=======================
கேள்வி பதில் (வேதாகமத்தில் உள்ள மரங்கள்)
=======================
1. நீதிமான் எதைப்போல் செழித்து வளருவான்?
2. ஆலாங்கட்டியினால் அழிக்கப்பட்ட மரங்கள் எவை?
3. பூப்பூத்த மரம் எது?
4. சவுல் எங்கே இருந்தான்?
5. மழை வளரச் செய்யும் மரம் எது?
6. கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவில் இருந்தது எது?
7. வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவனின் தலை எந்த மரத்தில் மாட்டிக்கொண்டது?
8. கர்த்தர் நாட்டின மரங்கள் எது?
9. சகேயு ஏறின மரம் எது?
10. வாரி பலகைகள் எந்த மரத்திலால் ஆனது?
11. புறா கொத்திக்கொண்டு வந்தது எந்த மரத்தின் இலை?
12. அவாந்தர வெளியிலே கர்த்தர் எந்த மரங்களை உண்டு பண்ணுவார்?
13. ஒட்ட வைக்கப்பட்ட மரம் எது?
14. தச்சன் எந்த மரத்தை (3 எழுத்து) தெரிந்து கொள்ளுகிறான்?
15. ஆடுகள் பொலியும்போது யாக்கோபு அவைகளின் முன்னே போட்ட கொப்புகள் எந்த மரத்தினுடையது (நான்கு எழுத்து)?
16. நம்முடைய மச்சு எந்த மரத்தால் ஆனது?
17. குமாரருக்குள்ளே என் நேசர் எப்படிப்பட்டவர்?
18. காணப்பட்டதும் காணப்படாததுமான மரங்கள் எவை?
19. தாவீதின் வீடு எந்த மரங்களால் செய்யப்பட்டது?
20. தேவர்களும் மனுஷர்களும் புகழுகிற கொழுமையை உடைய மரம் எது?
21. நோவா உண்டாக்கின பேழை எந்த மரத்தால் செய்யப்பட்டது?
22. பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மேசை, பெட்டி, பலிபீடம், ஆகியவை எந்த மரத்தால் செய்யப்பட்டது?
23. சாலோமோனின் இரதம் எந்த மரத்தால் ஆனது?
24. உன் பிள்ளைகள் எதைப் போல் இருப்பார்கள்?
25. இலையற்றுப்போகிற மரம் எது?
==============
வேதாகமத்தில் மரங்கள்
===============
1. நீதிமான் எதைப்போல் செழித்து வளருவான்?
Answer: பனையைப் போல்
சங்கீதம் 92:12
2. ஆலாங்கட்டியினால் அழிக்கப்பட்ட மரங்கள் எவை?
Answer: அத்திமரங்கள்
சங்கீதம் 78:47
3. பூப்பூத்த மரம் எது?
Answer: வாதுமை மரம்
பிரசங்கி 12:5
4. சவுல் எங்கே இருந்தான்?
Answer: ஒரு மாதள மரத்தின் கீழ்
I சாமுவேல் 14:2
5. மழை வளரச் செய்யும் மரம் எது?
Answer: அசோக மரம்
ஏசாயா 44:14
6. கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவில் இருந்தது மரம் எது?
Answer: பேரீச்சமரம்
எசேக்கியேல் 41:18
7. வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவனின் தலை எந்த மரத்தில் மாட்டிக்கொண்டது?
Answer: கர்வாலி மரத்தில்
II சாமுவேல் 18:9
8. கர்த்தர் நாட்டின மரங்கள் எது?
Answer: சந்தன மரங்கள்
எண்ணாகமம் 24:6
9. சகேயு ஏறின மரம் எது?
Answer: காட்டத்தி மரம்
லுாக்கா 19:4
10. வாரி பலகைகள் எந்த மரத்தில் ஆனது?
Answer: ஆஷுர் மரங்கள்
எசேக்கியேல் 27:6
11. புறா கொத்திக்கொண்டு வந்தது எந்த மரத்தின் இலை?
Answer: ஒலிவ மரத்தின் இலை
ஆதியாகமம் 8:11
12. அவாந்தர வெளியிலே கர்த்தர் எந்த மரங்களை உண்டு பண்ணுவார்?
Answer: புன்னை மரங்களை
ஏசாயா 41:19
13. ஒட்ட வைக்கப்பட்ட மரம் எது?
Answer: காட்டொலிவ மரம்
ரோமர் 11:17
14. தச்சன் எந்த மரத்தை (3 எழுத்து) தெரிந்து கொள்ளுகிறான்?
