==================
பைபிள் கேள்விகள்
=====================
1. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு _____________, தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்?
A. மன்னியும்
B. இரங்கும்
C. இரக்கம் பண்ணும்
2. ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் __________உண்டாயிற்று?
A. இருள்
B. அந்தகாரம்
C. வெளிச்சம்
3. போர்ச்சேவகர் _____________ ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி?
A. முள்ளுகளினால்
B. இலைகளினால்
C. கிளைகளினால்
4. ரபூனி என்பதற்கு ____________ என்று அர்த்தமாம்?
A. போதகரே
B. இயேசுவே
C. சீடரே
5. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கொண்டாடப்பட்ட யூதப் பண்டிகை எது?
A. பெந்தேகோஸ்தே பண்டிகை
B. பஸ்கா பண்டிகை
C. கூடாரப் பண்டிகை
D..எக்காள சத்தம் பண்டிகை
6. இயேசுவை கைது செய்து முதலில் யாரிடம் கொண்டு சென்றார்கள்?
A. பிலாத்து
B. காய்பா
C. ஏரோது
D. பிலிப்பு
7. பேதுரு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தான் ?
A. 1
B. 2
C. 3
D. 4
8. இயேசுவை எதினால் அடித்தார்கள்?
A. வாரினால்
B. கையினால்
C. ஈட்டியினால்
D. வாரினாலும் கையினாலும்
9. இயேசுவின் சிலுவையை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டவன் யார்?
A. பேதுரு
B. யோவான்
C. சிமோன்
D. நிக்கொதேமு
10. இயேசு சிலுவையில் எத்தனை மணி நேரம் தொங்கினார்?
A. 6
B. 7
C. 8
D. 9
11. மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்* என்று சொன்னது யார்?
A. பிலாத்து
B. காய்பா
C. ஏரோது
D. நூற்றுக்கதிபதி
12. இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கியது யார்?
A. அரிமத்தியாவின் யோசேப்பு
B. காய்பா
C. மரியாள்
D. நூற்றுக்கதிபதி
13. பாவி எல்லாம் ஓடிவா பரிகாரம் கேட்க வா தேங்காய் வேண்டாம் மாங்காய் வேண்டாம் கோழி, கிடா எதுவும் வேண்டாம் இரத்தம் சிந்தி மீட்ட அவர் இன்றே உன்னை இரட்சிப்பார் - அவர் யார்?
14. வானம் பொழியுது, தண்ணீர் பெருகுது, ஆறெல்லாம் ஓடுது, கடலெல்லாம், நிறையுது, பூமி அதனைப் பார்க்குது, அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?
15. உத்தமமான செயலம்மா, நியாயமான செயலம்மா, இயேசு செய்த செயலம்மா, இன்றே செய்ய வேணுமம்மா - அது என்ன?
பதில்கள்
==============
1. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு _____________, தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்?
Answer: A. மன்னியும்
லூக்கா 23:34
2. ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் __________உண்டாயிற்று ?
Answer: B. அந்தகாரம்
மத்தேயு 27:45
3. போர்ச்சேவகர் _____________ ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி?
Answer: A. முள்ளுகளினால்
யோவான் 19:2
4. ரபூனி என்பதற்கு ____________ என்று அர்த்தமாம்?
Answer: A. போதகரே
யோவான் 20:16
5. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கொண்டாடப்பட்ட யூதப் பண்டிகை எது?
Answer: B. பஸ்கா பண்டிகை
லூக்கா 22:1
6. இயேசுவை கைது செய்து முதலில் யாரிடம் கொண்டு சென்றார்கள் ?
Answer: B. காய்பா
மத்தேயு 26:57
7. பேதுரு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தான்?
Answer: C. 3
லூக்கா 26:75
8. இயேசுவை எதினால் அடித்தார்கள்?
Answer: D. வாரினாலும் கையினாலும்
யோவான் 19:1,3
9. இயேசுவின் சிலுவையை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டவன் யார்?
