால் தவறான எண்ணம் என்றார் இயேசு?
9) தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவல்ல யார் யாரிடம் கூறியது?
10) என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார் இயேசு. சரியா/தவறா
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
11) ------------தேவனாயிராமல்----------------தேவனாயாயிருக்கிறார்
12) ஜெபம் பண்ணும் போது எவைகளை ------------------அவைகளைப்-------------என்று விசுவாசியுங்கள்
சரியான பதில் எது
13) இயேசுவை பேச்சில் அகப்படுத்தும்படிக்கு அனுப்பட்டவர்கள்
1) பரிசேயர்,சதுசேயர்
2) வேதபராகர்
3) பரிசேயர், ஏரோதியர்
14) சிறுபிள்ளைகள் இயேசுவிடம் வர தடைப்பண்ணியவர்கள்
1 )பரிசேயர்கள்
2) சீஷர்கள்
3) சதுசேயர்கள்
15) பொருத்துக (கீழே அடைப்புக்குள் இருப்பவை களுடன்)
1) பரலோகத்திலிருக்கிறவர்
2) கழுதை குட்டி
3) தரித்திரருக்கு கொடுத்தல்
(இருவழிசந்தி, பரலோக பொக்கிஷம், பிதா)
===========
மாற்கு 10-12 அதிகாரங்கள்
கேள்விகளுக்கு பதில்
===========
1) யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது? ஏன்?
Answer: ஐசுவரியமுள்ளவர்கள்; ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைப்பதால்
மாற்கு 10:23,24
2) தேவனுக்கு எதிர்மறையாய் என்ன செய்ய வேண்டாம் என்று இயேசு சொன்னார்?
Answer: தேவன் இணைத்தை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்
மாற்கு 10:9
3) வேத பகுதியில் " பெரியவன் " என்ற சொல்லுக்கு உபயோகப்படுத்தப்பட்ட எதிர்சொல் என்ன?
Answer: பணிவிடைக்காரன்
மாற்கு 10:43
4) இயேசுவால் சபிக்கப்பட்டது எது?
Answer: அத்தி மரம்
மாற்கு 11:21
5) கர்த்தரால் ஆனாது என்ன?
Answer: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று
மாற்கு 12:10,11
6) மேல் உடையை அகற்றி இயேசுவிடம் வந்ததது யார்?
Answer: பர்திமேயு என்கிற குருடன்
மாற்கு 10:46-50
7) எங்கள் இருவர் மேல் மற்றவர்களுக்கு எரிச்சல் நாங்கள் யார்? மற்றவர்கள் எத்தனை பேர்?
Answer: யாக்கோபு, யோவான்; மற்றவர்கள் பத்து பேர்
மாற்கு 10:41
8) யாருக்கு எதினால் தவறான எண்ணம் என்றார் இயேசு?
Answer: சதுசேயருக்கு, தேவ வாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாததினால்
மாற்கு 12:18,24
9) தேவனுடைய ராஜ்யத்துக்கு தூரமானவல்ல யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு, வேதபாரகனிடம்
மாற்கு 12:32,34
10) என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார் இயேசு. சரியா? தவறா?
Answer: சரி
மாற்கு 11:17
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
11) ------------ தேவனாயிராமல் ---------------- தேவனாயாயிருக்கிறார்.
Answer: மரித்தோருக்கு, ஜீவனுள்ளோருக்கு
மாற்கு 12:27
12) ஜெபம் பண்ணும் போது எவைகளை ------------------ அவைகளைப் ----------- என்று விசுவாசியுங்கள்
Answer: கேட்டுக்கொள்வீர்களோ, பெற்றுக்கொள்வோம்
மாற்கு 11:24
சரியான பதில் எது
13) இயேசுவை பேச்சில் அகப்படுத்தும்படிக்கு அனுப்பட்டவர்கள்
Answer: பரிசேயர், ஏரோதியர்
மாற்கு 12:13
14) சிறுபிள்ளைகள் இயேசுவிடம் வர தடைப்பண்ணியவர்கள்
Answer: 2) சீஷர்கள்
மாற்கு 10:12,13
15) பொருத்துக ( கீழே அடைப்புக்குள் இருப்பவை களுடன்)
1) பரலோகத்திலிருக்கிறவர்--------பிதா
மாற்கு 11:26
2) கழுதை குட்டி -------- இருவழிச்சந்தி
3) தரித்திரருக்கு கொடுத்தல்-------- பரலோக பொக்கிஷம்
மாற்கு 10:21
=============
கேள்விகள்
வேதபகுதி: மாற்கு 13-16 அதிகாரங்கள்
=============
1. எது ஒழிந்து போம்? எது ஒழிந்து போவதில்லை?
2. ஒலிவ மலையில் உட்கார்ந்திருந்தவர் யார் ? அவரிடத்தில் தனித்து வந்தவர்கள் யார்?
3. சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது எது ? முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் என்ன செய்வான்?