Answer: மருதமரம்
ஏசாயா 44:14
15. ஆடுகள் பொலியும் போது யாக்கோபு அவைகளின் முன்னே போட்ட கொப்புகள் எந்த மரத்தினுடையது (நான்கு எழுத்து)?
Answer: அர்மோன்
ஆதியாகமம் 30:37,38
16. நம்முடைய மச்சு எந்த மரத்தால் ஆனது?
Answer: தேவதாருமரம்
உன்னதப்பாட்டு 1:17
17. குமாரருக்குள்ளே என் நேசர் எப்படிப்பட்டவர்?
Answer: காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம்
உன்னதப்பாட்டு 2:3
18. காணப்பட்டதும் காணப்படாததுமான மரங்கள் எவை?
Answer: ஓப்பீரிலிருந்து வந்த வாசனை மரங்கள்
I இராஜாக்கள் 10:11,12
19. தாவீதின் வீடு எந்த மரங்களால் செய்யப்பட்டது?
Answer: கேதுரு மரங்கள்
I நாளாகமம் 17:1
20. தேவர்களும் மனுஷர்களும் புகழுகிற கொழுமையை உடைய மரம் எது?
Answer: ஒலிவ மரம்
நியாயாதிபதிகள் 9:9
21. நோவா உண்டாக்கின பேழை எந்த மரத்தால் செய்யப்பட்டது?
Answer: கொப்பேர் மரத்தால்
ஆதியாகமம் 6:14
22. பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மேசை, பெட்டி, பலிபீடம், ஆகியவை எந்த மரத்தால் செய்யப்பட்டது?
Answer: சீத்தீம் மரத்தால்
யாத்திராகமம் 25:10,23
யாத்திராகமம் 27:1
23. சாலோமோனின் இரதம் எந்த மரத்தால் ஆனது?
Answer: லீபனோனின் மரத்தினால்
உன்னதப்பாட்டு 3:9
24. உன் பிள்ளைகள் எதைப்போல் இருப்பார்கள்?
Answer: ஒலிவமரக்கன்றுகளைப்போல
சங்கீதம் 128:3
25. இலையற்றுப்போகிற மரம் எது?
Answer: அரசமரம்
ஏசாயா 6:13
====================
வீடு (கேள்வி பதில்கள்)
=====================
1) வேதாகமத்தில் 𝐑𝐞𝐧𝐭 𝐇𝐨𝐮𝐬𝐞 🏡 குறித்து வாசிப்பது எங்கே?
2) வேதாகமத்தில் மூன்று மாடி கட்டிடம்🏯 வாசிப்பது எங்கே?
3) வேதாகமத்தில் 𝐠𝐮𝐞𝐬𝐭 𝐑𝐨𝐨𝐦🏡 குறித்து வாசிப்பது எங்கே?
4) வேதாகமத்தில் குளிர்கால பிரத்யேக வீடு🏦 குறித்து வாசிப்பது எங்கே?
5) வேதாகமத்தில் ஒரு ராஜாவால் கட்டப்பட்ட 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐢𝐭𝐲🏛️ (மலை பட்டணம்) எது?
6) வேதாகமத்தில் பண்டிகைக்காக 𝐏𝐚𝐫𝐭𝐲 𝐇𝐚𝐥𝐥 🏤 𝐛𝐨𝐨𝐤 பண்ணியவர்கள் யார்?
7) வேதாகமத்தில் முதன்முதலில் 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬👭 𝐠𝐞𝐭 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫 குறித்து வாசிப்பது எங்கே?
8) வேதாகமத்தில் 𝐀𝐜 𝐫𝐨𝐨𝐦🏢 குறித்து வாசிப்பது எங்கே?
9) வேதாகமத்தில் 𝐂𝐚𝐦𝐩 𝐟𝐢𝐫𝐞🔥🧑🏼🦼 பற்றி முதலாவதாக வாசிப்பது எங்கே?
10) தீங்கு நினையாது அது என்ன?
11) தவிட்டினால் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டது யார்?
12) நம் உடலுக்கெல்லாம்🥗 💪🏼ஆரோக்கியம் தரும் அற்புத மருந்து எது?
13) நியாயப்பிரமாணத்துக்கு📜 🙅🏽♂️பெலனில்லை என்று சொன்ன பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி🧙🏻♂️ யார்?
14) ஒரு பொருளின் 🐋 😋 சுவையை வயிற்றிலும் உணர்ந்தது 🤭 யார்?
15) பலிபீடத்தின் ⛩️ கொம்புகளைப் பிடித்து உயிரிழந்தது 😲 யார்?
16) தாயும் 🤷🏽♀️தகப்பனும் இல்லாதவள்🥺 என சொல்லப்பட்டவள்💁🏽♀️ யார்?
