================
1 சாமுவேல் 1-5 (கேள்விகள்)
=================
1. மனுஷர் எதை வெறுப்பாய் எண்ணினார்கள்?
2. கர்த்தர் யாரோடு கூட இருந்தார்?
3. என் பெயரில் முதல் இரண்டு எழுத்தினால் அழுக்கை நீக்கலாம் நான் யார்?
4. என் பெயரில் கடைசி இரண்டெழுத்து ஒரு பட்டயத்தை குறிக்கும் நான் யார்?
5. கர்த்தர் தரிசனம் தந்தருளின இடம் எது?
6. முகங்குப்புற விழுந்து கிடந்த நான் யார்?
7. வானபரியந்தம் எழும்பிற்று எது?
8. ஒரே நாளில் இறந்து போன சகோதரர்கள் யார்?
9. பேலியாளின் மக்கள் யார்?
10. கர்த்தருக்கு ஒன்றை கொடுத்து ஐந்தை வாங்கினேன் நான் யார்?
11. என் பெயரில் உள்ள பானத்தை பருகினால் பலன் உண்டாகும் நான் யார்?
12. அபூர்வமாய் இருந்தது எது?
13. இக்கபோத் அர்த்தம் என்ன?
14. கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றப்பட்டது எது?
15. பூத்துக் போவது வேதனைப்படுவது எது?
1 சாமுவேல் (1-5) (பதில்கள்)
==============
1. மனுஷர் எதை வெறுப்பாய் எண்ணினார்கள்?
Answer: கர்த்தரின் காணிக்கையை
1 சாமுவேல்2:17
2. கர்த்தர் யாரோடு கூட இருந்தார்?
Answer: சாமுவேலோடு
1 சாமுவேல் 3:19
3. என் பெயரில் முதல் இரண்டு அழுத்தினால் அழுகை நீக்கலாம் நான் யார்?
Answer: சோப்பீம்
1 சாமுவேல்1:1
4. என் பெயரில் கடைசி இரண்டெழுத்து ஒரு பட்டயத்தை குறிக்கும் நான் யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 2:26
5. கர்த்தர் தரிசனம் தந்தருளின இடம் எது?
Answer: சீலோ.
1 சாமுவேல் 3:21
6. முகங்குப்புற விழுந்து கிடந்த நான் யார்?
Answer: தாகோன்.
1 சாமுவேல் 5:3
7. வானரியந்தம் எழும்பிற்று எது?
Answer: பட்டணத்தின் கூக்குரல்
1 சாமுவேல் 5:12
8. ஒரே நாளில் இறந்து போன சகோதரர்கள் யார்?
Answer: ஓப்னி,பினெகாஸ்
1 சாமுவேல் 4:11
9. பேலியாளின் மக்கள் யார்?
Answer: ஏலியின் குமாரர்
1 சாமுவேல் 2:12
10. கர்த்தருக்கு ஒன்றை கொடுத்து ஐந்தை வாங்கினேன் நான் யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 2:20,21
11. என் பெயரில் உள்ள பானத்தை பருகினால் பலன் உண்டாகும் நான் யார்?
Answer: சூப்
1 சாமுவேல் 1:1
12. அபூர்வமாய் இருந்தது?
Answer: கர்த்தருடைய வசனம்
1 சாமுவேல் 3:1
13. இக்கபோத் அர்த்தம் என்ன?
Answer: மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று.
1 சாமுவேல் 4:21
14. கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றப்பட்டது எது?
Answer: இருதயம்
1 சாமுவேல் 1:15
15. பூத்துப்போவது, வேதனைப்படுவது எது?
Answer: கண்கள், ஆத்துமா
1 சாமுவேல் 2:33
==============
வேதாகம வினாடி வினா
1 சாமுவேல் 6-10 அதிகாரங்கள்
===============
1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
2. கர்த்தரின் பெட்டி - வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்?
5. இஸ்ரவேலர் உபவாசம் பண்ணின இடம் எது? சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
6. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
7. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு? தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
8. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில் யாருடைய கல்லறை உள்ளது?
9. நியாய விசாரணை செய்த இடங்கள் எவை?
10. சாமுவேல் கல்லுக்கு இட்ட பெயர் என்ன?
11. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
12. பொருளாசையினால், அநியாயமாய் நடந்த நியாயாதிபதிகள் யார்?
13. சாமுவேலின் சொல்லை கேட்காமல், ஜனங்கள் கேட்ட காரியம் என்ன?
14. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
15. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
பதில்கள்
1 சாமுவேல் 6-10
==============
1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
Answer: இரண்டு கறவைப்பசுக்கள்
1 சாமுவேல் 6:10-12
2. கர்த்தரின் பெட்டி - வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
Answer: யோசுவா, அபினதாப்
1 சாமுவேல் 6:14
1 சாமுவேல் 7:1
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
Answer: சுண்டெலிகள்
1 சாமுவேல் 6:5
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்?
Answer: ஐம்பதினாயிரத்து எழுபது பேர்
1 சாமுவேல் 6:19
5. இஸ்ரவேலர் உபவாசம் பண்ணின இடம் எது? சாமுவேல், சவுலை ஜனங்களுக்கு முதலில் அறிமுகப்படுத்திய இடம் எது?