4. விலையேற பெற்ற தைலம் எது? எங்கே ஊற்றினாள்?
5. யார் உங்களிடத்தில் இருப்பார்கள் ? உங்களிடத்தில் இரேன் என்றது யார்?
6. பிரதான ஆசாரியனுக்கு காட்டி கொடுத்தவன் யார்? என்னோடு கூட தாலத்தில் கையிடுகிறவனும் அவனே அவன் யார்?
7. என்னுடைய சரீரம் எது ? என்னுடைய இரத்தம் எது?
8. எது உற்சாகமுள்ளது? எது பலவீனமுள்ளது?
9. நீங்கள் சொல்கிற மனிதனை அறியேன் என்றது யார்? எதை நினைவு கூர்ந்து மிகவும் அழுதான்?
10. கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் இடம் எது?
11. சிலுவை சுமக்கும்படி பலவந்தப்பண்ணப்பட்டது யார்? எந்த ஊரான்?
12. சிலுவையில் அறைந்தபோது என்ன வேளை ? அந்தகாரம் உண்டான போது என்ன நேரம்?
13. ஓய்வு நாளுக்கு முந்தின நாள் என்ன நாள்? யோசேப்பு எதற்கு காத்திருந்தான்?
14. வாரத்தின் முதலாம் நாள் யார் எப்பொழுது எழுந்தார் ? முதல் முதலில் யாருக்கு தரிசனமானார்?
15. விசுவாசமுள்ளவனுக்கும் விசுவாசியாதவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
=============
கேள்விகான பதில்கள்
வேதபகுதி - மாற்கு 13-16
=============
1. எது ஒழிந்து போம்? எது ஒழிந்து போவதில்லை?
Answer: வானமும் பூமியும் , என் வார்த்தைகளோ
மாற்கு 13:31
2. ஒலிவ மலையில் உட்கார்ந்திருந்தவர் யார்?
அவரிடத்தில் தனித்து வந்தவர்கள் யார்?
Answer: இயேசு, பேதுரு யோவான் யாக்கோபு அந்திரேயா
மாற்கு 13:3
3. சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது எது? முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன் என்ன செய்வான்?
Answer: சுவிசேஷம் , இரட்சிக்கப்படுவான்
மாற்கு 13:10,13
4. விலையேற பெற்ற தைலம் எது? எங்கே ஊற்றினாள்?
Answer: நளதம் என்னும் உத்தம தைலம் உள்ள வெள்ளைக்கல் பரணி , சிரசின் மேல்
மாற்கு 14:3
5. யார் உங்களிடத்தில் இருப்பார்கள்? உங்களிடத்தில் இரேன் என்றது யார்?
Answer: தரித்திரர் , இயேசு
மாற்கு 14:7
6. பிரதான ஆசாரியனுக்கு காட்டி கொடுத்தவன் யார்? என்னோடு கூட தாலத்தில் கையிடுகிறவனும் அவனே அவன் யார்?
Answer: யூதாஸ் காரியோத்
மாற்கு 14:10,20
7. என்னுடைய சரீரம் எது? என்னுடைய இரத்தம் எது?
Answer: அப்பம் , அநேகற்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கை
மாற்கு 14:22,24
8. எது உற்சாகமுள்ளது? எது பலவீனமுள்ளது?
Answer: ஆவி , மாம்சமோ
மாற்கு 14:38
9. நீங்கள் சொல்கிற மனிதனை அறியேன் என்றது யார் ? எதை நினைவு கூர்ந்து மிகவும் அழுதான்?
Answer: பேதுரு , இயேசு சொன்ன வார்த்தைகளை நினைத்து
மாற்கு 14:71,72
10. கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் இடம் எது ?
Answer: கொல்கொதா
மாற்கு 15:22
11. சிலுவை சுமக்கும்படி பலவந்தப்பண்ணப்பட்டது யார் ? எந்த ஊரான் ?
Answer: சீமோன் , சிரேனே
மாற்கு 15:21
12. சிலுவையில் அறைந்தபோது என்ன வேளை ? அந்தகாரம் உண்டான போது என்ன நேரம்?
Answer: மூன்றாம் மணி , ஆறாம் மணி முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை
மாற்கு 15:25,33
13. ஓய்வு நாளுக்கு முந்தின நாள் என்ன நாள்? யோசேப்பு எதற்கு காத்திருந்தான்?
Answer: ஆயத்த நாள் , தேவனுடைய ராஜ்ஜியம் வர
மாற்கு 15:42,43
14. வாரத்தின் முதலாம் நாள் யார் எப்பொழுது எழுந்தார் ? முதல் முதலில் யாருக்கு தரிசனமானார்?
Answer: இயேசு அதிகாலையில் , மகதலேனா மரியாள்
மாற்கு 16:9
15. விசுவாசமுள்ளவனுக்கும் விசுவாசியாதவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Answer: ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் , ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான்
மாற்கு 16:16