17) கல்தேயருடைய🎎 பிரதான 👉 மகிமை எது?
18) வேதாகமத்தில் புல் மேயும் மாடோடு🐄 ஒப்பிடப்படும் 👨👩👧👦 ஜனங்கள் யார்?
19) தனக்கடுத்தவனை வாயினால்😲 கெடுப்பவன் யார்?
20) எகிப்தில் திருமணம் செய்த இஸ்ரவேல் பெண்👰🏻♀ யார்?
21) வேதாகமத்தில் இறக்குமதி செய்யப்பட் ஒரு பறவை🦜 எது?
22) எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு⛪ அஸ்திபாரம் போட்டது யார்? 👷🏽♂️
23) ஒரு பழத்தை🍑 சாப்பிட்டால் மரணமே 🙅🏾♂️கிடையாது அது என்ன👉🏻 பழம்? 🤗
24) தாய் மரித்த🛌 வேதனையை தாங்க😔 முடியாமல் பல நாள் அழுது 😥கொண்டிருந்த மகன் யார்?
வீடு (பதில்கள்)
=====================
1) வேதாகமத்தில் 𝐑𝐞𝐧𝐭 𝐇𝐨𝐮𝐬𝐞 🏡 குறித்து வாசிப்பது எங்கே?
Answer: பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுவதும் தங்கி..
அப்போஸ்தலர் 28:30
2) வேதாகமத்தில் மூன்று மாடி கட்டிடம்🏯 வாசிப்பது எங்கே?🤔
Answer: ︎ஐத்திக்கு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து ...நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து மரித்தவனாய் எடுக்கப்பட்டான்
அப்போஸ்தலர் 20:9
3) வேதாகமத்தில் 𝐠𝐮𝐞𝐬𝐭 𝐑𝐨𝐨𝐦🏡 குறித்து வாசிப்பது எங்கே?
Answer: நாம் மெத்தையின்மேல் ஒருசிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும்
நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
2 இராஜாக்கள் 4:10
4) வேதாகமத்தில் குளிர்கால பிரத்யேக வீடு🏦 குறித்து வாசிப்பது எங்கே?
Answer: ஒன்பதாம் மாதத்திலே ராஜா குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்
எரேமியா 36:22
5) வேதாகமத்தில் ஒரு ராஜாவால் கட்டப்பட்ட 𝐇𝐢𝐥𝐥 𝐜𝐢𝐭𝐲🏛️ (மலை பட்டணம்) எது? 🤔
Answer: சமாரியா
1 இராஜாக்கள் 16:24
6) வேதாகமத்தில் பண்டிகைக்காக 𝐏𝐚𝐫𝐭𝐲 𝐇𝐚𝐥𝐥 🏤 𝐛𝐨𝐨𝐤 பண்ணியவர்கள் யார்? 👨👨👦
Answer: இயேசுவும் சீஷர்களும்
மாற்கு 14:14,15
7) வேதாகமத்தில் முதன்முதலில் 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬👭 𝐠𝐞𝐭 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫 குறித்து வாசிப்பது எங்கே? 🤷🏽♀️
Answer: லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
ஆதியாகமம் 34:1
8) வேதாகமத்தில் 𝐀𝐜 𝐫𝐨𝐨𝐦🏢 குறித்து வாசிப்பது எங்கே?
Answer: எக்லோன் தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்.
நியாயாதிபதிகள் 3:20
9) வேதாகமத்தில் 𝐂𝐚𝐦𝐩 𝐟𝐢𝐫𝐞🔥🧑🏼🦼 பற்றி முதலாவதாக வாசிப்பது எங்கே? 🤔
Answer: சோதோம்
ஆதியாகமம்
10) தீங்கு நினையாது 🤗 👉 அது என்ன?
Answer: அன்பு
1 கொரிந்தியர் 13:1,5
11) தவிட்டினால்😲 வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டது😳 யார்?
Answer: இளையகுமாரன்
லூக்கா 15:12,16
12) நம் உடலுக்கெல்லாம்🥗 💪🏼ஆரோக்கியம் தரும் அற்புத மருந்து எது? 🤗
Answer: வசனங்கள்
நீதிமொழிகள் 4:20,22
13) நியாயப்பிரமாணத்துக்கு📜 🙅🏽♂️பெலனில்லை என்று சொன்ன பழைய ஏற்பாடு தீர்க்கதரிசி🧙🏻♂️ யார்?
Answer: ஆபகூக்
ஆபகூக் 1:4
14) ஒரு பொருளின் 🐋 😋 சுவையை வயிற்றிலும் உணர்ந்தது 🤭 யார்?
