=========================
வேதாகமத்தில் உள்ள தாய்மார்கள் 🤰🏻🤱🏻🤰🏻🤱🏻 யார் யார்?
=========================
1. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாய் யார்?
2. ஜாதிகளுக்கெல்லாம் தாய் யார்?
3. இஸ்ரயேலுக்கு தாயாக எழும்பினவள் யார்?
4. தன் மருமகளின் பிள்ளைக்கு தாய் யார்?
5. தன் பிள்ளைக்கு ஆசீர்வாதத்தை தந்திரமாய் வாங்கி தந்த தாய் யார்?
6. தன் பிள்ளைக்கு மதுபானம் பண்ணக் கூடாதென்று உபதேசித்த தாய் யார?
7. தன் பிள்ளையை வளர்க்க கர்த்தரால் கற்பிக்கப்பட்ட தாய் யார்?
8. தன் பிள்ளையை கொலையாளியாக்கிய யார்?
9. தன் பிள்ளை சாகிறதை பார்க்க முடியாமல் சத்தமிட்டு அழுத தாய் யார்?
10. தன் பிள்ளை தன் மடியிலே சாகிறதை பார்த்த தாய் யார்?
11. பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியான தாய் யார்?
12. பிள்ளை வயிற்றிலிருக்கையில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட தாய் யார்?
13. தன் பிள்ளையை கர்த்தருக்கு பணிவிடைக்காரனாக்கிய தாய் யார்?
14. தன் பிள்ளையை ராஜாவாக்கும்படி விண்ணப்பம் பண்ணின தாய் யார்?
15. தன் பிள்ளையின் உயிரைக் காக்க தண்ணீரில் மிதக்க விட்ட தாய் யார்?
16. தன் பிள்ளையின் சுகத்திற்காக தன்னை நாயாக ஒத்துக்கொண்ட தாய் யார்?
17. தன் கணவனை காப்பாற்ற தன் பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணிய தாய் யார்?
18. தன் பிள்ளைக்குள் விசுவாசத்தை நிலைத்திருக்க செய்த தாய் யார்?
19. தன் தாயின் கட்டளையை அசட்டைப்பண்ணுகிறவனின் கண்களை எவைகள் பிடுங்கி கழுகின் குஞ்சுகள் தின்னும்?
20. தாய் போல நம்மை தேற்றுகிற யார்?
==========================
வேதாகமத்தில் உள்ள தாய்களை 🤰🏻🤱🏻🤰🏻🤱🏻 தெரிந்து கொள்வோமா : 💁🏻♀️பதில்
========================
1. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாய் யார்?
Answer: ஏவாள்
ஆதியாகமம் 3:20
2. ஜாதிகளுக்கெல்லாம் தாய் யார்?
Answer: சாராள்
ஆதியாகமம் 17:15,16
3. இஸ்ரயேலுக்கு தாயாக எழும்பினவள் யார்?
Answer: தெபோராள்
நியாயாதிபதிகள் 4:4
4. தன் மருமகளின் பிள்ளைக்கு தாய் யார்?
Answer: நகோமி
ரூத் 4:16
5. தன் பிள்ளைக்கு ஆசீர்வாதத்தை தந்திரமாய் வாங்கி தந்த தாய் யார்?
Answer: ரெபேக்காள்
ஆதியாகமம் 27:10
6. தன் பிள்ளைக்கு மதுபானம் பண்ணக்கூடாதென்று உபதேசித்த தாய் யார்?
Answer: லேமுவேலின் தாய்
நீதிமொழிகள் 31:4
7. தன் பிள்ளையை வளர்க்க கர்த்தரால் கற்பிக்கப்பட்ட தாய் யார்?
Answer: சிம்சோனின் தாய்
நியாயாதிபதிகள் 13:4
8. தன் பிள்ளையை கொலையாளியாக்கிய தாய் யார்?
Answer: ஏரோதியாள்
மாற்கு 6:24
9. தன் பிள்ளை சாகிறதை பார்க்க முடியாமல் சத்தமிட்டு அழுத தாய் யார்?
Answer: ஆகார்
ஆதியாகமம் 21:16
10. தன் பிள்ளை தன் மடியிலே சாகிறதை பார்த்த தாய் யார்?
Answer: சூனேமியாள்
2 இராஜாக்கள் 4:20
11. பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியான தாய் யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:35
12. பிள்ளை வயிற்றிலிருக்கையில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட தாய் யார்?
Answer: எலிசபெத்
லூக்கா 1:41
13. தன் பிள்ளையை கர்த்தருக்கு பணிவிடைக்காரனாக்கிய தாய் யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:11
14. தன் பிள்ளையை ராஜாவாக்கும்படி விண்ணப்பம் பண்ணின தாய் யார்?
Answer: பத்சேபாள்
1 இராஜாக்கள் 1:29
15. தன் பிள்ளையின் உயிரைக் காக்க, பிள்ளையை தண்ணீரில் மிதக்க விட்ட தாய் யார்?