Answer: C. சீமோன்
மாற்கு 15:21
10. இயேசு சிலுவையில் எத்தனை மணி நேரம் தொங்கினார்?
Answer: A. 6
11. மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்* என்று சொன்னது யார்?
Answer: D. நூற்றுக்கதிபதி
மாற்கு 15:39
12. இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கியது யார்?
Answer: A. அரிமத்தியாவின் யோசேப்பு
யோவான் 19:38
13. பாவி எல்லாம் ஓடிவா பரிகாரம் கேட்க வா தேங்காய் வேண்டாம் மாங்காய் வேண்டாம் கோழி, கிடா எதுவும் வேண்டாம் இரத்தம் சிந்தி மீட்ட அவர் இன்றே உன்னை இரட்சிப்பார் - அவர் யார்?
Answer: இயேசு கிறிஸ்து*
அப்போஸ்தலர் 16:31
14. வானம் பொழியுது, தண்ணீர் பெருகுது, ஆறெல்லாம் ஓடுது, கடலெல்லாம் நிறையுது பூமி அதனைப் பார்க்குது அதுவும் ஓர்நாள் நிறையப் போவது - அது என்ன?
Answer: கர்த்தரை அறிகிற அறிவினால்
ஏசாயா 11:9
15. உத்தமமான செயலம்மா நியாயமான செயலம்மா இயேசு செய்த செயலம்மா இன்றே செய்ய வேணுமம்மா - அது என்ன?
Answer: கீழ்ப்படிதல்
லூக்கா 2:51
எபேசியர் 6:1
====================
சரியான பதிலை கூறவும்
====================
1) யோசேப்பு எத்தனை வயது உள்ளவனாய் மரித்தான் ?
1) 130
2) 110
3) 120
4) 115
2) ராகேலுக்காக யாக்கோபு எத்தனை வருஷம் வேலை செய்தான் ?
1) 14
2) 8
3) 7
4) 10
3) இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் எத்தனை முறை சோதனைக்குப்படாதபடி ஜெபம் பண்ணுங்கள் என்றார் ?
1) 3
2) 4
3) 5
4) 2
4) சீமான் பேதுரு படைகில் ஏறி _____ பெரிய மீன்களால் நிறைந்த வலையை கரையில் இழுத்தான் இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை
1) 145
2) 150
3) 153
4) 155
5) எபிரேய பாஷையில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே அருகே இருக்கிறது. அதற்கு ____ மண்டபங்கள் உண்டு
1) 3
2) 5
3) 6
4) 4
6) முதலாம் மாதம் ___ தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் 21ஆம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்ககடவீர்கள் ?
1) 27
2) 14
3) 16
4) 15
7) மோசே மேகத்தில் நடுவில் பிரவேசித்து மலையின் மேல் ஏறி இரவும் பகலும் எத்தனை நாள் மலையில் இருந்தான் ?
1) 20
2) 3
3) 40
4) 30
8) ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிற போது ______ வயதாயிருந்தான்
1) 35
2) 38
3) 39
4) 40
9) சாலமோன் தன் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருஷம் சென்றது ?
1) 15
2) 20
3) 13
4) 17
10) அகாஸ்வேரு ராஜா எத்தனை நாடுகளை அரசாண்டார் ?
1) 125
2) 126
3) 127
4) 128
பதில்
=============
1) யோசேப்பு எத்தனை வயது உள்ளவனாய் மரித்தான் ?
Answer: 2) 110
ஆதியாகமம் 50:26
2) ராகேலுக்காக யாக்கோபு எத்தனை வருஷம் வேலை செய்தான் ?
Answer: 1) 14 வருஷம்
ஆதியாகமம் 29:20
3) இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் எத்தனை முறை சோதனைக்குப்படாதபடி ஜெபம் பண்ணுங்கள் என்றார் ?
