கர்த்தராகிய ஆணாடவர் சொல்லுகிறது, என்ன வென்றால், உடன்படிக் கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டை பண்ணி நீ செய்வதுபோல் நான் உனக்கு செய்வேன்
நாம் இந்தக் குறிப்பில் அசட்டை பண்ணுவதை குறித்து சிந்திக்கலாம். நாம் தெரிந்து தெரியாமலே பல நேரங்களில் நாம் தேவனுடைய காரியங்களில் அசட்டையாய இருந்திருக்கிறோம். எவற்றிலெல்லாம் அசட்டையாய் இருந்தோம் என்பதை இந்தக் குறிப்பில் நாம் அறிந்து கொள்வோம். நாம் இனி எந்தக் காரியத்திலும் அசட்டையாகவோ அசதியாகவோ இருக்க கூடாது.
1. கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணியது என்ன?
2 சாமுவேல் 12:9
எண்ணாகமம் 15:31
ஏசாயா 5:24
2. உன்னதமான வருகைய ஆலோசனையை அசட்டை பண்ணியது என்ன?
சங்கீதம் 107:10
நீதிமொழிகள் 1:30
3. உடன்படிக்கையின் ஆணையை அசட்டை பண்ணியது என்ன?
எசேக்கியேல் 16:59
எசேக்கியேல் 17:16,18,19
4. பரிசுத்த வஸ்துகளை அசட்டை பண்ணியது என்ன?
எசேக்கியேல் 22:8
5. கர்த்தரை அசட்டை பண்ணுகிறதென்ன?
சங்கீதம் 10:3
உபாகமம் 32 : 15
இரட்சிப்பின் தன்மையை அசட்டை பண்ணி
6. தேவனுடைய சபையை அசட்டை பண்ணியது என்ன?
1 கொரிந்தியர் 11 : 22
7. பரிசுத்த ஆவியை தந்தவரையே அசட்டை பண்ணியது என்ன?
1 தெசலோனிக்குயர் 4:8
8. கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணியது என்ன?
யூதா 1;8
9. கர்த்தருடைய நாமத்தை அசட்டை பண்ணியதென்ன?
மல்கியா 1:8
10. தேவனுடைய ஐசுவரியத்தை அசட்டைபண்ணியது என்ன?
ரோமர் 2:4
இந்தக் குறிப்பில் தேவன் நம் யாவரையும் கேட்கிறதெல்லாம் நீங்கள் ஏன் இவற்றை அசட்டைபண்ணியது என்ன? நாம் தெரிந்து அநேக தேவனுடைய காரியங்களில் அசட்டை பண்ணகயது உண்மை. இனியாவது தேவனுடைய காரியங்களில் குறிப்பாய் அவருடைய வார்த்தையை அசட்டை பண்ணியதென்ன? தேவன் நமக்கு தந்த பரிசுத்த ஆவியை அசட்டை பண்ணியது என்ன? இனியாவது நாம் மனந்திரும்பி தேவனுடைய காரியத்தில் அசட்டை பண்ணாமல் இருப்போம் என்று தீர்மானியுங்கள். இனி எதையும் அசட்டை பண்ணவேண்டாம்.
ஆமென்!
=============
தெரிந்து கொள்
=============
நீதிமொழிகள் 22:1
திரளான ஐசுவரியத்தை பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துக்கொள்ளப் படத்தக்கது: பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
1. தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்புதை தெரிந்து கொள்
சங்கீதம் 84:10
2. கர்த்தருக்கு பயப்படுதலை தெரிந்து கொள்
நீதிமொழிகள் 1:29
3. கர்த்தருக்குப் பிரியமானதை தெரிந்து கொள்
ஏசாயா 65:12
4. கர்த்தருடைய கட்டளையைத் தெரிந்து கொள்
சங்கீதம் 119:173
5. தேவனுடைய ஜனங்களோடு துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொள்
எபிரெயர் 11:25
6. நல்ல பங்கை தெரிந்து கொள்
லூக்கா 10:42
7. நன்மையை தெரிந்து கொள்
ஏசாயா 7:15
8. ஜீவனை தெரிந்து கொள்
உபாகமம் 30:19
9. மெய் வழியைக் தெரிந்து கொள்
சங்கீதம் 119:130
கிருஸ்தவர்களாய் இருக்கிற நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். மேல் சொன்ன யாவற்றையும் தெரிந்திருக்கிறீர்களா? இப்போது இவற்றை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும்
ஆமென்!
====================
கேட்கப்பட்டது
===================
எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி வேண்டுதல்செய்து தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்க்கப்பட்டு,
இந்த குறிப்பில் கேட்கப்பட்டது என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எவையெல்லாம் கேட்கப்பட்டதென்பதை இதில் கவனிக்கலாம். தேவன் எல்லாவற்றையும் கேட்கிறவர் ,பதில் கொடுக்கிறவர்.
1. ஜெபம் கேட்க்கப்பட்டது
அப்போஸ்தலர் 10:31
2. வேண்டுதல் கேட்க்கப்பட்டது
லூக்கா 1:13
3. வார்த்தைகள் கேட்கப்பட்டது
தானியேல் 10:12
4. மகிழ்ச்சி, களிப்பு கேட்கப்பட்டது
நெகேமியா 12:43
5. பெருமூச்சு கேட்கப்பட்டது
யாத்திராகமம் 2:23-25
6. கூக்குரல் கேட்கப்பட்டது
எரேமியத 31:15
மத்தேயு 2:17
7. பாவம் அக்கிரமத்தின் குரல் கேட்கப்பட்டது
ஆதியாகமம் 19:20-22
யோனா 1:2
இந்தக் குறிப்பில் கேட்கப்பட்டது என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, எவைகளெல்லாம் தேவனுக்கு கேட்கப்பட்டதென்பதை கவனித்தோம். நம்முடைய தேவன் கேட்கிறவர் மாத்திரமல்ல , அவர் பதிலும் கொடுக்கிறவர்.
நான் உங்களுக்கு உண்மை சொல்லுகிறேன். நான் போகிறது உங்களுக்கு பிரயோ ஜனமாயிருக்கும். நான் போகதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவான் 16:7,8
அவர் வந்து , பாவத்தை குறித்தும் நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார்.
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியானவர் பாவங்களை கண்டித்து உணர்த்துகிறவர். ஆகையால் நாம் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்களையும், அதில் ஆவியானவரின் தொடர்பணிகளைக் குறித்தும் நாம் இதில் சிந்திக்கலாம். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு பேசட்டும் !
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார் அவர்களாலே தூஷிக்கப்படுகிறார் உங்களாலே மகிமைப்படுகிறார்.
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய் பாவம் செய்தவர்களால் பரிசுத்த ஆவியானவர் தூஷிக்கபடுகிறார், ஆனால் உங்கள் மேல் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார் உங்களாலே மகிமைப்படுகிறார். ஆவியானவர் கண்டித்து உணர்த்தும் பாவங்களை விட்டு விலகிவிடுவோம். அப்போது மகிமையின் ஆவியானவர் நம்மேல் தங்கியிருந்து அவர் உங்களால் மகிமைப்படுவார்