==================
யார் ஞானஸ்தானம் பெற வேண்டும்
==================
1) மனந்திரும்பியவன்
அப்போஸ்தலர் 2:38
2) பாவங்களை அறிக்கை செய்தவன்
மத்தேயு 3:6
3) வேதவசனத்தினால் இருதயம் குத்தப்பட்டவர்கள்
அப்போஸ்தலர் 2:37
4) விசுவாசமுள்ளவன்
மாற்கு 16:16
5) சிஷனானவன்
மத்தேயு 28:18-20
6) வேத வசனத்தினால் இருதயம் திறக்கபட்டவர்கள்
அப்போஸ்தலர் 16:14,15
7) கர்த்தருடைய வசனத்தினால் போதனையடைந்தவர்கள்
அப்போஸ்லர் 16:32
8) கர்த்தருடைய வசனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள்
அப்போஸ்தலர் 2:41
9) கர்த்தரை தரிசித்தவர்கள்
அப்போஸ்தலர் 9:17,18
10) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள்
அப்போஸ்தலர் 10:47
====================
ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்
====================
1) தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்
யோவான் 3:23
2) தண்ணிருக்குள் இறங்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்
அப்போஸ்தலர் 8:38
3) தண்ணிருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும்
கொலோசெயர் 2:12
4) தண்ணிரிலிருந்து எழுப்பபட வேண்டும்
ரோமர் 6:4,5
5) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும்
மத்தேயு 28:19
================
புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றவர்கள்
================
1) மாய வித்தைக்காரனாயிருந்த சிமோன்
அப்போஸ்தலர் 8:13
2) எத்தியோப்பா தேசத்து மந்திரி
அப்போஸ்தலர் 8:28-36
3) தர்சு பட்டணத்தானாகிய சவுல்
அப்போஸ்தலர் 9:18
4) ஸ்தேவான்
1 கொரிந்தியர் 1:16
5) இரத்தாம்பர வியாபாரியாகிய லிதியாள்
அப்போஸ்தலர் 16:14,15
6) காயு
1 கொரிந்தியர் 1:15
7) கிறிஸ்பு
அப்போஸ்தலர் 18:8
1 கொரிந்தியர் 1:15
8) இயேசு
மத்தேயு 3:13
===============
ஞானஸ்நானம் என்றால் என்ன?
===============
1) திருச்சபையின் உபதேசம்
எபிரெயர் 6:2
2) அது தேவ நீதி
மத்தேயு 3:15
3) அது தேவ ஆலோசனை
லூக்கா 7:30
4) அது தேவ கட்டளை
மத்தேயு 28:18-20
5) தேவனோடு செய்யும் உடன்படிக்கை
1 பேதுரு 3:21
6) கிறிஸ்துவோடு மரித்து அடக்கம் செய்யப்படுதல்
ரோமர் 6:3,4
கொலோசெயர் 2:12
7) கிறிஸ்துவோடு உயிர்பிக்கபடுதல்
ரோமர் 6:4,5
===============
ஞானஸ்நானம் எடுப்பதால் இலாபம்
==============
1) பாவம் கழுவப்படுகிறது
அப்போஸ்தலர் 22:16
2) சந்தோஷம் கிடைக்கிறது
அப்போஸ்தலர் 16:33,34
3) சோதனையில் ஜெயம் பெறுகிறோம்
லூக்கா 4:1-12
4) இரட்சிப்பு உண்டாகிறது
மாற்கு 16:16
5) நேச/பிரிய குமாரன் என்று அழைக்கபடுகிறோம்
மத்தேயு 3:17
6) பரிசுத்த ஆவியை பெறுகிறோம்
மத்தேயு 3:16
அப்போஸ்தலர் 2:38
7) புதிய ஜீவியம் அடைகிறோம்
ரோமர் 6:4
8) கிறிஸ்துவை தரித்து கொள்கிறோம்
கலாத்தியர் 3:27
9) இரட்சிப்புக்கான வழி
மாற்கு 16:16
10) பரலோகத்தில் பிரவேசிக்கும் தகுதியை பெறுகிறோம்
யோவான் 3:5
==================
ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள்
===================
1) கிறிஸ்புவின் வீட்டார்
அப்போஸ்தலர் 18:8
2) சிறைச்சாலை தலைவனின் வீட்டார்
அப்போஸ்தலர் 16:33
3) லீதியாளின் வீட்டார்
அப்போஸ்தலர் 16:15
4) ஸ்தேவானின் வீட்டார்
1 கொரிந்தியர் 1:16
5) கொர்நேலியுவின் வீட்டார்
அப்போஸ்தலர் 10:48
==================
கிறிஸ்தவ வியாபாரிகளுக்கு சாது கொச்சுகுஞ்சு கொடுத்த போதனை
=================
கிறிஸ்தவ வியாபாரிகளுக்கு சாது கொச்சிகுஞ்சு "வியாபார தர்மம்" என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதினார். ஒரு கிறிஸ்தவ வியாபாரிக்கு இருக்க வேண்டிய 7 குணாதிசயங்களை அவர் அதில் எழுதி உள்ளார்.
1) ஒரு கிறிஸ்தவ வியாபாரி உலகத்துக்கு நன்மை செய்யும் ஒரு தொண்டுள்ளம் கொண்ட மனிதனாக இருக்க வேண்டும்.