Answer: 1) 3
மத்தேயு 26:41
லூக்கா 22:40,46
4) சீமான் பேதுரு படைகில் ஏறி _____ பெரிய மீன்களால் நிறைந்த வலையை கரையில் இழுத்தான் இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை
Answer: 3) 153
யோவான் 21:11
5) எபிரேய பாஷையில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே அருகே இருக்கிறது. அதற்கு ____ மண்டபங்கள் உண்டு
Answer: 2) 5
யோவான் 5:2
6) முதலாம் மாதம் ___ தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் 21ஆம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்ககடவீர்கள் ?
Answer: 2) 14
யாத்திராகமம் 12:18
7) மோசே மேகத்தில் நடுவில் பிரவேசித்து மலையின் மேல் ஏறி இரவும் பகலும் எத்தனை நாள் மலையில் இருந்தான் ?
Answer: 3) 40
யாத்திராகமம் 24:18
8) ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிற போது ______ வயதாயிருந்தான்
Answer: 4) 40
ஆதியாகமம் 25:20
9) சாலமோன் தன் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருஷம் சென்றது ?
Answer: 3) 13
1 இராஜாக்கள் 7:1
10) அகாஸ்வேரு ராஜா எத்தனை நாடுகளை அரசாண்டார் ?
Answer: 3) 127
எஸ்தர் 1:1
எஸ்தர் 9:31
=====================
பைபிள் கேள்வி பதில்கள்
========================
1. பவுல் கரைசேர்ந்த தீவின் பெயர் என்ன?
A. மெலித்தா
B. சோவார்
C. மில்லேத்து
2. தீர்க்கதரிசியின் பெயரிலுள்ள ஒரு தீவின் பெயர் என்ன?
A. எலியா
B. எலிசா
C. ஏசாயா
3. காய்கறியின் பெயரிலுள்ள தீவின் பெயர் என்ன?
A. லகாய் ரோயீ
B. கோஸ்
C. வெண்காயம்
4. தீவுகளை கர்த்தர் எப்படி தூக்குகிறார்?
A. கையினால்
B. சுவாசத்தினல்
C. அனுக்ககள்
5. ஒரு தீவீற்க்கே முதலாளி யார்?
A. பெக்கா
B. புபிலியு
C. ஆபிரகாம்
6. யோவான் இருந்த தீவு எது?
A. சாமு
B. பத்மு
C. ரோது
7. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தது யார்?
A. ஆமோஸ்
B. அகபு
C. யோசேப்பு
8. மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் யாருடைய நாட்களில் உண்டாயிற்று?
A. யோசேப்பு
B. தாவீது
C. ஈசாக்கு
9. பஞ்சலோகக் கைத்தாலங்களை தொனிக்கபண்ணினது பாடினது யார்?
A. தாவீது, ஆசாப்
B. ஏமான், ஆசாப், எதத்தான்
C. செப்பனியா , மல்கியா
10. பஞ்சகாலத்தில் திருப்தியடைபவர்கள் யார்?
A. உத்தமர்கள்
B. நீதிமான்கள்
C. பரிசுத்தவான்கள்
11. பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் ___________ அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று ?.
A. கால்
B.முகம்
C. தோல்
12. ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, எது கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
A. கர்த்தருடைய வசனம்
B. கர்த்தரின் தரிசனம்
C. கர்த்தரின் மகிமை
13. இதில் கிளி ஜாதி எது?
A. ஆகாபு
B. அர்வானா
C. கோல்
14. பச்சைக்கிளிகளைப்போல் திரளான ____________ உன்னை நிரம்பப்பண்ணுவேன்?
A. மிருகங்களால்
B. நன்மைகளால்
C. மனுஷர்களால்
15. பெருங்கிளிகள் யார்?
A. மகுடவர்த்தகர்
B. தளகர்த்தர்
C. தீர்க்கதரிசிகள்
16. பீறுகிற ஓநாய் யார்?
A. பென்யமீன்
B. தாண்
C. காத்
17. செத்த நாய் என்று குறிக்கப்பட்டவன் யார்?