Answer: யோகெபேத்
யாத்திராகமம் 2:3
யாத்திராகமம் 6:20
16. தன் பிள்ளையின் சுகத்திற்காக தன்னை நாயாக ஒத்துக்கொண்ட தாய் யார்?
Answer: கானானிய ஸ்திரீ
மத்தேயு 15:27
17. தன் கணவனை காப்பாற்ற தன் பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணின தாய் யார்?
Answer: சிப்போராள்
யாத்திராகமம் 4:25
18. தன் பிள்ளைக்குள் விசுவாசத்தை நிலைத்திருக்க செய்த தாய் யார்
Answer: ஐனிக்கேயாள்
2 தீமோத்தேயு 1:5
19. தன் தாயின் கட்டளையை அசட்டைப்பண்ணுகிறவனின் கண்களை எவைகள் பிடுங்கி தின்னும்?
Answer: காகங்கள் பிடுங்கி கழுகின் குஞ்சுகள் தின்னும்
நீதிமொழிகள் 30:17
20. தாய் போல நம்மை தேற்றுகிறவர் யார்?
Answer: கர்த்தராகிய தேவன்
ஏசாயா 66:12-13
=====================
பைபிள் கேள்விகள்
=====================
1. பைபிளில் சிறிய கட்டளை எது⁉️
2. பைபிளில் சிறிய வயதில் ராஜாவாக அரியணை ஏறியவர் யார் ⁉️
3. பைபிளில் சிறிய பூச்சி எது⁉️
4. பைபிளில் சிறிது நாட்கள் மட்டுமே ஆட்சி செய்த ராஜா யார் ⁉️
5. பைபிளில் சிறிய வசனம் எது⁉️
6. பைபிளில் சிறிய அதிகாரம் எது⁉️
7. பைபிளில் சிறிய புத்தகம் எது⁉️
8. பைபிளில் சிறிய ஜெபம் எது⁉️
9. பைபிளில் சிறிய காணிக்கை எது⁉️
10. பைபிளில் சிறிய தீர்க்கதரிசிகள் எத்தனை பேர் ⁉️
பைபிள் கேள்விகள்
=====================
1. பைபிளில் சிறிய கட்டளை எது⁉️
Answer: கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திரா 20:13
2. பைபிளில் சிறிய வயதில் ராஜாவாக அரியணை ஏறியவர் யார் ⁉️
Answer: யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
யோவாஸ் 11:21
3. பைபிளில் சிறிய பூச்சி எது⁉️
Answer: தெள்ளுப்பூச்சி
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப் பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
1 சாமு 24:14
4. பைபிளில் சிறிது நாட்கள் மட்டுமே ஆட்சி செய்த ராஜா யார் ⁉️
Answer: சிம்ரி
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.
1 இராஜா 16:15
5. பைபிளில் சிறிய வசனம் எது⁉️
Answer: பின்னும் எலிகூ:
யோபு 36:1
6. பைபிளில் சிறிய அதிகாரம் எது⁉️
Answer: சங்கீதம் 117
7. பைபிளில் சிறிய புத்தகம் எது⁉️
Answer: 3 யோவான்*
8. பைபிளில் சிறிய ஜெபம் எது⁉️
Answer: காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்து போகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
மத்தேயு 14:30
9. பைபிளில் சிறிய காணிக்கை எது⁉️
Answer: ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21:2,3
10. பைபிளில் சிறிய தீர்க்கதரிசிகள் எத்தனை பேர் ⁉️
Answer: 12 பேர்
ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
=================
அர்த்தம் என்ன?