2) அவன் தனது வியாபாரத்தில் முழுமையும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.
3) அவன் ஒரு பெருந்தன்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.
4) ஒரு உண்மையுள்ள கிறிஸ்துவ வியாபாரி ஒரு ஏமாற்றுக்காரனாக இருத்தல் கூடாது
5) அவன் அன்புள்ளம் கொண்டோனாய் இருத்தல் அவசியம்
6) ஒரு கிறிஸ்தவ வர்த்தகன் தனது வாடிக்கையாளர்கள் மேல் நல்ல அக்கரையும் கவனமும் செலுத்துபவனாக இருக்க வேண்டும்.
7) இறுதியாக அவன் ஒரு சுவிசேஷனாக இருப்பது தீராத அவசியம்.
சாது கொச்சுகுஞ்சு கிறிஸ்தவ வியாபாரிகளிடம் அவர்களின் வியாபார ஸ்தலங்கள், கடைகள் எல்லாம் சுவிசேஷத்தை அறிவிக்கும் சுவிசேஷ நிலையங்களாக இருக்கட்டும் என்று கூறுவார். "உலகப்பிரகாரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் போது விலையேறப் பெற்ற தேவனுடைய வார்த்தைகளையும், அத்துடன் இலவசமாக கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் தேவனுடைய வார்த்தைகள் ஒருநாள் 100 மடங்கான பரலோக பலனை தரும். தேவனுடைய வார்த்தையை செய்யும் அற்புதத்தை யாரே அறிய இயலும் ? என்பார் சாது. "உங்கள் கடைக்கு வரும் பல திறப்பட்ட பெற்ற மக்கள் தங்கள் உலகப் பொருட்களுடன் தங்கள் விலையேறப் பெற்ற ஆத்மாவுக்கு பயனுள்ளதை உங்களிடமிருந்து பெற்று செல்லட்டும். வாடிக்கையாளர்களோடு நீங்கள் நடந்து கொள்ளும் நல்ல அன்பான, பண்பான நடத்தைகளின் மூலமாக தங்கள் ஆத்துமாவுக்கான பரலோக ஆசிர்வாதங்களை அவர்கள் அடையட்டும். இப்படி நீங்கள் கிறிஸ்தவ ஒழுக்க சீலங்களை உங்கள் வியாபாரத்தில் உங்களண்டை வரும் மக்களுக்கு காண்பித்து நீங்கள் உங்கள் வாயின் வார்த்தைகள் மூலமாக இல்லாமல் உங்கள் நடைமுறை வாழ்க்கையின் மூலமாக இரட்சகர் இயேசுவை அவர்களுக்கு பிரசிங்கிக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சாது கூறுவார்.
==============
ஞானஸ்நானம் பெற்ற பட்டணத்தார்
==============
1) எபேசு பட்டணத்தார்
அப்போஸ்தலர் 19:5
2) கொரிந்து பட்டணத்தார்
அப்போஸ்தலர் 18:8
3) செசரியா பட்டணத்தார்
அப்போஸ்தலர் 10:47,48
4) சமாரியா பட்டணத்தார்
அப்போஸ்தலர் 8:12
5) எருசலேம் பட்டணத்தார்
அப்போஸ்தலர் 2:41
==============
இயேசுவின் ஞானஸ்நானம்
==============
1) இயேசு யோவான்ஸ்தானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார்
மத்தேயு 3:13
2) இயேசு தண்ணிரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார்
மத்தேயு 3:16
மாற்கு 1:10
3) இயேசு 30வது வயதில் ஞானஸ்நானம் பெற்றார்
லூக்கா 3:21-23
4) இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் முலமாக தேவநீதியை நிறைவேற்றினார்
மத்தேயு 3:15
5) இயேசுவுக்கு வானம் திறக்கப்பட்டது
மத்தேயு 3:16
6) தேவ ஆவியானவர் புறாவை போல இறங்கி தம் மேல் வருவதைக் கண்டார்
மத்தேயு 3:16
7) இயேசுவை குறித்து பிதா சாட்சி கொடுத்தார்
மத்தேயு 3:17
8) இயேசுவின் அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி நமக்கு அவர் மாதிரியை வைத்து போனார்
1 பேதுரு 2:21
9) இயேசு ஞானஸ்நானத்தை குறித்து போதித்தார்
யோவான் 3:5
10) இயேசு ஞானஸ்நானம் கொடுத்தார்
யோவான் 3:22
யோவான் 4:1
=================
ஞானஸ்நானம் பெற்றவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவைகள்
=================
1) சபை கூடிவருதலை விட்டு விடக் கூடாது
எபிரெயர் 10:25
2) ஆவியில் அனலாயிருக்க வேண்டும்
ரோமர் 12:11
3) வேத வாசிப்பு, ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்
ரோமர் 12:12
1 தீமோத்தேயு 4:13
4) கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும்
அப்போஸ்தலர் 2:4246
அப்போஸ்தலர் 20:7
5) கிறிஸ்துவுக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும்
அப்போஸ்தலர் 1:8/8:5
6) வருமானத்தால் ஊழியத்தை தாங்க வேண்டும்
லூக்கா 6:39
7) கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்க வேண்டும்
பிலிப்பியர் 3:20