Answer: மிஸ்பா
1 சாமுவேல் 7:5,6
1 சாமுவேல் 10:17-24
6. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
Answer: யாபேசின் மூப்பர்கள்
1 சாமுவேல் 11:3
Answer: சவுல்
1 சாமுவேல் 10:8
1 சாமுவேல் 13:8
7. வேறு இதயம் கொடுக்கப்பட்டது யாருக்கு? தன்னை பரியாசம் பண்ணுகிறவர்களுக்கு, செவிகொடாமல் இருந்தவன் யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 10:9,27
8. பென்யமீன் எல்லையாகிய செல்சாவில் யாருடைய கல்லறை உள்ளது?
Answer: ராகேல்
1 சாமுவேல் 10:2
9. நியாய விசாரணை செய்த இடங்கள் எவை?
Answer: பெத்தேல், கில்கால், மிஸ்பா
1 சாமுவேல் 7:16
10. சாமுவேல் கல்லுக்கு இட்ட பெயர் என்ன?
Answer: எபெனேசர்
1 சாமுவேல் 7:12
11. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 9:6,23,24
1 சாமுவேல் 7:1
12. பொருளாசையினால், அநியாயமாய் நடந்த நியாயாதிபதிகள் யார்?
Answer: யோவேல், அபியா
1 சாமுவேல் 8:2-5
13. சாமுவேலின் சொல்லை கேட்காமல், ஜனங்கள் கேட்ட காரியம் என்ன?
Answer: ராஜாவை ஏற்ப்படுத்த
1 சாமுவேல் 8:19
14. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
Answer: அபீயேல்
1 சாமுவேல் 9:1,2
15. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
Answer: சலீஷா, சாலீம், பென்யமீன்
1 சாமுவேல் 9:4
==========
1 சாமுவேல் 11-15
கேள்விகள்
==========
1. யாபேசை முற்றிக்கைப் போட்டவன் யார்?
2. ராஜ்ய பாரத்தை ஸ்திரப்படுத்த கில்காலுக்கு ஜனங்களை அழைத்தது
யார்?
3. கர்த்தர் எந்த நாளில் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்?
4. யோனத்தானோடேகூட கிபியாவில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
5. ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தவன்யார்? அவன்தகப்பன்யார்?
6. பெலிஸ்தரின் தாணயத்துக்குப் போகும் வழியிலிருந்த செங்குத்தான
பாறைகள் எவை?
7. விருத்தசேதனமில்லாதவர்களென்று யோனத்தான் சொன்னது யாரை?
8. என் பெயருக்கிடையே குளம் உள்ளது. நான்யார்
9. "அவன் தலையிலிருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை" யார்? யாரிடம்? யாரைக் குறித்து சொன்னது?
10. யோனத்தான் எங்கே தாணயமிருந்த பெலிஸ்தரை முறியடித்தான்?
பொருத்துக
11. செபோயீமின்-செங்குத்தானபாறை
12. போசேஸ்-தொகை
13. பேசேக்-பள்ளத்தாக்கு
14. ஆத்சோர்-இலக்கம்
15. தெலாயிம் - சிசெரா
1 சாமுவேல் 11-15
கேள்வி-பதில்கள்
=============
1. யாபேசை முற்றிக்கை போட்டவன் யார்?
Answer: நாகாஸ்
1 சாமுவேல் 11:1
2. ராஜ்ய பாரத்தை ஸ்திரப்படுத்த கில்காலுக்கு ஜனங்களை அழைத்தது யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 11:14
3. கர்த்தர் எந்த நாளில் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்?
Answer: கோதுமை அறுப்பின் நாளில்
1 சாமுவேல் 12:17,18
4. யோனத்தானோடே கூட கிபியாவில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: ஆயிரம்பேர்
1 சாமுவேல் 13:2
5. ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தவன்யார்? அவன் தகப்பன் யார்?
Answer: அகியா; அகிதூப்
1 சாமுவேல் 14:3
6. பெலிஸ்தரின் தாணயத்துக்குப் போகும் வழியில் இருந்த செங்குத்தான
பாறைகள் எவை?
Answer: போசேஸ்; சேனே
1 சாமுவேல் 14:4
7. விருத்தசேதனமில்லாதவர்களென்று யோனத்தான் சொன்னது யாரை?
Answer: பெலிஸ்தரை
1 சாமுவேல் 14:4,6
8. என் பெயருக்கிடையே குளம் உள்ளது. நான் யார்?
Answer: அமலேக்கு
1 சாமுவேல் 15:2
9. "அவன் தலையிலிருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை". யார்? யாரிடம்? யாரைக் குறித்துச் சொன்னது?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள். சவுலிடம்,யோனத்தான் குறித்து
1 சாமுவேல் 14:45
10. யோனத்தான் எங்கே தாணயமிருந்த பெலிஸ்தரை முறியடித்தான்?
Answer: கேபாவில்
1 சாமுவேல் 13:3
பொருத்துக-பதில்கள்
11. செபோயீமின் - பள்ளத்தாக்கு
1 சாமுவேல் 13:18
12. போசேஸ் - செங்குத்தானபாறை
1 சாமுவேல் 14:4
13. பேசேக் - இலக்கம்
1 சாமுவேல் 11:8
14. ஆத்சோர் - சிசெரா
1 சாமுவேல் 12:9
15. தெலாயிம் - தொகை
1 சாமுவேல் 15:4