=====================
1) எப்பத்தா
2) ஸீலோவாம்
3) லேகியோன்
4) தலித்தா கூமி
பெயர்க்காரணம் தருக
=====================
5) லகாய் ரோயீ-நீர்
6) தபேரா
7) பெனியேல்
8) எந்தக் கோரி
9) இக்கபோத்
10) கிப்ரோத் அத்தாவா
11) யெருபாகால்
12) எபெனேசர்
அர்த்தம் என்ன? (பதில்கள்)
===================
1) எப்பத்தா
Answer: திறக்கப்படுவாயாக
மாற்கு 7:34
2) ஸீலோவாம்
Answer: அனுப்பப்பட்டவன்
லூக்கா 9:17
3) லேகியோன்
Answer: அநேக ராயிருக்கிறோம்
லூக்கா 8:30
4) தலித்தா கூமி
Answer: சிறு பெண்ணே எழுந்திரு
மாற்கு 5:41
பெயர்க்காரணம் தருக
=====================
5) லகாய் ரோயீ
Answer: நீர் என்னைக் காண்கிற தேவன்
ஆதியாகமம் 16:13,14
6) தபேரா
Answer: கர்த்தருடைய அக்கினி அவா்களுக்குள்ளே பற்றி யெரிந்ததால்
எண்ணாகமம் 11:3
7) பெனியேல்
Answer: தேவனை முகமுகமாய்க் கண்டேன் . உயிர் தப்பிப் பிழைத்தேன்
ஆதியாகமம் 32:30
8) எந்தக் கோரி
Answer: வேகியில் தண்ணீர் வந்து சிம்சோன் குடித்து உயிர் திரும்ப வந்ததால்
நியாயாதிபதிகள் 15:19
9) இக்க போத்
Answer: மகிமை இஸ்ரவேலை போயிற்று
I சாமுவேல் 4:21
10) கிப்ரோத் அத்தாவா
Answer: இச்சித்த ஜனங்களை அடக்கம் பண்ணியதால்
எண்ணாகமம் 11:34
11) யெருபாகால்
Answer: பாகால் அவனோடே வழக்காடட்டும்
நியாயாதிபதிகள் 6:32
12) எபெனேசர்
Answer: இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்
1 சாமுவேல் 7:12
==================
என் பணி என்ன⁉️
==================
1. ஏசா 👉🏾
2. நாகமான் 👉🏾
3. மத்தேயு 👉🏾
4. காய்பா 👉🏾
5. சகேயு 👉🏾
6. சீமோன் 👉🏾
7. தெர்த்துல்லு 👉🏾
8. தெமேத்திரியு 👉🏾
9. அப்பொல்லோ 👉🏾
10. அலெக்சந்தர் 👉🏾
என் பணி என்ன⁉️ (பதில்கள்)
==============
1. ஏசா 👉🏾
Answer: இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
ஆதியாகமம் 25:27
2. நாகமான் 👉🏾
Answer: சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
2 இராஜாக்கள் 5:1
3. மத்தேயு 👉🏾
Answer: பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு,
மத்தேயு 10:3
4. காய்பா 👉🏾
Answer: அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட *பிரதான* *ஆசாரியனுடைய* அரமனையிலே கூடிவந்து,
மத்தேயு 26:3
5. சகேயு 👉🏾
Answer: ஆயக்காரருக்குத்* *தலைவனும்* ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
லூக்கா 19:2
6. சீமோன் 👉🏾
Answer: பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
அப்போஸ்தலர் 9:43
7. தெர்த்துல்லு 👉🏾
Answer: ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 24:1
8. தெமேத்திரியு 👉🏾
Answer: எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக் கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர் 19:24
9. அப்பொல்லோ 👉🏾
Answer: அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
அப்போஸ்தலர் 18:24
10. அலெக்சந்தர் 👉🏾
Answer: கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத் தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
2 தீமோத்தேயு 4:14
====================
யார் யாரிடம் கூறியது?
=====================
1. ‼️ இன்னும் இடம் இருக்கிறது ‼️
2. ‼️சமாதானத்தோடே போங்கள் ‼️
3. ‼️ உங்களுக்கு ஒன்றும் தெரியாது ‼️
4. ‼️ அங்கே இராத்தங்கலாம் ‼️
5. ‼️ அவர் என்னைக் கொன்று போடட்டும்‼️
6. ‼️ என் குமாரரே இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்‼️
7. ‼️ நீ பயப்படாதே : உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்‼️
8. ‼️ உன் வேண்டுதல் கேட்கப்பட்டது ‼️
9. ‼️ விடியற்காலையில் எப்பொழுது சாயங்காலமும் வருமோ என்றும் சொல்வாய் ‼️
10. ‼️ இது சதி ‼️
=======================
யார் யாரிடம் கூறியது (பதில்கள்)
========================
1. ‼️ இன்னும் இடம் இருக்கிறது ‼️
Answer: ஊழியக்காரன்* 👉🏻 *தன்* *எஜமானிடம்*
லூக்கா 14:21,22
2. ‼️சமாதானத்தோடே போங்கள் ‼️
Answer: சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு
அப்போஸ்தலர் 16:36
3. ‼️ உங்களுக்கு ஒன்றும் தெரியாது ‼️
Answer: அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது;
யோவான் 11:49
4. ‼️ அங்கே இராத்தங்கலாம் ‼️
Answer: அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.
நியாயாதிபதிகள் 19:11
5. ‼️ அவர் என்னைக் கொன்று போடட்டும்‼️
Answer: அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.
2 சாமுவேல் 14:32
6. ‼️ என் குமாரரே இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்‼️
Answer: எசேக்கியா
4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
11. என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ் செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.
2 நாளாகமம் 29:4,11
7. ‼️ நீ பயப்படாதே : உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்‼️
Answer: போவாஸ் - ரூத்
ரூத் 3:11
8. ‼️ உன் வேண்டுதல் கேட்கப்பட்டது ‼️
Answer: தூதன் - சகரியாவிடம்
லூக்கா 1:13
9. ‼️ விடியற்காலையில் எப்பொழுது சாயங்காலமும் வருமோ என்றும் சொல்வாய் ‼️
Answer: கர்த்தர்
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
உபாகமம் 28:67
10. ‼️ இது சதி ‼️
Answer: யோராம் - அகசியாவிடம்
2 இராஜாக்கள் 9:23