A. அபிசாய்
B. சீமேயி
B. தாவீது
18. மந்தையை காக்கும் நாய்களைப் பற்றி சொன்னவன் யார்?
A. யோபு
B. சாலொமோன்
C. பிரசங்கி
19. குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள் யார்?
A. ஆசாரியர்
B. தீர்க்கதரிசிகள்
C. காவற்க்காரர்
20. நாய்களுக்கு எதை போட வேண்டும்? எதைப் போடக்கூடாது?
21. நாய்க்குட்டி என்று தன்னை தாழ்த்தினது யார்?
A. கானாணிய ஸ்திரி
B. சீரோபேனிக்கியா ஸதிரி
C. மேவிபோசேத்
Answer
================
1. பவுல் கரைசேர்ந்த தீவின் பெயர் என்ன?
Answer: A. மெலித்தா
அப்போஸ்தலர் 26:1
2. தீர்க்கதரிசியின் பெயரிலுள்ள ஒரு தீவின் பெயர் என்ன ?
Answer: B. எலிசா
எசேக்கியேல் 27:7
3. காய்கறியின் பெயரிலுள்ள தீவின் பெயர் என்ன?
Answer: B. கோஸ்
அப்போஸ்தலர் 21:1
4. தீவுகளை கர்த்தர் எப்படி தூக்குகிறார்?
Answer: C. அனுக்ககள்
ஏசாயா 40:15
5. ஒரு தீவீற்கே முதலாளி யார்?
Answer: B. புபிலியு
அப்போஸ்தலர் 28:7
6. யோவான் இருந்த தீவு எது?
Answer: B. பத்மு
வெளிப்படுத்தின விசேஷம் 1:9
7. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தது யார்?
Answer: B. அகபு
அப்போஸ்தலர் 11:28
8. மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் யாருடைய நாட்களில் உண்டாயிற்று?
Answer: B. தாவீது
2 சாமுயேல் 21:1
9. பஞ்சலோகக் கைத்தாலங்களை தொனிக்கபண்ணினது பாடினது யார்?
B. ஏமான், ஆசாப், எதத்தான்
2 நாளாகமம் 15:19
10. பஞ்சகாலத்தில் திருப்தியடைபவர்கள் யார்?
Answer: A. உத்தமர்கள்
சங்கீதம் 37:19
11. பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் ___________ அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று?
Answer: C. தோல்
புலம்பல் 5:10
12. ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, எது கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்?
Answer: A. கர்த்தருடைய வசனம்
ஆமோஸ் 8:11
13. இதில் கிளி ஜாதி எது?
Answer: A. ஆகாபு
லேவியராகமம் 11:23
14. பச்சைக்கிளிகளைப்போல் திரளான ____________ உன்னை நிரம்பப்பண்ணுவேன்?
Answer: C. மனுஷர்களால்
எரேமியா 51:14
15. பெருங்கிளிகள் யார்?
Answer: B. தளகர்த்தர்
நாகூம் 3:17
16. பீறுகிற ஓநாய் யார்?
Answer: A. பென்யமீன்
ஆதியாகமம் 49:27
17. செத்த நாய் என்று குறிக்கப்பட்டவன் யார்?
Answer: B. சீமேயி
2 சாமுயேல் 16:9
18. மந்தையை காக்கும் நாய்களைப் பற்றி சொன்னவன் யார்?
Answer: A. யோபு
யோபு 30:3
19. குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள் யார்?
Answer: C. காவற்க்காரர்
ஏசாயா 56:10
20. நாய்களுக்கு எதை போட வேண்டும்? எதைப் போடக்கூடாது?
Answer: வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
யாத்திராகமம் 22:31
Answer: பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்;
மத்தேயு 7:6
21. நாய்க்குட்டி என்று தன்னை தாழ்த்தினது யார்?
Answer: A. கானாணிய ஸ்திரி
மத்தேயு 15:28
மாற்கு 7:28
=======================
பைபிள் கேள்வி பதில்கள்
=======================
1. இவைகளை ______நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்?