Answer: திவ்விய வாசகனாகிய யோவான்
வெளிப்படுத்தின விசேஷம் 10:10
15) பலிபீடத்தின் ⛩️ கொம்புகளைப் பிடித்து உயிரிழந்தது 😲 யார்?
Answer: யோவாப்
1 இராஜாக்கள் 2:28
16) தாயும் 🤷🏽♀️தகப்பனும் இல்லாதவள்🥺 என சொல்லப்பட்டவள்💁🏽♀️ யார்?
Answer: எஸ்தர்
எஸ்தர் 2:7
17) கல்தேயருடைய🎎 பிரதான 👉 மகிமை எது?
Answer: பாபிலோன்
ஏசாயா 13:19
18) வேதாகமத்தில் புல் மேயும் மாடோடு🐄 ஒப்பிடப்படும் 👨👩👧👦 ஜனங்கள் யார்?🤭
Answer: சமாரியா
ஆமோஸ் 4:1
19) தனக்கடுத்தவனை *வாயினால்*😲 கெடுப்பவன் யார்?🙄
Answer: மாயக்காரன்
நீதிமொழிகள் 11:9
20) எகிப்தில் திருமணம் செய்த இஸ்ரவேல் பெண் 👰🏻♀ யார்?
Answer: செலோமித்
லேவியராகமம் 24:10,11
21) வேதாகமத்தில் இறக்குமதி செய்யப்பட் ஒரு பறவை🦜 எது?
Answer: மயில்
1 இராஜாக்கள் 10:22
22) எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு⛪ அஸ்திபாரம் போட்டது யார்? 👷🏽♂️
Answer: செஸ்பாத்சார்
எஸ்றா 5:16
23) ஒரு பழத்தை🍑 சாப்பிட்டால் மரணமே 🙅🏾♂️கிடையாது அது என்ன👉🏻 பழம்? 🤗
Answer: ஜீவவிருட்சம்
ஆதியாகமம் 3:22
24) தாய் மரித்த🛌 வேதனையை தாங்க😔 முடியாமல் பல நாள் அழுது 😥கொண்டிருந்த மகன் யார்?
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 24:67
===============
வேதத்தில் மனைவியர்
===============
1. தானும் பாவம் செய்து தன் புருஷனையும் பாவம் செய்யத்தூண்டிய மனைவி யார்?
2. கணவனோடு சேர்ந்து பொய் சொல்லி உயிரை விட்ட மனைவி யார்?
3. தேவனைத் தூஷித்து ஜீவனை விடச் சொன்ன மனைவி யார்?
4. துராலோசனை கொடுத்த மனைவி யார்?
5. கணவனைக் கோபப்படுத்தின மனைவி யார்?
6. பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டின மனைவி யார்?
7. வாக்குத்தத்தை விசுவாசியாமல் மற்றும் ஒரு சந்ததி உருவாகக் காரணமாக இருந்த மனைவி யார்?
8. அழிந்து போன மனைவி யார்?
9. அழிவிலிருந்து காக்கப்பட்ட மனைவி யார்?
10. கணவனின் உயிரைக் காப்பாற்றிய மனைவி யார்?
11. சொப்பனத்தில் வெகு பாடுபட்ட மனைவி யார
12. ஆடம்பரத்துடன் நியாய ஸ்தலத்தில் பிரவேசித்த மனைவி யார்?
13. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைச் சொல்லக்கேட்ட மனைவி யார்?
14. தன் ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்த மனைவி யார்?
15. வீட்டிலே சபை கூடி வரச் செய்த மனைவி யார்?
16. மனைவியானவன் பெலவீன பாண்டம் என்று சொன்னது யார்?
வேதத்தில் மனைவியர் (பதில்கள்)
===============
1. தானும் பாவம் செய்து தன் புருஷனையும் பாவம் செய்யத்தூண்டிய மனைவி யார்?
Answer: ஏவாள்
ஆதியாகமம் 3:6
2. கணவனோடு சேர்ந்து பொய் சொல்லி உயிரை விட்ட மனைவி யார்?
Answer: சப்பீராள்
அப்போஸ்தலர் 5:9,10
3. தேவனைத் தூஷித்து ஜீவனைவிடச்சொன்ன மனைவி யார்?
Answer: யோபுவின் மனைவி
யோபு 2:9
4. துராலோசனை கொடுத்த மனைவி யார்?
Answer: ஆமானின் மனைவி சிரேஷ்
எஸ்தர் 5:14
5. கணவனைக் கோபப்படுத்தின மனைவி யார்?
Answer: ராகேல்
ஆதியாகமம் 30:2
6. பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டின மனைவி யார்?
