=================
சத்துரு மூலம் ஆசிர்வாதம் அடைந்தவர்கள் யார்? யார்?
=================
1) அன்னாள்
பெனினாள் அன்னாளை நிந்திக்காவிட்டால் அன்னாள் ஜெபித்திருக்க மாட்டாள். சாமுவேல் தீர்க்கதரிசி பிறந்து இருக்க மாட்டான். அன்னாள் வருடந்தோறும் ஆலயம் சென்றாள். ஆனால் உள்ளம் உடைந்து ஜெபித்தது பெனினாள் நிந்தித்த போதுதான்.
1 சாமுவேல் 1:6,7
Sister Thana Kiruba Tuticorin
1. யாக்கோபு ஏசாவுக்கு பயந்ததினால் யாப்போக்கு என்னும் ஆற்றின் துறையை கடந்து தனித்து பொழுது விடியுமளவும் தேவனோடு போராடிக் கொண்டிருந்தான் ஆகவே யாக்கோபு ஆசீர்வதிக்கப்பட்டு இஸ்ரவேல் என பெயர் மாற்றப்பட்டான்
ஆதியாகமம் 32:22-28
2. யோசேப்பு அவன் சகோதரர்களால் பகைக்கப்பட்டதினால் அவனை மீதியானியரிடத்தில் விற்றுப் போட்டார்கள் அந்த மீதியானியர் அவனை எகிப்தில் போத்திபாரிடத்தில் விற்றார்கள் அங்கும் அவன் மேல் தவறான பழிச்சொல் ஏற்பட்டதினால் சிறைச்சாலைக்கு தள்ளப்பட்டான் ஆனால் அங்கும் உண்மையாய் இருந்தால் கர்த்தரோடு இருந்தான் கர்த்தர் அவனை சாலையில் இருந்து விடுவித்து தேசத்துக்கு அதிகாரியாக மாற்றினார்
ஆதியாகமம் 37:28,36
ஆதியாகமம் 39:6-2
ஆதியாகமம் 41:41-43
Brother Jebakumar Erode
சத்துரு மூலம் ஆசீர்வாதம் அடைந்தவர்கள்:
1. ஆகார், சாராள்
ஆதியாகமம் 16:5
2. ஆமான், எஸ்தர்
எஸ்தர் 7:6
3. சவுல், தாவீது
1 சாமுவேல் 24:12,13
4. யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பு
ஆதியாகமம் 50:20,21
5. சாத்தான், யோபு
யோபு 1:10,11
யோபு 42:12
6. தொபியா, சன்பல்லாத்து, நெகேமியா
நெகேமியா 2:19
நெகேமியா 6:15
7. ஏசபேல், எலியா
1 இராஜாக்கள் 19:2
2 இராஜாக்கள் 2:1
8. யோவாஸ், அத்தாலியாள்
2 இராஜாக்கள் 11:1,2,21
9. லாசரு, ஐஸ்வர்யவான்
லூக்கா 16:19,20,23
Sister Sheela Chennai
Sister Christina Chennai
சத்துரு மூலம் ஆசிர்வாதம்
===============
1) யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை குழியில் போட்டதால்தான் தான் யோசேப்பு எகிப்தின் அதிபதி ஆனான்
2) கோலியாத் எழும்பாவிட்டால் தாவீது ராஜாவாயிருக்க முடியாது
3) பெனினாள் அன்னாளை நிந்திக்காவிட்டால் அன்னாள் ஜெபித்திருக்க மாட்டாள் சாமுவேல் தீர்க்கதரிசி பிறந்து இருக்க மாட்டான்
4) பிரதானிகளும் தேசாதிபதிகளும் தானியேலுக்கு விரோதமாக எழும்பி தானியேலை குற்றபடுத்தியதால் தரியு ராஜா தானியேலின் தேவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று ஆணை பிறப்பித்தார்