* சிலர்
* பலர்
* ஒருவரும்
2. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் _________ ?
* சீர்ப்படுத்தி
* ஸ்திரப்படுத்தி
* கீழ்ப்படுத்தி
3. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய _________ ஒழித்து?
* வல்லமையினாலே
* மாம்சத்தினாலே
* ஆவினாலே
4. சமாதானக்கட்டினால் __________ ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
* ஆவியின்
* வல்லமையின்
* அபிஷேகத்தின்
5. அப்படியே_________புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்?
* வஞ்சனையும்
* கோபமும்
* வம்பும்
6. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், _________ ஏற்படுத்தினார்?
* ஊழியராகவும்
* ஞானிகளாகவும்
* போதகராகவும்
7. முற்காலத்தில், நீங்கள் ________ இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்?
* வெறியர்களாய் இருந்தீர்கள்
* விக்ரகத்தில் இருந்தீர்கள்
* அந்தகாரமாய் இருந்தீர்கள்
8. ________அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்?
* பாவ
* கனியற்ற
* இருள்
9. கிறிஸ்துவினுடைய ஈவின் _______ நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது?
* அன்புக்குத்தக்கதாக
* அளவுக்குததக்கதாக
* அறிவுக்குத்தக்கதாக
10. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் __________ கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.?
* உதாசீனப்படுத்தாமல்
* கோபப்படுத்தாமல்
* வெறுக்காமல்
11. ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் _______விளங்கும்?
* உண்மையிலும்
* நியாயத்திலும்
* பக்தியிலும்
12. ஆதலால், தூங்குகிற நீ ________, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார்?
* மறந்து
* எழுந்து
* விழித்து
13. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய _______ இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்?
* வழி
* சித்தம்
* அன்பு
14. மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே _______ ஊழியஞ் செய்யுங்கள்?
* ஆவலோடு
* நல் மனதோடு
* உண்மையோடு
15. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் ________ பலப்படுங்கள்?
* வல்லமையிலும்
* அறிவிலும்
* ஞானத்திலும்
பதில்கள்
=============
1. இவைகளை ______நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்?
Answer: சிலர்
1 தீமோத்தேயு 1:6
2. எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் _________ ?
Answer: கீழ்ப்படுத்தி
எபேசியர் 1 : 22
3. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய _________ ஒழித்து?
Answer: மாம்சத்தினாலே
எபேசியர் 2:15
4. சமாதானக்கட்டினால் __________ ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
Answer: ஆவியின்
எபேசியர் 4:3
5. அப்படியே_________புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்?
Answer: வம்பும்
எபேசியர் 5:4
6. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், _________ ஏற்படுத்தினார்?
Answer: போதகராகவும்
எபேசியர் 4:13
7. முற்காலத்தில், நீங்கள் ________ இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்?
Answer: அந்தகாரமாய் இருந்தீர்கள்
எபேசியர் 5:8
8. ________அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்?
Answer: கனியற்ற
எபேசியர் 5:11
9. கிறிஸ்துவினுடைய ஈவின் _______ நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது?
Answer: அளவுக்குததக்கதாக
எபேசியர் 4:7
10. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் __________^ கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. ?
Answer: கோபப்படுத்தாமல்
எபேசியர் 6:4
11. ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் _______விளங்கும்?
Answer: உண்மையிலும்
எபேசியர் 5:9
12. ஆதலால், தூங்குகிற நீ ________, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார்?
Answer: விழித்து
எபேசியர் 5:14
13. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய _______ இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்?
Answer: சித்தம்
எபேசியர் 5:17
14. மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே _______ ஊழியஞ் செய்யுங்கள்?
Answer: நல் மனதோடு
எபேசியர் 6:8
15. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் ________ பலப்படுங்கள்?
Answer: வல்லமையிலும்
எபேசியர் 6:10