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 27:7-10
ஆதியாகமம் 25:28
7. வாக்குத்தத்தை விசுவாசியாமல் மற்றும் ஒரு சந்ததி உருவாகக் காரணமாக இருந்த மனைவி யார்?
Answer: சாராய்
ஆதியாகமம் 16:2
8. அழிந்து போன (உப்புத்தூண்) மனைவி யார்?
Answer: லோத்தின் மனைவி
ஆதியாகமம் 19:26
9. அழிவிலிருந்து (ஜலப்பிரலயம்) காக்கப்பட்ட மனைவி யார்?
Answer: நோவாவின் மனைவி
ஆதியாகமம் 7:7,13
10. கணவனின் உயிரைக் காப்பாற்றிய மனைவி யார்?
Answer: சாராய்
ஆதியாகமம் 12:12,13
Answer: சிப்போராள்
யாத்திராகமம் 4:24-26
Answer: அபிகாயிள்
1 சாமுவேல் 25:23
11. சொப்பனத்தில் வெகு பாடுபட்ட மனைவி யார்?
Answer: பிலாத்துவின் மனைவி
மத்தேயு 27:19
12. ஆடம்பரத்துடன் நியாயஸ்தலத்தில் பிரவேசித்த மனைவி யார்?
Answer: அகிரிப்பாவின் மனைவி பெர்னீக்கேயாள்
அப்போஸ்தலர் 25:23
13. பவுலிடம் வந்து: கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைச் சொல்லக்கேட்ட மனைவி யார்?
Answer: பேலிக்ஸின் மனைவி துருசில்லாள்
அப்போஸ்தலர் 24:24
14. தன் ஆஸ்திகளால் இயேசுவுக்கு ஊழியம் செய்த மனைவி யார்?
Answer: கூசாவின் மனைவி யோவன்னாள்
லூக்கா 8:3
15. வீட்டிலே சபை கூடி வரச்செய்த மனைவி யார்?
Answer: ஆக்கில்லாவின் மனைவி பிரிஸ்கில்லாள்
அப்போஸ்தலர் 16:3,5
16. மனைவியானவன் பெலவீன பாண்டம் என்று சொன்னது யார்?
Answer: பேதுரு
1 பேதுரு 3:7
==================
பைபிள் கேள்வி பதில்கள்
=====================
1. கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து எப்போது புறப்பட்டது⁉️
2. கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் யார் செய்தார்கள்⁉️
3. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யார் எண்ணப்படவில்லை⁉️
4. எங்கு உன் சர்வாங்கபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு⁉️
5. கர்த்தர் எந்தக் குடும்பத்துக்கு சொல்லியிருந்த வார்த்தைகள் எல்லாம் நிறைவேறிற்று⁉️
6. ஜனங்கள் பென்யமீனருக்காக எதற்கு மனஸ்தாபப்பட்டார்கள்⁉️
7. இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு எது⁉️
8. ஆகாதவர்களிடத்தில் எது பிறக்கும்⁉️
9. யார் எதைக் காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தது⁉️
10. ‼️எனக்கு என்ன செய்தால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்‼️ என்ன, யார் சொன்னார்கள்⁉️
(பதில்கள்)
=================
1. கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து எப்போது புறப்பட்டது⁉️
Answer: நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
யாத்திராகமம் 12:41
2. கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் யார் செய்தார்கள்⁉️
Answer: கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
லேவியராகமம் 8:36
3. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யார் எண்ணப்படவில்லை⁉️
Answer: லேவியரோ கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 2:33
4. எங்கு உன் சர்வாங்கபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு⁉️
Answer: கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 12:13
5. கர்த்தர் எந்தக் குடும்பத்துக்கு சொல்லியிருந்த வார்த்தைகள் எல்லாம்
நிறைவேறிற்று⁉️
Answer: கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.
யோசுவா 21:45
6. ஜனங்கள் பென்யமீனருக்காக எதற்கு மனஸ்தாபப்பட்டார்கள்⁉️
Answer: இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 21:15
7. இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு எது⁉️
Answer: மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
ரூத் 4:7
8. ஆகாதவர்களிடத்தில் எது பிறக்கும்⁉️
Answer: ஆகாமியம் முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
1 சாமுவேல் 24:13
9. யார் எதைக் காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தது⁉️
Answer: அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
2 சாமுவேல் 14:28
10. ‼️எனக்கு என்ன செய்தால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்‼️ என்ன, யார் சொன்னார்கள்⁉️
Answer: திரும்பி வரப்பண்ணுவாரானால் யாக்கோபு
அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
ஆதியாகமம் 28:20,21