==========
கேள்விகள்
===========
1. அக்கினி கடலில் தள்ளப்பட்டது இது இரண்டாம் மரணம் எது?
2. பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறதை எத்தனாவது நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்பட்டக்கடவது?
3. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் .
வசன இருப்பிடம் தருக?
4. அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள்? சரியா? தவறா?
5. உண்மையுள்ள சகோதரன் யார் என்று குறிப்பிடுகிறார்?
6. சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது, அலங்கத்தைக் கட்டக்கூடாது என்று சொன்னது யார்?
7. நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை _______________ சிதறடிப்பேன்?
8. எதை தெரியப்படுத்தி, மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கட்டளைகளையும், நியாயப் பிரமாணங்களையும் கற்பித்தீர் என்று லேவியர் கூறினர்?
9. ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, செய்தது என்ன?
10. அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன் யார்?
11. மோவாபியரும், அம்மோனியரும் இஸ்ரவேல் புத்திரரைச் சபிக்க யாரோடு கூலி பொருத்திக் கொண்டார்கள்?
12. வெயில் ஏறுமட்டும் எது திறக்கப்படவேண்டாம் என்று அனனியாவிடம் சொல்லப்பட்டது?
13. தண்ணீர் இரத்தம் போல் தோன்றியதால் ஏமாந்து போய் தோல்வியை சந்தித்த கூட்டத்தினர் யார்?
14. நம் கரத்தில் இருக்கிற வேதத்தில் சொல்லப்படும் முதல் தேசம் எது?
15. கர்த்தர் தன்னோடு பேசின போதிலும் கவனிக்காமல் போன ராஜா யார்? விளைவு என்ன?
பதில்கள்
=========
1. அக்கினி கடலில் தள்ளப்பட்டது இது இரண்டாம் மரணம் எது?
Answer: வெளிப்படுத்தல் 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
2. பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறதை எத்தனாவது நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்பட்டக்கடவது?
Answer: மூன்றாம் நாளில்*
லேவியராகமம் 7:17
3. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் .
வசன இருப்பிடம் தருக?
Answer: 1 பேதுரு 5:7
4. அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள்? சரியா? தவறா?
Answer: தவறு
1 பேதுரு 5;6
அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்
5. உண்மையுள்ள சகோதரன் யார் என்று குறிப்பிடுகிறார்?
Answer: சில்வான்
1 பேதுரு 5:12
6. சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது, அலங்கத்தைக் கட்டக்கூடாது என்று சொன்னது யார்?
Answer: யூதா மனிதர்
நெகேமியா 4:10
அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது. மண்மேடு மிச்சமாயிருக்கிறது. நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள்.
7. நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை _______________ சிதறடிப்பேன்?
Answer: ஜாதிகளுக்குள்ளே
நெகேமியா 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை *ஜாதிகளுக்குள்ளே* சிதறடிப்பேன் என்றும்,
8. எதை தெரியப்படுத்தி, மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கட்டளைகளையும், நியாயப் பிரமாணங்களையும் கற்பித்தீர் என்று லேவியர் கூறினர்?
Answer: பரிசுத்த ஓய்வுநாள்
நெகேமியா 9:14
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
9. ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, செய்தது என்ன?
Answer: அழுதார்கள்
நெகேமியா 8:9
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால்..
10. அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன் யார்?
Answer: அனனியா
நெகேமியா 7:2
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய *அனனியாவையும்,* எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
11. மோவாபியரும், அம்மோனியரும் இஸ்ரவேல் புத்திரரைச் சபிக்க யாரோடு கூலி பொருத்திக் கொண்டார்கள்?
Answer: பிலேயாம்
நெகேமியா 13:1
அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் *பிலேயாமைக்* கூலிபொருத்திக் கொண்ட படியினால்,
12. வெயில் ஏறுமட்டும் எது திறக்கப்பட வேண்டாம் என்று அனனியாவிடம் சொல்லப்பட்டது?
Answer: எருசலேமின் வாசல்கள்
நெகேமியா 7:3
அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம். நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
13. தண்ணீர் இரத்தம் போல் தோன்றியதால் ஏமாந்து போய் தோல்வியை சந்தித்த கூட்டத்தினர் யார்?
Answer: மோவாபியர்
2 ராஜாக்கள் 3:22,23
தண்ணீர் இரத்தம் போல் தோன்றியதால் ஏமாந்து போய் தோல்வியை சந்தித்த கூட்டத்தினர் மோவாபியர்
14. நம் கரத்தில் இருக்கிற வேதத்தில் சொல்லப்படும் முதல் தேசம் எது?
Answer: ஆவிலா
ஆதியாகமம் 2:11
நம் கரத்தில் இருக்கிற வேதத்தில் சொல்லப்படும் முதல் தேசம் ஆவிலா
15. கர்த்தர் தன்னோடு பேசின போதிலும் கவனிக்காமல் போன ராஜா யார்? விளைவு என்ன?
Answer: மனாசே
2 நாளாகமம் 33:10,11
தன்னோடு பேசின போதிலும் கவனிக்காமல் போன ராஜா மனாசே
விளைவு பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டான்*
==================
பிரயாண தூரங்கள் கேள்விகள்
==================
01) சேயீர்மலை வழியாய் ஓரேபுக்கு 11நாள் பிரயாண தூரத்திலுள்ள இடம் எது?
02) ஏதாம் வனாந்திரத்திலிருந்து 3நாள் பிரயாண தூரத்திலுள்ள இடம் எது?
03) எருசலேமிலிருந்து 2மைல் தூரத்திலுள்ள ஊர் எது?
04) எருசலேமிலிருந்து 7அல்லது 8மைல் தூரத்திலுள்ள ஊர் எது?
05) எருசலேமுக்கு ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற மலை எது?
06) 3நாள் பிரயாண விஸ்தாரமான நகரம் எது?
07) யாக்கோபை துரத்திச் சென்ற லாபான் கீலேயாத் மலையை எத்தனை நாள் பிரயாணத்துக்குப்பின் சென்றடைந்தான்?
08) வனாந்திரத்திலுள்ள ஓரேப் பர்வதத்தை அடைய எலியாவுக்கு எத்தனை நாட்கள் ஆனது?
09) ஆபிரகாம் பெயெர்செபாவிலிருந்து எத்தனை நாள் யிரயாணத்தில் மோரியா தேசத்து மலையை சென்றடைந்தார்?
10) ஆப்பெக்கிலிருந்து சிக்லாக்குக்கு வந்தடைய தாவீதுக்கு எத்தனை நாள் ஆனது?
பிரயாண தூரங்கள் (பதில்கள்)
============
01) சேயீர்மலை வழியாய் ஓரேபுக்கு 11நாள் பிரயாண தூரத்திலுள்ள இடம் எது?
Answer: காதேஸ்பர்னேயா
உபாகமம் 01:01
02) ஏதாம் வனாந்திரத்திலிருந்து 3நாள் பிரயாண தூரத்திலுள்ள இடம் எது?
Answer: மாரா
எண்ணாகமம் 33:08
03) எருசலேமிலிருந்து 2மைல் தூரத்திலுள்ள ஊர் எது?
Answer: பெத்தானியா
யோவான் 11:08
04) எருசலேமிலிருந்து 7அல்லது 8மைல் தூரத்திலுள்ள ஊர் எது?
Answer: எம்மாவு
லூக்கா 24:13
05) எருசலேமுக்கு ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற மலை எது?
Answer: ஒலிவமலை
அப்போஸ்தலர் 01:12
06) 3நாள் பிரயாண விஸ்தாரமான நகரம் எது?
Answer: நினிவே
யோனா 03:03
07) யாக்கோபை துரத்திச் சென்ற லாபான் கீலேயாத் மலையை எத்தனை நாள் பிரயாணத்துக்குப்பின் சென்றடைந்தான்?
Answer: ஏழு நாள்
ஆதியாகமம் 31:23
08) வனாந்திரத்திலுள்ள ஓரேப் பர்வதத்தை அடைய எலியாவுக்கு எத்தனை நாட்கள் ஆனது?
Answer: 40 நாள்
1 இராஜாக்கள் 19:08
09) ஆபிரகாம் பெயெர்செபாவிலிருந்து எத்தனை நாள் யிரயாணத்தில் மோரியா தேசத்து மலையை சென்றடைந்தார்?
Answer: 3நாள்
ஆதியாகமம் 22:04
10) ஆப்பெக்கிலிருந்து சிக்லாக்குக்கு வந்தடைய தாவீதுக்கு எத்தனை நாள் ஆனது?
Answer: 3 நாள்
1 சாமுவேல் 30:01
=================
சரியான பதில் எது?
=================
1) சாலமோன் அரசன் எத்தனை நீதிமொழிகள் எழுதினான்?
1) 31
2) 3000
3) 157
4) 177
2) உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் ___________ உண்டு
1) இரட்சிப்பு
2) கிருபை
3) இரக்கம்
4) மன்னிப்பு
3) யாருடைய பாதையில் பிரவேசியாதே
1) துன்மார்க்கனுடைய
2) பாவிகளுடைய
3) மூடனுடைய
4) சன்மார்க்கனுடைய
4) யார் தன்னுடைய பாதங்களை துன்மார்களுடைய இரத்தத்திலே கழுவுவான்
1) செம்மையானவன்
2) நீதிமான்
3) மூடன்
4) பாவி
5) புத்திமானுடைய மனம் உதை தேடும் ?
1) ஞானத்தை
2) கற்பனையை
3) பிரமாணத்தை
4) அறிவை
5) சத்தியத்தை
6) யார் ஆபத்தை கண்டு மறைந்து கொள்ளுகிறான்
1) மதிகேடன்
2) மூடன்
3) விவேகி
4) துன்மார்க்கன்
7) சிநேகிதன் அடிக்கும் அடிகள் ________
1) நியாயமானவைகள்
2) உண்மையுள்ளவைகள்
3) நீதியுள்ளவைகள்
4) வஞ்சனையுள்ளவைகள்
8) யாருடைய நகைப்பு பானையின் கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பை போலிருக்கும்
1) மூடன்
2) மதிகேடன்
3) துன்மார்க்கன்
4) மாயக்காரன்
9) யாருக்காக அழுங்கள்
1) நீதிமானுக்காக
2) பாவிகளுக்காக
3) துன்மார்க்கனுக்காக
4) சிறைபட்டு போனவனுக்காக
10) யார் கொந்தளிக்கும் கடலை போல இருக்கிறார்கள்
1) பொய் நாவு உள்ளவன்
2) துன்மார்க்கன்
3) உண்மை இல்லாதவன்
4) தேவனை அறியாதவர்கள்
சரியான பதில்
===========
1) சாலமோன் அரசன் எத்தனை நீதிமொழிகள் எழுதினான் ?
Answer: 2) 3000
1 இராஜாக்கள் 4:32
2) உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் ___________ உண்டு
Answer: 4) மன்னிப்பு
சங்கீதம் 130:4
3) யாருடைய பாதையில் பிரவேசியாதே
Answer: 1) துன்மார்க்கனுடைய
நீதிமொழிகள் 4:14
4) யார் தன்னுடைய பாதங்களை துன்மார்களுடைய இரத்தத்திலே கழுவுவான்
Answer: 2) நீதிமான்
சங்கீதம் 58:10
5) புத்திமானுடைய மனம் எதை தேடும் ?
Answer: 4) அறிவை
நீதிமொழிகள் 15:14
6) யார் ஆபத்தை கண்டு மறைந்து கொள்ளுகிறான்
Answer: 3) விவேகி
நீதிமொழிகள் 27:12
7) சிநேகிதன் அடிக்கும் அடிகள் ________
Answer: 2) உண்மையுள்ளவைகள்
நீதிமொழிகள் 27:6
8) யாருடைய நகைப்பு பானையின் கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பை போலிருக்கும்
Answer: 1) மூடன்
பிரசங்கி 7:6
9) யாருக்காக அழுங்கள்
Answer: 4) சிறைபட்டு போனவனுக்காக
ஏரேமியா 22:10
10) யார் கொந்தளிக்கும் கடலை போல இருக்கிறார்கள்
Answer: 2) துன்மார்க்கன்
ஏசாயா 57:20